எனக்கும் தத்துவத்துக்கும் ரெம்ப தூரம்.

ஜூன் 10, 2009 at 4:51 முப 28 பின்னூட்டங்கள்

                 கடவுள் ஒரு நாள், சோர்ந்து போயிருந்த ஒரு மனிதனை பார்த்து ,
  “நண்பனே, இந்த மலையை பிடித்து தள்ளேன்” என்றார்.

              அவனும் பிடித்து தள்ள ஆரம்பித்தான். இரண்டு நாள் ஆனது , நாலு  நாள் ஆனது, ஆனால் மலையோ கொஞ்சமும் நகரவில்லை. கடைசியில் கடவுளின் மேல் கோபம் வர, அவரை திட்டிகொண்டான்.

         அவனுடைய கோபத்தை பார்த்து கடவுள் திரும்பவும் அவனிடம் வந்தார்.
  “கடவுளே.. என்ன இது…. நீங்க சொன்னீங்களேன்னு , மலையை பிடித்து தள்ளுனா, கொஞ்சமும் நகர மாட்டேங்குது. என்னிய வச்சு விளையாடுறீங்களா?” என்று கோபமாக கேட்டான்.

            கடவுளோ புன்னகையுடன், “நண்பனே உன்னுடைய கைகளையும், கால்களையும் இப்போது பார், எவ்வளவு வலிமையாகிவிட்டது. உன்னை வலுப்படுத்துவதற்காகவே மலையை பிடித்து தள்ள சொன்னேன். அது நகர்ந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. அதனால் அதை பற்றி கவலைகொள்ளவும் வேண்டாம்… கோபப்படவும் வேண்டாம்” என்றாராம்.

                 என் மனதை தொட்ட இந்த கதை கோவிலில் பாதிரியார் சொன்னதுங்க. துன்பங்களும் , இழப்புகளும் நம்மை வலுப்படுத்துவதற்க்கும், நல் வழிப்படுத்துவதற்கும், உண்மைகளை தெளிவாக கண்டுகொள்வதற்காகவும் தான். நம்பிக்கையோடு முழு மனதோடு ஏற்றுக் கொண்டால், நமது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

              தத்துவம் எல்லாம் இல்லைங்க. நம் கையை மீறி சில/பல விஷயங்கள் நடக்கும் போது எனக்கு நானே கூறிக்கொள்ளும் ஆறுதல்.

   (சரி அப்படி என்ன விஷயம் இப்ப நடந்து போச்சுன்னு எல்லாம் கேட்கக்கூடாது. சின்ன சின்ன விஷயத்துக்கே, பெரிய பில்டப் எல்லாம் கொடுத்து பெரிய ரேஞ்சில உக்காந்து கவலைபடும் என்னை மாதிரி வீராங்கனைகளுக்கு தான் இந்தப்பதிவு.)

Advertisements

Entry filed under: மனதில் தோன்றியவை.

என்னை பற்றி சில…. அரபி பாட்டு..

28 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Anand  |  8:32 பிப இல் ஜூன் 10, 2009

  நண்பர்: ” என்னிய வச்சு விளையாடுறீங்களா? ”
  கடவுள்: “ஆமா.. நான் இந்த பக்கம் இருந்து தள்ளிகிட்டு இருந்தேன்… ஆள பாரு ஆள…”

  //நம்ம ஆட்கள் இப்படித்தான் அக்கா… கடவுள டென்ஷன் பண்ணி வர உடாம பண்ணிர்ராங்க…இப்ப எல்லாம் எங்க ஊர்ல சாமி ஆடரதே இல்லையாம்…//

 • 2. Anand  |  8:36 பிப இல் ஜூன் 10, 2009

  //பெரிய பில்டப் எல்லாம் கொடுத்து பெரிய ரேஞ்சில உக்காந்து கவலைபடும் //

  கவலை படாதீங்கக்கா …. !!!
  நாங்க இருகோம்ள…. எல்லா கவலையும் தீர்த்து வெச்சுடுவோம்… என்ன என்ன ன்னு லிஸ்ட் போட்டு மெயில் அனுப்புங்க… அட… சும்மா சொல்லலீங்க… நிஜம்மாத்தான்…. நீங்க அனுப்புங்க… எங்கன்னால முடிஞ்சத பண்ணிட்டா போச்சு…

 • 3. Anand  |  8:40 பிப இல் ஜூன் 10, 2009

  அக்கா… usual எ உங்க ப்லோக் சைட் ல அண்மைய இடுகைகள் ன்னு ஒரு link tab இருக்கும். இப்ப என்ன ஆச்சு…? இல்ல, எனக்கு மட்டும் வர்றது இல்லையா…? ஒவ்வொருதடவையும் உங்க home page போய் recent blogs பார்க்க வேண்டி இருக்கு…

 • 4. Sriram  |  10:05 முப இல் ஜூன் 11, 2009

  Me the first?

 • 5. Sriram  |  10:08 முப இல் ஜூன் 11, 2009

  அக்கா…இப்ப எல்லாம் கடவுள் நேர்ல வந்து மலையை தள்ள சொன்னால், கடவுளையே மலையில இருந்து தள்ளி வுட்டுடுரானுங்க… அதுனால தான் லார்டு நம்மள கண்டுக்கவே மாட்டேன்ராறு… ஆனா நீங்க சொன்ன விஷயம் சோக்கா கீது…

 • 6. குந்தவை  |  11:31 முப இல் ஜூன் 11, 2009

  //கவலை படாதீங்கக்கா …. !!!
  நாங்க இருகோம்ள…. எல்லா கவலையும் தீர்த்து வெச்சுடுவோம்… என்ன என்ன ன்னு லிஸ்ட் போட்டு மெயில் அனுப்புங்க… அட… சும்மா சொல்லலீங்க… நிஜம்மாத்தான்…. நீங்க அனுப்புங்க… எங்கன்னால முடிஞ்சத பண்ணிட்டா போச்சு…

  என்னிய வச்சி காமடி கீமடி பண்ணலையே.
  இருந்தாலும் ரெம்ப நன்றி தம்பி.

 • 7. குந்தவை  |  11:34 முப இல் ஜூன் 11, 2009

  //அக்கா… usual எ உங்க ப்லோக் சைட் ல அண்மைய இடுகைகள் ன்னு ஒரு link tab இருக்கும். இப்ப என்ன ஆச்சு…? இல்ல, எனக்கு மட்டும் வர்றது இல்லையா…? ஒவ்வொருதடவையும் உங்க home page போய் recent blogs பார்க்க வேண்டி இருக்கு

  சரி பண்ணிட்டேனுங்க.

 • 8. குந்தவை  |  11:39 முப இல் ஜூன் 11, 2009

  //அக்கா…இப்ப எல்லாம் கடவுள் நேர்ல வந்து மலையை தள்ள சொன்னால், கடவுளையே மலையில இருந்து தள்ளி வுட்டுடுரானுங்க… அதுனால தான் லார்டு நம்மள கண்டுக்கவே மாட்டேன்ராறு…

  ஓ….. அதான் கண்ணுமுன்னாடி வரமாட்டேங்கிறாரா?

  //ஆனா நீங்க சொன்ன விஷயம் சோக்கா கீது…
  நன்றிங்க தம்பி.

 • 9. பிரியமுடன் பிரபு  |  1:46 முப இல் ஜூன் 12, 2009

  நல்லயிருக்கு

 • 10. பிரியமுடன் பிரபு  |  1:49 முப இல் ஜூன் 12, 2009

  கடவுளும் வரமாட்டார் , மலையும் நகராது
  நம்பிக்கை மட்டுமே நமக்கு புத்துயிர் கொடுக்கும்
  நல்லது

 • 11. Bhuvanesh  |  4:41 முப இல் ஜூன் 12, 2009

  நல்ல கதை அக்கா.. நல்ல பகிர்வு!!

  //என்னிய வச்சு விளையாடுறீங்களா?” //

  இந்த இடத்துல, என்னையே வெச்சு காமெடி கீமெடி செய்யலையே ?? னு கேட்டிருக்கணும்!!

 • 12. Bhuvanesh  |  4:43 முப இல் ஜூன் 12, 2009

  இப்போ உங்களுக்கு என்ன கஷ்டம்?? சரி உங்க கவலைய போக்க சீக்கிரம் ஒரு பதிவு போடறேன்.. வந்து படிச்சுட்டு ஆனந்தமா இருங்க..

  (இப்போ சொல்லுங்க உங்க அந்த கவலை ஒன்னும் இல்லாம போயிருக்குமே?? இதுக்கு பேரு தான் ஷாக் ட்ரீட்மென்ட் !!)

 • 13. JS  |  6:25 பிப இல் ஜூன் 13, 2009

  Neengal soluvadhu sariye… mikka arumaiyaana thathuvam….

  Vaazhvil sila vishayaththai… manadhodu vaikka vendum sila vishayaththai moolaiyai kashainthu theervu kaana vendum…

  Peacefulness is important factor of my life.. nomatter wat ever prob we faces….

 • 14. குந்தவை  |  4:15 முப இல் ஜூன் 14, 2009

  //நல்லயிருக்கு

  நன்றிங்க பிரபு. (அரைமனசோட சொல்ற மாதிரி தெரியுது)

 • 15. குந்தவை  |  4:19 முப இல் ஜூன் 14, 2009

  //கடவுளும் வரமாட்டார் , மலையும் நகராது
  நம்பிக்கை மட்டுமே நமக்கு புத்துயிர் கொடுக்கும்
  நல்லது
  ம்…. அப்படீங்கிறீங்க. எனக்கு கடவுள் நம்பிக்கை ரெம்பவே உண்டு, ஆனா மதத்திற்க்கு மேல் தான் ரெம்ப நம்பிக்கை கிடையாது.

 • 16. குந்தவை  |  4:23 முப இல் ஜூன் 14, 2009

  //இந்த இடத்துல, என்னையே வெச்சு காமெடி கீமெடி செய்யலையே ?? னு கேட்டிருக்கணும்!!

  நல்ல கதை அக்கா.. நல்ல பகிர்வு!!

  ம்…. இனிமேல் கேட்டிருவோம்.
  ரெம்ப பிஸியோ?

 • 17. குந்தவை  |  4:25 முப இல் ஜூன் 14, 2009

  //இப்போ உங்களுக்கு என்ன கஷ்டம்?? சரி உங்க கவலைய போக்க சீக்கிரம் ஒரு பதிவு போடறேன்.. வந்து படிச்சுட்டு ஆனந்தமா இருங்க..

  (இப்போ சொல்லுங்க உங்க அந்த கவலை ஒன்னும் இல்லாம போயிருக்குமே?? இதுக்கு பேரு தான் ஷாக் ட்ரீட்மென்ட் !!)

  ha….ha….ha…. Sweet Shock.

 • 18. குந்தவை  |  4:26 முப இல் ஜூன் 14, 2009

  //Peacefulness is important factor of my life.. nomatter wat ever prob we faces….

  I agree with U.

 • 19. நிஜமா நல்லவன்  |  5:01 முப இல் ஜூன் 14, 2009

  அக்கா….பிரசண்ட் போட்டுக்கிறேன்!

 • 20. குந்தவை  |  11:39 முப இல் ஜூன் 14, 2009

  //அக்கா….பிரசண்ட் போட்டுக்கிறேன்!

  Welcome. அப்பப்ப இப்படி உறவுக்காரங்களை வந்து எட்டிபாத்துக்கணும். Good.

 • 21. Bhuvanesh  |  2:06 பிப இல் ஜூன் 15, 2009

  //ம்…. அப்படீங்கிறீங்க. எனக்கு கடவுள் நம்பிக்கை ரெம்பவே உண்டு, ஆனா மதத்திற்க்கு மேல் தான் ரெம்ப நம்பிக்கை கிடையாது.//
  எப்பா அசிஸ்டன்ட் டைரக்டர்களா.. நோட் பண்ணுங்கடா.. நோட் பண்ணுங்கடா!!

 • 22. Bhuvanesh  |  2:07 பிப இல் ஜூன் 15, 2009

  //ரெம்ப பிஸியோ?//

  ஆமா அக்கா… ஆபீஸ்ல புதுசா வேலை எல்லாம் செய்ய சொல்லறாங்க !!

 • 23. குந்தவை  |  4:17 முப இல் ஜூன் 16, 2009

  //எப்பா அசிஸ்டன்ட் டைரக்டர்களா.. நோட் பண்ணுங்கடா.. நோட் பண்ணுங்கடா!!

  ஹல்லோ….ஹல்லோ… எதுக்கு இப்ப ஊரக்கூட்டுரீங்க. நமக்கு இந்த பப்பிளிசிட்டி எல்லாம் பிடிக்காது.

 • 24. குந்தவை  |  4:21 முப இல் ஜூன் 16, 2009

  //ஆமா அக்கா… ஆபீஸ்ல புதுசா வேலை எல்லாம் செய்ய சொல்லறாங்க !!

  பிசியா இருக்கும் போதே இப்படின்னா, வேலையில்லன்னா எத்தனை பேர காய்ப்பீங்க.

 • 25. Krishna  |  12:10 பிப இல் ஜூன் 21, 2009

  நல்ல பதிவு … 🙂

 • 26. kunthavai  |  4:16 முப இல் ஜூன் 22, 2009

  //நல்ல பதிவு …

  நன்றிங்கோ.

 • 27. உதய தாரகை  |  10:23 பிப இல் ஒக்ரோபர் 6, 2009

  சொன்ன மொழி அழகு! சொன்ன கதை அழகு! மொத்தத்தில் தத்துவம் இல்லையெனச் சொன்ன வாழ்க்கைத் தத்துவம் வலிமை!

  //நம் கையை மீறி சில/பல விஷயங்கள் நடக்கும் போது எனக்கு நானே கூறிக்கொள்ளும் ஆறுதல்.//

  ஸ்டீவ் ஜொப்ஸ் ஒரு தடவை சொல்லியிருப்பார், வாழ்க்கை, செங்கல் கொண்டு தலையில் அடிக்கும். நம்பிக்கை இழந்துவிடக்கூடாது என்று. அது அப்படியாகவே இருக்கவும் வேண்டும்.

  வாழ்க்கையில் வலிகள் வரும் போதுதான், எமக்கு உயிர் உள்ள விடயமே ஊர்ஜிதம் ஆகின்றது. வலிகள் பாடம்.

  தொடர்ந்தும் எழுத்துக்களால் கலக்குங்க..

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 • 28. குந்தவை  |  5:18 முப இல் ஒக்ரோபர் 7, 2009

  //வாழ்க்கையில் வலிகள் வரும் போதுதான், எமக்கு உயிர் உள்ள விடயமே ஊர்ஜிதம் ஆகின்றது. வலிகள் பாடம்.

  வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி தாரகை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஜூன் 2009
தி செ பு விய வெ ஞா
« மே   ஜூலை »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: