காதல், கடவுள், பணம் , அழகு – நான்

ஒக்ரோபர் 3, 2009 at 7:13 முப 5 பின்னூட்டங்கள்

                   எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க. இந்த தலைப்பில் எழுத அழைப்பு விடுத்த புவனேஷுக்கு இது சமர்ப்பணம். 

 காதல்-

          காதல் இல்லாவிட்டால் அது என்ன வாழ்க்கைங்க. ஒவ்வொரு மனிதர்களையும் காதல் தானே வாழ வைத்துகொண்டிருக்கிறது. சிலருக்கு பணத்தின் மீது காதல், சிலருக்கு சமுதாய நலன் மீது காதல், அரசியல்வாதிகளுக்கு பதவியின் மேல் காதல், நடிகர்களுக்கு நடிப்பின் மேல் காதல், எனக்கு என் காணவரிடம் கொள்ளும் ஊடல்( இதை ‘சண்டை’ன்னு இன்டீசென்ட சொல்லுவாங்க) மீது காதல், புவனேஷுக்கு ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ் பொண்ணுங்க எல்லார் மீதும் காதல்( எம்மாம்…. பெரிய்ய்ய்ய்ய மனசு) …. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இப்ப சொல்லுங்க காதல் இல்லாத வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கும்.

  கடவுள்-

       கடவுள் நம்முடைய மனதிற்க்குள் மனசாட்சி வடிவமாக இருக்கிறார். ரெம்ப ஓவராக அவருடைய பேச்சை கேட்காவிட்டாலும், ஓரளவுக்காவது கேட்டு கொஞ்சமாச்சும் நல்ல பிள்ளையா இருக்கணும் என்பது என்னுடைய ஆசை. அந்த ஆசை என்னைக்கு நிறைவேறப்போகுதோ தெரியவில்லை.

பணம்-

 ‘ மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

  தானம் தவர்உயர்ச்சி தாளாமை – தேனின்

  கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்

   பசிவந்திட பறந்து போம்’

 என்று ஒவையார் ‘நல்வழி’ யில் சொல்லியிருக்கிறார். மனிதனை மனிதனாக நிலைக்க செய்வதற்க்கும், நம்மையும் நம் சுற்றத்தாரையும் சந்தோஷமாக வாழவைப்பதற்க்கும் பணம் கண்டிப்பாக தேவைதான்.

      பணம் அதற்க்கு மேல் சேர்த்து வைத்திருப்பவர்கள் தான்  , அதிகமாக பணம் வைத்திருந்தால் என்னசெய்யவேண்டும் என்று ஐடியா தருவார்கள்..

அழகு –

      அழகு என்பதற்க்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தம் இருக்கும். சிலருக்கு புத்திசாலித்தனம் தான் அழகு, சிலருக்கு அமைதி தான் அழகு, சிலருக்கு வீரம் தான் அழகு, …… இருந்தாலும் அழகு இல்லாத உயிர்களே கிடையாது. அந்த அழகுதான் நமக்கு அவர்கள் மேல் ஒரு பிடிப்பை உருவாக்கும். வேறு என்ன சொல்ல என்று எனக்கு தெரியவில்லை. ம்… எனக்கு பிடித்தமானவர்கள் எல்லாருமே என்னை பொறுத்தவரையில் மிக மிக அழகானவர்கள்.

            அப்பாடி ஒரு வழியா எழுதிட்டேன். இப்ப யாரை எல்லாம் கோத்துவிடலாம்…..

 1. ஷ்யாமா, இவரை நான் எந்த தொடர்லேயும் கோத்து விடாமல் எவ்வளவு பெரிய கொடுமை செய்திருக்கிறேன். அதற்க்கு மன்னிப்பை கேட்டு அழைப்புவிடுக்கிறேன்.

2. முகுந்தன் ஐயா, எப்படி நீங்கள் எங்களை எல்லாம் மறந்து நிம்மதியாக இருக்கலாம். வாங்க வந்து ரெண்டு வார்த்தை பேசிட்டு போங்க.

3. விஜய், காயத்திரி மந்திரம் தான் இவருக்கு ரெம்ப பிடிக்கும் இருந்தாலும், எந்த தலைப்பை கொடுத்தாலும் இவர் ரெம்ப சுவாரஸ்யமாக எழுதுவார்.

4.  பிரபு – அடிக்கடி காணாம போயிடுவார். அப்பப்ப பிடிச்சி இப்படி ஏதாவது வேலை குடுத்தாதான் சரிபட்டுவருவார்.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

எப்படி இப்படியெல்லாம்…. சுவாரசியமா எழுதுவாங்களே…….

5 பின்னூட்டங்கள் Add your own

 • 1. --புவனேஷ்--  |  8:56 முப இல் ஒக்ரோபர் 5, 2009

  //பணம் அதற்க்கு மேல் சேர்த்து வைத்திருப்பவர்கள் தான்(புவனேஷை போல) , அதிகமாக பணம் வைத்திருந்தால் என்னசெய்யவேண்டும் என்று ஐடியா தருவார்கள்..//

  பதிலை எதிர் பாருங்க அக்கா!!

 • 2. குந்தவை  |  4:20 முப இல் ஒக்ரோபர் 6, 2009

  //பாருங்க அக்கா!!

  பார்த்திடுவோம் தம்பி.

 • 3. Vijay  |  4:37 பிப இல் ஒக்ரோபர் 6, 2009

  கோர்த்து விட்டுட்டீங்களா!! கொடுத்த வேலையை ஒழுங்கா செய்துட்டேன். வந்து அட்டெண்டென்ஸ் போட்டுட்டுப் போங்க!!!

 • 4. Mukundan  |  4:01 முப இல் ஒக்ரோபர் 9, 2009

  நல்லா எழுதி இருக்கீங்க .. ஆனா என்னை மாட்டி விட்டுட்டீங்க .. சரி சீக்கரம்
  எழுதறேன்.

  அது என்ன முகுந்தன் ஐயா , எப்படி என் வயதி உயர்த்தியதை வன்மையாக kandikkiren 🙂

 • 5. குந்தவை  |  10:15 முப இல் ஒக்ரோபர் 13, 2009

  //அது என்ன முகுந்தன் ஐயா , எப்படி என் வயதி உயர்த்தியதை வன்மையாக kandikkiren

  ha…ha.. received.
  சும்மா ஒரு மரியாதை கொடுத்து பார்த்தேன். வேண்டாம்கிரீங்க….. நல்லதுக்கு காலம் இல்லப்பா…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஒக்ரோபர் 2009
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: