கோபப்படாதீங்க …..ப்ளீஸ்….

ஒக்ரோபர் 29, 2009 at 2:53 பிப 16 பின்னூட்டங்கள்

                மனிதர்கள் பலவிதம், பதிவர்கள் பலவிதம்… ஏன் பேய்கள் பலவிதம் என்று கூட நிறைய பதிவுகள் வரும்போது  நாமும் இப்படி ஏதாவது எழுதலாமா என்று ஒரு ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தபோது.. திடீரென்று  நிலநடுக்கம் வந்த மாதிரி நான் இருந்த அறையே கிடுகிடுத்து விட்டது. என் எதிரில் இருந்த அரபி அம்மா படா கோபத்தில் (என்னிடம் அல்ல) கிறீச்சிட்டது தான் காரணம்.
  
               ஏன்? எதற்கு? என்று ஆராய்ச்சி செய்தால் நமக்கு தான் கோபம் வரும். சின்ன விஷயத்துக்கும் அப்படி ஒரு காட்டு கத்தல், எனக்கு ரெம்ப அநியாயமாகப்படும். இங்கு அடிப்படை உதவிகளை செய்ய இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், இந்தோனேஷியா முதலிய நாடுகளிலிருந்து தான் நிறைய பேர் வருவார்கள். அந்த ப்ளாக்கில் நான் மட்டும் தான் இந்தியா என்பதாலோ என்னவோ, அந்த பணிப்பெண்கள், அரபி பெண்களிடம் நன்றாக வாங்கிவிட்டு என்னை பார்த்து ஒரு சோகமான புன்னகையை உதிர்த்து விட்டு போவார்கள். எனக்கு ரெம்பவே கஷ்டமாகயிருக்கும்.

            எனக்கு தெரிந்து , இவர்கள் புகார் கொடுத்து , பணிப்பெண்களை மாற்றுவது ஒரு தொடர்கதையாகிவிட்டது. அதிலும்  எதுவும் செய்யாமலே திருட்டு பட்டம் கொடுக்கும் போது…. அழும் பணிப்பெண்களை பார்த்தால் சகிக்காது.

                       இவ்வளவு எழுதிவிட்டு கண்மணி எனக்கு தந்த பாடத்தை சொல்லாமல் எப்படி முடிப்பது.

                         ஒரு நாள் , தூங்குவதற்க்கு முன்னால் பல் விளக்க பயங்கரமாக அடம்பிடித்தாள். என்னென்னவோ சொல்லிப் பார்த்தும் கேட்கிற மாதிரி தெரியவில்லை. கடைசியில் பொறுமை இழந்து  நான் கொஞ்சம் கோபத்தில் அரட்டி, பிடித்து வைத்து பல் விளக்கி விட்டேன். பொதுவாக அப்படி கோபப்பட்டால், சிறிது நேரம் கழித்து மெள்ள அவளுக்கு புரிய வைத்து, அவளை சமாதானபடுத்திவிடுவேன். அவளும் புரிந்து கொள்ளுவாள். ஆனால் அன்று எனக்கு மகா கோபம் வந்து விட்டதால், அப்படியே படுக்கைக்கும் சென்று…. துங்குவதற்க்கு முன்னால்  சொல்லும் ஒரு செபத்தை  ஆரம்பித்தேன்.
 
  “இயேசப்பா உமக்கு நன்றி”

 கண்மணி  உம்மென்று முகத்தை வைத்து கொண்டு  “இயேசப்பா உமக்கு நன்றி”.
 
 “இயேசப்பா  எனக்கு நல்ல ஞானத்தை தாரும்”

  கண்மணியின் கண்ணில் கண்ணீரூம் , முகத்தில்  கோபமும் கொப்பளிக்க, ” இயேசப்பா எனக்கு நல்ல அறிவை தந்திருக்காரு அதனாலத்தான் நான் நல்ல பிள்ளையா படிக்கிறேன், எழுதுறேன்(இப்பவெல்லாம் கண்மணி சமத்தா எழுதுறா) , உங்களிடம் தான் அது இல்லை அதனாலத்தான் நீங்க கோபப்படுறீங்க

Advertisements

Entry filed under: அனுபவம்.

கண்மணி ரெம்ப அலர்ட் தான். ஒருவழியா திறந்துட்டாங்க….

16 பின்னூட்டங்கள் Add your own

 • 1. skulandaiswamy  |  8:26 முப இல் நவம்பர் 2, 2009

  Children is the father of man…

  If you happened to get one book “Emotional Wellness” by Osho kindly read it. Never get angry with children.I too have bad habit of getting short tempered. Kids tears have more valuable…

 • 2. குந்தவை  |  11:29 முப இல் நவம்பர் 2, 2009

  //If you happened to get one book “Emotional Wellness” by Osho kindly read it.
  sure.

  //Never get angry with children. Kids tears have more valuable…
  U r right.

 • 3. உதய தாரகை  |  10:20 பிப இல் நவம்பர் 3, 2009

  கோபம் என்பதை தன்னைக் கடுப்படுத்த முடியாத நிலையை ஒரு தனிமனிதன் அனுபவிக்கும் கொடுமையான கட்டம் என்றே என்னால் பார்க்க முடிகிறது.

  “கோபம்” என்பதைக் கண்டாலோ, கோபப்படுபவர்களைக் கண்டாலோ அவர்களைக் கண்டு வியந்து வருந்தி அறிவுரை (சிலவேளைகளில்) பகரும் எனக்கு, இப்போதெல்லாம் பலவேளைகளில் என் சார்ந்த சூழல் பற்றியதான நிலைகளினால் என்மீதே எனக்கு கோபம் வருவது புரியாத புதிராகியுள்ளது.

  “Always be nice to those younger than you, because they are the ones who will be writing about you.” என்ற கூற்றை அண்மையில் நான் என் பேஸ்புக் கணக்கில் சொன்னேன். பலரும் அதை விரும்புவதாகச் சொல்லி வாக்களித்தனர். மனிதம் மனங்களில் வாழ்கிறது என்ற திருப்தி எனக்கு.

  கோபத்தை அடக்கியாளும் பயிற்சிகள் கூட, இப்போது வர்த்தக ரீதியில் விற்கப்படும் சேவையாகி விட்டது பெருங் கொடுமை. இதனாலோவென்னவோ, இப்போதெல்லாம் கோபத்தை வரவழைக்க ஒவ்வொரு நாளும் ஆதாரங்கள் இலவசமாகவே கிடைத்து விடுகின்றன.

  கோபம் தணித்தல் என்பது சாத்தியம் தான். ஆனால், தணிக்கப்படக்கூடிய கோபங்கள் கூட இன்றளவில் எண்ணெய் ஊற்றப்பட்டு சூடேற்றப்படுவது கண்டு வியக்காமல் மட்டும் என்னால் இருக்க முடியாது.

  உங்கள் பதிவு, கண்மணியின் பார்வையில் கவிதை சொன்னது. சிறுவர்களிடமிருந்து நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இறைவா! நான் மீண்டும் சிறுவனாகிவிட வழி செய்வாயா? என்பது தான் இன்றைய ஒட்டு மொத்த மனிதர்களின் அவாவாக இருக்க வேண்டுமோ??

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 • 4. --புவனேஷ்--  |  6:43 முப இல் நவம்பர் 4, 2009

  நல்ல பாடம் தான் 🙂

 • 5. குந்தவை  |  12:27 பிப இல் நவம்பர் 4, 2009

  //“Always be nice to those younger than you, because they are the ones who will be writing about you.”

  I have to try this.

  //சிறுவர்களிடமிருந்து நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
  🙂

  நன்றி உதய தாரகை. வருகைக்கும் அழகான விரிவான கருத்துக்கும்.

 • 6. குந்தவை  |  12:29 பிப இல் நவம்பர் 4, 2009

  //நல்ல பாடம் தான்

  வாங்க தம்பி.

  கண்டிப்பா இன்னும் கொஞ்சம் பொறுமை வேணும் எனக்கு.

 • 7. saravanan kulandaiswamy.S  |  11:10 முப இல் நவம்பர் 6, 2009

  I am feeling very sorry for kunthavai. Lets stop advising to her… Paaavam.. vitruvompa ellarum…

  Kanmanikke kovam vara pogudhu avanga ammava ipdi nama advise panni tortour pandradha paartha…

 • 8. குந்தவை  |  12:21 பிப இல் நவம்பர் 6, 2009

  //I am feeling very sorry for kunthavai. Lets stop advising to her… Paaavam.. vitruvompa ellarum…

  Really!..

  ஆனா உலக மகா சோகத்துடனும், கண்ணீருடனும் கண்மணி சொன்னதை பார்த்து எனக்கு மனசு கஷ்டப்பட்டது உண்மை தான்.
  நானே இனிமேல் repeat பண்ணக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

  மேலும் நல்லவற்றை யார் வேணுமென்றாலும் சொல்லலாம். அதை நான் என்றுமே தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டேன் சரவணன்

  //Kanmanikke kovam vara pogudhu avanga ammava ipdi nama advise panni tortour pandradha paartha…

  இது கண்டிப்பாக நடக்கலாம். ஏம்மா இப்படி நாலு பேர் advise பண்ணுகிற மாதிரி நடந்துக்கிரீங்க என்று கோபம் வரலாம்.

 • 9. சேவியர்  |  5:38 முப இல் நவம்பர் 11, 2009

  சூப்பர். என் பொண்ணுக்கு ஒரு பழக்கம் உண்டு. அந்த நாள்ல யாரெல்லாம் அவளை எதுக்கெல்லாம் திட்டறாங்களோ, அதையெல்லாம் பிரேயர்ல சேத்துடுவா… 🙂

 • 10. குந்தவை  |  2:17 பிப இல் நவம்பர் 11, 2009

  //அவளை எதுக்கெல்லாம் திட்டறாங்களோ, அதையெல்லாம் பிரேயர்ல சேத்துடுவா…

  🙂

 • 11. Elango  |  5:48 முப இல் நவம்பர் 21, 2009

  Thanks jesus of Nazereth.
  thanks so much my elder brother .
  we are not deserve or worthy to follow you jesus because you are love and kindness you forgave so many wrongs of ours.
  Still we are not unable to get purpose of your die on cross for our sins including this angry.
  கண்மணியின் கண்ணில் கண்ணீரூம் , முகத்தில் கோபமும் கொப்பளிக்க, ” இயேசப்பா எனக்கு நல்ல அறிவை தந்திருக்காரு அதனாலத்தான் நான் நல்ல பிள்ளையா படிக்கிறேன், எழுதுறேன்(இப்பவெல்லாம் கண்மணி சமத்தா எழுதுறா) , உங்களிடம் தான் அது இல்லை அதனாலத்தான் நீங்க கோபப்படுறீங்க“

  see last two verse .This is actually said by HOLY SPIRIT Not from கண்மணி .Be watchful and careful in front of them about you.
  You know onething whenever i am getting anger regarding some persons or myself ,then i will surrender and submit myself in prayer presence of god and alter of god.because he has all authority in earth and heaven.He can able to solve any problems.
  And
  “Love is patient, love is kind. It does not envy, it does not boast, it is not proud. 5It is not rude, it is not self-seeking, it is not easily angered” (1 cor 13:4)
  Everyone should be LOVE so we must not get easily angered.
  Read First “Love is patient”.
  Be perfect as father is in heaven perfect
  because father is in perfect that he forgive our wrongs and be patient.
  “Blessed are the meek, for they will inherit the earth” (Mat 5:5)
  Please i insist you please read again and again this verse.i am doing same this.
  “Blessed are the merciful, for they will be shown mercy. ” (Mat 5:7)

  Thanks for your post
  your humble brother
  (Jesus died for sins and raised back to life for our life)

 • 12. d  |  9:42 முப இல் நவம்பர் 22, 2009

  🙂

 • 13. குந்தவை  |  11:54 முப இல் நவம்பர் 22, 2009

  Dear brother Elango,
  ரெம்ப நன்றிங்க.

 • 14. குந்தவை  |  11:56 முப இல் நவம்பர் 22, 2009

  வாங்க(டி). ரசித்தமைக்கு நன்றி .

 • 15. பிரியமுடன் பிரபு  |  3:03 பிப இல் திசெம்பர் 3, 2009

  ஹ ஹா
  தேவையா இது
  இரவு உறங்கும் முன்பு பல் விளக்குவது நல்லதுதானே???

 • 16. குந்தவை  |  8:58 முப இல் திசெம்பர் 4, 2009

  //இரவு உறங்கும் முன்பு பல் விளக்குவது நல்லதுதானே???

  நல்லது தான் தம்பி. ஆனால் நான் இன்னும் கொஞ்சம் பொறுமையாக சொல்லி புரியவைத்திருக்கவேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஒக்ரோபர் 2009
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: