ஒருவழியா திறந்துட்டாங்க….

நவம்பர் 8, 2009 at 9:34 முப 18 பின்னூட்டங்கள்

 அப்பாடி ஒரு வழியா கண்மணிக்கு ஸ்கூல் ஆரம்பிச்சிட்டாங்க. கண்மணிக்கே விடுமுறை பயங்கர போர் அடித்துவிட்டது, முகமெல்லாம் சிரிப்பாக கிளம்பிட்டாங்க.

IMG_0058

 நீண்ட விடுமுறைக்கு அப்புறம் பள்ளிக்கூடத்துக்கு கிளம்புறாங்களே என்று விடுப்பு சொல்லிவிட்டு நானும் கூடப்போனால்,

 “அம்மா நீங்க எதுக்கு என் கூட வர்றீங்க? நான் தனியா போயிக்குவேன்.” என்று கேள்வி கேட்கிறாங்க.
 
 “பாப்பா, முதல் நாளு இல்ல… அதான் ,அப்படியே  உங்க டீச்சரிடமும் பேசலாமே என்று தான்”

 “நான் ஒண்ணும் பாப்பா இல்ல. ” Big girl”. பெரிய அக்கவாயிட்டேன். இனிமே அக்கான்னு தான் கூப்பிடணும்” பயங்கர கண்டிப்புடன்.

 “ஓ…. சரி சுண்’டக்கா’ ”  

*************
  கண்மணி பள்ளிக்கூடத்துக்கு போயிற்று வீட்டுக்கு வந்தால் மணி ஒன்பதுதான் ஆகியிருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, எங்களுடைய கடிதம் (திருமணத்திற்க்கு முன்னால் எழுதியது)நியாபகம் வந்தது. முன்னாடியெல்லாம், என் வீட்டுகாரருடன் அடிக்கடி சண்டை போடுவேன்( வேறு பொழுதுபோக்கு?). அப்புறம் அவருக்கு ரெம்ப கோபம் வந்துவிட்டால் போதும், உடனே அந்த கடிதங்களை எடுத்து சத்தம் போட்டு வாசிக்க தொடங்கிவிடுவேன். (கல்யாணத்துக்கு முன்னாடி எழுதின கடிதம் எப்படி இருக்கும் என்று நான் தனியாக சொல்லவேண்டியதில்லை)

  ரெம்ப நாள் ஆகிவிட்டது… அந்த கடிதங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். எப்போதும் அவர் எழுதிய கடிதத்தை தான் வாசிப்பேன், இன்று நான் எழுதிய கடிதங்களையும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்தேன்.

  ஆனாலும் எனக்கு ரெம்பவே தைரியம் தான். என்னுடைய எல்லா கெட்ட பழக்கங்களையும் ஒரு கடிதத்தில் பட்டியல் போட்டு கொடுத்திருக்கிறேன். ம்… அன்று அந்த விஷயங்கள் எல்லாமே விளையாட்டாக இருந்தது , திருமணமானபிறகு அதெல்லாம் சீரியஸ்(!) விஷயமாகிவிட்டது. அப்படி நினைத்து கொண்டேனே தவிர… (இன்றும் அந்த கெட்ட பழக்கங்கள் எல்லாம் மாறாமல் அப்படியே தான் இருக்கின்றது).

   ரெம்ப நேரம் தனியாக சிரித்துகொண்டே இருந்தேன். என்ன தான் இமெயில், தொலைபேசி என்று வந்தாலும், கடிதங்களுக்கு இணையாகாது. நம்மையே புதுபித்துகொள்ள வைக்கும் சுவையான அனுபவம்

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா.

கோபப்படாதீங்க …..ப்ளீஸ்…. நளபாகமா?… பழிபாவமா?

18 பின்னூட்டங்கள் Add your own

 • 1. uma  |  8:27 பிப இல் நவம்பர் 10, 2009

  Hi Kunthavai,
  Kanmani is so pretty.My best wishes for her at new school year.

 • 2. சேவியர்  |  5:37 முப இல் நவம்பர் 11, 2009

  ஹா..ஹா…. ரொம்பவே ரசிக்க வைக்கறீங்க….ஹாயா உக்காந்து அரட்டையடிக்கற மாதிரி சுவாரஸ்யம் உங்கள் தளம் 😀

 • 3. kapilashiwaa  |  7:39 முப இல் நவம்பர் 11, 2009

  // ரெம்ப நேரம் தனியாக சிரித்துகொண்டே இருந்தேன். என்ன தான் இமெயில், தொலைபேசி என்று வந்தாலும், கடிதங்களுக்கு இணையாகாது. நம்மையே புதுபித்துகொள்ள வைக்கும் சுவையான அனுபவம்//

  ரொம்ப ரொம்ப சரி குந்தவை. எனக்கும் கடிதங்கள் படிக்க ரொம்ப பிடிக்கும். அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி எழுதினத இப்ப படிக்கறப்ப கொஞ்சம் அசடுமாதிரித்…சரி சரி அது எதுக்கு இப்பொ..

  //நீண்ட விடுமுறைக்கு அப்புறம் பள்ளிக்கூடத்துக்கு கிளம்புறாங்களே என்று விடுப்பு சொல்லிவிட்டு நானும் கூடப்போனால்//

  எப்படி இருக்கீங்கன்னு கேட்காமலே எனக்கு தெரியுது. எப்படியா? அனுபவம்பா.. அனுபவம். என் பையனை லீவ்ல சமாளிக்கற சமயம் இருக்கே.. அது ஒரு மகாயுத்தம்.. ஆனாலும் அதுவும் சந்தோசம்தான் இல்ல.

 • 4. குந்தவை  |  2:13 பிப இல் நவம்பர் 11, 2009

  வாங்க உமா. ரெம்ப நன்றி. கண்டிப்பா உங்கள் வாழ்த்துக்களை சொல்லிவிடுகி்றேன்

 • 5. குந்தவை  |  2:16 பிப இல் நவம்பர் 11, 2009

  //ஹா..ஹா…. ரொம்பவே ரசிக்க வைக்கறீங்க….ஹாயா உக்காந்து அரட்டையடிக்கற மாதிரி சுவாரஸ்யம் உங்கள் தளம்

  வாங்கண்ணா,ரெம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க. தெரிஞ்சத தானே பண்ணமுடியும்.
  ரசித்தமைக்கு நன்றி.

 • 6. குந்தவை  |  2:24 பிப இல் நவம்பர் 11, 2009

  வாங்க கபில். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  //அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி எழுதினத இப்ப படிக்கறப்ப கொஞ்சம் அசடுமாதிரித்

  அந்த ‘மாதிரி’ வேண்டாம் போல தோன்றுதே . 🙂

  //அனுபவம்பா.. அனுபவம். என் பையனை லீவ்ல சமாளிக்கற சமயம் இருக்கே.. அது ஒரு மகாயுத்தம்..

  ஹா…ஹ…ஹா…

  //ஆனாலும் அதுவும் சந்தோசம்தான் இல்ல.

  கண்டிப்பா…

 • 7. அடலேறு  |  7:43 முப இல் நவம்பர் 12, 2009

  சேரனின் பொக்கிஷம் பார்த்த பாதிப்போ 😉

 • 8. குந்தவை  |  12:49 பிப இல் நவம்பர் 12, 2009

  //சேரனின் பொக்கிஷம் பார்த்த பாதிப்போ 😉

  haa..ha..
  But…. still I didn’t see the film.

 • 9. soundr  |  8:10 பிப இல் நவம்பர் 13, 2009

  //என்ன தான் இமெயில், தொலைபேசி என்று வந்தாலும், கடிதங்களுக்கு இணையாகாது.//
  உண்மை தான்.

  கடிதம், email – ‍ photo மாதிரி,
  தொலைபேசி – live telecast மாதிரி.

  இதில் கடிதம், நெகடிவ் டெவலப் செய்து கிடைக்கும் போட்டோ போல.
  அதை எழுதி, அனுப்பி, கையில் கிடைக்கும் வரை ஒரு எதிர்பார்ப்பு, பரபரப்பு, உற்சாகம் continue ஆகும்.
  இப்ப email அனுப்பினா, அடுத்த நிமிஷம் result. No thrill.

  கடிதத்தில இருக்கும் அந்த கையெழுத்தில் ஒரு personnal touch இழையோடும்.
  அதை, உணரத்தான் முடியும்.
  விவரிக்க இயலாது,

 • 10. குந்தவை  |  4:59 முப இல் நவம்பர் 14, 2009

  //கடிதத்தில இருக்கும் அந்த கையெழுத்தில் ஒரு personnal touch இழையோடும்.
  அதை, உணரத்தான் முடியும்.
  விவரிக்க இயலாது,

  கண்டிப்பா…

 • 11. Bhuvanesh  |  9:06 முப இல் நவம்பர் 14, 2009

  //கடிதத்தில இருக்கும் அந்த கையெழுத்தில் ஒரு personnal touch இழையோடும்.
  அதை, உணரத்தான் முடியும்.
  விவரிக்க இயலாது,//

  அட போங்க.. என் கை எழுத்தை எல்லாம் பாத்தா பொண்ணு துக்குல தொங்கிரும் !

 • 12. குந்தவை  |  10:17 முப இல் நவம்பர் 14, 2009

  //அட போங்க.. என் கை எழுத்தை எல்லாம் பாத்தா பொண்ணு துக்குல தொங்கிரும் !

  அப்படியெல்லாம் நடக்காது கவலைப்படாதீங்க. சும்மா எழுதுங்க. உங்களையே ஏத்துக்குற அளவுக்கு தைரியம் உள்ள பொண்ணுக்கு உங்க கையெழுத்தை தாங்கிக்கவா தைரியம் இருக்காது.

 • 13. Vijay  |  5:37 முப இல் நவம்பர் 16, 2009

  நான் ஏற்கனவே இந்தப் புகைப் படத்தைப் பார்த்துட்டேன் 🙂

 • 14. குந்தவை  |  11:19 முப இல் நவம்பர் 16, 2009

  //நான் ஏற்கனவே இந்தப் புகைப் படத்தைப் பார்த்துட்டேன்

  Thank U

 • 15. பிரியமுடன் பிரபு  |  2:54 பிப இல் திசெம்பர் 3, 2009

  ///
  ஆனாலும் எனக்கு ரெம்பவே தைரியம் தான். என்னுடைய எல்லா கெட்ட பழக்கங்களையும் ஒரு கடிதத்தில் பட்டியல் போட்டு கொடுத்திருக்கிறேன். ம்
  ///

  சொல்லவே இல்ல???!?!?!?

 • 16. divyahari  |  12:36 பிப இல் திசெம்பர் 18, 2009

  how is “sund”akka?
  நான் புதுசா எழுத வந்திருக்கேன்.. என் பதிவ பார்த்துட்டு எனக்கு பின்னூட்டமிட்டால் மகிழ்வேன்.. http://everythingforhari.blogspot.com/2009/12/blog-post.html

 • 17. குந்தவை  |  6:13 பிப இல் திசெம்பர் 18, 2009

  I didn’t understand ur question.

  //நான் புதுசா எழுத வந்திருக்கேன்.. என் பதிவ பார்த்துட்டு எனக்கு பின்னூட்டமிட்டால் மகிழ்வேன்.

  sure.

 • 18. குந்தவை  |  6:32 பிப இல் திசெம்பர் 18, 2009

  Sorry …

  Kanmani (sundakka) is fine.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
நவம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
« அக்   டிசம்பர் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: