தாத்தா…..வந்துட்டாங்க….

ஜூலை 1, 2009 at 5:11 முப 37 பின்னூட்டங்கள்

                  கல்யாண  வேலைகளால் வீடே கசகசவென்றிருந்தது. நாளைக்கு கோவில்பட்டியிலிருந்து எல்லோரும் கிளம்புவார்கள். அடுத்த நாள் கல்யாணம். நான் இன்னும் இரண்டு நாளில் கணவராகப்போகும் என் பாண்டியர்  6  மாதமாக எழுதித்தள்ளிய கடுதாசிகளை மறுபடியும் ஒருதடவை வாசித்து அரைலூசு மாதிரி தன்னாலே சிரித்தபடி அலைந்துகொண்டிருந்தேன்.
    தொலைப்பேசி தொல்லைபேசியாக என்  சிரிப்பை கலைத்தது.

     “சொல்லுங்க”

     “நான் கோவில்பட்டியிலிருந்து பேசுறேன், பெரியவங்க யாராவது இருக்கிறாங்களா?”

     “இல்லைங்க. மண்டபம் வரைக்கும் போயிருக்காங்க. என்னன்னு சொல்லுங்க. நான் அவங்ககிட்ட சொல்லிக்கிறேன்”

        “நான் பண்டியனோட  தாத்தா பேசுகிறேன்ம்மா. செய்தி கொஞ்சம் அவசரம் அதனால உன்கிட்ட சொல்ல வெண்டியதா இருக்கு. இங்க…. நெலம கொஞ்சம் மோசமா இருக்கு…. நம்ம பாண்டியனோட அம்மா அதான் உன் அத்தை… தவறிட்டாங்க…. உங்க அப்பாகிட்ட கல்யாணத்தை பற்றி கொஞ்சம் பேசணும். ம்…. அதனால அப்பா வந்தவுடன் பேசச்சொல்லு சரியா” 
    

           “ம்…” என்றேன் உயிரே இல்லாமல். அத்தை, என் மீது மிக பிரியத்துடன் பழகி, என் கணவரின் சிறு வயது சேட்டைகளை சொல்லி மகிழ்ந்து… வாரத்திற்க்கு ஒரு தடவையாவது தொலைபேசி…. அடிக்கடி என்னை பார்க்க என் வீட்டிற்க்கும் வந்து பாசத்தில் நனையவைத்து…. என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

                  எப்பொழுது அம்மா அப்பா வீட்டிற்க்கு வந்தார்கள், எப்ப அப்பா பேசினார்கள், எப்படி கல்யாணத்தை நிறுத்தினார்கள், எப்படி விஷயம் காட்டுத்தீ போல் பரவியது,  என்று எனக்கு தெரியாது. நான் மலைத்து போய் நின்ற அரைமணிநேரத்தில் எல்லாமே முடிந்துவிட்டது. அம்மாவின் முகமோ பேயறைந்தார்ப்போல் மாறிவிட்டது. என்னுடைய உணர்ச்சிகளை விட அதிகபடியான கவலை,  அம்மாவை எப்படி சாமாளிப்பது என்பதுதான்.

               எத்தனை வயசானாலும் பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று.  அவர்களின் கஷ்டம் தெரிந்திருந்தாலும், பெண்வீட்டார்களின் பாடும் குறைந்தது இல்லை. அடுத்தவர்களின் / சொந்தபந்தங்களின்  வேறுப்பேத்துகிற  பேச்சுகளும்…. பார்வைகளும்… இதிலிருந்து எப்படி என் அம்மா அப்பாவை காப்பாற்றப்போகிறேன் என்று எனக்கு புரியவேயில்லை.

            திரும்பவும் தொலைபேசி சிணுங்கியது. நானே போய் எடுத்தேன்.
  ” நான் பாண்டியன் பேசுகிறேன்”

  “ம்…. சொல்லுங்க”

  அம்மாவிற்க்காக வருத்தம் தெரிவித்தபிறகு,
                    “பாரும்மா… நீ என்னுடைய மனைவி என்று 6 மாதத்திற்க்கு முன்னாலே முடிவுசெய்தவொன்று. அதில் எந்த மாற்றமும் இல்லை… ஆனா…. எங்க வீட்டில் இருக்கும் நிலமையை உனக்கு நான் தனியாக விளக்க வேண்டாம். அதனால யாரு என்ன பேசினாலும், பயப்படாதே. நீ தான் உங்க அம்மா அப்பாவிற்க்கு ஆறுதல் சொல்லி அவர்களையும் கவலைப்படாமல் இருக்க செய்ய வேண்டும்

                   என் கணவர் எத்தனையோ காதற்கடிதங்களையும், கவிதைகளையும்  எனக்கு எழுதியிருக்கிறார் (கல்யாணம் நிச்சயம் செய்தபிறகு), ஆனால் இந்த வார்த்தைகள் தான் எனக்கு அவருடைய உண்மையான நேசத்தை உணர்த்தியது. அடுத்த வாரத்தில் எங்கள் திருமணம் நடந்து  அவங்க வீட்டிற்க்கு சென்றபோது, என்னுடைய மாமாவோ ஒரு படி மேலே போய், “என் மனைவி அவளை மாதிரி ஒரு பெண்ணை வீட்டிற்க்கு வரவழைத்தபிறகு தான் அமைதியாக சென்றிருக்கிறாள்” என்றார்.

         இத்தனை பண்பட்ட உள்ளமுடைய என் மாமா எங்க வீட்டிற்க்கு வந்திருக்காங்கங்க. எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, கண்மணிக்கோ காலு தரையிலே நிற்கமாட்டேங்கிறது. மூன்று மாதம் விசா கிடைத்தாலும், மூன்று வாரம் தான் இருப்பேன் என்றதால் ரெம்ப வருத்தம் இருந்தாலும்…. சரி இருப்பது வரை சந்தோஷமாக கொண்டாடுவோம் என்று நினைத்துகொண்டேன்.

 டிஸ்கி:    ஆனா எங்க மாமாவுக்கு என்னை ரெம்ப பிடிக்கும் என்பதால் என் வீட்டுக்காராருக்கு பயங்கர பொறாமை. எப்பவும் கடவுளே இந்த கொடுமைகாரியின் உண்மையான சொரூபத்தை என் அப்பாவிற்க்கு இப்பவாவது காட்டு என்று ஒரே செபம். நாங்க எல்லாம் உஷார்பார்ட்டிங்கன்னு அப்பப்ப மறந்துவிடுகிறார் என் அப்பாவி கணவர்.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

அரபி பாட்டு.. எனக்கும் சீரியஸா பேசத்தெரியும்.

37 பின்னூட்டங்கள் Add your own

 • 1. saravanan kulandaiswamy  |  8:10 முப இல் ஜூலை 1, 2009

  வாழ்க்கையில் துன்பங்கள் வரும் சமயம் , நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களை அடையாளமும் காட்டி விட்டு சென்று விடுகிறது ….

  உங்கள் கணவரின் அன்பின் பரிமாணங்களை அவர் தீட்டிய கடிதத்தை தாண்டி
  அந்த உரையாடல் உங்களுக்கு சொன்னது போலே , ஒவ்வொரு சோதனையிலும் ஒரு செய்தி நமக்கு உண்டு தான்….

  பின் குறிப்பு: அனைத்தையும் விட கண்மணியின் அந்த சுவற்று கிறுக்கல் மிக அழகு

 • 2. Sriram  |  10:13 முப இல் ஜூலை 1, 2009

  Me the first?

 • 3. Sriram  |  10:39 முப இல் ஜூலை 1, 2009

  சந்தோசம்…மகிழ்ச்சி…
  அண்ணனையும்,கண்மணியையும் தான் சாப்பாடு செஞ்சு போட்டு இவ்வளவு நாள் கொடுமைப் படுத்தி கிட்டு இருந்தீங்க.இப்போ புதுசா கண்மணியோட தாத்தா வேற சிக்கிட்டாரு என்று நினைக்கும் போது தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு அக்கா.

 • 4. குந்தவை  |  4:19 முப இல் ஜூலை 2, 2009

  //வாழ்க்கையில் துன்பங்கள் வரும் சமயம் , நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களை அடையாளமும் காட்டி விட்டு சென்று விடுகிறது ….

  வாங்க சரவணன், அருமையா சொன்னீங்க.
  நீங்க blog எழுத ஆரம்பித்துவிட்டீர்களா?
  ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

  //அனைத்தையும் விட கண்மணியின் அந்த சுவற்று கிறுக்கல் மிக அழகு
  இவ்வளவு கூர்ந்து கவனிச்சிருக்கீங்களா! ரெம்ப நன்றி.

 • 5. குந்தவை  |  4:27 முப இல் ஜூலை 2, 2009

  //Me the first?

  தப்பிச்சிட்டீங்களே.

  // அண்ணனையும்,கண்மணியையும் தான் சாப்பாடு செஞ்சு போட்டு இவ்வளவு நாள் கொடுமைப் படுத்தி கிட்டு இருந்தீங்க.இப்போ புதுசா கண்மணியோட தாத்தா வேற சிக்கிட்டாரு என்று நினைக்கும் போது தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு அக்கா.

  அட நீங்க வேற , அத நினைச்சி நான் தான் கவலைப்படணும். அவங்களாவது பிடிக்கலைனா சாப்பிடாம தப்பிச்சிடலாம். நான் அவ்வளவையும் waste பண்ணக்கூடாதுன்னு, மூணுபேருக்குள்ளதையும் சேத்து இல்ல சாப்பிடணும்.

 • 6. Anand  |  5:20 முப இல் ஜூலை 2, 2009

  //என் கணவர் எத்தனையோ காதற்கடிதங்களையும், கவிதைகளையும் எனக்கு எழுதியிருக்கிறார் (கல்யாணம் நிச்சயம் செய்தபிறகு) //

  கல்யாணம் நிச்சயம் செஞ்சதுக்கு அப்புறம் காதல் கடிதமா…? மச்சான் ரொம்ப அப்பாவி தான்…
  நாங்க எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் கடிதமே different ஆ இருக்கும்…

 • 7. Anand  |  5:30 முப இல் ஜூலை 2, 2009

  எத்தனை வயசானாலும் பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று.

  கண்டிப்பாங்க…

  [ம்ம் … ரொம்ப செண்டிமெண்ட் ஆ டச் பண்ணி இந்த ப்லோக் ல உங்கள ஓட்ட முடியாம பண்ணிட்டீங்க…ம்ம் ]

 • 8. குந்தவை  |  5:55 முப இல் ஜூலை 2, 2009

  //கல்யாணம் நிச்சயம் செஞ்சதுக்கு அப்புறம் காதல் கடிதமா…? மச்சான் ரொம்ப அப்பாவி தான்…

  அதெல்லாம் அனுபவிச்சா தெரியும் தம்பி. ம்……. அது ஒரு அழகிய நிலாக்காலம்.
  என்னோட வீட்டுக்காரர் கல்யாணத்திற்கு அப்புறமும், நான் தனியாக ஊருக்கு போகும்போதெல்லாம், நிறையக் கடிதங்களை உருகி உருகி எழுதுவார்.

  (அதென்னமோ தெரியல அவரை பிரிந்திருக்கும்போதெல்லாம், அவருக்கு கவிதை பொங்கிகிட்டு வருகிறது, சேர்ந்திருக்கும் போதெல்லாம் கோபம் பொங்கிகிட்டு வருகிறது) .

 • 9. குந்தவை  |  5:57 முப இல் ஜூலை 2, 2009

  //ரொம்ப செண்டிமெண்ட் ஆ டச் பண்ணி இந்த ப்லோக் ல உங்கள ஓட்ட முடியாம பண்ணிட்டீங்க…ம்ம்

  part of life.

 • 10. saravanan kulandaiswamy  |  1:34 பிப இல் ஜூலை 2, 2009

  Hi Kunthavai,
  I have created an acount with word press… but dnt know how to manuveaur the settings to set up the blog.. can you help me?

 • 11. Mukundan  |  2:47 பிப இல் ஜூலை 2, 2009

  You are really blessed!!

 • 12. குந்தவை  |  8:03 பிப இல் ஜூலை 2, 2009

  Yes Mukundan. Thank You.

 • 13. Anand  |  9:58 பிப இல் ஜூலை 2, 2009

  //(அதென்னமோ தெரியல அவரை பிரிந்திருக்கும்போதெல்லாம், அவருக்கு கவிதை பொங்கிகிட்டு வருகிறது, சேர்ந்திருக்கும் போதெல்லாம் கோபம் பொங்கிகிட்டு வருகிறது) //

  நீங்க வேற…ஒரு சிலருக்கு எதுவுமே பொங்க மாட்டேன்குதுங்க… கோபமும் சரி, கவிதையும் சரி உணர்ச்சியில் ஊறின passion தானே… நீங்க கொடுத்து வெச்சவுங்க… இன்று போல் என்றும் இருங்கள்… 🙂

 • 14. Anand  |  10:00 பிப இல் ஜூலை 2, 2009

  BTW, தாத்தாவுக்கு விசா வேண்டுமா…? தாத்தாவ வெளியூருக்கு எப்போ அனுப்பிசீங்க…? 🙂

 • 15. Anand  |  10:11 பிப இல் ஜூலை 2, 2009

  //அதெல்லாம் அனுபவிச்சா தெரியும் தம்பி//

  சரிங்கோ…

  //ம்……. அது ஒரு அழகிய நிலாக்காலம்.//

  சட்டுபுட்டுன்னு கனவுலகத்துக்கு போய்டீங்க… !!!
  டப் டப்…!!!
  நினைவுக்கு வாங்க…!!!

 • 16. பிரியமுடன் பிரபு  |  12:56 முப இல் ஜூலை 3, 2009

  ஆனா எங்க மாமாவுக்கு என்னை ரெம்ப பிடிக்கும் என்பதால் என் வீட்டுக்காராருக்கு பயங்கர பொறாமை. எப்பவும் கடவுளே இந்த கொடுமைகாரியின் உண்மையான சொரூபத்தை என் அப்பாவிற்க்கு இப்பவாவது காட்டு என்று ஒரே செபம். நாங்க எல்லாம் உஷார்பார்ட்டிங்கன்னு அப்பப்ப மறந்துவிடுகிறார் என் அப்பாவி கணவர்.
  /////

  இது இதுதான் உங்க கிட்ட எனக்கு பிடிச்சது

 • 17. பிரியமுடன் பிரபு  |  12:57 முப இல் ஜூலை 3, 2009

  (அதென்னமோ தெரியல அவரை பிரிந்திருக்கும்போதெல்லாம், அவருக்கு கவிதை பொங்கிகிட்டு வருகிறது, சேர்ந்திருக்கும் போதெல்லாம் கோபம் பொங்கிகிட்டு வருகிறது) .

  /////

  கவிதைக்கு பொய் அழகு

 • 18. பிரியமுடன் பிரபு  |  12:59 முப இல் ஜூலை 3, 2009

  அண்ணனையும்,கண்மணியையும் தான் சாப்பாடு செஞ்சு போட்டு இவ்வளவு நாள் கொடுமைப் படுத்தி கிட்டு இருந்தீங்க.இப்போ புதுசா கண்மணியோட தாத்தா வேற சிக்கிட்டாரு என்று நினைக்கும் போது தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு அக்கா.

  ஹி கி உண்மைய சொல்லிபுட்டாய்க

 • 19. பிரியமுடன் பிரபு  |  1:03 முப இல் ஜூலை 3, 2009

  இப்பவாச்சும் நாலுவார்த்தை உங்க கணவரை பற்றி போற்றி எழுதீட்டீங்க
  நச்சுனு இருந்தது

 • 20. குந்தவை  |  3:58 முப இல் ஜூலை 3, 2009

  //நீங்க வேற…ஒரு சிலருக்கு எதுவுமே பொங்க மாட்டேன்குதுங்க…

  ஹா…..ஹா….. நொந்து போயிட்டீங்க போல. கல்யாணத்திற்கு முன்னால எதுவும் பொங்கவேண்டாம்.

  // நீங்க கொடுத்து வெச்சவுங்க… இன்று போல் என்றும் இருங்கள்…

  அப்படியா… நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும். ரெம்ப நன்றி.

 • 21. குந்தவை  |  4:00 முப இல் ஜூலை 3, 2009

  //தாத்தாவுக்கு விசா வேண்டுமா…?

  தாத்தா இந்தியாவுல இருந்தாரு, நாங்க குவைத்தில் இருக்கிறோம்.

 • 22. குந்தவை  |  4:01 முப இல் ஜூலை 3, 2009

  //சட்டுபுட்டுன்னு கனவுலகத்துக்கு போய்டீங்க… !!!
  டப் டப்…!!!
  நினைவுக்கு வாங்க…!!!

  கனவு இல்ல, மலரும் நினைவுகள்.

 • 23. குந்தவை  |  4:04 முப இல் ஜூலை 3, 2009

  //இது இதுதான் உங்க கிட்ட எனக்கு பிடிச்சது

  இதபாருங்கய்யா…. நல்ல விஷயம் எல்லாம் பிடிக்கலையாம்… வம்பு பண்ணுனா தான் பிடிக்குமாம்.

 • 24. குந்தவை  |  4:06 முப இல் ஜூலை 3, 2009

  //கவிதைக்கு பொய் அழகு

  வேணாம் நான் அழுதிருவேன்.

 • 25. குந்தவை  |  4:08 முப இல் ஜூலை 3, 2009

  //ஹி கி உண்மைய சொல்லிபுட்டாய்க

  ஒரு குரூப்பாத்தான் திரியிரீங்க. ஒண்ணும் சொல்றதுக்கில்ல.

 • 26. குந்தவை  |  4:14 முப இல் ஜூலை 3, 2009

  //இப்பவாச்சும் நாலுவார்த்தை உங்க கணவரை பற்றி போற்றி எழுதீட்டீங்க
  என்ன இப்படி சொல்லிட்டீங்க…

  //நச்சுனு இருந்தது
  ரெம்ப நன்றி.

 • 27. Anand  |  6:06 பிப இல் ஜூலை 3, 2009

  // தாத்தா இந்தியாவுல இருந்தாரு, நாங்க குவைத்தில் இருக்கிறோம். //

  உங்களையும் என்னை மாதிரி தண்ணி தொளிச்சு வெளில அனுப்பிட்டாங்களா…?
  என்னை ஒரு வேலைக்கும் ஆகமாட்டேன்னு அனுப்பினாங்க… உங்களை வேலைக்காக அனுப்பிடாங்களா..? 🙂

 • 28. Anand  |  6:45 பிப இல் ஜூலை 3, 2009

  // கல்யாணத்திற்கு முன்னால எதுவும் பொங்கவேண்டாம். //
  என்ன ஏதேதோ சொல்றீங்க… கல்யாணத்தை பத்தி யாரு பேசினா இப்ப ? கோபம் வர்றதுக்கு கல்யாணம் பண்ணிகனுமா என்ன ?

 • 29. குந்தவை  |  2:50 பிப இல் ஜூலை 4, 2009

  //என்னை ஒரு வேலைக்கும் ஆகமாட்டேன்னு அனுப்பினாங்க… உங்களை வேலைக்காக அனுப்பிடாங்களா..?

  வேலைக்காக அனுப்பலைங்க… நியாச்சு உன் வீட்டுக்காரர் ஆச்சுன்னு அவர் கூட துரத்திவிட்டுட்டாய்ங்க. இங்க வந்து பாத்தா , இது மெகா ஜெயிலா இருக்கு, பொழுது போகவேண்டாமா… அதான்….

 • 30. குந்தவை  |  2:52 பிப இல் ஜூலை 4, 2009

  //கோபம் வர்றதுக்கு கல்யாணம் பண்ணிகனுமா என்ன ?

  கோபம் வரலைன்னு கோபப்படுகிற ஒரே ஆளு நீங்களாத் தான் இருக்கணும்.

 • 31. Krishna  |  4:16 பிப இல் ஜூலை 5, 2009

  இது உண்மையில் நடந்ததா ? படிக்கும் பொது ரொம்ப கஷ்டமா இருந்தது …
  இது உண்மையாய் இருந்தால் நீங்கள் உண்மையிலயே கொடுத்து வைத்தவர்கள் 🙂

  // எப்பவும் கடவுளே இந்த கொடுமைகாரியின் உண்மையான சொரூபத்தை என் அப்பாவிற்க்கு இப்பவாவது காட்டு என்று ஒரே செபம். நாங்க எல்லாம் உஷார்பார்ட்டிங்கன்னு அப்பப்ப மறந்துவிடுகிறார் என் அப்பாவி கணவர்.//

  “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” அப்படின்னு சொல்றாங்களே அது உண்மை இல்லையா 🙄 [ Just Kidding… 😛 ]

  Kanmani this is the right time .. Enjoy 😀

 • 32. Bhuvanesh  |  9:07 முப இல் ஜூலை 6, 2009

  அக்கா, மச்சானுக்கு சுத்தி போடுங்க.. கண்ணு பட போகுது!! 🙂

 • 33. குந்தவை  |  11:34 முப இல் ஜூலை 6, 2009

  //அக்கா, மச்சானுக்கு சுத்தி போடுங்க.. கண்ணு பட போகுது!!

  சுத்தி ‘போட்ட்ட்டிருவோம்…..’

 • 34. குந்தவை  |  11:44 முப இல் ஜூலை 6, 2009

  //இது உண்மையாய் இருந்தால் நீங்கள் உண்மையிலயே கொடுத்து வைத்தவர்கள்
  உண்மையாக நடந்தது தான்.

  //“பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” அப்படின்னு சொல்றாங்களே அது உண்மை இல்லையா [ Just Kidding… ]
  ஹீ…ஹீ……. அதான் ரெம்ப உஷாரா இருக்கேன் 🙂

  //Kanmani this is the right time .. Enjoy
  🙂

 • 35. மோகன்  |  2:54 பிப இல் ஜூலை 7, 2009

  ரொம்ப சந்தோசம் அக்கா, நல்ல ஜாலி பண்ணுங்க

 • 36. குந்தவை  |  11:56 முப இல் ஜூலை 8, 2009

  //ரொம்ப சந்தோசம் அக்கா, நல்ல ஜாலி பண்ணுங்க

  Ok. hm…. your tamil is very good. 🙂

 • 37. குந்தவை  |  12:03 பிப இல் ஜூலை 8, 2009

  //I have created an acount with word press… but dnt know how to manuveaur the settings to set up the blog.. can you help me?

  Please check your mail.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஜூலை 2009
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: