Shock

மார்ச் 23, 2009 at 5:17 முப 73 பின்னூட்டங்கள்

கக் கக்….என்று விக்கலுக்கிடையில் குனிந்து தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த கணவரிடம் சென்று சற்று தயங்கியபடியே,

 ” அத்தான்”

 “என்ன”

“நான் ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே”

“ம்”

“கண்டிப்பா கோச்சுக்க கூடாது”

தலையை நிமிர்த்தி “என்னன்னு சொல்லு” என்றார். சிறிது எரிச்சல் அதில் இருந்ததால்,

பாத்தீங்களா… கோபம் வருது உங்களுக்கு

 “சரி….. சொல்லும்மா எனக்கு வேலை இருக்கு

அப்படியே திட்டினாலும் போனது ஒண்ணும் திரும்ப வந்துடாது”

 சிறுது அலர்ட்டாகி “என்னது இப்பொ போயிடுச்சு

 “நிச்சயமா கோபப்படமாட்டீங்களே?”

அதான் படமாட்டேன்னு சொல்லியாச்சில்ல”

 வந்து…” என்று அரைமணி நேரம் ஊறவைத்து, washing machine நில் துவைத்து dry பண்ணிய சட்டை பாக்கெட்டிலிருந்து அவருடைய வேலை சார்ந்த அனைத்து பையில்களையும் உள்ளடக்கிய Flash Drive வை எடுத்து கொடுத்தேன்.

அவருடையை முகத்தில் சொல்ல முடியாத ஒரு உணர்ச்சி பரவியது… மூச்சும் விடவில்லை, விக்கலையும் காணவில்லை…. நான் ஒரு நிமிடம் நடுநடுங்கி போய்விட்டென்.

பின் சுதாரித்துக் கொண்டு “இல்ல….விக்கலெடுக்கும் போது எதாவது ஷாக் அடிக்கிற மாதிரி சொன்னா விக்கல் நிக்கும்ன்னு சொன்னாங்க… அதான் அப்படி சொன்னேன்… மற்றபடி அதை  washing machine இல் போடவில்லை.”

இருந்தாலும் அவரால் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. “அதுக்காக இப்படியா…உன்னை……………….”.

அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் சென்சார்………….. (கொட்டு வாங்கியதை எல்லாம் சொன்னா என்னுடைய இம்மேஜ் என்னாகிறது……. நிஜமா கொட்டு தான் வாங்கினேன் நம்புங்க)

Advertisements

Entry filed under: சிறுகதை.

ஒரு இரவு நாங்களும் பட்டம் வாங்கிட்டோம்ல…

73 பின்னூட்டங்கள் Add your own

 • 1. மோகன்  |  8:48 முப இல் மார்ச் 23, 2009

  சொந்த கதையே சிறுகதைன்னு போட்டு ஒரு கதையா?

  பாவம் பிளாஷ் திரிவும் உங்கே வீட்டுக்காரரும்!

 • 2. Sriram  |  8:53 முப இல் மார்ச் 23, 2009

  Me the first

 • 3. Sriram  |  8:55 முப இல் மார்ச் 23, 2009

  என்ன ஒரு வைத்திய முறை…
  இதை பாட்டி வைத்தியம் என்று சொல்லுவார்கள் அக்கா…
  இப்ப அது உண்மை என்று நினைக்கிறேன்.
  பாட்டிகள் செய்யும் வைத்தியம் தானே பாட்டி வைத்தியம்…

 • 4. மோகன்  |  8:58 முப இல் மார்ச் 23, 2009

  பிளாஷ் டிரைவை வாட்டர் ப்ரூப்-ஆகவும் , ஆண்களை வைய்ப் ப்ரூப் ஆகவும் மாத்தணும். ஹிஹி

 • 5. குந்தவை  |  11:01 முப இல் மார்ச் 23, 2009

  //பாட்டிகள் செய்யும் வைத்தியம் தானே பாட்டி வைத்தியம்…

  வாங்கய்யா… எப்படியோ என்னை பாட்டின்னு சொல்லிட்டீங்க. இப்ப நிம்மதியா?.

 • 6. குந்தவை  |  11:04 முப இல் மார்ச் 23, 2009

  //பிளாஷ் டிரைவை வாட்டர் ப்ரூப்-ஆகவும் , ஆண்களை வைய்ப் ப்ரூப் ஆகவும் மாத்தணும். ஹிஹி

  இப்ப மாத்திரம் ஆண்களை, பெண்கள் என்னங்க பண்ணமுடியும். ஏற்கனவே வைய்ப் ப்ரூபாத்தான் இருக்காய்ங்க.

 • 7. குந்தவை  |  11:07 முப இல் மார்ச் 23, 2009

  //சொந்த கதையே சிறுகதைன்னு போட்டு ஒரு கதையா?

  ஹிஹி…… கொஞ்சம் நடந்தது….. கொஞ்சம் கற்பனை.

 • 8. Bhuvanesh  |  4:14 முப இல் மார்ச் 24, 2009

  இது உங்க சொந்த கதை, மச்சானோட சோக கதை!!

 • 9. குந்தவை  |  4:27 முப இல் மார்ச் 24, 2009

  இது கதை தம்பி. திருமணமானப் புதிதில் ஒரு நாள் அவரை பயங்காட்டிநேன்.
  அது மாத்திரம் தான் உண்மை.

  சரி…. மச்சானுக்கு எங்க சோகம் வந்துச்சு. அதான் Flash Drive பத்திரமா இருக்குதே.

 • 10. Bhuvanesh  |  6:02 முப இல் மார்ச் 24, 2009

  //மச்சானுக்கு எங்க சோகம் வந்துச்சு. அதான் Flash Drive பத்திரமா இருக்குதே

  இருக்குனு சொல்லற வரைக்கும் சோகம் வந்துருக்கும் இல்ல? இந்த மாதிரி எதனை சோகமோ ??

 • 11. குந்தவை  |  8:30 முப இல் மார்ச் 24, 2009

  //இந்த மாதிரி எதனை சோகமோ ??

  வாங்க தம்பி. ஆகா ஒன்னும் இல்லன்னா கூட எடுத்து குடுத்திருவீங்க போல. .

 • 12. Anand  |  11:19 முப இல் மார்ச் 24, 2009

  நல்ல இருந்துச்சுங்க கதை…!!!

  //” அத்தான்”//
  இப்படி ஆரம்பிசீங்களா…
  //பாட்டிகள் செய்யும் வைத்தியம்//
  இப்படி கமன்ட் பண்ணிடாங்க…
  free ஆ விடுங்க….
  அடுத்த தடவை… நம்ம சென்னை ஸ்டைல் ல ,
  “ஹே.. டுபுக்கு” ன்னு ஆரம்பிங்க…

  பி.கு.:
  உடனே… அய்யா… சூப்பர்… இனி “டுபுக்கு” ன்னு husband அ கூப்பிடலாம்னு சந்தோஷ படாதீங்க… கதைல வேற கதாபாத்திரத்தை சொல்லுங்க…

 • 13. Anand  |  12:19 பிப இல் மார்ச் 24, 2009

  உங்களுடைய மற்ற பதிவகளை இன்று தான் படித்தேன்… wow…. அருமை குந்தவை அக்கா !!![அக்கா ன்னு நானும் கூப்பிடலாமா?]…

  இந்த மாதிரி ஒரு சூப்பர் friends நெட்வொர்க் இருப்பது இவ்ளோ நாள் தெரியாம போச்சு…

 • 14. Anand  |  12:27 பிப இல் மார்ச் 24, 2009

  நம்ம மச்சி புவனேஷ் மூலமா தான் தெரிய வந்தது…

  P.S.:
  சாரிங்க…. இப்படி பிச்சு பிச்சு கமெண்ட் போட்டதுக்கு… முந்தைய reply அ delete பண்ணிக்கவும்…

 • 15. குந்தவை  |  12:51 பிப இல் மார்ச் 24, 2009

  //நல்ல இருந்துச்சுங்க கதை…!!!
  நன்றிங்க தம்பி.

  //free ஆ விடுங்க….
  தம்பி சொல்லுக்கு மறுபேச்சேது.

  //உடனே… அய்யா… சூப்பர்… இனி “டுபுக்கு” ன்னு husband அ கூப்பிடலாம்னு சந்தோஷ படாதீங்க…
  அப்படி கூப்பிட்டா திரும்ப என்ன கிடைக்கும்ன்னு எனக்கு தெரியும். ஹி..ஹி..

 • 16. குந்தவை  |  12:55 பிப இல் மார்ச் 24, 2009

  //உங்களுடைய மற்ற பதிவகளை இன்று தான் படித்தேன்… wow…. அருமை குந்தவை அக்கா !!![

  ரெம்ப பயப்படாதீங்க தம்பி. சும்மா உண்மையை சொல்லுங்க…

  //!!![அக்கா ன்னு நானும் கூப்பிடலாமா?]…
  நீங்க ஐம்பது வயசு தாத்தாவா இருந்தாலும், அக்கான்னு கூப்பிடரத நான் ஆட்சேபிக்க மாட்டேன்.

 • 17. குந்தவை  |  12:57 பிப இல் மார்ச் 24, 2009

  //சாரிங்க…. இப்படி பிச்சு பிச்சு கமெண்ட் போட்டதுக்கு…

  இதுக்கெல்லாம் நான் சாரி தரமாட்டேன்.

 • 18. Anand  |  1:23 பிப இல் மார்ச் 24, 2009

  //ரெம்ப பயப்படாதீங்க தம்பி. சும்மா உண்மையை சொல்லுங்க…//

  உண்மையிலேயே அக்கா…!!!
  கண்மணியின் ஏக்கம்… மச்சானின் அன்பு… உங்களது பாசம்; அவர்களின் சார்பில் நீங்கள் எங்களுக்கு வெளிப்படுத்துவது… இப்படி தான் இருக்கனும்… ஒவ்வொரு பதிவிற்கும் எனது கண்ணில் கண்ணீர் துளிகள்… சும்மா ஏதோ சொல்லணும் அப்படின்னு சொல்லலைங்க… முதல் வகுப்பில் இருந்தே விடுதியில் படித்த எனக்கு தெரியும் “ஏக்கம்” என்றால் என்ன என்று… பெரிய கதை கூட எழுதலாம்… பெற்றோரை பிரிந்து இருக்கும் சிறு வயதில் “ஏக்கம்” கொடுமை… அதை நினைத்து பார்க்கும் பொழுதும் தனியாக இருப்பது வாழ்வில் வெறுமை…

 • 19. Anand  |  1:26 பிப இல் மார்ச் 24, 2009

  ரொம்ப மொக்கை போடுறேன்… சரி…

  //நீங்க ஐம்பது வயசு தாத்தாவா இருந்தாலும்//

  அநியாயத்துக்கு வயச ஏத்தறீங்க க்கா… ச்ச ச்சா ….உங்களுக்கு அவ்வளவு எல்லாம் கிடையாது… என்ன என்னோட வயசு உங்கள்ளுக்கு experience இருக்கும்… அவ்வளவுதான்…

 • 20. அதிரை ஜமால்  |  5:10 பிப இல் மார்ச் 24, 2009

  அதுக்காக இப்படியா!

  எம்மாடியோவ்!

  இனி விக்கலெடுத்தா இத நினைச்சாலே நின்றும்

 • 21. குந்தவை  |  4:14 முப இல் மார்ச் 25, 2009

  //இனி விக்கலெடுத்தா இத நினைச்சாலே நின்றும்

  ஏதோ நம்மால முடிஞ்சது. இதுக்கே இப்படி அரண்டுட்டீங்க. அப்போ நிஜமாவே என் வீட்டுக்காரரும் என்னப்பாத்து பயப்படுகிறாரோ.

 • 22. குந்தவை  |  4:16 முப இல் மார்ச் 25, 2009

  //என்னோட வயசு உங்கள்ளுக்கு experience இருக்கும்…

  இப்படி கவுத்திட்டீங்களே … இதுக்கு பாட்டின்னே சொல்லியிருக்கலாம்

 • 23. குந்தவை  |  4:37 முப இல் மார்ச் 25, 2009

  //உண்மையிலேயே அக்கா…!!!
  கண்மணியின் ஏக்கம்… மச்சானின் அன்பு… உங்களது பாசம்; அவர்களின் சார்பில் நீங்கள் எங்களுக்கு வெளிப்படுத்துவது… இப்படி தான் இருக்கனும்…

  அநியாத்துக்கு என்னிய பாராட்டுறீங்க. பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

  //பெற்றோரை பிரிந்து இருக்கும் சிறு வயதில் “ஏக்கம்” கொடுமை… அதை நினைத்து பார்க்கும் பொழுதும் தனியாக இருப்பது வாழ்வில் வெறுமை…

  என்ன தம்பி இப்படியெல்லாம்…….
  வாழ்க்கை என்றால் எல்லாம் இருக்கும். இருப்பதை சந்தோஷமாக அனுபவியுங்கள்.
  சரி நாம தான் இப்போ சொந்தக்காரங்க ஆயிட்டோம் இல்ல. கவலையை விடுங்க.

 • 24. Bhuvanesh  |  5:10 முப இல் மார்ச் 25, 2009

  //ஒவ்வொரு பதிவிற்கும் எனது கண்ணில் கண்ணீர் துளிகள்…

  //அநியாத்துக்கு என்னிய பாராட்டுறீங்க. பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

  மேலே உள்ள வரி உங்களுக்கு பாராட்டா ??

 • 25. Bhuvanesh  |  5:16 முப இல் மார்ச் 25, 2009

  //இதுக்கெல்லாம் நான் சாரி தரமாட்டேன்.//

  இதுக்கு மட்டும் இல்ல வேற எதுக்கும் தரமாட்டாங்க..

 • 26. Bhuvanesh  |  5:18 முப இல் மார்ச் 25, 2009

  //பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல. //

  கரெக்ட் அக்கா.. இனி வாரம் பத்து பதிவு போட்டு அவருக்கு மட்டும் மெயில் அனுப்புங்க.. படிக்கட்டும்..

 • 27. குந்தவை  |  5:24 முப இல் மார்ச் 25, 2009

  ஒவ்வொரு பதிவிற்கும் எனது கண்ணில் கண்ணீர் துளிகள்…

  //பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

  முழுசா படிக்கணும் தம்பி.

 • 28. குந்தவை  |  5:33 முப இல் மார்ச் 25, 2009

  //இதுக்கு மட்டும் இல்ல வேற எதுக்கும் தரமாட்டாங்க..

  ரெண்டு வார்த்தை நிம்மதியா பேசவிடமாட்டீங்களே.

 • 29. Bhuvanesh  |  5:40 முப இல் மார்ச் 25, 2009

  //முழுசா படிக்கணும் தம்பி.//
  நீங்களும் முழுசா படிக்கணும்.. அதையும் தாக்கிடோம் இல்ல ?

 • 30. குந்தவை  |  5:45 முப இல் மார்ச் 25, 2009

  //இனி வாரம் பத்து பதிவு போட்டு அவருக்கு மட்டும் மெயில் அனுப்புங்க.. படிக்கட்டும்..

  என்னிடம் ஓரவஞ்சனை கிடையாது தம்பி. நீங்க எல்லாரும் எனக்கு தம்பி தான். அதனால நீங்களும் என்னுடய பதிவை படிச்சு அனுபவிச்சு தானாகனும்.
  no no இதற்க்கெல்லாம் அழக்கூடாது.

 • 31. Janu  |  8:51 முப இல் மார்ச் 25, 2009

  அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் சென்சார்………….. (கொட்டு வாங்கியதை எல்லாம் சொன்னா என்னுடைய இம்மேஜ் என்னாகிறது……. நிஜமா கொட்டு தான் வாங்கினேன் நம்புங்க)

  hi hi kunthavai .. nambittom .. 🙂 🙂 ..

  nicely writen ..thoroughly enjoyed.

 • 32. குந்தவை  |  11:21 முப இல் மார்ச் 25, 2009

  நல்ல வேளை நம்பிட்டீங்க…

  //nicely writen ..thoroughly enjoyed.

  நன்றிங்க …

 • 33. Anand  |  11:26 முப இல் மார்ச் 25, 2009

  //சரி நாம தான் இப்போ சொந்தக்காரங்க ஆயிட்டோம் இல்ல. //
  சந்தோசமா இருக்குங்க…

  //கவலையை விடுங்க.//

  அக்கா சொல்லை தட்ட மாட்டோம் உங்க தம்பிகள்…

 • 34. Anand  |  11:28 முப இல் மார்ச் 25, 2009

  //நீங்களும் முழுசா படிக்கணும்.. அதையும் தாக்கிடோம் இல்ல ?//

  மச்சி… round கட்டி அடிச்சுட்டே போ…

  //no no இதற்க்கெல்லாம் அழக்கூடாது.//

  அதுக்காக வடிவேலு மாதிரி ஆயிடீன்களே அக்கா…

 • 35. Bhuvanesh  |  12:31 பிப இல் மார்ச் 25, 2009

  message on behalf Jaanu akka

  ////nicely writen ..thoroughly enjoyed.
  //நன்றிங்க …

  நல்ல வேளை நம்பிட்டீங்க… 🙂

 • 36. Mukundan  |  10:33 பிப இல் மார்ச் 25, 2009

  உங்களால் கணவர் பாவம் 😦

 • 37. Anand  |  1:15 முப இல் மார்ச் 26, 2009

  //அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் சென்சார்………….. (கொட்டு வாங்கியதை எல்லாம் சொன்னா என்னுடைய இம்மேஜ் என்னாகிறது……. நிஜமா கொட்டு தான் வாங்கினேன் நம்புங்க)//

  சென்சார் ன்னு சொல்லிட்டு… கொட்டாம் … ஹ்ம்ம் … நாங்க எல்லாம் சின்ன பசங்க தான்… அதுக்காக சென்சார், கொட்டு எல்லாம் relate பண்ண சொல்லாதீங்க…

 • 38. குந்தவை  |  11:23 முப இல் மார்ச் 26, 2009

  //அக்கா சொல்லை தட்ட மாட்டோம் உங்க தம்பிகள்…

  நல்ல தம்பி.

 • 39. குந்தவை  |  11:26 முப இல் மார்ச் 26, 2009

  //மச்சி… round கட்டி அடிச்சுட்டே போ…

  ஆகா கூட்டு சதியா? …

  //அதுக்காக வடிவேலு மாதிரி ஆயிடீன்களே அக்கா…

  அடப்பாவி…

 • 40. குந்தவை  |  11:31 முப இல் மார்ச் 26, 2009

  //நல்ல வேளை நம்பிட்டீங்க

  என்னிய ஒரு வழிப் பண்ணனும்னு கங்கணங்கட்டிட்டீங்க…

 • 41. குந்தவை  |  11:34 முப இல் மார்ச் 26, 2009

  //உங்களால் கணவர் பாவம்
  வாங்க Mukundan நீக்களுமா?

 • 42. குந்தவை  |  11:39 முப இல் மார்ச் 26, 2009

  //சென்சார் ன்னு சொல்லிட்டு… கொட்டாம் … ஹ்ம்ம் … நாங்க எல்லாம் சின்ன பசங்க தான்… அதுக்காக சென்சார், கொட்டு எல்லாம் relate பண்ண சொல்லாதீங்க…

  அப்படியா….. விவரமான தம்பிகளா இருந்தாலும் … ஹிஹி…. கண்மணி வளர்ந்து இதை படித்தால் நான் என்னாத்துக்கு ஆகிறது.

 • 43. Anand  |  4:14 பிப இல் மார்ச் 26, 2009

  //கண்மணி வளர்ந்து இதை படித்தால் நான் என்னாத்துக்கு ஆகிறது.//

  கண்மணி அறிவுகொளுந்துங்க… இப்ப படிச்சாலே… “அம்மா!! விவரமான உங்க தம்பிக கிட்ட கொஞ்சம் கவனமா இரும்மா… ‘கலர்’ பண்ண நான் சொல்லி தரேன், அடுத்த பதிவுல இருந்து…;)” அப்படின்னு சொல்லுவா…

 • 44. prabu  |  5:34 பிப இல் மார்ச் 26, 2009

  ////
  நான் ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே”

  “ம்”

  ///
  நீ பேசுரதையெல்லாம் கேட்கனுமா ? எல்லாம் தலையெழுத்து (உங்கள் கனவர்)

 • 45. prabu  |  5:35 பிப இல் மார்ச் 26, 2009

  ///
  இல்ல….விக்கலெடுக்கும் போது எதாவது ஷாக் அடிக்கிற மாதிரி சொன்னா விக்கல் நிக்கும்ன்னு சொன்னாங்க… அதான் அப்படி சொன்னேன்…
  ///

  என்னா லொள்ளு?!?!?!?!?

 • 46. prabu  |  5:35 பிப இல் மார்ச் 26, 2009

  ///
  (கொட்டு வாங்கியதை எல்லாம் சொன்னா என்னுடைய இம்மேஜ் என்னாகிறது……. நிஜமா கொட்டு தான் வாங்கினேன் நம்புங்க
  ///

  வேர என்ன செய்ய??
  நம்பிட்டோம்

 • 47. prabu  |  5:36 பிப இல் மார்ச் 26, 2009

  தாமதமாக வந்ததற்க்கு மன்னிக்க

 • 48. குந்தவை  |  3:30 முப இல் மார்ச் 27, 2009

  வரதே பெரிசு. வாங்க பிரபு .

 • 49. குந்தவை  |  3:32 முப இல் மார்ச் 27, 2009

  //நம்பிட்டோம்

  நீங்களாவது நம்பினீங்களே.

 • 50. குந்தவை  |  3:33 முப இல் மார்ச் 27, 2009

  //என்னா லொள்ளு?!?!?!?!?

  பின்ன எப்படி தம்பி பொழுது போகும்.

 • 51. குந்தவை  |  3:35 முப இல் மார்ச் 27, 2009

  //நீ பேசுரதையெல்லாம் கேட்கனுமா ? எல்லாம் தலையெழுத்து (உங்கள் கனவர்)

  நான் பேசுறத கேட்காம , பின்ன யார் பேச்சை கேட்கணும்? வில்லங்கம் பிடிச்ச ஆட்களா இருக்கீங்களே.

 • 52. குந்தவை  |  3:41 முப இல் மார்ச் 27, 2009

  //கண்மணி அறிவுகொளுந்துங்க… இப்ப படிச்சாலே… “அம்மா!! விவரமான உங்க தம்பிக கிட்ட கொஞ்சம் கவனமா இரும்மா…

  நான் சென்சார் அது இதுன்னு ஒரு பில்டப் கொடுத்தா இப்படியா ‘கொத்து பரோட்டா ‘ போடுவீங்க. நீங்களே என்னை கவனமா இருக்க சொல்லீட்டீங்களே… இருந்திடுவோம்.

 • 53. Bhuvanesh  |  6:27 முப இல் மார்ச் 27, 2009

  //நான் சென்சார் அது இதுன்னு ஒரு பில்டப் கொடுத்தா இப்படியா ‘கொத்து பரோட்டா ‘ போடுவீங்க. நீங்களே என்னை கவனமா இருக்க சொல்லீட்டீங்களே… இருந்திடுவோம்.//

  அக்கா, அந்த கொத்து புரோட்டா கோஷ்டியில் நான் இல்லை என்பதை உங்களுக்கு இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.. (நேத்து ஒரு அரசியல் பிரச்சாரம் கேட்டேன்.. அதான் இப்படி!!)

 • 54. Bhuvanesh  |  6:30 முப இல் மார்ச் 27, 2009

  //என்னிய ஒரு வழிப் பண்ணனும்னு கங்கணங்கட்டிட்டீங்க…//

  என்னகா பண்ணறது.. சின்ன வயசுல இருந்தே கஷ்டப்படறவங்களை (இங்க மச்சான்!) பாத்தா பொங்கிருவேன்!!

 • 55. Krishna  |  9:42 முப இல் மார்ச் 27, 2009

  Nice post (with nice comments)… Enjoyed !!! 🙂

 • 56. குந்தவை  |  10:14 முப இல் மார்ச் 27, 2009

  //அக்கா, அந்த கொத்து புரோட்டா கோஷ்டியில் நான் இல்லை என்பதை உங்களுக்கு இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்..

  நீங்க மாஸ்டர் இல்ல…. அந்த கோஷ்டியில் எப்படி இருப்பீங்க தம்பி…….

  //(நேத்து ஒரு அரசியல் பிரச்சாரம் கேட்டேன்.. அதான் இப்படி!!)

  பிரச்சாரத்துக்கே இவ்வளவு effect ஆ

 • 57. குந்தவை  |  10:17 முப இல் மார்ச் 27, 2009

  //என்னகா பண்ணறது.. சின்ன வயசுல இருந்தே கஷ்டப்படறவங்களை (இங்க மச்சான்!) பாத்தா பொங்கிருவேன்!!

  பொங்குவீங்க தம்பி பொங்குவீங்க… உங்கள ஒரு ஆள் பொங்கல் வைக்கும் போது நான் பார்க்கிறேன்.

 • 58. குந்தவை  |  10:20 முப இல் மார்ச் 27, 2009

  வாங்க கிருஷ்னா… எல்லாருமா சேர்ந்து அதகளம் பண்ணிட்டிருக்காங்க .. நீங்க பார்த்து ரசிசீங்களா?

 • 59. Krishna  |  2:27 பிப இல் மார்ச் 27, 2009

  அதகளம் – idhukku meaning enna kunthavai ???
  Tamil – Tamil dictionary irukka nnu thedanum…

  aanaa indha galataa nalla irukku kunthavai… Naanum unga kaala vara vaendamae nnu (adha seiradhukku thaan yerkanavae niraiya thambinga irukaangalae…) naan rasikka mattum seidhen… 😀

 • 60. குந்தவை  |  5:11 பிப இல் மார்ச் 27, 2009

  //அதகளம் – idhukku meaning enna kunthavai ???
  அதகளம்– அர்த்தம் என்னான்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா.

  // naan rasikka mattum seidhen…
  ரசித்த கிரிஷ்ணா வாழ்க.

 • 61. Krishna  |  5:19 பிப இல் மார்ச் 27, 2009

  //அதகளம்– அர்த்தம் என்னான்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா. //

  hey unmayilayae ungalukkum theriyalayaaa… illla ..???? 😦

 • 62. Anand  |  8:03 பிப இல் மார்ச் 27, 2009

  அதகளம்– நாஸ்தி?!! சென்னை தமிழ் கொஞ்சம் தான் ஞாபகம் இருக்குங்க…

  //பின்ன எப்படி தம்பி பொழுது போகும்//
  பொழுது போக மச்சான் தானா…? இனிவரும் கல்யாணத்தில் gift குடுக்கும் போது “ஹ்ம்ம் மாட்டிக்கினியா” சொல்லுவாருன்னு நினைக்கிறேன்…

 • 63. குந்தவை  |  4:02 முப இல் மார்ச் 28, 2009

  //hey unmayilayae ungalukkum theriyalayaaa

  எதுக்கும் ஒரு verification தான்.
  எண்ணச் செய்ய சின்ன வயசுலேயிருந்து அர்த்தம் தெரியாம குத்துமதிப்பா படிச்சதோட பக்கவிளைவு. ஹிஹி.

 • 64. குந்தவை  |  4:15 முப இல் மார்ச் 28, 2009

  //அதகளம்– நாஸ்தி?!!
  அழகு சென்னைத் தமிழில் அர்த்தம் சொன்னதற்கு நன்றிங்க.

  //பொழுது போக மச்சான் தானா…?

  ஏன் தம்பி என்னிய வச்சு காமடி கீமடி பண்ணலையே….. மச்சானை தவிர வேற யாரையாவது கலாட்ட பண்ணினா என் கதி, விதிஎல்லாம் என்னாத்துக்காகும்?

 • 65. Krishna  |  5:22 முப இல் மார்ச் 28, 2009

  அதகளம்– நாஸ்தி

  Thank u..

  //அழகு சென்னைத் தமிழில் அர்த்தம் சொன்னதற்கு நன்றிங்க. //

  அழகு சென்னைத் தமிழில் – 🙄 no comments…..

 • 66. Anand  |  4:57 பிப இல் மார்ச் 28, 2009

  சரி.. ஓகே… நல்லா சுதாரிச்சுக்கிறீங்க… பொழச்சு போங்க…. அடுத்த பதிவு எப்போ…?

 • 67. Sriram  |  7:08 முப இல் மார்ச் 29, 2009

  அடேங்கப்பா என்ன ஒரு கும்மி…

 • 68. Anand  |  1:00 பிப இல் மார்ச் 29, 2009

  //அடேங்கப்பா என்ன ஒரு கும்மி…//
  நீங்க வேற… கும்பாபிஷேகம் இன்னும் வரல… அப்புறம் பாருங்க…

 • 69. குந்தவை  |  4:19 முப இல் மார்ச் 30, 2009

  //நீங்க வேற… கும்பாபிஷேகம் இன்னும் வரல… அப்புறம் பாருங்க…

  அட தம்பிகளா…. இன்னும் முடியலையா?… தெளிய விட்டு அடிப்பீங்களா?

 • 70. NijamaNallavan  |  8:56 முப இல் மார்ச் 31, 2009

  :))))

 • 71. குந்தவை  |  4:34 முப இல் ஏப்ரல் 1, 2009

  🙂

 • 72. JS  |  6:49 பிப இல் ஜூன் 13, 2009

  Sock kodukuren ippadiyaa avaru velaike appu vaikura maari solradhu…

  Vikkalukku ivlo periya shock treatment ah

 • 73. குந்தவை  |  4:54 முப இல் ஜூன் 14, 2009

  //Vikkalukku ivlo periya shock treatment ah

  he…..he….. This is nothing.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
மார்ச் 2009
தி செ பு விய வெ ஞா
« பிப்   ஏப் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: