எப்படி இப்படியெல்லாம்….

செப்ரெம்பர் 30, 2009 at 12:41 பிப 4 பின்னூட்டங்கள்

                 சமீபத்தில் சுஜாதாவின் ‘கடவுள் இருக்கிறாரா’ என்ற புத்தகத்தை வாசித்து கொண்டிருந்தேன். இதை பலர் படித்திருக்கலாம். அதில் ஒரு நிகழ்ச்சி குறிப்பிட்டிருந்தார்.

                  இரண்டாம் உலக யுத்தத்தின் போது , ஜெர்மன் லண்டன் நகரவீதியெங்கும் அலைலையாக குண்டுகளை அள்ளி தெளித்து கொண்டிருந்த ஒரு இரவில், சர்ச்சில் தன் டவுனிங் தெருவிலுள்ள வீட்டில் , மூன்று மந்திரிகளை உணவுக்கு அழைத்திருந்தார். விருந்து நடந்து கொண்டிருந்த போது, விமானத்தாக்குதல் தொடங்கியது. சாப்பிட்டு கொண்டிருந்த சர்ச்சில், திடீரென்று எழுந்து சமையலறைக்கி சென்று அங்கிருந்த சிப்பந்திகளிடம் “சாப்பாட்டை விருந்து நடக்கும் அறையில் வைத்து விட்டு , உடனே பதுங்கும் அறைக்கு பாதுகாப்பாக சென்றுவிடுங்கள் ” என்று ஆணைபிறப்பித்துவிட்டு திரும்பி வந்தார். மூன்று நிமிடம் கழித்து , விமானம் தாக்கி சமைலறை முழுவதும் நாசமாகி, சமையற்காரரும் , பணிப்பெண்களும் காப்பாற்றப்பட்டார்கள். அந்த நிமிஷத்தில் எழுந்து போய் அவர்களை வெளியே போகச்சொன்னது எது என்று பின்னால் அவர் வியந்தாராம்.

               என்னுடைய கண்முன்னே இது மாதிரி சம்பவங்கள் நடந்திருந்தாலும், சிலதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

                எங்கம்மா பொதுவாக எதற்குமே நேரம் தவறமாட்டார். எங்காவது வெளியே கிளம்ப வேண்டுமானாலும் சரி, குறித்த நேரத்தில் அங்கு கிளம்பிவிடவேண்டும் என்பதில் குறியாக இருப்பார். ஒரு நாள் என்னுடைய அண்ணன் சென்னைக்கு மாலை நான்கு மணியளவில் கிளம்புவதாக இருந்தது. அம்மாவும் அதற்குள் பெர்மிஷன் கேட்டு பள்ளியிலிருந்து வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால் அன்று என்னவோ தோன்றவும், அடுத்த பேருந்தில் போனால் போதும் என்று பள்ளியிலிருந்து மெதுவாகவே வந்தார்கள். அண்ணாவுக்கோ பயங்கர கோபம் , நாலு மணி பேருந்தை பிடிக்க முடியாது என்று.கரகரவென்று முணுமுணுத்து விட்டு அடுத்த பேருந்தை பிடித்து தான் சென்றார்.

          மதுரை அருகில் சென்றுகொண்டிருந்தபோது , நெடுஞ்சாலையில் அண்ணா டிக்கெட் புக் பண்ணியிருந்த பேருந்து பயங்கரமாக சேதமடைந்து கிடந்ததையும், நிறைய பேர் படுகாயம் அடைந்ததையும், பலர் இறந்ததையும் பார்த்துவிட்டு அதிர்ந்து அடுத்த நாள் எங்களுக்கு போன் பண்ணினார். அன்று அம்மாவிற்க்கே எதற்காக மெதுவாக வந்தோம் என்று காரணம் சொல்லத்தெரியவில்லை.

                  அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை தான் விடுமுறை. என் வீட்டுக்காரர் எல்லா வெள்ளிக்கிழமையும் தவறாமல் (உடம்பு சரியில்லாவிட்டாலும்) கோவிலுக்கு செல்லும் வழக்கமுடையவர். எனக்கு ஏதாவது உடம்பு சரியில்லை என்றால், டிமிக்கி கொடுத்துவிடுவேன். ஒரு வெள்ளிக்கிழமை வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து குளித்து கிளம்பியவர் அப்படியே உக்கார்ந்து கொண்டார். எனக்கு என்னமோ இன்று போகவேண்டாம் என்று தோன்றுகிறது என்று கூறியவரை நான் ஆச்சிரியமாக பார்த்தேன். சிறிது நேரத்தில் என்னுடைய தோழியிடமிருந்து ஒரு போன் , அவளுடைய கணவர் கீழே விழுந்து தலையில் நல்ல அடிபட்டு….. நாங்கள் கிளம்பி இருந்ததால் நொடி பொழுதையும் வீணாக்காமல் சென்று அவரை மருத்துவமையில் சேர்க்கமுடிந்தது. ஊருக்கு புதிதாக வந்திருந்த தோழிக்கோ வேறு யாரையும் தெரியாது, என் வீட்டுகாரரிடம் அப்போது செல்போனும் கிடையாது, அந்த வெள்ளிக்கிழமை நாங்கள் கோவிலுக்கு போயிருந்தால்…

          இதை பற்றி என் வீட்டுக்காரரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, ‘அதுக்கெல்லாம்…எல்லோரையும் முழுமனதாக அன்பு செய்யும் நல்ல உள்ளம் வேணும்மா.’ என்று வழக்கம்போல் என்னை வெறுப்பேத்த ,

 நானும், “Opposite poles attract each other, நானும் நல்ல பிள்ளையா இருந்திருந்தால் நம் நிலமை என்னவாகியிருக்கும் என்று சிறிது யோசித்தீர்களா….. (அவர் கையை பிடித்து) இந்த நல்லவர் மேல் அளவுக்கதிகமாக மையல் கொண்டு , ஒரு கணம் கூட பிரியாதிருக்க நான் குற்றங்குறை உள்ள பேதையாக மாறி , தினம் பல ஏச்சு பேச்சுகளையும் தாங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட என் கணக்கிலடங்கா தியாகங்களுடன் இந்த தியாகம் புதைந்து இருப்பதால் தான் நம்முடை பூமியை தியாக பூமி என்று சொல்கிறார்களோ என்னமோ.” என்ற பதிலில் ‘திருத்த முடியாத கேசுகளுடன் பேசினால் நேரம் தான் விரையம் என்று அயர்ந்து முறைக்க………

Advertisements

Entry filed under: ரசித்தவை.

இந்த அண்ணன்களே இப்படித்தானோ காதல், கடவுள், பணம் , அழகு – நான்

4 பின்னூட்டங்கள் Add your own

 • 1. பிரியமுடன் பிரபு  |  11:21 பிப இல் ஒக்ரோபர் 2, 2009

  நல்ல பதிவு

  எனக்கு அன்பே சிவம்(அல்லா ., ஏசு எல்லாம்)

  ///
  அவர் கையை பிடித்து) இந்த நல்லவர் மேல் அளவுக்கதிகமாக மையல் கொண்டு , ஒரு கணம் கூட பிரியாதிருக்க நான் குற்றங்குறை உள்ள பேதையாக மாறி , தினம் பல ஏச்சு பேச்சுகளையும் தாங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட என் கணக்கிலடங்கா தியாகங்களுடன் இந்த தியாகம் புதைந்து இருப்பதால் தான் நம்முடை பூமியை தியாக பூமி என்று சொல்கிறார்களோ என்னமோ.”
  ///
  என்னமோ சொல்லுறீங்க ……………. ம்ம்ம்ம்ம்

 • 2. பிரியமுடன் பிரபு  |  11:22 பிப இல் ஒக்ரோபர் 2, 2009

  ரொம்ப நாளா என்னால் படிக்க வரமுடியல
  எப்படி இருக்கீங்க

 • 3. குந்தவை  |  3:50 முப இல் ஒக்ரோபர் 3, 2009

  //என்னமோ சொல்லுறீங்க ……………. ம்ம்ம்ம்ம்

  அடப்பாவமே உண்மையை சொன்னா அவ்வுளவு கஷ்டமாகவா இருக்கு…….

 • 4. குந்தவை  |  3:51 முப இல் ஒக்ரோபர் 3, 2009

  //எப்படி இருக்கீங்க
  நல்லா இருக்கோம் தம்பி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
செப்ரெம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
« ஆக   அக் »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

%d bloggers like this: