எனக்கும் சீரியஸா பேசத்தெரியும்.

ஜூலை 9, 2009 at 7:30 முப 25 பின்னூட்டங்கள்

               ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள். வீட்டுக்குள் போய் பார்த்தால் தான் தெரியும். அதையும் தாண்டி தான் ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில் போராடி  நொந்து நூலாகி முத்தெடுக்கிறார்கள்.

                              ஆனால் இந்த போராட்டம் இல்லையென்றால் வாழ்க்கையில் ருசியே இருக்காது. சாபமாக மாறிவிடும். 

                              கண்மணி சில சமயங்களில் எதையாவது இண்டு இடுக்கில் வளைந்து நெளிந்து எடுக்க முயற்சிப்பாள். நான் அய்யோ பாவம் என்று எடுத்து கொடுத்தால் உருண்டு புரண்டு அழ ஆரம்பித்துவிடுவாள். திரும்பவும் நான், அதை அந்த இடத்தில் வைத்தால் தான் அவளுக்கு நிம்மதி வரும். திரும்பவும் அதை விடாபிடியாக முயற்சி செய்து எடுத்தபிறகு ஒரு வெற்றி சிரிப்பு சிரிப்பாள் பாருங்கள்…. அது தான் சந்தோஷம்.

                           இந்த மாதிரி குணம் பொதுவாக நிறைய குழந்தைகளிடம் இருப்பதை பார்க்கலாம். அப்புறம் வளர வளர அந்த மாதிரி குணங்கள் எல்லாம் எங்கே யாரால் தூக்கி எ|றியப்படுகிறது?  எதற்கெடுத்தாலும் அம்மா தான் செய்யவேண்டும், அப்பாதான் செய்யவேண்டும் அது அவர்கள் கடமை மாதிரி நமக்கு நினைப்பு வந்துவிடுகிறது. அவங்க செய்யாவிட்டால் அவ்வளவுதான்…. ஒரே கூப்பாடு… கோபம்…

                       சின்ன சின்ன போராட்டங்கள் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. வளர வளர பிரச்சனைகளும் பெரிதாக வளர ஆரம்பித்துவிடுகிறது பெரிய சவாரஸ்யங்களை தருவதற்காக.  இது தான் இயற்கையின் நியதி.

                      என் வீட்டுக்காரர் அடிக்கடி சொல்லுவார், ‘சைக்கிளில் போயிட்டிருக்கும் போது கீழே விழுந்தால் கொஞ்சமா அடிபடும் . அதுவே பைக்கில் போகும் போது விழுந்தால் இன்னும் கொஞ்சம் பலமா அடிபடும். இன்னும் மேல போய் விமானத்தில் போயிட்டிருக்கும் போது விழுந்தால் நான் சொல்லவேண்டியதில்லை. அது போல காசு, பணம், படிப்பு என்று எல்லாவற்றிலும் மேலப் போகணும் என்று ஆசைப் படுவது நல்லது, அதே நேரத்தில் பிரச்சனைகளும்  பெருசாத்தான் வரும். அதை எதிர்கொள்வதற்கும் நீ தயாரா இருக்கணும்’  (எனக்கு இதெல்லாம் அப்பவே தெரியும்…  அதனாலத் தான் ரெம்ப படிக்கெல )

                       சில நேரங்களில்,   ‘என்ன இது சும்மா ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு வந்து உயிரை வாங்குது.. ஒரு முடிவே கிடையாதா’  என்று மனது  சோர்ந்து போகும் போது புத்தகங்கள்  , நண்பர்கள்  வாயிலாக நாம் நம்மை புதிப்பித்து கொண்டு மீண்டும் தயாராக வேண்டும். கோடைக்காலத்தில் பாருங்கள் மரங்களில் உள்ள இலை எல்லாம் உதிர்ந்து பார்ப்பதற்கு காய்ந்து போய் நின்றாலும் , அதனுள் நம்பிக்கை என்ற வேர் உயிரோடிருக்கும். மீண்டும் மழை வந்தவுடன் ஜெகஜோதியாக பூத்து குலுங்கும்.

           சரி ரெம்ப சீரியசா பேசிட்டேனோ?  ம்….. என்ன செய்ய சில நேரங்களில் இதுவும் அவசியமாகிவிடுகிறது.  அதனால சின்ன சின்ன விஷயங்களில் கிடைக்கும் சந்தோஷங்களை விட்டுடாதீங்க. மனம் விட்டு சிரியுங்கள், வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொள்ளலாம்.

Advertisements

Entry filed under: மனதில் தோன்றியவை.

தாத்தா…..வந்துட்டாங்க…. சொர்க்கமே என்றாலும்……..

25 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Sriram  |  8:41 முப இல் ஜூலை 9, 2009

  அக்கா…இந்த இடுகை சிந்திக்க வைத்து விட்டது…

 • 2. குந்தவை  |  10:04 முப இல் ஜூலை 9, 2009

  //அக்கா…இந்த இடுகை சிந்திக்க வைத்து விட்டது…
  என்னா மாதிரி சிந்திக்க வைத்தது தம்பி. எந்த ஆட்டோவை அனுப்பலாம்ன்னா?

 • 3. Sriram  |  2:35 பிப இல் ஜூலை 9, 2009

  பின்னால் வரப்போகும் (ஆட்டோ) பிரச்சினையை பத்தி பயப்படாமல் பிரச்சினையை பத்தி இடுகை போட்டிருக்கிறீர்களே … அதை சிந்திக்க வைத்து விட்டது..

 • 4. Sriram  |  2:36 பிப இல் ஜூலை 9, 2009

  இப்ப சந்தோஷமா அக்கா? இதுக்கு தான் நான் உண்மைய சொல்லுறதே இல்லை..சிந்திக்க வைத்தது என்று சொன்னால் நம்புனா தானே…வாத்தியார் மாதிரி எதை சிந்திக்க வைத்தது?எப்புடி சிந்திக்க வைத்தது என்று கேள்வி கேட்டு கிட்டு… 🙂

 • 5. Bhuvanesh  |  3:11 பிப இல் ஜூலை 9, 2009

  ஆளாளுக்கு சீரியஸ் பதிவா? சாமி, உன்ன கெஞ்சி கேட்டுகறேன் அடுத்தது நானுன் சீரியஸ் பதிவு போட்டுட கூடாது.. (நான் பதிவு போட்டாவே நாலஞ்சு பேர் சீரியஸ் ஆயுடுவாங்க.. அது வேற விஷயம்!)

 • 6. பிரியமுடன் பிரபு  |  1:31 முப இல் ஜூலை 10, 2009

  ////
  திரும்பவும் அதை விடாபிடியாக முயற்சி செய்து எடுத்தபிறகு ஒரு வெற்றி சிரிப்பு சிரிப்பாள் பாருங்கள்…. அது தான் சந்தோஷம்
  ////

  என்னை போலவே சார்ஃப்

 • 7. பிரியமுடன் பிரபு  |  1:33 முப இல் ஜூலை 10, 2009

  நீங்கள் போட்ட பதிவை பாத்து பலபேர் சீரியசா ஆயிருக்காங்க

  இப்பத்தான் நீங்க சீரியசா பதிவு போட்டிருக்கீங்க

 • 8. பிரியமுடன் பிரபு  |  1:33 முப இல் ஜூலை 10, 2009

  நல்ல பதிவு

 • 9. குந்தவை  |  3:46 முப இல் ஜூலை 10, 2009

  //வாத்தியார் மாதிரி எதை சிந்திக்க வைத்தது?எப்புடி சிந்திக்க வைத்தது என்று கேள்வி கேட்டு கிட்டு…
  நான் வாத்தியார் இல்ல வாத்தியாரே…. சந்தேகத்தை கேட்ட மாணவி . இருந்தாலும் நீங்க சொல்லிட்டீங்க….. இனிமேல் no questions.

 • 10. குந்தவை  |  3:47 முப இல் ஜூலை 10, 2009

  //ஆளாளுக்கு சீரியஸ் பதிவா? சாமி, உன்ன கெஞ்சி கேட்டுகறேன் அடுத்தது நானுன் சீரியஸ் பதிவு போட்டுட கூடாது..

  🙂

 • 11. குந்தவை  |  3:53 முப இல் ஜூலை 10, 2009

  //என்னை போலவே சார்ஃப்

  ம்……………..

 • 12. குந்தவை  |  3:56 முப இல் ஜூலை 10, 2009

  //நீங்கள் போட்ட பதிவை பாத்து பலபேர் சீரியசா ஆயிருக்காங்க
  இப்பத்தான் நீங்க சீரியசா பதிவு போட்டிருக்கீங்க

  இது முதல்லேயே தெரிஞ்சிருந்தா இப்படி ஒரு ஆசை வந்திருக்காதே.
  it’s tooo late. இப்ப இந்த கொடுமையை நீங்க அனுபவிச்சிதான் ஆகணும்.

 • 13. குந்தவை  |  3:58 முப இல் ஜூலை 10, 2009

  //நல்ல பதிவு

  நன்றி

 • 14. Anand  |  3:52 பிப இல் ஜூலை 11, 2009

  //வளர வளர பிரச்சனைகளும் பெரிதாக வளர ஆரம்பித்துவிடுகிறது பெரிய சவாரஸ்யங்களை தருவதற்காக.//

  கண்டிப்பாங்க…
  evolution ங்கறது கோடி வருஷங்களில் மட்டும் உருபெறுவது இல்லை… நமது வாழ்வில் ஒவ்வொரு வருஷமும், நாளும் நாம் அனுபவிப்பதில் வருவதே அல்லவா… நெறய பிரச்சினைகளை சமாளிக்க சமாளிக்க சுவாரசியங்கள் மட்டுமே பெரியதாக தெரிகிறது…

 • 15. குந்தவை  |  11:21 முப இல் ஜூலை 12, 2009

  //நெறய பிரச்சினைகளை சமாளிக்க சமாளிக்க சுவாரசியங்கள் மட்டுமே பெரியதாக தெரிகிறது…

  🙂

 • 16. Krishna  |  3:57 பிப இல் ஜூலை 12, 2009

  நல்லா இருக்கு குந்தவை.

  //அதனால சின்ன சின்ன விஷயங்களில் கிடைக்கும் சந்தோஷங்களை விட்டுடாதீங்க. மனம் விட்டு சிரியுங்கள், வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொள்ளலாம்.//

  உண்மை… நன்றி … 🙂

 • 17. saravanan kulandaiswamy  |  10:12 முப இல் ஜூலை 13, 2009

  பதிவை படித்த பிறகு ஏதாவது மேதாவித்தனம் நிறைந்த இடுக்கை எழுதவே தோன்றியது …. அனால் நிதர்சனம் வந்து தலையில் கொட்ட எழுதவில்லை….

  எனது கடந்த காலத்தை திரும்பி பார்க்கும் போது அங்கு எனது அப்பா மட்டுமே உள்ளார். பென்சில் முதல் அனைத்தும் அவர் தான். என் பத்தாம் வகுப்பு வரை. சொன்னால் சிரிப்பீர்கள்.. எனக்கு onbadhamஆம் வகுப்பில் dhaan saikkil விடவே கற்று கொண்டேன். தேவை இல்லாத கரிசனம் என் தன்னம்பிக்கயை துளிர்விட செய்யாமல் தடுத்து விட்டதே கசப்பான உண்மை. என் தனthaiai குற்றஞ் சொல்ல வில்லை. அது அளவுக்கு மிஞ்சிய பாசம் என்றே நான் எடுத்து கொண்டேன் ( இப்போது தான் எனக்கு புரிந்தது.. சிறு வயதில் அவரை எப்பொழுதும் ஒரு edhiriyagae parthen enbadhe உண்மை). எனவே எனக்கு தெரிந்து குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் ஒரு சக பார்வியாலரகவே இருக்கவேண்டும்… காயங்களுக்கு மருந்து போடுங்கள்… விழும் பொது பிடிக்க வேண்டம்.. அது மனதிற்குள் ஒரு நோயாக மாறி ஒரு சிறு அதிர்வை கூட தாங்க முடியாத நிலைக்கு இடுசெல்லும்.. ஒரு Kozhaiyaga மாற்றிவிடும்… என் கதையில் அது thalaikelagave maatriyadhu. patthaamஆம் வகுப்பிற்கு பிறகு என் தந்தையின் கருத்துக்களுக்கு edhirkonathileye என் வாழ்கை முறை அமைந்தது.. அவருக்கு அந்த திடீர் மாற்றம் அதிர்ச்சியாக இருந்தாலும் போக போக புரிந்து கொண்டார்.. ஓஷோ சொல்வது போல குழந்தை avargalagave வளருகிறார்கள்… பெரிய பதிவிற்கு mannikavum……

 • 18. குந்தவை  |  12:25 பிப இல் ஜூலை 13, 2009

  நல்லா இருக்கு குந்தவை.

  வாங்க கிருஷ்ணா. ரெம்ப நன்றி.

 • 19. குந்தவை  |  12:25 பிப இல் ஜூலை 13, 2009

  பகிர்ந்தமைக்கு நன்றி சரவணன்.

  //எனவே எனக்கு தெரிந்து குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் ஒரு சக பார்வியாலரகவே இருக்கவேண்டும்… காயங்களுக்கு மருந்து போடுங்கள்… விழும் பொது பிடிக்க வேண்டம்..

  உண்மைதான்.

 • 20. மந்திரன்  |  1:34 பிப இல் ஜூலை 15, 2009

  //சரி ரெம்ப சீரியசா பேசிட்டேனோ?//
  வேற என்ன சொல்ல ?
  //அதனால சின்ன சின்ன விஷயங்களில் கிடைக்கும் சந்தோஷங்களை விட்டுடாதீங்க. //
  மேல வளர விட மாட்டீங்க போல இருக்கு ..
  ஆனால் சொல்ல வந்த கருத்துக்கள் மிக சுவையானவை ..
  குழந்தைகளை கடலில் கூட விளையாட விடலாம் ..ஆனால் கடிவாளம் உங்கள் கையில் இருக்கட்டும் ..

 • 21. குந்தவை  |  10:41 முப இல் ஜூலை 16, 2009

  //மேல வளர விட மாட்டீங்க போல இருக்கு …
  எத்தனை வளர்ந்தாலும் சின்ன சின்ன சந்தோஷத்தை அனுபவிக்க தவறிவிட்டால் , நம்மால் பெரிய சந்தோஷங்களை நம்மால் அனுபவிக்கப முடியாது.

  //குழந்தைகளை கடலில் கூட விளையாட விடலாம் ..ஆனால் கடிவாளம் உங்கள் கையில் இருக்கட்டும் ..
  வருகைக்கும் கருத்தும் நன்றி மந்திரன்.

 • 22. Rajolan Nelson  |  2:23 பிப இல் ஒக்ரோபர் 15, 2009

  திடிரென இப்படி குண்டை போட்டுட்டீங்க உண்மையைச்சொல்லுங்க அன்னைக்கு “நடந்தது என்ன”

 • 23. pari@parimalapriyaa  |  2:54 பிப இல் ஒக்ரோபர் 18, 2009

  /* சின்ன சின்ன போராட்டங்கள் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. வளர வளர பிரச்சனைகளும் பெரிதாக வளர ஆரம்பித்துவிடுகிறது பெரிய சவாரஸ்யங்களை தருவதற்காக. இது தான் இயற்கையின் நியதி. */

  என்னை மிகவும் கவர்ந்த+சிந்திக்க வைத்த வரிகள் ! 🙂

 • 24. குந்தவை  |  10:06 முப இல் ஒக்ரோபர் 19, 2009

  உண்மையைச்சொல்லுங்க அன்னைக்கு “நடந்தது என்ன”

  ஒரு குடும்பஸ்த்தர் கேட்கக்கூடிய கேள்வியா இது? அதெல்லாம் அப்பவே ‘மறக்கடிக்கப்பட்டுவிட்டது’

 • 25. குந்தவை  |  10:11 முப இல் ஒக்ரோபர் 19, 2009

  //என்னை மிகவும் கவர்ந்த+சிந்திக்க வைத்த வரிகள் !

  நன்றி.
  (இப்படியெல்லாம் என்னை உசுப்பேத்திவிடாதீக).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஜூலை 2009
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: