திருட்டுதனமா ஒரு சீடி

ஏப்ரல் 20, 2009 at 4:57 முப 41 பின்னூட்டங்கள்

                 இந்த சீடி  கையில் கிடைத்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது, ஆனால் நான் இன்னும் இதை பார்க்கவில்லை. நேரமே கிடைக்கவில்லை , அப்படியே கிடைத்தாலும் யாராவது வந்து வந்து விடுகிறார்கள்… ம் … இன்னைக்கு எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று என் அறையின் கதவை அடைத்தேன்.
               என் அறையில் கட்டில் அருகே வைத்திருந்த கணனியை உயிர்ப்பித்தேன். பாப்பா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.
              நான் என்னிடமிருந்த குறுந்தகடை வைத்த சப்தத்தில் , என் மனைவியிடமிருந்து மெல்லிய குரல் வந்தது,
“என்னப்பா பண்ணுறீங்க தூங்கலையா?”

“தூங்குறேன்…… நீ தூங்கு”

“தூங்கவிட்டாதானே… அதை முதல்ல அங்கிட்டாம தூக்கி போடுங்க சதா சர்வ காலாமும் அதோட என்ன தான் செய்வீங்களோ” தூக்கம் கலைந்த எரிச்சல் அதில் ஒட்டி இருந்தது.

பேசாம படு தாயி… நான் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு தூங்குகிறேன்”

“என்ன பார்க்கப்போறீங்க”

“ஆங்… அதெல்லாம் உனக்கு எதுக்கு… நீ அதை பார்க்க வேண்டாம்”

“என்ன… நான் பார்க்கவேண்டாமா? அது என்ன சீடி?”

“வேண்டுமென்றால் உனக்கு அப்புறம் சொல்லித் தருகிறேன்” என்றேன் நமட்டு சிரிப்புடன்.

சொல்லித் தருவீங்களா….? “ பட்டென்று உறக்கம் கலந்து படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.

அப்படி என்ன சீடிப்பா பாக்கப்போறீங்க சொல்லுங்க”

உனக்கு தேவையில்லாததை பற்றி நினைக்காம தூங்குமா” .  இந்த பேச்சு ரெம்பவே அவளை உசுப்பேற்றி விட்டது என்று , அவள் விடுக்கென்று படுக்கையிலிருந்து எழுந்த வேகத்திலே தெரிந்தது.

           நான் வேறு வழியில்லாமல் கணனி மானிட்டரை அமர்த்திவிட்டு , எழுந்து அவளை அங்கிருந்து நகர விடாமல் ,
 “போய் தூங்கும்மா..”

 “எனக்கு இப்ப நீங்க என்ன செய்றீங்கன்னு தெரியணும்..” என்று என்னை பிடித்து தள்ளிவிட்டு , வேகமாக முன்னேற… நான் தடுக்க.. ஒரு மினி சர்க்கஸ் பண்ணிவிட்டு தவ்வி கணனி திரையை உயிர்ப்பித்து விட்டாள். ஒரு நிமிடத்தில் நான் பார்த்துகொண்டிருந்ததை தெரிந்து கொண்டு கொலை வெறியுடன், அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு நின்ற என்னை நோக்கி ………………………….

 ‘

 ‘
 ‘

         சரி அப்படி என்ன சீடி பார்த்தேன் என்று கேட்கிறீங்களா… ஒண்ணுமில்லைங்க என் பாப்பாவோட பிறந்த நாள் சீடி தான் பார்த்தேன்.

Advertisements

Entry filed under: சிறுகதை.

குழந்தை சொன்ன உண்மை. கடலை…கடலை….

41 பின்னூட்டங்கள் Add your own

 • 1. prabu  |  12:03 பிப இல் ஏப்ரல் 20, 2009

  ///
  சரி அப்படி என்ன சீடி பார்த்தேன் என்று கேட்கிறீங்களா… ஒண்ணுமில்லைங்க என் பாப்பாவோட பிறந்த நாள் சீடி தான் பார்த்தேன்.
  ///

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
  எனக்கு அப்பவே தெரியும்

 • 2. prabu  |  12:04 பிப இல் ஏப்ரல் 20, 2009

  நான் ” உங்கள் கல்யான சீடியாக்கும்னு நினைத்தேன்………….

 • 3. Sriram  |  1:53 பிப இல் ஏப்ரல் 20, 2009

  ME the first

 • 4. Sriram  |  1:54 பிப இல் ஏப்ரல் 20, 2009

  No comments… Ithellaam periyavanga samacharam

 • 5. prabu  |  4:58 பிப இல் ஏப்ரல் 20, 2009

  உங்களை பற்றி வலைச்சரத்தில் எழுதியுள்ளேன் வந்து பார்க்கவும்
  http://blogintamil.blogspot.com/

 • 6. குந்தவை  |  4:24 முப இல் ஏப்ரல் 21, 2009

  //ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
  எனக்கு அப்பவே தெரியும்

  அப்ப கதை நல்லாயில்லன்னு சொல்லுங்க. அடுத்த கதையை நல்லா எழுத முயற்சி பண்ணுகிறேன்.

 • 7. குந்தவை  |  4:25 முப இல் ஏப்ரல் 21, 2009

  //நான் ” உங்கள் கல்யான சீடியாக்கும்னு நினைத்தேன்………….

  பிரபு தம்பி இது கதை.

 • 8. குந்தவை  |  4:28 முப இல் ஏப்ரல் 21, 2009

  //ME the first

  U are Welcome

 • 9. குந்தவை  |  4:30 முப இல் ஏப்ரல் 21, 2009

  //No comments… Ithellaam periyavanga samacharam

  இதுல என்ன சமாச்சாரம் இருக்கு?

 • 10. குந்தவை  |  4:33 முப இல் ஏப்ரல் 21, 2009

  //உங்களை பற்றி வலைச்சரத்தில் எழுதியுள்ளேன்

  நன்றி தம்பி. ஆமா யாராவது ஆட்டோ கீட்டோ அனுப்பினா அங்கிட்டாம திருப்பிவிட்டிடுவேன்.

 • 11. Bhuvanesh  |  6:02 முப இல் ஏப்ரல் 21, 2009

  படிச்சு சிரிச்சேன் அக்கா!! கதைல கூட ஒரு மனுஷன் நிம்மதியா ஒரு சீ.டி பாக்க முடியல!! என்ன உலகம் இது ?

 • 12. உருப்புடாதது_அணிமா  |  9:43 முப இல் ஏப்ரல் 21, 2009

  உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….

  தாங்க முடியல….

 • 13. உருப்புடாதது_அணிமா  |  9:44 முப இல் ஏப்ரல் 21, 2009

  ///ஒரு நிமிடத்தில் நான் பார்த்துகொண்டிருந்ததை தெரிந்து கொண்டு கொலை வெறியுடன், அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு நின்ற என்னை நோக்கி///

  ஃஅப்பாலிக்கா என்ன ஆச்சு??
  முடிவு தெரிஞ்சே ஆகனும்

 • 14. குந்தவை  |  4:54 முப இல் ஏப்ரல் 22, 2009

  //ஃஅப்பாலிக்கா என்ன ஆச்சு??

  வாங்க அண்ணாச்சி முதல் தடவையா வந்திருக்கீங்க வாங்க.

  என்ன இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க. நீங்க நல்லவரு… வல்லவரு… நாலுஞ்தெரிஞ்சவரு… உங்களுக்கு தெரியாமலா.(Just kidding)

 • 15. குந்தவை  |  4:56 முப இல் ஏப்ரல் 22, 2009

  //படிச்சு சிரிச்சேன் அக்கா!! கதைல கூட ஒரு மனுஷன் நிம்மதியா ஒரு சீ.டி பாக்க முடியல!! என்ன உலகம் இது ?

  ஆகா….

 • 16. Anand  |  4:21 முப இல் ஏப்ரல் 23, 2009

  //“எனக்கு இப்ப நீங்க என்ன செய்றீங்கன்னு தெரியணும்..” என்று என்னை பிடித்து தள்ளிவிட்டு , வேகமாக முன்னேற…//

  பார்க்க போறவரை விட, இவங்களுக்கு ஆர்வத்த பாருங்கப்பா…

 • 17. Anand  |  4:25 முப இல் ஏப்ரல் 23, 2009

  நல்ல கதை நடை ங்க … இந்த மாதிரி அப்பப்ப கதைகள் கொடுப்பது நல்லா இருக்குங்க… 🙂

 • 18. Kunthavai  |  6:05 பிப இல் ஏப்ரல் 23, 2009

  //பார்க்க போறவரை விட, இவங்களுக்கு ஆர்வத்த பாருங்கப்பா…

  story…. story……. Anand

 • 19. Kunthavai  |  6:37 பிப இல் ஏப்ரல் 23, 2009

  //நல்ல கதை நடை ங்க … இந்த மாதிரி அப்பப்ப கதைகள் கொடுப்பது நல்லா இருக்குங்க…

  நன்றி தம்பி. அப்புறம் ரெம்ப formala ஆ பேசுற மாதிரி தெரியுதே…
  சேட்டை இல்லாத ஆனந்த் நல்லாயில்லை.

 • 20. Anand  |  10:38 பிப இல் ஏப்ரல் 23, 2009

  //story…. story……. Anand//
  நானும் கதையில் உள்ள கதாபாத்திரத்தை தான் சொன்னேனுங்கோ… நீங்க ஏன் உங்கள சொல்றேன்னு நினைக்கிறீங்க…? அப்படின்னா, கதைல கொஞ்சம் உங்க incidents உம் இருக்கும்னு நினைக்கிறன்… 😉
  என்ன நான் சொல்வது, right ah?

 • 21. Anand  |  10:52 பிப இல் ஏப்ரல் 23, 2009

  //சேட்டை இல்லாத ஆனந்த் நல்லாயில்லை//
  ஹி ஹி… பாராட்டறேன்னு நினைச்சீங்க போல… கொஞ்சம் திருப்பி படிச்சு பாருங்க… [கிளுகிளுப்பு கதைக்கு நல்ல “கதை நடை” ன்ன, என்ன?]

 • 22. Anand  |  11:08 பிப இல் ஏப்ரல் 23, 2009

  //இதுல என்ன சமாச்சாரம் இருக்கு?//
  அப்பாவியாட்டம் கேள்விய பாருங்கப்பா…? சொல்றதையெல்லாம் சொல்லிட்டு, கடைசில்ல “இது கதைதான் தம்பிகளா!!” ன்னு கதை விட வேண்டியது… அப்புறம் பாய்ஸ் தான் naughty ன்னு கங்கணம் கட்டிக்க வேண்டியது… 🙂

 • 23. குந்தவை  |  5:39 முப இல் ஏப்ரல் 24, 2009

  தேவையா எனக்கு? தம்பி……கர்ர்ர்ர்ர்…………..

 • 24. Anand  |  2:38 பிப இல் ஏப்ரல் 26, 2009

  //தேவையா எனக்கு? தம்பி……கர்ர்ர்ர்ர்…………..//
  என்ன அக்கா…? சட்டுன்னு உட்காந்துட்டீங்க….? எதாவது எதிர்மொழி குடுப்பீங்கன்னு நினைச்சேன்… அப்போ நான் guess பண்ணினது எல்லாம் உண்மையா..? 🙂

 • 25. குந்தவை  |  4:12 முப இல் ஏப்ரல் 27, 2009

  //என்ன அக்கா…? சட்டுன்னு உட்காந்துட்டீங்க….? எதாவது எதிர்மொழி குடுப்பீங்கன்னு நினைச்சேன்… அப்போ நான் guess பண்ணினது எல்லாம் உண்மையா..? 🙂
  உங்க கிட்ட எல்லாம் நான் பேசி ஜெயிக்க முடியுமா? அதான் சும்மா இருந்திட்டேன்.

 • 26. மோகன்  |  2:56 பிப இல் ஏப்ரல் 29, 2009

  நான் கூட சோகப்படம் (அவங்க கல்யாண வீடியோ) பாத்தாரான்னு நினைச்சேன்

 • 27. மோகன்  |  2:57 பிப இல் ஏப்ரல் 29, 2009

  ரொம்ப லேட்டா வந்து இருக்கேன் போல!

 • 28. குந்தவை  |  11:37 முப இல் ஏப்ரல் 30, 2009

  //நான் கூட சோகப்படம் (அவங்க கல்யாண வீடியோ) பாத்தாரான்னு நினைச்சேன்

  ம்…. நினைப்பீங்க. அதென்ன கல்யாண காசெட் உங்களுக்கு சோகப்படமா? சும்மா வெளியில அப்படி சொல்லிக்கிட்டு திரிபவர்களை நம்பாதீங்க தம்பி.

 • 29. குந்தவை  |  11:39 முப இல் ஏப்ரல் 30, 2009

  //ரொம்ப லேட்டா வந்து இருக்கேன் போல!

  லேட்டானாலும் வந்துட்டீங்க இல்ல(விதி வலியது) . வாங்க.

 • 30. Anand  |  11:48 பிப இல் மே 1, 2009

  //ம்…. நினைப்பீங்க. அதென்ன கல்யாண காசெட் உங்களுக்கு சோகப்படமா? //

  என்ன இப்படி கேட்டுட்டீங்க… எங்க எல்லோருக்கும் “alltime favorite” கேசட் அல்லவா கல்யாண கேசட்…? ஒரு மனுஷன் சிங்கிள் லைப் ல இருந்து “விடுபட்டு” கல்யாண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைப்பது எவ்வளவு பெரிய விஷயம் [ஆண்டவா !!!! ;( ]…

 • 31. குந்தவை  |  4:35 முப இல் மே 3, 2009

  என்னமோ உள்குத்து வெளிக்குத்து சைடுகுத்து வச்சி எழுதியிருக்கீங்கன்னு தோணுது ஆனா எனக்கு ஒண்ணுமே புரியலைத் தம்பி.
  இருந்தாலும் திருமணத்தால் இருவர் ஒருவராக இருப்பது நல்ல விஷயம் தானே. அதையும் தாண்டி கேலி, கிண்டல், சண்டை, வாக்குவாதம் எல்லாம் இருந்தால் இன்னும் கலகலப்பாக இருக்கும்.( நான் சண்டை போடுவதை நியாயப்படுத்தணும் இல்ல)

 • 32. Anand  |  8:09 பிப இல் மே 3, 2009

  //இருந்தாலும் திருமணத்தால் இருவர் ஒருவராக இருப்பது நல்ல விஷயம் தானே. //
  சத்தியமான வார்த்தைகள் அக்கா…

  //அதையும் தாண்டி கேலி, கிண்டல், சண்டை, வாக்குவாதம் எல்லாம் இருந்தால் இன்னும் கலகலப்பாக இருக்கும்.//
  இல்லனா, bore அடிச்சுடும்ன்னு நினைக்கிறீங்க போல இருக்கு …?
  [இந்த தடவை எந்த குத்தும் இல்லை 🙂 ]

 • 33. குந்தவை  |  4:25 முப இல் மே 4, 2009

  என்ன தம்பி இப்படி கேட்டுட்டீங்க. நமக்கு சாப்பாட்டில கூட உப்பு, காரம், துவர்ப்பு, இனிப்பு, கசப்பு, புளிப்புன்னு எல்லா சுவையும் இருந்தால் தான் ஒரு கட்டு கட்டுவோம் (எனக்கு உதாரணம் கூட சாப்பாடு தான் வருது). வாழ்க்கையும் அது போல் தான்.

 • 34. Anand  |  1:57 முப இல் மே 5, 2009

  //உப்பு, காரம், துவர்ப்பு, இனிப்பு, கசப்பு, புளிப்புன்னு//

  அதென்னமோ தெரியலீங்க்கா… நான் இங்க சமைக்கும் போதெல்லாம் பெருசா, எல்லா சுவையும் போட்டு சமைக்கணும்னு நினைக்க மாட்டேன்… அவ்வளவு சீக்கிரம் எதுவும் bore அடிக்கிறதில்லை…பெண்களுக்கு அப்படி இல்லைன்றது நான் நினைப்பது [mostly, எல்லா விஷயத்திலும்]…

 • 35. குந்தவை  |  4:30 முப இல் மே 5, 2009

  அடேங்கப்பா எங்கயிருந்து எங்க போயிட்டீங்க தம்பி.
  அன்பு அழகானது, அது ஒருத்தருக்கும் ஒருநாளும் திகட்டாது. எழுதினா எழுதிகிட்டே போகலாம். நான் அடுத்ததா ஒரு பதிவை போடுவதற்கு நல்ல டாபிக் கொடுத்ததற்கு நன்றி.

 • 36. Mukundan  |  6:28 முப இல் மே 10, 2009

  // சரி அப்படி என்ன சீடி பார்த்தேன் என்று கேட்கிறீங்களா… ஒண்ணுமில்லைங்க என் பாப்பாவோட பிறந்த நாள் சீடி தான் பார்த்தேன்.
  //

  நம்பிட்டேன் 🙂

 • 37. குந்தவை  |  11:49 முப இல் மே 10, 2009

  //நம்பிட்டேன்

  கதையை படிச்சமா ‘நல்லாயிருக்கு … நல்லாயில்லன்னு’ கருத்து சொன்னமான்னு இல்லாம இது என்ன ஆராய்ச்சி……. அதுவும் எத்தனை பதிவு எழுதியிருக்கேன் இதுவரைக்கும் இப்படி ஆராய்ச்சி பண்ணாம இதுக்கு மாத்திரம்….எப்படி? இதெல்லாம் நல்லாயில்ல சொல்லிட்டேன்…

 • 38. Mukundan  |  2:50 பிப இல் மே 10, 2009

  இது கதையில்லை நிஜம் , அப்படின்னு ஏதோ தோணிச்சு அது தான் இப்படி 🙂

 • 39. குந்தவை  |  4:26 முப இல் மே 11, 2009

  //இது கதையில்லை நிஜம் , அப்படின்னு ஏதோ தோணிச்சு அது தான் இப்படி

  இருந்தாலும் எந்த கதைக்கும் ஒரு உண்மையான சம்பவம் தான் உந்துதலாக இருக்கும். அதனால கண்டுக்காதீங்க.

 • 40. JS  |  6:42 பிப இல் ஜூன் 13, 2009

  enna ulagam idhu oruthan nimmathiyaa oru CD pakka mudiala…

  but last oru expected tiwst but a different one 😛

  nalla narration..

  viru viruppa veruppa katti 😛

 • 41. குந்தவை  |  4:48 முப இல் ஜூன் 14, 2009

  //enna ulagam idhu oruthan nimmathiyaa oru CD pakka mudiala…
  but last oru expected tiwst but a different one

  nalla narration..
  பயங்கரமா புகழ்ந்து கமெண்ட் போட்டிருக்கியளே தம்பி. இதில் உள்குத்து ஒன்றும் இல்லையே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஏப்ரல் 2009
தி செ பு விய வெ ஞா
« மார்ச்   மே »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

%d bloggers like this: