இந்த அண்ணன்களே இப்படித்தானோ

செப்ரெம்பர் 17, 2009 at 6:33 முப 19 பின்னூட்டங்கள்

வகை :  கதை, சிறுகதை.    

              அதிகாலையிலே எங்கம்மா சுறுசுறுப்பாக எங்களையெல்லாம் தூங்கவிடாமல் பிராண்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுடைய ஒரே ஒரு அக்காவுடைய ஒரே புத்திரனாகிய திருவாளர் சுந்தர் திருமணம் தான் இன்று.

                நாங்களும் இந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருந்ததால் அம்மாவிற்க்கு பொது மன்னிப்பு வளங்கப்பட்டிருந்தது. இருந்தாலும் எதையாது சாக்கு சொல்லி கொஞ்ச நேரம் துங்கினால் நல்லது போல் தோன்றியதால் மெள்ள அண்ணாவின் அறையினுள் எட்டி பார்த்து அதிர்ந்துவிட்டேன். எப்போதும் எதையாது படித்து கொண்டு, பெரிய சிந்தனாவாதி மாதிரி யோசிக்கிறேன் என்று சதாகாலமும் சிடுமூஞ்சியாய் அலைபவன் சிகை அலங்காரத்தில் ஒன்றியிருந்தான். சரி அம்மாவுடைய வியாதி இவனையும் பாதித்து விட்டது என்று அப்பாவின் அறைக்குள் எட்டி பார்த்தேன்.

                அப்பாவின் அறை என்பதைவிட புத்தக கொடௌன் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.அவர் அப்போதைக்கு என்ன புத்தகம் படித்து கொண்டிருக்கிறார் என்று தெரியவெண்டுமென்றால் , அவருடைய நடவடிக்கையை ஒரு நிமிஷம் உற்று பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். எதற்கெடுத்தாலும் கெக்கே பிக்கே என்று சிரித்துகொண்டிருந்தால் ஏதாவது “சிரிப்பின் சிறப்பு” மாதிரி புத்தகத்தை படித்துகொண்டிருப்பார். சந்தையில் உள்ள பாகற்க்காய் எல்லாம் வீட்டிற்க்கு இடம்பெயர்ந்தால் “பாகற் காயின் பலன்” களை படித்திருப்பார். மூச்சை அடக்கி மூலையில் விறைப்பாக உட்கார்ந்திருந்தால் சந்தேகமேயில்லாமல் தியானம் சம்பந்தமாக யாராவது கொம்பு சீவிவிட்டிருப்பார்கள்.ம்.. மேஜையில் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. பத்தடி தள்ளி அப்பா அமர்ந்து கண்களை விரித்து உருட்டி , மெழுகுவர்த்தியின் ஜூவாலையை மிரட்டி கொண்டிருந்தார். இப்ப நான் உள்ளே நுளைந்தேன் என்றால் என்னைப்போல் …. யாரும் இருக்கமாட்டார்கள்.

                     ஒன்பது மணிக்குத்தான் வீட்டிலிருந்து புறப்படுவதாக கூறியிருந்தார்கள். ஒரு நொண்டிச்சாக்கும் கிடைக்காததாலும், அஞ்சு மணிக்கே என் அம்மாவின் அலம்பல் ஆரம்பித்துவிட்டதை நினைத்து இனிமேல் புண்ணியமில்லை என்பதாலும், நானும் கிளம்ப ஆரம்பித்துவிட்டேன்.

                             ***************

                நானும், என்னுடைய அத்தை பெண்கள், சித்தி பொண்ணு என்று ஒருக் கூட்டமாக திருமணக்கோஷ்டியை மேய்ந்து பார்த்தும் , எங்களுக்கு பொழுது போக்க ஒருத்தரையும் பார்க்கமுடியவில்லை.  அதனால், எங்களுக்குள்ளே கடித்து குதறிக் கொண்டிருந்தோம். திடீரென்று சாந்தி என்னை நிமிண்டி, கண்ணை அசைக்க , அந்த திசையில் பார்த்தேன். என் அருமை அண்ணன், மாப்பிள்ளை தோழனாக மேடையில் ஏறியவன், லிட்டர் லிட்டராக மணப்பெண் தோழியிடம் வழிந்து கொண்டிருந்தான். அடப்பாவி அதுவும் இப்படியா பகிரங்கமாக பழகிப்பார்க்க கிழம்புவது!.

               கொஞ்சம் ஓரமாக போய்.. அண்ணாவை அப்படியே அமுக்கி, ஓரங்கட்டி,

 “என்னாது இது?” என்றேன்.

 “எது தங்கச்சி?” என்றான் காது வரை சிரித்து கொண்டு.

 “ம்.. மண்ணாங்கட்டி”  என்றேன் கோபத்துடன்.

” மண்ணாங்கட்டி ஒழிக….” என்றான் விரைப்புடன்.

 “ஜோக்கு?…மானம் போகுது .. அங்கப்பாரு ஒரு கும்பலே உன்னை பார்த்து சிரிக்குது “.

” ஹி…ஹி..  சரி சரி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். ஆனா…. தங்கச்சி வருங்கால அண்ணியை நல்லா பார்த்துக்கோ.” என்று ஒரு பிட்டை போகிறப் போக்கில் போட்டான்.

                          *******************

             இனிதே கல்யாணம் நடந்த பிறகு, அண்ணாவின் முறை ஆனதால், அம்மா பெரிய வேட்டைக்கே தயாராகிவிட்டார்கள். அண்ணாவோ, ” அம்மா எனக்கு என்று தனியாக எந்த விருப்பமும் கிடையாது. உங்களுக்கும் முக்கியமாக தங்கச்சிக்கும் பிடித்தால் போதும் ” என்றான். என்னை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு வேற.

                ஆனால் அப்பாவி அம்மாவோ அந்த டயலாக்கில் ஐஸ்க்கிரீமாக உருகி, அதை வேற எல்லாரிடமும் சொல்லி பெருமைபட்டுக்கொண்டார்கள்.படிப்பு முதற்கொண்டு நிறைய விஷயங்களில் அண்ணன் பெரியக் கில்லாடியாக இருப்பதை முதன் முறையாக அறிந்துகொண்டேன். இந்த காதல் கத்திரிக்காய்களில் எல்லாம் ரெம்ப நம்பிக்கை இல்லாவிட்டாலும், திடீரென்று சுனாமி போல் வந்து அண்ணனை கன்னா பின்னாவென்று தாக்கியதை பார்த்தபிறகு, நமக்கும் அந்த தொற்று வியாதி ஒருவேளை வந்துவிட்டால் என்ன செய்வதென்று ஒரு முன்னெச்சரிக்கை காரணமாக நான் அமைதியாக இருந்தேன்.

           அப்பா கரும சிரத்தையாக யோகாவில் ஐக்கியமாக இருக்க, அம்மா பெண்களின் ஜாதகத்தை பலவாறாக அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் நான் சுந்தர் அண்ணாவின் கல்யாண ஆல்பங்களை பார்த்தவாறு அம்மாவிடம் பேச்சு கொடுத்தேன். ” அம்மா அண்ணி பக்கத்தில் நிற்கிறாங்க பாருங்க, இவங்க பேரு கீதாவாம். இஞ்சினியரிங் முடிச்சிருக்காங்க. அழகாகவும் இருக்கிறாங்க, குணசாலியாகவும் தெரிஞ்சாங்க. அங்கங்கே பார்க்கிறதுக்கு, அண்ணிக்கிட்ட பேசி… இவங்களையே நம்ம அண்ணாவுக்கு முடித்தால் என்ன?” என்று மெல்ல தூண்டிலை போட்டேன்.

                அம்மா கொஞ்ச யோசித்தாலும் ” உனக்கு பிடித்திரிந்தால் பேசி பார்க்கிறேன்” என்றார்கள். அண்ணாவுடைய கண்கள் டிவியை பார்த்துக்கொண்டிருந்தாலும், காது ரெண்டும் எங்களுடன் தான் இருந்ததால், என்னை நன்றியுணர்ச்சியோடு பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான். அப்புறம் விஷயம் எல்லாம் படு வேகமாக நடந்தது.

                  ************************

           மணமேடையில் இதோ எங்க அண்ணாவும் , கீதா அண்ணியும் மாலையும் கழுத்துமாக நின்று அசடு வழிந்து கொண்டிருந்தார்கள். அண்ணிக்கு எல்லாவிஷயமும் தெரியுமாததால் என்னை பாசத்தோடு தோழியாக நிற்கவைத்து கொண்டார்கள். நானும் அங்கு வந்தவர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டு இருந்தேன்.

                        திடீரென்று அண்ணி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் பரவியது.அவங்க ஒன்றுவிட்ட விசு அண்ணன் கடைசி நேரத்தில் பகவானின் கருணையால் லீவு கிடைத்து, மனதை கவரும், பளீரென்ற சிரிப்புடன் வந்து கொண்டிருந்தது தான் காரணம். அவரை பார்த்து கொண்டிருந்த நான் தற்செயலாக அண்ணாவை பார்த்தேன், அவன் என்னையே ஒரு மாதிரி பார்த்துகொண்டிருந்தான். ஒரு வேளை அண்ணியின் அண்ணாவை என்னையறியாமல் ஓவராக பார்த்துவிட்டோமோ. மனம் பதபதைத்தது. வலுக்கட்டாயமாக கூட்டத்தில் கண்களை திருப்பினேன்.

“வசந்திமா..”

“ம்…” அண்ணாவை நோக்கினேன்.

“நீ எவ்வளவு நேரமாக இங்கே நிற்கிறாய். அம்மாவையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வா. தண்ணி , ஜூஸ் என்று ஏதாவது சாப்பிட வை சரியா”. என்று அங்கிருந்து கிளப்பினான் என் அருமை அண்ணன். எனக்கு எப்படி இருந்திருக்கும் நீங்களே சொல்லுங்க.

              என்ன ஒரு நன்றி கெட்ட உலகமடா என்று பெருமி.. பெருமூச்சு விட்டு கொண்டு கிளம்பினேன் நான்.

Advertisements

Entry filed under: கதை. Tags: , .

தண்ணீர்…. தண்ணீர்……. எப்படி இப்படியெல்லாம்….

19 பின்னூட்டங்கள் Add your own

 • 1. --புவனேஷ்--  |  6:34 முப இல் செப்ரெம்பர் 18, 2009

  Super akkaa.. valakkam pola Kalakkal 🙂

 • 2. குந்தவை  |  7:01 பிப இல் செப்ரெம்பர் 20, 2009

  //Super akkaa.. valakkam pola Kalakkal 🙂

  No other way.( Brothers are supposed to encourage)

 • 3. soundr  |  1:04 பிப இல் செப்ரெம்பர் 24, 2009

  /நமக்கும் அந்த தொற்று வியாதி ஒருவேளை வந்துவிட்டால் என்ன செய்வதென்று ஒரு முன்னெச்சரிக்கை காரணமாக நான் அமைதியாக இருந்தேன்.//

  “என்ன ஒரு வில்லத்தனம்…”

  அவங்க ஒன்றுவிட்ட விசு அண்ணன் வந்து கொண்டிருந்தது தான் காரணம். கடைசி நேரத்தில் பகவானின் கருணையால் லீவு கிடைத்து வந்து கொண்டிருந்தவரை; மனதை கவரும், பளீரென்ற சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்த நான் தற்செயலாக அண்ணாவை பார்த்தேன், அவன் என்னையே ஒரு மாதிரி பார்த்துகொண்டிருந்தான்.

  அப்படிங்கற‌ வாக்கியம்

  //அவங்க ஒன்றுவிட்ட விசு அண்ணன் கடைசி நேரத்தில் பகவானின் கருணையால் லீவு கிடைத்து, மனதை கவரும், பளீரென்ற சிரிப்புடன் வந்து கொண்டிருந்தது தான் காரணம். அவரை பார்த்து கொண்டிருந்த நான் தற்செயலாக அண்ணாவை பார்த்தேன், அவன் என்னையே ஒரு மாதிரி பார்த்துகொண்டிருந்தான். //

  இப்படி மாறிடுச்சோ….

  இருந்தாலும், “உன் approach நல்லா இருக்குமா”

 • 4. குந்தவை  |  3:09 முப இல் செப்ரெம்பர் 25, 2009

  //“என்ன ஒரு வில்லத்தனம்…”

  //இருந்தாலும், “உன் approach நல்லா இருக்குமா”

  அண்ணாச்சி இது “கதை, சிறுகதை “.
  கதை நல்லாயிருக்கான்னு சொல்லுங்க.

  நல்லாத்தான் கதையை அலசுராங்க… குடும்பத்துல கொழப்பத்த உண்டுபண்ணுறதுக்கு

 • 5. Krishna  |  9:18 முப இல் செப்ரெம்பர் 25, 2009

  நல்லா இருக்கு குந்தவை 🙂

 • 6. Karthikeyan  |  12:51 பிப இல் செப்ரெம்பர் 25, 2009

  ரசிக்கும் படியாக எழுதியிருந்தீர்கள்.வாழ்த்துக்கள்.

 • 7. குந்தவை  |  7:27 முப இல் செப்ரெம்பர் 26, 2009

  //நல்லா இருக்கு குந்தவை

  நன்றி கிருஷ்ணா.

 • 8. குந்தவை  |  7:37 முப இல் செப்ரெம்பர் 26, 2009

  //ரசிக்கும் படியாக எழுதியிருந்தீர்கள்.வாழ்த்துக்கள்
  நன்றிங்கோ.

 • 9. uma  |  9:14 பிப இல் செப்ரெம்பர் 30, 2009

  HI KUNTHAVAI,
  IT’S REALLY NICE.I ENJOY MYSELF WHEN I READ THAT

 • 10. குந்தவை  |  11:40 முப இல் ஒக்ரோபர் 1, 2009

  //HI KUNTHAVAI,
  IT’S REALLY NICE.I ENJOY MYSELF WHEN I READ THAT

  Welcome and Thank U Uma.

 • 11. பிரியமுடன் பிரபு  |  11:28 பிப இல் ஒக்ரோபர் 2, 2009

  எதற்கெடுத்தாலும் கெக்கே பிக்கே என்று சிரித்துகொண்டிருந்தால் ஏதாவது “சிரிப்பின் சிறப்பு” மாதிரி புத்தகத்தை படித்துகொண்டிருப்பார். சந்தையில் உள்ள பாகற்க்காய் எல்லாம் வீட்டிற்க்கு இடம்பெயர்ந்தால் “பாகற் காயின் பலன்” களை படித்திருப்பார். மூச்சை அடக்கி மூலையில் விறைப்பாக உட்கார்ந்திருந்தால் சந்தேகமேயில்லாமல் தியானம் சம்பந்தமாக யாராவது கொம்பு சீவிவிட்டிருப்பார்கள்.ம்..
  ////

  அப்பாவையும் விட்டுவைக்கலயா???!?!?

 • 12. பிரியமுடன் பிரபு  |  11:29 பிப இல் ஒக்ரோபர் 2, 2009

  /நமக்கும் அந்த தொற்று வியாதி ஒருவேளை வந்துவிட்டால் என்ன செய்வதென்று ஒரு முன்னெச்சரிக்கை காரணமாக நான் அமைதியாக இருந்தேன்.//

  “என்ன ஒரு வில்லத்தனம்…”

 • 13. பிரியமுடன் பிரபு  |  11:30 பிப இல் ஒக்ரோபர் 2, 2009

  ////
  என்ன ஒரு நன்றி கெட்ட உலகமடா என்று பெருமி.. பெருமூச்சு விட்டு கொண்டு கிளம்பினேன் நான்.
  ///

  ஹ ஹா ஹஅ

 • 14. பிரியமுடன் பிரபு  |  11:31 பிப இல் ஒக்ரோபர் 2, 2009

  நிஜ கதையா?! :!?!?!?1//

 • 15. குந்தவை  |  3:53 முப இல் ஒக்ரோபர் 3, 2009

  //அப்பாவையும் விட்டுவைக்கலயா???!?!?

  இது கதை தம்பி.

 • 16. குந்தவை  |  3:54 முப இல் ஒக்ரோபர் 3, 2009

  //ஹ ஹா ஹஅ

  அப்பாடி ஒரு வழியா சிரிச்சிட்டீங்க. ரசித்தமைக்கு நன்றி.

 • 17. குந்தவை  |  3:57 முப இல் ஒக்ரோபர் 3, 2009

  // நிஜ கதையா
  ‘நிஜ’மாகவே கதைதான்.

 • 18. priya.r  |  6:09 முப இல் ஜூன் 15, 2010

  கதை ரொம்ப நல்லா இருக்குங்க குந்தவை !

  ஒரு சில கதைகள் ,மற்றவர்களின் அனுபவத்தை சொல்வது போல ஆரம்பித்து கடைசியில் சொந்த அனுபவமாக முடியும் .
  இந்த கதை சொந்த கதை போல ஆரம்பித்து (நான் கூட கடைசியில் வசந்திமா என்று கூப்பிடும் வரை குந்தவையின் சொந்த கதை என்று ரசித்து படித்து கொண்டு இருந்தேன் !) பிறரின் கதையாக முடிவடைந்து இருக்கிறது .

  ஒரு கல்யாண வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை தத்ரூபமாக வர்ணித்த விதம் அருமை!!
  வாழ்த்துக்கள்!!
  நட்புடன் பிரியா

 • 19. குந்தவை  |  6:30 முப இல் ஜூன் 15, 2010

  ரசித்தமைக்கும், கருத்துக்கும் நன்றி பிரியா. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
செப்ரெம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
« ஆக   அக் »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

%d bloggers like this: