ஒரு இரவு

மார்ச் 15, 2009 at 5:54 முப 28 பின்னூட்டங்கள்

இரவு எட்டு மணிக்கு , கண்மணி
 “அம்மா எனக்கு  சாப்பிட  ஏதாவது  தாம்மா , எனக்கு பசிக்குது
கண்மணிக்கு, சும்மா பொழுது போகவில்லைன்னா தான் இந்த மாதிரி டயலாக் விடுவா.  இன்னைக்கு  என்னை எப்படி  தாக்க  போகிறாளோ  என்று  பயமாக   இருந்தது. கொஞ்சம்  சாப்பிட்ட உடன்  “போதும்” .
என்னம்மா  இத்துனூண்டு  சாப்பிட்டிருக்க …. அப்புறமா  பசிக்க  போகுது  பாப்பா
இல்லம்மா  பாரு  எனக்கு  வயத்துல  இடமே  இல்ல” என்று வயற்றை  அமுக்கி பிதுக்கி  காண்பித்தாள்.
சரி … போதும்னா சரி..

“கண்மணி சாப்பிட்ட பிறகு , லைட்டா பல்லை தேய்ச்சுருவோமா? ”
 “சரிம்மா”
  brush ஐ எடுத்து வாயில் வைத்தது தான் வாயை மூடிக் கொண்டாள். 
“கண்மணி இப்படி பண்ணினால் எப்படி பல் தேய்க்கமுடியும்? வாயை திற, நல்ல பிள்ளை தானே நீ?”
“ர்ச்….”
“ஏய்…. முழுங்காத பாப்பா…….”
பட்டென்று வாயை திறந்து “ ஹா….ஹ…ஹா…. ஹி...” என்று சிரிப்பு வேற.
எப்பப் பாத்தாலும்,  எதுக்கெடுத்தாலும்  ஹா….ஹ…ஹா ன்னு சிரிப்பு ” என்று முனங்கி கொண்டு brush ஐ பார்த்த பிறகு தான் காரணம் புரிந்தது. பேஸ்ட் வைத்த அடையாளமே அதில் இல்லை.

அம்மா  எனக்கு  தூக்கம்  வருதும்மா
தூங்க  போலாமே ” என்று பயங்கர  சுறுசுறுப்பாக  அவளை தயார் செய்து  படுக்க  வைத்து  நானும்  படுத்து  கொண்டேன் .
பத்து நிமிடம்  கழித்து  “அம்மா தண்ணி வேணும்
தண்ணீர்  குடித்துவிட்டு  படுத்தாள் .
சிறிது நேரம் கழித்து  “அம்மா எனக்கு உச்சா  போணும்போல  இருக்கு
இப்பதானே  இருந்தாய் …அதெல்லாம்  வராது  சும்மா  தூங்கு  பாப்பா”
இல்ல அம்மா எனக்கு வருது
இனிமேல் விடமாட்டாள்  என்று  அனுப்பினேன் .
அம்மா உச்சா வந்தது  மாதிரி  இருந்துச்சேன்னு  வந்தா  வரல்ல .. ஹி…ஹி.. ஹோ …ஹோ…”
கோபத்தை  அடக்கி  கொண்டு  “சரி பரவாயில்ல  வாங்க  தூங்க  போவோம்  நேரமாயிடுச்சு  பாப்பா

சிறிது நேரம் கழித்து ,
அம்மா எனக்கு சாப்பிட  ஏதாவது தாம்மா , பாரு வயத்துல ஒண்ணுமே  இல்ல” என்று மறுபடியும்  அமுக்கி காட்டினாள்.
இப்பதானே கண்மணி, எனக்கு சாப்பாடு  போதும் என்று கூப்பாடு  போட்ட …. சும்மா படு கொஞ்ச நேரம்
இல்லம்மா  பயங்கர பசியா  இருக்கும்மா ” என்று விடாமல்  அனத்தியதால் ,
சரி என்ன வேணும்
எனக்கு பூரி  வேண்டும்
மறுபடியும் கோபத்தை முழுங்கி  கொண்டு வேகமாக  பூரி செய்து கொண்டு கொடுத்தேன்.
இரண்டு  கடி கடித்தாள்.” போதும்மா … வாங்க தூங்க போகலாம் ..”
எனக்கு அழுகையே  வந்து  விட்டது. இதெல்லாம் ரெம்ப  ஓவர்  பாப்பா…. இனிமேல் பசிக்குதுன்னு  சொன்னே  அப்புறம் இருக்கு என்று……  புலம்பி கொண்டு … திரும்பவும்  படுக்க சென்றோம் .

இன்னும் சிறிது நேரம் கழித்து …”அம்மா எனக்கு ஏதாவது பண்ணனும்மா…..தண்ணி குடிக்கணும் மாதிரி இருக்கு….
என்ன பாப்பா… இப்பத்தானே சாப்பிட்ட ..  நீ தானே  போதும்ன்னு  சொன்னா ..”
ம்..”
பூரியும் போதும்ன்னு சொன்னா….”
ம்
செபம் செய்தாச்சு….தண்ணி குடிச்சாச்சு……”

ம்

“திரும்பவும் ஏதாவது பண்ணனும்ன்னா… என்ன பாப்பா இது?”
ம்

என்ன ம் , எதுக்கெடுத்தாலும் ம்… “

” (என்னமோ ம் என்று சொன்னால் தானே கோபம் வருகிறது அதனால உ சொல்றேன் என்கிற மாதிரி ஒரு ராகத்தோடு சொன்ன பதிலில் சிரித்து விட்டேன்).

 அதற்குள் கண்மணி அப்பா வந்துவிட, கண்மணி எவ்வளவு பெரிய சமத்துவவாதி என்பதை அதன்பின் தெரிந்துகொண்டேன். அவருக்கும் அதே அளவு இம்சை கொடுத்துவிட்டு அவள் தூங்கியது பதினோரு மணிக்குத்தான்.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

கலர் பண்ணத் தெரியுமா? Shock

28 பின்னூட்டங்கள் Add your own

 • 1. prabu  |  5:03 பிப இல் மார்ச் 15, 2009

  ///
  “அம்மா உச்சா வந்தது மாதிரி இருந்துச்சேன்னு வந்தா வரல்ல .. ஹி…ஹி.. ஹோ …ஹோ…”
  /////

  ஹ ஹாஹா
  ஹையோ ஹையோ

 • 2. prabu  |  5:04 பிப இல் மார்ச் 15, 2009

  அவருக்கும் அதே அளவு இம்சை கொடுத்துவிட்டு அவள் தூங்கியது பதினோரு மணிக்குத்தான்.
  ///////

  என்ன எண்ணம் இது
  யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்

 • 3. prabu  |  5:04 பிப இல் மார்ச் 15, 2009

  நான் தான் முதல் ??????
  ம்ம்ம்ம்ம்ம்ம்

 • 4. englishkaran  |  3:57 முப இல் மார்ச் 16, 2009

  I am the first

 • 5. englishkaran  |  4:07 முப இல் மார்ச் 16, 2009

  சின்ன வயசுல நீங்க உங்க அம்மாவ இந்த மாதிரி எவ்ளோ கஷ்ட படுத்தி இருப்பீங்க… அது தான் இப்ப வட்டியும் முதலுமா கண்மணியின் வடிவத்தில்… இருப்பினும் இது உங்களுக்கு சந்தோஷ சுமை தானே…

  ஹா….ஹ…ஹா…. ஹி… ஒன்னும் இல்லை நானும் கண்மணி போல சிரித்து பார்த்தேன்.

 • 6. குந்தவை  |  4:23 முப இல் மார்ச் 16, 2009

  //யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்
  நல்ல எண்ணம் தானே தம்பி.

 • 7. குந்தவை  |  4:33 முப இல் மார்ச் 16, 2009

  //இருப்பினும் இது உங்களுக்கு சந்தோஷ சுமை தானே…
  உண்மை.

  ம… இருந்தாலும் நாங்க ரெண்டு பேருமா சேர்ந்து வாலாட்டும் பொது, என் வீட்டுக்காரர் ‘இந்த ரெண்டு வாலுகளையும் வைத்து கொண்டு நான் படுகிற பாடு இருக்கே ‘ என்று தலையை பிய்த்துக் கொள்ளும்போது ரெம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஹி…ஹி..

 • 8. prabu  |  4:37 முப இல் மார்ச் 16, 2009

  நல்ல எண்ணம் தானே தம்பி.
  ////

  நல்ல என்ணமா????
  (பாவம் உங்க ஊட்டுகாரர்)

 • 9. prabu  |  4:38 முப இல் மார்ச் 16, 2009

  ///
  தலையை பிய்த்துக் கொள்ளும்போது ரெம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஹி…ஹி..

  ///

  பாருங்க மக்களே
  ஆண்பிள்ளை தலைய பிச்சுக்கிட்டா இவிகளுக்கு சந்தோசமாம்

 • 10. குந்தவை  |  5:31 முப இல் மார்ச் 16, 2009

  //(பாவம் உங்க ஊட்டுகாரர்)
  என்னமோ புதுசா கண்டுபிடிச்சமாதிரி பேசுறீங்களே தம்பி…. இது நல்லாவா இருக்கு.

 • 11. குந்தவை  |  5:37 முப இல் மார்ச் 16, 2009

  // பாருங்க மக்களே ஆண்பிள்ளை தலைய பிச்சுக்கிட்டா இவிகளுக்கு சந்தோசமாம்

  சேட்டையே பண்ணாம இருந்தா வாழ்க்கை போரடிச்சிடும் தம்பி.

 • 12. Bhuvanesh  |  6:13 முப இல் மார்ச் 16, 2009

  அக்கா உங்கள பாத்தா எனக்கு பாவமா இருக்கு!! (மச்சானை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு!)

 • 13. Bhuvanesh  |  6:15 முப இல் மார்ச் 16, 2009

  ஹா….ஹ…ஹா…. ஹி

  கண்மணி மாதிரி எல்லாம் சிரிக்க முயச்சி செய்யலை.. நானும் அப்படி தான் சிரிப்பேன்.. (அப்பாடி ஸ்ரீராம்க்கு பஞ்ச் கொடுத்தாச்சு!!)

 • 14. englishkaran  |  2:08 பிப இல் மார்ச் 16, 2009

  அப்பாடி ஸ்ரீராம்க்கு பஞ்ச் கொடுத்தாச்சு!//

  யோவ் புவனேஷ் நீ விஜய் நான் அஜித் (சரி மக்களே கோச்சுக்காதீங்க..மாத்திடுறேன்)
  யோவ் புவனேஷ் நீ சிம்பு நான் தனுஷ் (ஒ.கே மக்களே இதையும் மாத்திடுறேன்)
  யோவ் நீ புவனேஷ் நான் ஸ்ரீராம் (இப்பயும் நீங்க ஒத்துக்கலைனா வேற வழியே இல்லை ஜெ.கே.ரித்திஷ் படம் பார்க்க போனவங்க மாதிரி நீங்களும் இதை படிச்சு தான் ஆகணும்)
  பஞ்ச் கொடுத்து பதிவு எழுதறதுக்கு.

  நாம என்ன தான் மாறி மாறி திட்டிக் கொண்டாலும் நம்ம சைட்டுக்கு (அட வலைப்பக்கத்த சொன்னேங்க…நீங்க எல்லாம் வேற சைட்டுன்னு நெனைச்சுக்காதீங்க) ஹிட்ஸ் கெடைக்காது. அதனால பஞ்ச் வசனம் மாதிரி பஞ்ச் பின்னூட்டம் எல்லாம் வேண்டாம். அக்கா நீங்களாவது கொஞ்சம் அந்த சின்ன பையனுக்கு எடுத்து சொல்லுங்க…

 • 15. kunthavai  |  4:09 முப இல் மார்ச் 17, 2009

  //அக்கா உங்கள பாத்தா எனக்கு பாவமா இருக்கு!! (மச்சானை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு!)

  ரெம்ப பாவப்படாதீங்க புவனேஷ் தம்பி.
  அப்படியே உங்கம்மா கிட்ட புவனேஷ் சேட்டையை கேளுங்க, உங்க இளகிய மனதிற்கு ஒருவேளை ரத்த கண்ணீர் வரலாம்.

 • 16. kunthavai  |  4:15 முப இல் மார்ச் 17, 2009

  //யோவ் புவனேஷ் நீ சிம்பு

  இருந்தாலும் புவநேஷை இப்படி திட்டக்கூடாது ஸ்ரீராம்.

 • 17. Bhuvanesh  |  5:16 முப இல் மார்ச் 17, 2009

  //இருந்தாலும் புவநேஷை இப்படி திட்டக்கூடாது ஸ்ரீராம்//
  அதானே, பஞ்ச் வசனம் பேசலாம்!! இப்படி மூஞ்சில பஞ்ச் கொடுக்கறா மாதியா வசனம் பேசறது?

 • 18. மோகன்  |  6:26 முப இல் மார்ச் 17, 2009

  கண்மணி இப்படி தான் அம்மாகிட்டே வேலை வாங்கணும்.

  உண்மைய சொல்லுங்க, கண்மணி உங்களுக்கு கொடுக்கற இம்சை அதிகமா இல்லை நீங்க உங்க வீட்டுகாரருக்கு கொடுக்கற இம்சை அதிகமா?

 • 19. மோகன்  |  6:27 முப இல் மார்ச் 17, 2009

  // //யோவ் புவனேஷ் நீ சிம்பு

  இருந்தாலும் புவநேஷை இப்படி திட்டக்கூடாது ஸ்ரீராம். //

  அதானே, ஸ்ரீராம்க்கு புவனேஷ் மேல என்ன கோவமோ தெரியலை

 • 20. குந்தவை  |  6:36 முப இல் மார்ச் 17, 2009

  //கண்மணி இப்படி தான் அம்மாகிட்டே வேலை வாங்கணும்.

  ஆகா ……

  //உண்மைய சொல்லுங்க, கண்மணி உங்களுக்கு கொடுக்கற இம்சை அதிகமா இல்லை நீங்க உங்க வீட்டுகாரருக்கு கொடுக்கற இம்சை அதிகமா?

  குழந்தை அம்மாவிடம் சேட்டை பண்ணினா ஒத்துக்குவாங்களாம்
  மனைவி கணவரிடம் சேட்டை பண்ணினா ஏன் ஒத்துக்க மாட்டேங்கிறீங்கப்பா

 • 21. Krishna  |  7:29 முப இல் மார்ச் 21, 2009

  Hi kunthavai,

  Reached your blog through Janu’s blog. Was going through her
  “பெண்ணியத்தில் என் வரிகள் – இங்கிலீஷ்காரன்” post and in that I found her telling about your blogs…
  I had seen your comments in Janu’s KV.. had thought that someone has used the character’s name to post the comment …. But only yesterday I realized that its your real name… and there is yet another blog… so just visited it today…

  Read your post now… My goodness… !!! Romba vae kashtam pa!!!

  Munnadiyae therinjirundhaa naanum try pannirukalaamoo ??? miss pannitaenoo 🙄

  Nice to see these many tamil blogs … 🙂 All the Best !!!
  Keep Going !!!

  Have a nice day
  Krishna

 • 22. குந்தவை  |  4:22 முப இல் மார்ச் 22, 2009

  வாங்க கிருஷ்னா, வந்தமைக்கும், உங்கள் கருத்தை எழுதியமைக்கும் நன்றி.
  தொடர்ந்து வாங்க( என்ன பாவம் பண்ணுனீங்களோ)…. வந்து திட்டிடாச்சும் போங்க.

 • 23. Krishna  |  5:57 முப இல் மார்ச் 22, 2009

  நன்றி குந்தவை … 🙂

  //தொடர்ந்து வாங்க//

  ஏன்டா இப்படி சொன்னோம் …

  //( என்ன பாவம் பண்ணுனீங்களோ)…. //

  என்ன பாவம் பண்ணினேனோ ???

  இப்படி நீங்க நினைத்து என்னை திட்டுற நிலை வராமல் இருந்தால் சரி …. 😀 😀 😀

  என்ன பாவம் பண்ணுனீங்களோ 🙄 🙄

  All the Best!!!

 • 24. nTamil  |  6:42 முப இல் மார்ச் 22, 2009

  Hi,

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை http://www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

  இதுவரை இந்த http://www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  நட்புடன்
  nTamil குழுவிநர்

 • 25. NijamaNallavan  |  8:59 முப இல் மார்ச் 31, 2009

  கண்மணி இவ்ளோ சமர்த்தா….குட்…குட்…:)

 • 26. NijamaNallavan  |  9:34 முப இல் மார்ச் 31, 2009

  ஆஹா…கண்மணி இவ்ளோ சமர்த்தா….குட்…குட்…:))

 • 27. குந்தவை  |  4:53 முப இல் ஏப்ரல் 1, 2009

  //ஆஹா…கண்மணி இவ்ளோ சமர்த்தா….குட்…குட்…:)
  உங்க அம்மாகிட்ட கேளுங்க , நீங்களும் எவ்வ்வ்வளவு சமத்துன்னு சொல்லுவாங்க.

 • 28. JS  |  7:01 முப இல் ஏப்ரல் 9, 2009

  //“உ ” (என்னமோ ம் என்று சொன்னால் தானே கோபம் வருகிறது அதனால உ சொல்றேன் என்கிற மாதிரி ஒரு ராகத்தோடு சொன்ன பதிலில் சிரித்து விட்டேன்).//

  சுக‌மான‌ சுமைக‌ள் வ‌லுவிருக்காது… idhukoda illati childhood eppadi pogum….

  mazhalaikal… sirippe namakku energy booster…. nalla blog… vaazhthukkal…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
மார்ச் 2009
தி செ பு விய வெ ஞா
« பிப்   ஏப் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: