என்னை பற்றி சில….

ஜூன் 3, 2009 at 9:26 முப 60 பின்னூட்டங்கள்

         இந்த தொடரை எதுக்கு ஆரம்பிச்சாங்கன்னு தெரியல. என்னை பற்றி, நான் எழுதுவதை படித்து வதை படவேண்டும் என்ற உங்கள் விதியை எப்படி மாற்றமுடியும். வேலை பழுவிலும், முகுந்தன் 32 கேள்விக்கு பொறுமையா பதில் சொல்லியிருப்பதாலும், சுயமா சிந்தித்து எழுதுவதற்க்கு ஒன்றும் இல்லாததாலும் உங்களை கஷ்டப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.சரி இதோ கேள்வி பதில்….

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

      என்னோட உண்மையான பெயரை ஒரு பாதிரியார் வைத்தார். இந்தப் பெயரை நானாக வைத்து கொண்டது (பொன்னியின் செல்வன் தாக்கத்தினால்). எனக்கு என் பெயர் ரொம்பவே பிடிக்கும்.

 2. கடைசியாக அழுதது எப்பொழுது?

 (பொதுவாக, பெண்களிடம் இந்த கேள்வியை கேட்கக்கூடாதுங்க. )

      அம்மாவின் மரணத்தை நினைக்கும் போதெல்லாம் அழுதுவிடுவேன். இந்த பிளாக் எழுத ஆரம்பித்ததே அந்த வேதனையை மறக்கத்தான்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

       என்னோட தோழியின் கையெழுத்தும் என்னோடதும் ஒரே மாதிரி இருக்கும். அதனால் ரெம்பவே பிடிக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

        ம்… எங்கம்மா வைக்ககூடிய மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு. அப்புறம் கல்யாண வீட்டில் வைக்கும் சாம்பார், அவியல்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

           நல்ல பழகுவேன். ஆனால் அப்புறம் அவங்க பழக்கத்தை பொறுத்து நட்பு தொடரும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?

       எந்த நீர் நிலையிலும் குளிக்கப் பிடிக்கும். குளத்தில் நீந்தி குளிப்பதென்றால் இன்னும் பிடிக்கும்.

 7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?      

        சிரிப்பு, கண்கள். மனதார அன்பா ஒரு சிரிப்பு சிரித்தாலே கவுந்திடுவேன்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

     பிடித்த விஷயம் எல்லோரையும் நல்லவர் என்று ஓவரா நம்பி பழகுவது. பிடிக்காததும் அதுவே.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

            அப்படியே எங்கம்மா மாதிரி எப்பவும் என்னை விரட்டிகொண்டு இருப்பது(பிடித்ததும் அதுவே பிடிக்காததும் அதுவே).

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?     

     என் அம்மாவும் அப்பாவும். என் கண்மணியை பார்த்த பிறகு தான் என்னை விட்டு பிரிந்தார்கள் என்றாலும்….. அப்பப்ப எனக்கு யாருமே இல்லை என்கிற எண்ணம் வந்துவிடுகிறது.

 11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

ஆரஞ்ச், சிகப்பு நிறம் கலந்த சுடிதார்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

என்னங்க இது, பிரவுசரைப் பார்த்துக் கொண்டு தான் இதை எழுதுகிறேன். ஆபீசில் எதுவும் கேட்க விடமாட்டார்கள்.:)

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளிர் நீலம்.

14.பிடித்த மணம் ?

மல்லிகை பூ வாசம். மழைக்கு முன் வரும் மண் வாசமும் பிடிக்கும்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

         பாசக்கார தம்பிங்க. அவங்களை எல்லாம் தைரியமாக நாட்டாமை  பண்ணலாம்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

      அவர் அவருடைய கேஷவ் பற்றி எழுதியது பிடிக்கும். அப்புறம் நிறைய ஜோக் எழுதுவார் அதுவும் பிடிக்கும்.

 17. பிடித்த விளையாட்டு?

           கூடை பந்தாட்டம், கொக்கோ, வாலிபால் என்று விறுவிறுப்பாக செல்லும் எல்லா விளையாட்டும் பிடிக்கும். கிரிக்கெட் பிடிக்கவே பிடிக்காது.

 18.கண்ணாடி அணிபவரா?

    அணிய பிடிக்காது. ஆனால் அது இல்லாம ஹி…ஹி … எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நகைச்சுவைப் படங்கள் ரொம்ப பிடிக்கும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

யாவரும் நலம்.

21.பிடித்த பருவ காலம் எது?

வசந்த காலம்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

இப்பதைக்கு ஒன்றும் இல்லை.

23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

வேற வேலை இல்ல…..

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது – என் குழந்தையின் சிரிப்பு சத்தம்.

பிடிக்காதது – அழுகை சத்தம், என் கணவர் கோபத்தில் பேசும் சத்தம்.

 25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

குவைத்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?   

         தப்பு செஞ்ச விஷயத்திற்க்கு அடிவாங்கினதில்லை. ஆனால் தப்பே செய்யாத விஷயத்திற்க்கு நிறைய வாங்கியிருக்கிறேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?              

                   வேலை செய்து சாப்பிட வேண்டும் என்று எண்ணாமல் அடுத்தவர்களை எதிர்பார்ப்பது, நிறைவில்லாமல் அளவுக்கு மீறி ஆசைப்படுவது, அடுத்தவர்களை மட்டம் தட்டி பேசுவது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

                யார் மீதாவது/எந்த காரணத்திற்க்கு எனக்கு கோபம் வந்தாலும், அவர்களிடம் சண்டை போடமாட்டேன். என் வீட்டுகாரரிடம் தான் வந்து சண்டை போடுவேன்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

             என் வாழ்க்கையே தேசிய நெடுஞ்சாலையில் தானுங்க. என்னோட ஊரு நாகர்கோவில், மேற்படிப்பு திருச்சியில், வெலை சென்னையில், அப்புறம் கல்யாணம் கோவில்பட்டியில். இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் போது மதுரை, திருச்சி, சென்னைக்கு தான் சுற்றுலா சென்றோம், திருச்சியில் படிக்கும் போது கன்யாகுமரிக்குத் சுற்றுலா சென்றோம். இந்த கேள்வியை கேட்டா நான் ரெம்ப கடுப்பாகிவிடுவேன்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

     இப்போது போல், எப்பவும் சந்தோஷமா இருக்கணும்ன்னு தான் ஆசை.

31.கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

        ஏதாவது ஒரு மெஷினை கொடுங்க சந்தோஷமாக வேலை பார்ப்பார்.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

                வாழ்க்கை ஒரு விளையாட்டு. அதில் வெற்றி, தோல்வி, அடி, வேதனை, சிரிப்பு எல்லாம் இருக்கும். சந்தோஷமா விளையாடுங்கள்.

அப்பாடா, படிக்கும் போது கூட இவ்வளவு சின்சியரா பதில் எழுதியது கிடையாது. இனி, எதையும் தாங்கும் இதையம் படைத்த புவனேஷையும், என்ன எழுதலாம் என்று ரெம்பவே யோசித்து கொண்டிருக்கும் ஷ்ரிராமையும்,  ரெம்ப நாளாக வெளியே வராமல் ஒளிச்சி உக்காந்து கொண்டிருக்கும் பிரபுவையும்  அழைக்கிறேன்.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

டைரி குறிப்பு – 3 எனக்கும் தத்துவத்துக்கும் ரெம்ப தூரம்.

60 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Mukundan  |  10:55 பிப இல் ஜூன் 3, 2009

  //அம்மாவின் மரணத்தை நினைக்கும் போதெல்லாம் அழுதுவிடுவேன்.//

  படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு ….

  //அப்படியே எங்கம்மா மாதிரி எப்பவும் என்னை விரட்டிகொண்டு இருப்பது//

  எப்படி ? த த பா பா என்றா? அவ்வ் …….

  //என் அம்மாவும் அப்பாவும். என் கண்மணியை பார்த்த பிறகு தான் என்னை விட்டு பிரிந்தார்கள் என்றாலும்….. அப்பப்ப எனக்கு யாருமே இல்லை என்கிற எண்ணம் வந்துவிடுகிறது.
  //

  ஈடு செய்ய முடியாத பேரிழப்பு

  //அவர் அவருடைய கேஷவ் பற்றி எழுதியது பிடிக்கும். அப்புறம் நிறைய ஜோக் எழுதுவார் அதுவும் பிடிக்கும்.
  //

  ரொம்ப நன்றிங்கோவ் ….

  ஜோக் எல்லாம் சொந்தமா எழுதறதில்லை,கேட்டது ரசித்தது மட்டுமே …

  //என் வீட்டுகாரரிடம் தான் வந்து சண்டை போடுவேன்.
  //

  //என் கணவர் கோபத்தில் பேசும் சத்தம்.//

  ஒ நீங்க கோபத்தில் இருக்கும்போது அவர் பேசுவது பிடிக்காதா?

 • 2. Bhuvanesh  |  6:56 முப இல் ஜூன் 4, 2009

  //என்னோட உண்மையான பெயரை ஒரு பாதிரியார் வைத்தார். //

  ஆமா உங்க உண்மையான பேர் என்ன ??

 • 3. Bhuvanesh  |  7:10 முப இல் ஜூன் 4, 2009

  //இப்போது போல், எப்பவும் சந்தோஷமா இருக்கணும்ன்னு தான் ஆசை. //

  இப்படியே சந்தோசமா இருக்க கடவுளை வேண்டிகிறேன் !!

 • 4. Bhuvanesh  |  7:11 முப இல் ஜூன் 4, 2009

  //என்னோட தோழியின் கையெழுத்தும் என்னோடதும் ஒரே மாதிரி இருக்கும். அதனால் ரெம்பவே பிடிக்கும். //

  கை எழுத்து அழகா இருக்குமா ??

 • 5. Bhuvanesh  |  7:13 முப இல் ஜூன் 4, 2009

  //பாசக்கார தம்பிங்க. அவங்களை எல்லாம் தைரியமாக நாட்டாமை பண்ணலாம்//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 • 6. Bhuvanesh  |  7:15 முப இல் ஜூன் 4, 2009

  //பிடிக்காதது – அழுகை சத்தம், என் கணவர் கோபத்தில் பேசும் சத்தம்.//
  என்னது கணவர் கோவம் வந்தா கத்துவாரா?? மொதல்ல மச்சானுக்கு கோவப்படற உரிமையை ஏன் கொடுத்தீங்க ?? ஊருக்குள்ள மத்த பொண்ணுங்க எப்படி இருக்காங்கன்னு பாருங்க அக்கா !!

 • 7. Bhuvanesh  |  7:15 முப இல் ஜூன் 4, 2009

  // யார் மீதாவது/எந்த காரணத்திற்க்கு எனக்கு கோபம் வந்தாலும், அவர்களிடம் சண்டை போடமாட்டேன். என் வீட்டுகாரரிடம் தான் வந்து சண்டை போடுவேன். //

  குந்தவை.. வந்தியதேவரை ரொம்ப மிரட்டாதீங்க 🙂

 • 8. Bhuvanesh  |  7:17 முப இல் ஜூன் 4, 2009

  // ஏதாவது ஒரு மெஷினை கொடுங்க சந்தோஷமாக வேலை பார்ப்பார். //

  மெஷின் வேற ஆள் மேல இருக்குற கோவத்த அவருமேல காட்டாது இல்ல ?? அதான் !!

 • 9. குந்தவை  |  11:34 முப இல் ஜூன் 4, 2009

  // எப்படி ? த த பா பா என்றா? அவ்வ் …….
  வேணாம் நான் அழுதிடுவேன்.

  //ஒ நீங்க கோபத்தில் இருக்கும்போது அவர் பேசுவது பிடிக்காதா?
  இதெல்லாம் ரெம்ப ஓவர் முகுந்தன். என்னமா கலாய்க்கராங்கய்யா.

 • 10. குந்தவை  |  11:36 முப இல் ஜூன் 4, 2009

  //ஆமா உங்க உண்மையான பேர் என்ன ??

  அக்காவை பேர் சொல்லி கூப்பிடக்கூடாது தம்பி.

 • 11. குந்தவை  |  11:37 முப இல் ஜூன் 4, 2009

  //இப்படியே சந்தோசமா இருக்க கடவுளை வேண்டிகிறேன் !!

  ரெம்ப நன்றி புவநேஷ்.

 • 12. குந்தவை  |  11:38 முப இல் ஜூன் 4, 2009

  //கை எழுத்து அழகா இருக்குமா ??

  என் தோழியின் கையெழுத்து ரெம்ப நல்லாயிருக்கும். 🙂

 • 13. குந்தவை  |  11:45 முப இல் ஜூன் 4, 2009

  //என்னது கணவர் கோவம் வந்தா கத்துவாரா?? மொதல்ல மச்சானுக்கு கோவப்படற உரிமையை ஏன் கொடுத்தீங்க ?? ஊருக்குள்ள மத்த பொண்ணுங்க எப்படி இருக்காங்கன்னு பாருங்க அக்கா !!

  இப்படி வேற இருக்கா. விஷயம் தெரியாமலே உரிமையை கொடுத்திட்டேனே. நீங்க சொல்லிட்டீங்க இல்ல…. இனிமேல் பார்த்துக்கொள்கிறேன்.

 • 14. குந்தவை  |  11:49 முப இல் ஜூன் 4, 2009

  //குந்தவை.. வந்தியதேவரை ரொம்ப மிரட்டாதீங்க

  வேற வழி இல்லையே தம்பி. யாரையாவது மிரட்ட முடியுமா? மிரட்டினால் கொத்துபரோட்டா போட்டிருவாங்களே.

 • 15. குந்தவை  |  11:51 முப இல் ஜூன் 4, 2009

  //மெஷின் வேற ஆள் மேல இருக்குற கோவத்த அவருமேல காட்டாது இல்ல ?? அதான் !!

  இப்படி வேற இருக்குதா? யோசிக்கவேண்டிய விஷயம் தான்.

 • 16. saravanan kulandaiswamy  |  11:12 முப இல் ஜூன் 8, 2009

  Hi Kunthvai…
  I want to tell you one thing.. I started reading this blog because of the Name( Being inspired by Ponniyin selvan)… I thought that the person writing thuis blog will be more dominating in nature and will always propagate against anti-feministic society. But to the great surprise i had found “touchy” family.. (Kanmani is the eye catcher for me).. I envy you people.

  P.S:Could you please tell me how to write a blog in tamil. I have too much interest in writing and dont know how to start.Sorry for big comment.

 • 17. குந்தவை  |  12:00 பிப இல் ஜூன் 8, 2009

  //I started reading this blog because of the Name( Being inspired by Ponniyin selvan)… I thought that the person writing thuis blog will be more dominating in nature and will always propagate against anti-feministic society

  ஆகா…. இப்படி எல்லாம் எதிர்பாத்து ஏமாந்துட்டீங்களே.சரி வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.

  //Could you please tell me how to write a blog in tamil. I have too much interest in writing
  1 wordpress account ஒன்னு open பண்ணுங்க.

  http://www.google.com/transliterate/indic/tamil

  ௨. இந்த சைட்டுக்கு போய் ஆங்கிலத்தில் டைப் பண்ணினால் அழகாக அதுவே தமிழ் படுத்திவிடும். அப்படியே copy paste பண்ணிடுங்க.

  //Sorry for big கமெண்ட்
  இதுக்கெல்லாம் சாரி கேட்கக்கூடாது.

 • 18. அடலேறு  |  2:38 பிப இல் ஜூன் 8, 2009

  குந்தவை.. மீண்டும் தங்களிடம் இருந்து ஒரு அழகான பதிவு. வாழ்த்துக்கள்

 • 19. பிரியமுடன் பிரபு  |  12:34 முப இல் ஜூன் 10, 2009

  ////
  கிரிக்கெட் பிடிக்கவே பிடிக்காது.
  /////

  இதை வன்மையாக கண்டிக்கிறேன்

  இதை வன்மையாக கண்டிக்கிறேன்

  இதை வன்மையாக கண்டிக்கிறேன்

  இதை வன்மையாக கண்டிக்கிறேன்

  இதை வன்மையாக கண்டிக்கிறேன்

  கிரிக்கெட் எங்கள் மதம்
  கிரிக்கெட் எங்கள் மதம்
  (எனக்கு கொஞ்சம் நல்ல விளையாட தெரிந்தது அதுதான்)

 • 20. பிரியமுடன் பிரபு  |  12:38 முப இல் ஜூன் 10, 2009

  ///
  வாழ்க்கை ஒரு விளையாட்டு. அதில் வெற்றி, தோல்வி, அடி, வேதனை, சிரிப்பு எல்லாம் இருக்கும். சந்தோஷமா விளையாடுங்கள்.
  ////

  அடடா……!!!!!!

 • 21. பிரியமுடன் பிரபு  |  12:40 முப இல் ஜூன் 10, 2009

  ////
  எதையும் தாங்கும் இதையம் படைத்த புவனேஷையும், என்ன எழுதலாம் என்று ரெம்பவே யோசித்து கொண்டிருக்கும் ஷ்ரிராமையும், ரெம்ப நாளாக வெளியே வராமல் ஒளிச்சி உக்காந்து கொண்டிருக்கும் பிரபுவையும் அழைக்கிறேன்.
  ////

  ஆஹா…

  ***பாசக்கார தம்பிங்க. அவங்களை எல்லாம் தைரியமாக நாட்டாமை பண்ணலாம். *****

  அப்பவே நான் யோசித்தேன்

 • 22. பிரியமுடன் பிரபு  |  12:41 முப இல் ஜூன் 10, 2009

  ./////
  ரெம்ப நாளாக வெளியே வராமல் ஒளிச்சி உக்காந்து கொண்டிருக்கும் பிரபுவையும் அழைக்கிறேன்.
  ////

  தவறு திருத்திகொள்ளுங்கள் “சிங்கம் பதுங்கி” இருந்தது என்று

 • 23. குந்தவை  |  4:28 முப இல் ஜூன் 10, 2009

  //கிரிக்கெட் எங்கள் மதம்
  பொதுவா யாருக்கும் மதம் பிடிக்கக்கூடாதே தம்பி. பிரச்சனையே அதுதான்.

 • 24. குந்தவை  |  4:33 முப இல் ஜூன் 10, 2009

  //தவறு திருத்திகொள்ளுங்கள் சிங்கம் பதுங்கி இருந்தது என்று
  சரிங்க (காட்டு) தலைவரே.

 • 25. Anand  |  8:46 பிப இல் ஜூன் 10, 2009

  //என் வீட்டுகாரரிடம் தான் வந்து சண்டை போடுவேன். //

  மச்சான் கொடுத்து வெச்சவுரங்க…

 • 26. Anand  |  8:47 பிப இல் ஜூன் 10, 2009

  ///அப்புறம் கல்யாண வீட்டில் வைக்கும் சாம்பார், அவியல்.//

  அட்ராசக்கை … அட்ராசக்கை.. !!! 🙂

 • 27. Anand  |  8:51 பிப இல் ஜூன் 10, 2009

  //தப்பு செஞ்ச விஷயத்திற்க்கு அடிவாங்கினதில்லை. //

  exam ல காப்பி அடிச்சீங்களா? 🙂

  //ஆனால் தப்பே செய்யாத விஷயத்திற்க்கு நிறைய வாங்கியிருக்கிறேன்.//

  exam ல காப்பி அடிச்சவங்கள கோழி மூட்டி கொடுத்ததினால், ரவுண்டு கட்டி அடியா? 🙂

 • 28. Anand  |  8:55 பிப இல் ஜூன் 10, 2009

  //இந்தப் பெயரை நானாக வைத்து கொண்டது //
  உண்மைய சொல்லுங்க… மச்சான் தானே suggest பண்ணினார் ?

 • 29. Anand  |  8:58 பிப இல் ஜூன் 10, 2009

  //(பொன்னியின் செல்வன் தாக்கத்தினால்). //

  நான் ப்லோக் எழுதினால், Gandalf ன்னு வெச்சுக்க போறேன் பாருங்க… :p

 • 30. Anand  |  8:59 பிப இல் ஜூன் 10, 2009

  //எனக்கு என் பெயர் ரொம்பவே பிடிக்கும்.//
  குந்தவை யா ? இல்லை நிஜ பேரா?

 • 31. Anand  |  9:05 பிப இல் ஜூன் 10, 2009

  குந்தவை அக்காவின் பிறந்தநாள் எப்பொழுது?

  [இந்த இடுகைக்கு question paper set பண்ணினவர் மன்னிக்கவும்… 🙂 ]

  அக்கா, out of portion ன்னு சொல்லீராதீங்க…

 • 32. Sriram  |  10:13 முப இல் ஜூன் 11, 2009

  ஆஹா …அக்கா கோத்து வுட்டுடீங்களே….

 • 33. குந்தவை  |  11:43 முப இல் ஜூன் 11, 2009

  //மச்சான் கொடுத்து வெச்சவுரங்க…
  ஆகா… இப்படி ஒரு பதிலை நான் எதிர்பாக்கல…. எதிர்பாக்கல…

 • 34. குந்தவை  |  11:49 முப இல் ஜூன் 11, 2009

  //உண்மைய சொல்லுங்க… மச்சான் தானே suggest பண்ணினார் ?

  உண்மையை சொல்லனும்ன்னா…. நான் wordpress account open பண்ணுனதே அவருக்கு தெரியாது. அப்புறம் பதிவு எழுதுனப் பிறகு தான் அவரிடம் சொன்னேன்.

 • 35. குந்தவை  |  11:52 முப இல் ஜூன் 11, 2009

  //நான் ப்லோக் எழுதினால், Gandalf ன்னு வெச்சுக்க போறேன் பாருங்க… :ப

  அப்படீன்னா என்ன? புரியலையே தம்பி.

 • 36. குந்தவை  |  11:54 முப இல் ஜூன் 11, 2009

  //குந்தவை யா ? இல்லை நிஜ பேரா?

  Both.

 • 37. குந்தவை  |  11:57 முப இல் ஜூன் 11, 2009

  //அக்கா, out of portion ன்னு சொல்லீராதீங்க…

  நான் சொல்லல்ல நீங்க சொல்லிட்டீங்களே தம்பி.

 • 38. குந்தவை  |  11:58 முப இல் ஜூன் 11, 2009

  //ஆஹா …அக்கா கோத்து வுட்டுடீங்களே…

  யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்ற நல்லெண்ணம் தானுங்க.

 • 39. குந்தவை  |  12:04 பிப இல் ஜூன் 11, 2009

  //குந்தவை.. மீண்டும் தங்களிடம் இருந்து ஒரு அழகான பதிவு. வாழ்த்துக்கள்

  இதெல்லாம் ரெம்ப ஓவருங்க.

 • 40. JS  |  6:30 பிப இல் ஜூன் 13, 2009

  Kalakiteenga ponga…. Autobiography ku use aagum nu nenachu ezhuthuneenga pola 😛 nice one

 • 41. குந்தவை  |  4:32 முப இல் ஜூன் 14, 2009

  //Kalakiteenga ponga…. Autobiography ku use aagum nu nenachu ezhuthuneenga pola nice one

  நீங்க வேற. இது தொடருங்க. நானெல்லாம் ஆட்டோபயோகிராபி எழுதினா அம்புட்டுதான், எல்லா ஆட்டோவும் அப்புறம் எங்கவூட்டு வாசல்ல தான் நிக்கும்.

 • 42. நிஜமா நல்லவன்  |  5:07 முப இல் ஜூன் 14, 2009

  28-வது கேள்விக்கு பதில் சூப்பர்..:))

 • 43. குந்தவை  |  11:37 முப இல் ஜூன் 14, 2009

  //என் வீட்டுகாரரிடம் தான் வந்து சண்டை போடுவேன்.

  எங்கூட்டுகாரரிடம் சண்டை போட்டால் சந்தோஷப்படுவீங்களா?
  இது என்னங்க அநியாயமா இருக்கு.
  ஒரு பிள்ளையை நல்ல பிள்ளையா இருக்க விடமாட்டாங்களே.

 • 44. Anand  |  12:11 பிப இல் ஜூன் 15, 2009

  ///நான் சொல்லல்ல நீங்க சொல்லிட்டீங்களே தம்பி.///

  ஆன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ங் …. escape ஆக try பண்ண கூடாது… birthday எப்பன்னு சொல்லுங்க…

 • 45. Anand  |  12:13 பிப இல் ஜூன் 15, 2009

  //அப்படீன்னா என்ன? புரியலையே தம்பி.…//

  இப்படி கேட்டு பல்பு கொடுதீடீன்களே அக்கா…. Gandalf, Lord of the Rings ல வர்ற wizard… free ah விடுங்க…

 • 46. Anand  |  12:18 பிப இல் ஜூன் 15, 2009

  //நல்ல பிள்ளையா இருக்க விடமாட்டாங்களே.//

  யாரு ? நீங்களா ? ஹி ஹி… comedy பண்ணாதீங்கக்கா… வீட்ல நடந்தத ப்ளோக்ல போட்டுட்டு, இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்லி, உங்க தம்பிகள எல்லாம் ஏமாத்திட்டு… உங்க குசும்புக்கு அளவே இல்ல போங்க…

 • 47. குந்தவை  |  12:19 பிப இல் ஜூன் 15, 2009

  //ஆன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ங் …. escape ஆக try பண்ண கூடாது… birthday எப்பன்னு சொல்லுங்க…

  ஏதாவது வயசு பொண்ணுங்களோட பிறந்த நாளை தெரிஞ்சிக்கிட்டா ஏதாவது புண்ணியம் கிடைக்கும். என்னிய போய் கேக்கிறீங்களே.
  சரி சொல்லிட்டா போச்சு june 7th.

 • 48. குந்தவை  |  12:23 பிப இல் ஜூன் 15, 2009

  //இப்படி கேட்டு பல்பு கொடுதீடீன்களே அக்கா…. Gandalf, Lord of the Rings ல வர்ற wizard… free ah விடுங்க…

  விட்டிருவோம்….. ( wizard க்கு wizard தான் பிடிக்கும்.)

 • 49. குந்தவை  |  12:30 பிப இல் ஜூன் 15, 2009

  //யாரு ? நீங்களா ? ஹி ஹி… comedy பண்ணாதீங்கக்கா… வீட்ல நடந்தத ப்ளோக்ல போட்டுட்டு, இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்லி, உங்க தம்பிகள எல்லாம் ஏமாத்திட்டு… உங்க குசும்புக்கு அளவே இல்ல போங்க…

  நல்ல பிள்ளைங்க குசும்பு பண்ணாதுன்னு யாருங்க சொன்னது.
  நல்லச் சண்டை போட்டுக்கொண்டே அழகா குடும்பமும் நடத்தலாம்ன்னு சொல்றதுக்காக , ஒரு நல்லெண்ணத்தில் எழுதினா… பெயரை ரிப்பேர் பண்ணிடுவாங்க போல. நல்லதுக்கு காலம் இல்லப்பா..

 • 50. Anand  |  12:36 பிப இல் ஜூன் 15, 2009

  ///june 7th. ///

  ச்ச… கொஞ்சம் முன்னாடி தெரிஞ்சுருந்த நல்லா இருந்துருக்கும்…. anyways…

  “நாடோடி மன்னர்களே… வணக்கம் வணக்கம்…”
  அப்படின்னு ஒரு பாட்டு இருக்கு தெரியுமுங்களா? அந்த பாட்ட எப்போ கேட்டாலும் உங்க ஞாபகம் தான் வரும்… அதுல ஒரு சூப்பர் line “யமுனையை சிறை கொண்டு குவளைக்குள் அடைக்கிற உங்கள் வீரம் வாழ்க… ”

  “இடுககைகள் மூலமாகவே எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றும் அன்பான அக்காவுக்கு,

  Belated Birthday Wishes….”

 • 51. குந்தவை  |  12:44 பிப இல் ஜூன் 15, 2009

  //Belated Birthday Wishes….”

  Thank U.

  // “இடுககைகள் மூலமாகவே எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றும் அன்பான அக்காவுக்கு,

  தம்பீஈஈஈஈஈஈஈ………………. எனக்கு வார்த்தையே வரல்ல……
  இருந்தாலும் இப்படி கிண்டல் பண்ணக்கூடாது.

 • 52. Bhuvanesh  |  2:34 பிப இல் ஜூன் 15, 2009

  //“நாடோடி மன்னர்களே… வணக்கம் வணக்கம்…”
  அப்படின்னு ஒரு பாட்டு இருக்கு தெரியுமுங்களா? அந்த பாட்ட எப்போ கேட்டாலும் உங்க ஞாபகம் தான் வரும்… அதுல ஒரு சூப்பர் line “யமுனையை சிறை கொண்டு குவளைக்குள் அடைக்கிற உங்கள் வீரம் வாழ்க… ”

  “இடுககைகள் மூலமாகவே எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றும் அன்பான அக்காவுக்கு,
  Belated Birthday Wishes….”

  அக்கா , இத படிக்கும் போது அப்படியே கண் கலங்கிட்டேன் அக்கா.. (யாரு டா அங்க சிரிக்கறது?? ராஸ்கல் !! இது செண்டிமெண்ட் சீன்!!)

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கன் !!

 • 53. Anand  |  5:24 பிப இல் ஜூன் 15, 2009

  //இருந்தாலும் இப்படி கிண்டல் பண்ணக்கூடாது.//

  கண்டிப்பா இல்லீங்க… birthday wish பண்ணும்போது கிண்டல் பண்ணமாட்டேன்…

 • 54. குந்தவை  |  4:27 முப இல் ஜூன் 16, 2009

  //இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கன் !!

  Thank U Bhuvanesh.

  //அக்கா , இத படிக்கும் போது அப்படியே கண் கலங்கிட்டேன் அக்கா.. (யாரு டா அங்க சிரிக்கறது?? ராஸ்கல் !! இது செண்டிமெண்ட் சீன்!!)

  ஹா…ஹா…. இப்படி யாராவது வந்து காலவாருவீங்கன்னு எனக்கு தெரியும்.
  ஐயா ராசா அதுக்காக ரவுண்ட் கட்டி அடிக்க ஆரம்பிச்சிராதீக.

 • 55. Krishna  |  12:42 பிப இல் ஜூன் 21, 2009

  நல்ல கேள்வி பதில்….

  // வேலை செய்து சாப்பிட வேண்டும் என்று எண்ணாமல் அடுத்தவர்களை எதிர்பார்ப்பது, நிறைவில்லாமல் அளவுக்கு மீறி ஆசைப்படுவது, அடுத்தவர்களை மட்டம் தட்டி பேசுவது. //

  😀

  //யார் மீதாவது/எந்த காரணத்திற்க்கு எனக்கு கோபம் வந்தாலும், அவர்களிடம் சண்டை போடமாட்டேன். என் வீட்டுகாரரிடம் தான் வந்து சண்டை போடுவேன். //
  பாவப்பட்ட ஜீவன் அவர் …

  //இப்போது போல், எப்பவும் சந்தோஷமா இருக்கணும்ன்னு தான் ஆசை.//

  இப்போது போல், எப்பவும் சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள் .

  11,12 🙄

  l

 • 56. Krishna  |  12:59 பிப இல் ஜூன் 21, 2009

  Belated Birthday Wishes ….

  Too late … But still… ‘Better late than never’ 😀

 • 57. kunthavai  |  4:18 முப இல் ஜூன் 22, 2009

  //பாவப்பட்ட ஜீவன் அவர் …
  🙂

  //இப்போது போல், எப்பவும் சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள் .

  🙂

 • 58. kunthavai  |  4:19 முப இல் ஜூன் 22, 2009

  //Belated Birthday Wishes ….

  Thank U Krishna.

 • 59. kapilashiwaa  |  8:43 முப இல் ஒக்ரோபர் 6, 2009

  நல்ல பதில் சொல்றீங்க குந்தவை.

  // என்னோட உண்மையான பெயரை ஒரு பாதிரியார் வைத்தார். இந்தப் பெயரை நானாக வைத்து கொண்டது (பொன்னியின் செல்வன் தாக்கத்தினால்). எனக்கு என் பெயர் ரொம்பவே பிடிக்கும்.//

  உங்க உண்மையான பெயர் தெரியாமலே இருகட்டும் குந்தவை. இதுவே அழகு.

 • 60. குந்தவை  |  5:20 முப இல் ஒக்ரோபர் 7, 2009

  அடிக்கடி வாங்க பிரேமா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஜூன் 2009
தி செ பு விய வெ ஞா
« மே   ஜூலை »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: