நீங்க ரெடியா?

ஒக்ரோபர் 8, 2009 at 4:53 முப 10 பின்னூட்டங்கள்

              பன்றிக் காய்ச்சல் இப்படி என் வாழ்க்கையில் விளையாடும் என்று நினைத்துகூட பார்க்கவில்லை. உடனே பன்றி காய்ச்சல் எனக்கு வந்துவிட்டதோ என்று பயந்துவிடாதீர்கள்.

              கண்மணிக்கு மூன்று மாதம் கூடுதலாக விடுமுறை கொடுத்து, மூன்று புத்தகத்தையும் கையில் கொடுத்து ‘முடிச்சிருங்க’ என்று அனுப்பிவிட்டார்கள். என்ன ஒரு ‘வில்லத்தனம்’ என்று நினைத்தாலும்…. இப்போது  உள்ள வில்லன்களை நினைத்தால் பரிதாபமாகத் தான் இருக்கிறது. கதாநாயகர்கள் அடிக்கிற பஞ்ச் டயலாக்கை நம்மளாலே தாங்கமுடியவில்லை… பாவம் அவர்கள்……..   ‘ தெரிச்சிடுவே….. நொறுங்கிடுவா…. தாங்கமாட்ட…சுருண்டிருவ… ‘ என்று பேசுவதை கேட்டு பரிதாபமாக முழிப்பவர்களை பார்த்து பரிதாப்படாமல் என்ன செய்ய. 

                  நம்ம கதைக்கு வருவோம்…வாரத்திற்க்கு ஒருமுறை எழுதவைப்பதற்க்கே , எங்களை தலை கீழாக நிற்கவைப்பாள். இப்போ தினமும் எழுதவைப்பதற்க்கு…… நினைக்கவே பயமாகயிருக்கிறது. இப்பதான் சிறு வயதில், வீட்டில் படிக்காம அப்பாவை எரிச்சல்படுத்தியது  அநியாயத்துக்கு நியாபகம் வந்துதொலைக்கிறது.

                கெஞ்சி…. கொஞ்சி அவளை ஒரு பக்கம் எழுத வைப்பதற்க்குள் ஒருவழியாகிவிட்டோம். அப்ப தான் எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்க தொலைபேசினாங்க. அவங்களுக்கு  நான் ஆரக்கிள் சொல்லிக்கொடுக்க வேண்டுமாம். நான் கைவேலையாக இருந்ததால், எனக்கு பதிலாக கண்மணி அப்பா தான் பேசினார் ,”சரி , அதெற்கென்ன கண்டிப்பா தரோவா சொல்லி கொடுத்துவிடலாம்.  ஆனா நான் கேட்கிற பீஸை கரெக்டா தந்துடனும்” என்றார்.

   அவங்களும் ,” கண்டிப்பா….. எவ்வளவு தரணும்”

   கண்மணி அப்பா , ” பெரிசா ஒண்ணுமில்ல , கண்மணியை …. அவளோட வீட்டு பாடத்தை எழுத வச்சிடணும் அவ்வுளவுதான்

     அப்பதைக்கு அங்கிருந்து ஒரு சிரிப்பு  கேட்டது தான், அப்புறம் அங்கிருந்து  போனே வரவில்லை. நீங்க யாராவது ரெடியா?

Advertisements

Entry filed under: ரசித்தவை.

சுவாரசியமா எழுதுவாங்களே……. கண்மணி ரெம்ப அலர்ட் தான்.

10 பின்னூட்டங்கள் Add your own

 • 1. soundr  |  3:36 பிப இல் ஒக்ரோபர் 8, 2009

  என்னாதிது….
  Rascal…
  சின்னப்புள்ளத்தனமா இருக்கு….?

  பீசு கேக்கணும்னா, பணம் கேளு….
  இல்ல பொருள கேளு…
  அத விட்டுப்புட்டு
  கண்மணிய அவளோட வீட்டு பாடத்தை எழுத வெக்கணுமாம்ல…

  ஹ….ஹ… நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய….

 • 2. kanagu  |  4:32 பிப இல் ஒக்ரோபர் 8, 2009

  ha ha ha…

  rasithen.. kanimaniyin appa sonnathai…

  kastam than pola irukku.. pasangala ezhutha vaikkurathu… 🙂

 • 3. skulandaiswamy  |  12:23 பிப இல் ஒக்ரோபர் 9, 2009

  I am ready! If its with kanmani i am welcoming this task with utmost pleasure…..

 • 4. --புவனேஷ்--  |  4:05 பிப இல் ஒக்ரோபர் 10, 2009

  .//நீங்க யாராவது ரெடியா?
  ஏன்னா ஒரு ஹீரோ தனம் ??
  (இப்ப அந்த பாவப்பட்ட வில்லன்கள் நாங்கதான்!)

 • 5. --புவனேஷ்--  |  4:07 பிப இல் ஒக்ரோபர் 10, 2009

  ஒன்னும் பிரச்சனை இல்ல அக்கா. நானும் கண்மணியும் சேர்ந்தே ஹோம் வொர்க் செய்யறோம்.. (பட் கண்மணி என்ன விட பெரிய பொண்ணு இல்லையே??)

 • 6. குந்தவை  |  10:37 முப இல் ஒக்ரோபர் 12, 2009

  //நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய….

  எனக்கு தான் பிதியாயிடிச்சி…
  இப்படியா உணர்ச்சிவசப்படுறது?

 • 7. குந்தவை  |  10:08 முப இல் ஒக்ரோபர் 13, 2009

  // (பட் கண்மணி என்ன விட பெரிய பொண்ணு இல்லையே??)

  கண்மணி உங்களை மாதிரி கைபிள்ள இல்ல புவநேஷ். அவங்களுக்கு நாலு வயசாகப்போகுது.

 • 8. குந்தவை  |  10:11 முப இல் ஒக்ரோபர் 13, 2009

  //(இப்ப அந்த பாவப்பட்ட வில்லன்கள் நாங்கதான்!)

  ம்… அப்படியா உங்களை மிரட்டுற ஹீரோயின் யாரு தம்பி.

 • 9. குந்தவை  |  10:12 முப இல் ஒக்ரோபர் 13, 2009

  //I am ready! If its with kanmani i am welcoming this task with utmost pleasure…..

  ha…ha… Thank u.

  Hello Sir I’m expecting ur blog.

 • 10. குந்தவை  |  10:16 முப இல் ஒக்ரோபர் 13, 2009

  //kastam than pola irukku.. pasangala ezhutha vaikkurathu…

  வாங்க கனகு. ரெம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க. இதெல்லாம் இல்லாம எப்படி பொழுதுபோகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஒக்ரோபர் 2009
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: