நாங்களும் பட்டம் வாங்கிட்டோம்ல…

மார்ச் 30, 2009 at 5:12 முப 65 பின்னூட்டங்கள்

                கண்மணி Play School லில் நேற்று Graduation Function. சுமார் 20 குட்டீஸ் அடுத்த மாதத்திலிருந்து பள்ளிக்கூடம் போகிறதால், அவர்களுக்கு பட்டமளித்து, பரிசுகள் கொடுத்து பிரியாவிடை கொடுத்தார்கள்.
             எல்லாப் பிள்ளைங்களுமே அமைதியாக அவங்க டீச்சர் சொல்றதை கேட்டு சமத்தாக இருந்தார்கள். பாடல்களுக்கு புன்சிரிப்புடன்,  சின்ன கைகளை அசைத்து அழகாக அபிநயம் பிடித்தார்கள். 
     ஆனால்,  விழா தொடங்கியதிலிருந்து விடாமல் அலம்பல் பண்ணின பெற்றோர்களை  பற்றி என்ன சொல்ல?
           விழாவுக்கு தலமைத் தாங்குபவர் வந்த பிறகும் …  சல சலப்பு குறையவேயில்லை.  அவருக்கு கைத்தட்டிவிட்டு கையில் கேமிராவை எடுத்தவர்கள்,  குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி அவரவர் அவர்களுடைய பிள்ளையே போக்கஸ் பண்ணிக்கொண்டு நின்றவர்கள் தான்… ஒரு கை தட்டல் கிடையாது… ஒரு ரெஸ்பாண்ஸும் கிடையாது.  க்ளிக்கி கொண்டே இருந்தார்கள். நானும் கொஞ்சம் புகைப்படம் எடுத்தேன்,  உட்கார்ந்தபடி.

  ‘ஐயா கொஞ்சம் உக்காருங்கள்’
  ‘அமைதியாக இருங்கள்’
  ‘என் பிள்ளைகள் தான் அமைதியாக இருக்கின்றார்கள்’
  ‘ நான் விழவை நிறுத்த போகிறேன்’
  ‘ நீங்கள் அமைதி காத்த பிறகு தான் நான் விழாவை தொடருவேன்’
  ‘தயவு செய்து அமருங்கள். உங்கள் பிள்ளைகள்  பரிசு வாங்கும் போது.. நீங்கள் முன்னாடி வந்து photo  எடுக்கலாம்’
  ‘ ப்ளீஸ் பரிசு கொடுக்கும் போது கைதட்டுங்கள்’

  இந்த மாதிரி சொல்லி சொல்லியே டீச்சர் ஒரு வழி ஆகிவிட்டார்கள். ரெம்ப கொஞ்ச பேர் தான் அப்பப்ப கைதட்டி… டீச்சருக்கு ஆறுதல் அளித்தார்கள்.

   என்னுடைய பக்கத்தில் இருந்த ஒருவர், அவருடைய பிள்ளையிடம்..’பாப்பா அப்படி நில்லு …இப்படி நில்லு… சிரி… மூக்கை நோண்டாதே என்று எப்போதும் ஒரு டைரக்டர்  ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார். இன்னொரு அம்மா அங்கிட்டும் இங்கிட்டுமாக எங்களை இடித்துக் கொண்டு போய்கொண்டிருந்ததால் என் கணவர், “தாய்குலம் விழா முடியறதுக்குள்ளால என் காலை உடைத்து கையில் கொடுத்துவிடும் போல”  என்று கமெண்டி கொண்டார்( அந்தம்மாவிற்க்கு தமிழ் தெரியாது என்கிற தைரியத்தில்).
     

  பிள்ளைகளை கூட மானேஜ் பண்ணிவிடலாம்… பெற்றோர்களை ம்.. ரெம்ப கஷ்டம்…
 
  அப்புறம் விழாவுக்கு தலமை வகித்த அம்மையார்… நன்றாக பேசினார்கள். அவர்கள் சொன்னதிலிருந்து சில வரிகள்

  1. இந்த குழந்தைகள் எல்லோரும், ஒரு மோசமான உலகிற்குள் அடியெடுத்து வைக்க போகின்றார்கள், அவர்களுடன் அவர்களுக்கு தோள் கொடுங்கள்.

  2. அவர்களுக்கு செவிசாயுங்கள்.

  3. சூப்பர் அம்மா/அப்பாவாக நடந்து கொள்ளாதீர்கள்… Because you are not.

  4. அவர்கள் இந்த உலகிற்க்கு உங்கள் மூலமாக வந்தற்காக உங்கள் இஷ்டப்படி ஆட்டி வைக்கலாம் என்று நினைத்து விடாதீர்கள்.

  5. எல்லாவற்றிற்க்கும் மேலாக பொறுமையாக, கனிவாக சொல்லிக்கொடுங்கள். அவர்கள் குழந்தைகள்… மெல்லிய உணர்வு படைத்தவர்கள்.

   நானும் ஒரு நல்ல அம்மாவாக இருக்க, எனக்கு நல்ல ஞானத்தை தரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா.

Shock குழந்தை சொன்ன உண்மை.

65 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Bhuvanesh  |  5:32 முப இல் மார்ச் 30, 2009

  மிக அருமையான அறிவுரைகள்!!
  இவ்வளவு அழகாக பேசின அந்த அம்மையார் பெயர் சொல்லலையே ??

 • 2. Bhuvanesh  |  5:35 முப இல் மார்ச் 30, 2009

  // “தாய்குலம் விழா முடியறதுக்குள்ளால என் காலை உடைத்து கையில் கொடுத்துவிடும் போல” என்று கமெண்டி கொண்டார்( அந்தம்மாவிற்க்கு தமிழ் தெரியாது என்கிற தைரியத்தில்).//

  அப்போ மச்சானுக்கு தாய்குலம்னாலே பயம் போல இருக்கு.. இருந்தாலும் ஒரு மனுசன இவ்வளவு பயமுறுத்த கூடாது!!

 • 3. Bhuvanesh  |  5:36 முப இல் மார்ச் 30, 2009

  // நானும் கொஞ்சம் புகைப்படம் எடுத்தேன், உட்கார்ந்தபடி.//

  அதுல ஒன்னு ரெண்டு இங்க போட்டா என்ன அக்கா?? (அப்படி இல்லாட்டி என் மெயில் ஐடி க்கு அனுப்புங்க!! )

 • 4. குந்தவை  |  5:48 முப இல் மார்ச் 30, 2009

  //மிக அருமையான அறிவுரைகள்!!
  இவ்வளவு அழகாக பேசின அந்த அம்மையார் பெயர் சொல்லலையே ??

  அவங்க(North Indian) பெயர் எனக்கு சரியா காதுல விழல, தம்பி.

 • 5. குந்தவை  |  5:55 முப இல் மார்ச் 30, 2009

  //அப்போ மச்சானுக்கு தாய்குலம்னாலே பயம் போல இருக்கு..

  ஹா…ஹா.. பயம் இருக்கனும்ல … அதிலும் மற்ற தாய்குலங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும் தம்பி.

 • 6. குந்தவை  |  5:57 முப இல் மார்ச் 30, 2009

  //அதுல ஒன்னு ரெண்டு இங்க போட்டா என்ன அக்கா??
  கண்டிப்பா போடுறேன். இன்னும் camera விலிருந்து download பண்ணவில்லை.

 • 7. Sriram  |  6:03 முப இல் மார்ச் 30, 2009

  பிள்ளைகளை கூட மானேஜ் பண்ணிவிடலாம்… பெற்றோர்களை ம்.. ரெம்ப கஷ்டம்…//

  ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் அக்கா… நீங்க எங்கேயோ போய்டீங்க அக்கா…

 • 8. Sriram  |  6:04 முப இல் மார்ச் 30, 2009

  1. இந்த குழந்தைகள் எல்லோரும், ஒரு மோசமான உலகிற்குள் அடியெடுத்து வைக்க போகின்றார்கள், அவர்களுடன் அவர்களுக்கு தோள் கொடுங்கள்.

  2. அவர்களுக்கு செவிசாயுங்கள்.//

  இது என்ன அக்கா கிறித்துவ பேராலய ஜெபம் மாதிரி கீது…

 • 9. Sriram  |  6:05 முப இல் மார்ச் 30, 2009

  பட்டம் வாங்கிய கண்மணிக்கு நீங்க என்ன பரிசு கொடுத்தீங்க?
  கண்மணிக்கு எனது பாராட்டுக்களை சொல்லிடுங்க…

 • 10. Anand  |  1:19 பிப இல் மார்ச் 30, 2009

  //எல்லாப் பிள்ளைங்களுமே அமைதியாக அவங்க டீச்சர் சொல்றதை கேட்டு சமத்தாக இருந்தார்கள்.//

  அருமையான பிள்ளைகளை பெற்றவர்களுக்கு அதை பார்க்க கொடுத்து வைக்க வேண்டும்…

  //பாடல்களுக்கு புன்சிரிப்புடன், சின்ன கைகளை அசைத்து அழகாக அபிநயம் பிடித்தார்கள். //

  ஹ்ம்ம்.. இந்த மாதிரி நம்ம school days ல பார்த்த தோட சரி… எழுத்து மூலமாக அர்ப்பணித்த அன்பான அக்காவுக்கு நன்றி… 🙂

 • 11. Anand  |  1:32 பிப இல் மார்ச் 30, 2009

  //பிள்ளைகளை கூட மானேஜ் பண்ணிவிடலாம்… பெற்றோர்களை ம்.. ரெம்ப கஷ்டம்… //
  //அப்புறம் விழாவுக்கு தலமை வகித்த அம்மையார்… நன்றாக பேசினார்கள்.//
  //டீச்சருக்கு ஆறுதல் அளித்தார்கள்.//
  பெற்றோராகவும், டீச்சராகவும் யோசிக்கும் அக்கா…
  அருமை.. அருமை…
  அப்புறம்.. கதை சொல்லும் நடை ருசிகரமாக இருக்கிறது. நிறய நாவல் படிப்பீர்களோ… ?

 • 12. Anand  |  1:36 பிப இல் மார்ச் 30, 2009

  //இன்னும் camera விலிருந்து download பண்ணவில்லை.//

  அட… அதை பண்ணுங்கள் அக்கா, முதலில்… அப்படியே மச்சானோட கால்மிதி போட்டோ இருந்தால் experienced reaction எங்களுக்கும் பிற்காலத்தில் உதவியா இருக்கும்…

 • 13. Anand  |  1:37 பிப இல் மார்ச் 30, 2009

  //“தாய்குலம் விழா முடியறதுக்குள்ளால என் காலை உடைத்து கையில் கொடுத்துவிடும் போல” //

  “வீட்டில் போய் உடையும் காலை இங்கேயே உடைத்துவிடுவர்கள். என்ன அங்கயும் தாய்குலம் தான் இங்கேயும் தாய்குலம் தான்”–> இப்படி தான் சொல்ல வந்திருப்பார்… உங்களுக்கு தமிழ் தெரியுமல்லவா… உஷாரகிட்டாரு…

 • 14. குந்தவை  |  4:21 முப இல் மார்ச் 31, 2009

  //ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் அக்கா… நீங்க எங்கேயோ போய்டீங்க அக்கா…

  பிள்ளை பாசம் அப்படி.

 • 15. குந்தவை  |  4:23 முப இல் மார்ச் 31, 2009

  1. இந்த குழந்தைகள் எல்லோரும், ஒரு மோசமான உலகிற்குள் அடியெடுத்து வைக்க போகின்றார்கள், அவர்களுடன் அவர்களுக்கு தோள் கொடுங்கள்.

  2. அவர்களுக்கு செவிசாயுங்கள்.//

  இது என்ன அக்கா கிறித்துவ பேராலய ஜெபம் மாதிரி கீது…

  என்னோட தமிழாக்கம் அப்படி இருக்குது. ஹிஹி….

 • 16. குந்தவை  |  4:25 முப இல் மார்ச் 31, 2009

  //பட்டம் வாங்கிய கண்மணிக்கு நீங்க என்ன பரிசு கொடுத்தீங்க?
  கண்மணிக்கு எனது பாராட்டுக்களை சொல்லிடுங்க…

  ஆங்… பரிசா? அவங்கள சந்தோஷப்படுத்துவதர்காகத் தான் பட்டம் கொடுத்ததே.

 • 17. குந்தவை  |  4:27 முப இல் மார்ச் 31, 2009

  //ஹ்ம்ம்.. இந்த மாதிரி நம்ம school days ல பார்த்த தோட சரி… எழுத்து மூலமாக அர்ப்பணித்த அன்பான அக்காவுக்கு நன்றி…

  நன்றியா?… தம்பி பாராட்டுனாலே எனக்கு பயம்மா இருக்கு.

 • 18. குந்தவை  |  4:31 முப இல் மார்ச் 31, 2009

  //அப்புறம்.. கதை சொல்லும் நடை ருசிகரமாக இருக்கிறது. நிறய நாவல் படிப்பீர்களோ…

  என்ன தம்பி அதை எல்லாம் இப்ப நியாபகப் படுத்துறீங்க. ஒரு காலத்தில் கொஞ்சம் வாசிப்பேன். எந்த அழவுக்குன்னா…. ம்… பத்தாம் வகுப்பு தேர்வு அப்போது கூட இரண்டு நாவலை படித்துவிட்டேன்.

 • 19. குந்தவை  |  4:37 முப இல் மார்ச் 31, 2009

  // அப்படியே மச்சானோட கால்மிதி போட்டோ இருந்தால் experienced reaction எங்களுக்கும் பிற்காலத்தில் உதவியா இருக்கும்…
  பார்த்து உணர்ந்து கொள்வதற்கு அது சாமான்ய இடி அல்ல..அல்ல….
  அதையும் தாண்டி ……….
  ஹிஹி நீங்களே நிரப்பி கொள்ளுங்கள்.

 • 20. குந்தவை  |  4:41 முப இல் மார்ச் 31, 2009

  //வீட்டில் போய் உடையும் காலை இங்கேயே உடைத்துவிடுவர்கள். என்ன அங்கயும் தாய்குலம் தான் இங்கேயும் தாய்குலம் தான்”–> இப்படி தான் சொல்ல வந்திருப்பார்… உங்களுக்கு தமிழ் தெரியுமல்லவா… உஷாரகிட்டாரு…

  புவனேஷ் கூட சேராதீங்க தம்பி. (புவனேஷ் இத படிக்காதீங்க)

 • 21. Vijay  |  8:18 முப இல் மார்ச் 31, 2009

  நல்ல அறிவுரை. கடைபிடிக்க வாழ்த்துக்கள்.
  இந்தத் தலைமுறை குழந்தைகளின் பெரிய கஷ்டமே பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது தான். எல்லாத்திலும் தன் மகன்(ள்) தான் முதலாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்களைத் தான் முதலில் மாற்ற வேண்டும்.

  /விஜய்

 • 22. NijamaNallavan  |  8:53 முப இல் மார்ச் 31, 2009

  கண்மணிக்கு எனது வாழ்த்துக்களை சொல்லிடுங்க!

 • 23. Bhuvanesh  |  10:17 முப இல் மார்ச் 31, 2009

  //புவனேஷ் கூட சேராதீங்க தம்பி. (புவனேஷ் இத படிக்காதீங்க)//

  சரி அக்கா படிக்கல..

 • 24. Bhuvanesh  |  10:21 முப இல் மார்ச் 31, 2009

  //நாங்களும் பட்டம் வாங்கிட்டோம்ல…//

  சரி, கஷ்ட பட்டு படுச்சு பட்டம் வாங்குனது கண்மணி.. தலைப்பு என்ன நாங்களும் பட்டம் வாங்கிடோம்? வரவழில அஞ்சு ரூபா கொடுத்து பட்டம் வாங்குனீங்களா ?

 • 25. Bhuvanesh  |  10:23 முப இல் மார்ச் 31, 2009

  //பத்தாம் வகுப்பு தேர்வு அப்போது கூட இரண்டு நாவலை படித்துவிட்டேன்.//

  ஒரு நாவல் – மேக்ஸ் புக்
  இன்னொரு நாவல் – சயின்ஸ் புக்!!

  (இந்த மாதிரி நான் எல்லாம் நாலு நாவல் படுசேன்))

 • 26. Bhuvanesh  |  10:31 முப இல் மார்ச் 31, 2009

  //“தாய்குலம் விழா முடியறதுக்குள்ளால என் காலை உடைத்து கையில் கொடுத்துவிடும் போல//

  அக்கா, இந்த வசனத்த திரும்பவும் படிங்க.. இதுல ஒரு உள்குத்து இருக்கு..

  இந்த பழைய ஜோக் படிங்க..
  ****
  டிரைவர்: ஏன் டா Gear-௮ ஒடச்சு என் கையுல கொடுக்கிற?
  ஒருத்தன்: நீங்க தான அதை உடைக்க ரொம்ப நேரமா கஷ்டபட்டுட்டு இருந்தீங்க?

  *****

  இதே மாதிரி கேள்வியை ( ஏம்மா கால ஒடச்சு கையுல கொடுத்த?) நீங்களும் அந்த அம்மாவிடம் கேட்க வேண்டும், அவர்களும் இதே மாதிரி பதிலை சொல்லவேண்டும் என்ற உள் நோக்கத்துடன் தான் இப்படி சொல்லி இருக்கார்.. மச்சான விடாதீங்க!!

 • 27. குந்தவை  |  4:15 முப இல் ஏப்ரல் 1, 2009

  //இந்தத் தலைமுறை குழந்தைகளின் பெரிய கஷ்டமே பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது தான். எல்லாத்திலும் தன் மகன்(ள்) தான் முதலாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்களைத் தான் முதலில் மாற்ற வேண்டும்.

  வாங்க விஜய். இதற்காகத்தான் நானும் பயப்படுகிறேன். இந்த மாதிரி எண்ணம் எல்லா பெற்றோர்களுக்கும் அவர்களை அறியாமலேயே வந்துவிடுகிறது. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும் என்று பிள்ளைகளை தாளித்து விடுகிறார்கள். நான் எப்படி இருக்கப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.

 • 28. குந்தவை  |  4:21 முப இல் ஏப்ரல் 1, 2009

  //ஒரு நாவல் – மேக்ஸ் புக்
  இன்னொரு நாவல் – சயின்ஸ் புக்!!

  (இந்த மாதிரி நான் எல்லாம் நாலு நாவல் படுசேன்)

  பாடப் புத்தகத்தை எல்லாம் நாவல் ரேஞ்சுக்கு ரசிச்சு படிக்கிற கெட்ட எண்ணம் எல்லாம் எனக்கு கிடையாது , நான் ரெம்ப நல்ல பிள்ளையாக்கும்.

 • 29. குந்தவை  |  4:25 முப இல் ஏப்ரல் 1, 2009

  //கண்மணிக்கு எனது வாழ்த்துக்களை சொல்லிடுங்க!

  நன்றி. வாங்க நல்லவன், நல்லவங்களோட வாழ்த்து கண்டிப்பா வேணுமில்ல.

 • 30. குந்தவை  |  4:27 முப இல் ஏப்ரல் 1, 2009

  //இதே மாதிரி கேள்வியை ( ஏம்மா கால ஒடச்சு கையுல கொடுத்த?) நீங்களும் அந்த அம்மாவிடம் கேட்க வேண்டும், அவர்களும் இதே மாதிரி பதிலை சொல்லவேண்டும் என்ற உள் நோக்கத்துடன் தான் இப்படி சொல்லி இருக்கார்.. மச்சான விடாதீங்க!!

  ஹா…ஹா… புவனேஷ் மாதிரி ஒரு தம்பி இதுக்குத்தான் வேணுங்கிறது.

 • 31. மோகன்  |  5:09 பிப இல் ஏப்ரல் 1, 2009

  // கண்மணி Play School லில் நேற்று Graduation Function //

  என்னது பிளே ஸ்கூலுல Graduation Function ஆ? டூ மச்ச தெரியுதே அக்கா! கண்மணிக்கு வாழ்த்துகள். போட்டோ இன்னும் போடலையே?

  விழாவுக்கு தலமை வகித்த அம்மையார் பேசினதை சிவப்பு வண்ணத்தில் போட்டு இருக்கீங்களே? இதுக்கு எதாவது அர்த்தம் இருக்கா?

 • 32. Bhuvanesh  |  9:47 முப இல் ஏப்ரல் 2, 2009

  //சரி, கஷ்ட பட்டு படுச்சு பட்டம் வாங்குனது கண்மணி.. தலைப்பு என்ன நாங்களும் பட்டம் வாங்கிடோம்? வரவழில அஞ்சு ரூபா கொடுத்து பட்டம் வாங்குனீங்களா ?//

  இங்க என் கேள்விக்கு பதில் கிடைக்காதா ?? (இப்படி ஆவேசாமா பேசறது தான் இப்போ சீசன்!! ஏன்னா இது தேர்தல் சமயம் பாருங்க!! ஹி ஹி.. )

 • 33. குந்தவை  |  11:30 முப இல் ஏப்ரல் 2, 2009

  //சரி, கஷ்ட பட்டு படுச்சு பட்டம் வாங்குனது கண்மணி.. தலைப்பு என்ன நாங்களும் பட்டம் வாங்கிடோம்? வரவழில அஞ்சு ரூபா கொடுத்து பட்டம் வாங்குனீங்களா ?//

  அது ஒண்ணுமில்ல தம்பி.. . இது கண்மணி சார்பா எழுதறதுனால அப்படி தலைப்ப வச்சிட்டேன்.

  //இங்க என் கேள்விக்கு பதில் கிடைக்காதா ?? (இப்படி ஆவேசாமா பேசறது தான் இப்போ சீசன்!! ஏன்னா இது தேர்தல் சமயம் பாருங்க!! ஹி ஹி.. )

  ஆகா இதுவரைக்கும் கண்ட படத்தை பார்த்து பசங்க கேட்டு போறாங்கன்னு சொல்ல கேட்டிருக்கேன்… ம… கண்டபடி பேசறதை கேட்டு கூட பசங்க கெட்டு போவாங்க போல…

 • 34. குந்தவை  |  11:36 முப இல் ஏப்ரல் 2, 2009

  //என்னது பிளே ஸ்கூலுல Graduation Function ஆ? டூ மச்ச தெரியுதே அக்கா! கண்மணிக்கு வாழ்த்துகள். போட்டோ இன்னும் போடலையே?

  இதுக்கே இப்படி ஆச்சர்ய படுறீங்களே.. இனிமேல் உங்க பிள்ளைங்க எல்லாம் படிக்கும் போது என்னன்ன புதுசா கொண்டுவரபோறாங்களோ ..

  //விழாவுக்கு தலமை வகித்த அம்மையார் பேசினதை சிவப்பு வண்ணத்தில் போட்டு இருக்கீங்களே? இதுக்கு எதாவது அர்த்தம் இருக்கா?

  இப்படி எல்லாம் கூட ஆராய்ச்சி பண்ணுவீங்களா? எல்லாரும் முக்கியத்துவம் கொடுத்து படிக்கனும்ன்னு சிகப்பு நிறத்தில் எழுதினேன்.

 • 35. Anand  |  12:00 பிப இல் ஏப்ரல் 2, 2009

  //இப்படி எல்லாம் கூட ஆராய்ச்சி பண்ணுவீங்களா? எல்லாரும் முக்கியத்துவம் கொடுத்து படிக்கனும்ன்னு சிகப்பு நிறத்தில் எழுதினேன்.//
  பெத்தவங்கள அப்படி இருங்க, இப்படி இருங்க ன்னு சொன்னதுனால கொஞ்சம் கோவபட்டுடீங்கலோன்னு நினைச்சோம்… என்ன இருந்தாலும் உங்களுக்கு நல்ல மனசு க்கா…

 • 36. Anand  |  12:11 பிப இல் ஏப்ரல் 2, 2009

  //இனிமேல் உங்க பிள்ளைங்க எல்லாம் படிக்கும் போது என்னன்ன புதுசா கொண்டுவரபோறாங்களோ ..//

  புதுசா கொண்டு வரனும்ங்க… சின்ன வயதில் இருந்தே படிப்பின் மைல் கற்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தப்பில்லை… play school போறதுனால இப்போ குழந்தைகள் எல்லாம் school ன்னா சந்தோஷமா போறாங்க… அதற்கடுத்து பள்ளிக்கூடங்களிலும் நிறைய மாற்றங்கள் இருக்க வேண்டும்… உலக அளவில் நமது கல்விமுறை நன்றாக பேச படுகிறது அல்லவா…? தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் அல்லவா…?

 • 37. Anand  |  12:47 பிப இல் ஏப்ரல் 2, 2009

  //நானும் கொஞ்சம் புகைப்படம் எடுத்தேன், உட்கார்ந்தபடி.//
  “நாங்களும் பொறுப்பு, தெரியும்ல…”

 • 38. மந்திரன்  |  2:20 பிப இல் ஏப்ரல் 2, 2009

  //நானும் ஒரு நல்ல அம்மாவாக இருக்க, எனக்கு நல்ல ஞானத்தை தரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.//

  ததாஸ்து ..(“நான் கடவுளை” 4 தடவை பார்த்ததால் வந்த திமிரு )

  //சின்ன கைகளை அசைத்து அழகாக அபிநயம் பிடித்தார்கள். //
  அழகான சொற்றுடோர்

  //பிள்ளைகளை கூட மானேஜ் பண்ணிவிடலாம்… பெற்றோர்களை ம்.. ரெம்ப கஷ்டம்…//
  ரெம்ப கஷ்டம்… ரீபிட்டே

 • 39. குந்தவை  |  8:44 பிப இல் ஏப்ரல் 2, 2009

  //பெத்தவங்கள அப்படி இருங்க, இப்படி இருங்க ன்னு சொன்னதுனால கொஞ்சம் கோவபட்டுடீங்கலோன்னு நினைச்சோம்… என்ன இருந்தாலும் உங்களுக்கு நல்ல மனசு க்கா…

  நல்ல மனசோ இல்லையோ, ஆனால் எனக்கு இந்த மாதிரி சின்ன பிள்ளைங்களை கஷ்டப்படுத்துவது பிடிக்காது. ஆனால்… எல்லோரும் செய்யறாங்களே என்று நானும் என் மனதை மாற்றிவிடக்கூடாது என்பது என்னுடய வேண்டுதல்.

 • 40. குந்தவை  |  8:48 பிப இல் ஏப்ரல் 2, 2009

  //புதுசா கொண்டு வரனும்ங்க… சின்ன வயதில் இருந்தே படிப்பின் மைல் கற்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தப்பில்லை… play school போறதுனால இப்போ குழந்தைகள் எல்லாம் school ன்னா சந்தோஷமா போறாங்க… அதற்கடுத்து பள்ளிக்கூடங்களிலும் நிறைய மாற்றங்கள் இருக்க வேண்டும்… உலக அளவில் நமது கல்விமுறை நன்றாக பேச படுகிறது அல்லவா…? தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் அல்லவா…?

  புதுசா, பிள்ளைங்களுக்கு பிடிக்கிற மாதிரியும் படிக்கிற மாதிரியும் இருந்தா நல்லது தான். நமக்கு குழந்தை நல்ல குணசாலியா இருந்தால் போதுமுங்க.

 • 41. குந்தவை  |  8:52 பிப இல் ஏப்ரல் 2, 2009

  //“நாங்களும் பொறுப்பு, தெரியும்ல…”

  ‘நான் ரெம்ப பொறுப்பாக்கம்’ என்று சொல்லவில்லை தம்பி. நான் இரண்டாவது வரிசையில் தான் இருந்தேன். ஆனாலும் அந்த டீச்சர் அவ்வளவு சொல்லும் பொது எனக்கு ரெம்ப புகைப்படம் எடுக்க மனம் வரவில்லை

 • 42. குந்தவை  |  8:58 பிப இல் ஏப்ரல் 2, 2009

  //..(”நான் கடவுளை” 4 தடவை பார்த்ததால் வந்த திமிரு )

  ஏனுங்கோ உங்களுக்கு என் மேல் இத்தனை கோபம். நான் அந்த படத்தை பார்க்கவில்லை.
  என்னுடைய அம்மாவைப் போல் ஒரு நல்ல அம்மாவாக நானும் என் கண்மணிக்கு இருக்கவேண்டும் என்ற ஆவலும் ( சிறிது பயமும்) தான்.

  //பிள்ளைகளை கூட மானேஜ் பண்ணிவிடலாம்… பெற்றோர்களை ம்.. ரெம்ப கஷ்டம்…//
  ரெம்ப கஷ்டம்… ரீபிட்டே

  பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பயமும், பிள்ளை பாசமும்படுத்தும் பாடு.

 • 43. Anand  |  1:14 முப இல் ஏப்ரல் 3, 2009

  //நான் இரண்டாவது வரிசையில் தான் இருந்தேன்.//

  இரண்டாவது வரிசையில் இருந்த இன்னொரு பேரும் உண்டு…
  “ஆர்வகோளாறு” …

  நாங்க எல்லாம் கடைசி பெஞ்ச் தான், ஒண்ணாம் வகுப்புல இருந்து…. 😀

 • 44. Anand  |  1:26 முப இல் ஏப்ரல் 3, 2009

  //“ஆர்வகோளாறு”//

  கண்மணி: “அம்மா..!! இரண்டாவது வரிசையில் உற்காந்து அங்கிள் ஆனந்த் கேவலபடுத்தாதம்மா…”

  குந்தவை அக்கா: “இல்லடா செல்லம்!! முன்னாடி உற்காந்து பழகிக்கோ நீயும்… அப்பத்தான் teachers எல்லோர்துக்கும் உன்னை பிடிக்கும்… [தலையை ஒரு பக்கமாக திருப்பி] நிறைய மார்க் வாங்கலாம்…” “தலைமை வகித்த அம்மையார் [அவங்க தானே school ஹெட் mistress?!!] நம்ம கூட எவ்ளோ நல்லா பேசுனாங்க, விழாவுக்கு அப்புறம்…”

  கண்மணி: “சரி அம்மா..!! நீங்க சொன்னபடி கேட்டு நல்ல பிள்ளைய இருப்பேனே .. ஐய்யா… நானும் ஆர்வகோளாறு இனிமேல் ”

  நாங்க எல்லாம் இங்க: “அஆண்டவா!!! என்ன கொடுமை இது? “

 • 45. Bhuvanesh  |  10:16 முப இல் ஏப்ரல் 3, 2009

  குந்தவை அக்கா.. உங்கள பாத்தா ரொம்ப பாவமா இருக்கு 🙂 🙂 ஹி ஹி ஹி..
  ஐயோ ஐயோ!!

 • 46. Bhuvanesh  |  10:18 முப இல் ஏப்ரல் 3, 2009

  //என்னுடைய அம்மாவைப் போல் ஒரு நல்ல அம்மாவாக நானும் என் கண்மணிக்கு இருக்கவேண்டும் என்ற ஆவலும் ( சிறிது பயமும்) தான்.//

  நீங்க உங்க அம்மாவை போல் இருங்க வேண்டாம்னு சொல்லல.. அதுக்காக ஒரு நாள் கண்மணி லீவ் போட்டா மீன் கொழம்பு எல்லாம் வெக்க சொல்லி படாத பாடு படுத்தாதீங்க.. (எனக்கு ரொம்ப ஞாபக சக்தியோ??)

 • 47. Bhuvanesh  |  10:21 முப இல் ஏப்ரல் 3, 2009

  ////என்னுடைய அம்மாவைப் போல் ஒரு நல்ல அம்மாவாக நானும் என் கண்மணிக்கு இருக்கவேண்டும் என்ற ஆவலும் ( சிறிது பயமும்) தான்.///

  நீங்க உங்க அம்மாவை போல் ஒரு நல்ல அம்மாவாக இருந்தால் சந்தோஷம்!! ஆனால் கண்மணி அவங்க அம்மைவை போல் இருந்தால்…

  அட நான் ரொம்ப சந்தோசம்னு சொல்ல வந்தேன்.. நீங்க வேற எதையும் நினைகலையே??

 • 48. குந்தவை  |  12:52 பிப இல் ஏப்ரல் 3, 2009

  //குந்தவை அக்கா.. உங்கள பாத்தா ரொம்ப பாவமா இருக்கு ஹி ஹி ஹி..
  ஐயோ ஐயோ!!

  நமக்கு தான் தம்பி தங்கச்சி கிடையாதே, உங்களை எல்லாம் தம்பின்னு நினச்சி நாட்டாமை பண்ணலாம் என்று .(தம்பிங்க எல்லாம் படுவிவரமா இருக்காங்கன்நு ) தெரியாமல் மாட்டிவிட்டேன்.

 • 49. குந்தவை  |  12:53 பிப இல் ஏப்ரல் 3, 2009

  //நீங்க உங்க அம்மாவை போல் இருங்க வேண்டாம்னு சொல்லல.. அதுக்காக ஒரு நாள் கண்மணி லீவ் போட்டா மீன் கொழம்பு எல்லாம் வெக்க சொல்லி படாத பாடு படுத்தாதீங்க.. (எனக்கு ரொம்ப ஞாபக சக்தியோ??)

  படிக்கிறதுக்கு நான் வற்புறுத்த மாட்டேன். ஆனால் இந்த மாதிரி வைத்தியம் எல்லாம் தேவைப்படும் போது கொடுத்துவிடவேண்டும் தம்பி.

 • 50. குந்தவை  |  12:54 பிப இல் ஏப்ரல் 3, 2009

  //ஆனால் கண்மணி அவங்க அம்மைவை போல் இருந்தால்…

  ஏன் இப்படி என்னை பயமுறுத்துகிறாய் தம்பி..

 • 51. குந்தவை  |  12:58 பிப இல் ஏப்ரல் 3, 2009

  //இரண்டாவது வரிசையில் இருந்த இன்னொரு பேரும் உண்டு…
  “ஆர்வகோளாறு” …

  விழாவில், இரண்டாவது வரிசையில் இருந்த போதே எனக்கு கண்மணியின் தலை மட்டும் தான் தெரிந்தது. இதுல கடைசி வரிசையில் இருந்தால்……

 • 52. குந்தவை  |  1:06 பிப இல் ஏப்ரல் 3, 2009

  //“இல்லடா செல்லம்!! முன்னாடி உற்காந்து பழகிக்கோ நீயும்… அப்பத்தான் teachers எல்லோர்துக்கும் உன்னை பிடிக்கும்… [தலையை ஒரு பக்கமாக திருப்பி] நிறைய மார்க் வாங்கலாம்…” “தலைமை வகித்த அம்மையார் [அவங்க தானே school ஹெட் mistress?!!] நம்ம கூட எவ்ளோ நல்லா பேசுனாங்க, விழாவுக்கு அப்புறம்…”

  ஆங்…முடியல….
  ஆண்டவா!!! என்ன கொடுமை இது?

 • 53. saravanan kulandaiswamy  |  4:58 முப இல் ஏப்ரல் 8, 2009

  Congrats to Kanmani

  P.S:Noting going to change.Its better to educate the childrens about the relaity. Since it is very hard to blend the parents mentality. Children ideas are more tender in nature which could be educated easily ….

 • 54. குந்தவை  |  5:34 முப இல் ஏப்ரல் 8, 2009

  Thank You Saravanan.

  //Children ideas are more tender in nature which could be educated easily ….

  ரெம்ம்ம்ம்ப சுலபமா சொல்லிட்டீங்க…. முயற்சி பண்ணுகிறேன்.

 • 55. prabu  |  4:21 பிப இல் ஏப்ரல் 10, 2009

  உள்ளேன் அய்யா

 • 56. prabu  |  4:22 பிப இல் ஏப்ரல் 10, 2009

  சாரி சாரி
  உள்ளேன் அம்மா

 • 57. Krishna  |  11:08 முப இல் ஏப்ரல் 12, 2009

  Hi Kundhavai,

  Nice post. Congrats to Kanmani. All the best and Happy Parenting…

  Have a nice time.
  Krishna

 • 58. prabu  |  11:56 முப இல் ஏப்ரல் 12, 2009

  இப்பவாச்சும் புத்திவந்ததே
  (இதை நான் சொல்லலை கண்மனிதான் எனக்கு போன் பண்ணிசொல்லிச்சு)

 • 59. prabu  |  11:57 முப இல் ஏப்ரல் 12, 2009

  ////
  நானும் ஒரு நல்ல அம்மாவாக இருக்க, எனக்கு நல்ல ஞானத்தை தரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.
  /////

  இப்பவாச்சும் புத்திவந்ததே
  (இதை நான் சொல்லலை கண்மனிதான் எனக்கு போன் பண்ணிசொல்லிச்சு)

 • 60. Anand  |  1:49 முப இல் ஏப்ரல் 13, 2009

  //இப்பவாச்சும் புத்திவந்ததே//

  ஹி ஹி ஹி …
  யக்க்கா…!! கவனமா இருங்கன்னா கேட்டாதானே…!!!

 • 61. kunthavai  |  4:39 முப இல் ஏப்ரல் 13, 2009

  //All the best and Happy Parenting…

  வாங்க கிருஷ்ணா வாழ்த்துக்கு நன்றி.

 • 62. kunthavai  |  4:40 முப இல் ஏப்ரல் 13, 2009

  //இப்பவாச்சும் புத்திவந்ததே
  (இதை நான் சொல்லலை கண்மனிதான் எனக்கு போன் பண்ணிசொல்லிச்சு)

  வாங்க தம்பி. எல்லாத் தம்பிகளும் வம்பு தம்பிகளா இருக்காங்க…

 • 63. குந்தவை  |  4:48 முப இல் ஏப்ரல் 13, 2009

  //ஹி ஹி ஹி … யக்க்கா…!! கவனமா இருங்கன்னா கேட்டாதானே…!!!

  என்ன ஒரு சந்தோஷம்…
  கவனமா இருந்தாலும் ‘அக்கா’ன்னு கூப்பிட்ட உடனே மதி மயங்கிவிடுகிறதே தம்பி.

 • 64. JS  |  6:47 பிப இல் ஜூன் 13, 2009

  miga sariyaana vaasagam….

  //சூப்பர் அம்மா/அப்பாவாக நடந்து கொள்ளாதீர்கள்… Because you are not.//

  palar unara vendiya onru….

  marrapadi arumaiyaana post..

 • 65. குந்தவை  |  4:54 முப இல் ஜூன் 14, 2009

  //palar unara vendiya onru….

  //marrapadi arumaiyaana post..

  miga sariyaana vaasagam….

  Thank U.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
மார்ச் 2009
தி செ பு விய வெ ஞா
« பிப்   ஏப் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: