நளபாகமா?… பழிபாவமா?

நவம்பர் 12, 2009 at 2:18 பிப 19 பின்னூட்டங்கள்

                 இத்தனை வருஷம் ஆனப்பிறகும் நான் சாப்பிட கூப்பிட்டால் போதும் ஏதோ அனக்கோண்டாவுடன் விருந்திர்க்கு அழைப்புவிடுக்கிற மாதிரி என் வீட்டுக்காரர் ரெம்பவே பயப்படுவார். எல்லாம் என் சமையலை நினைத்து தான்.

                அதுக்காக எனக்கு சமையலே தெரியாது என்று நினைத்து விடாதீங்க. என் அம்மாவும் டீச்சராக இருந்ததால், நான் சிறு வயதிலேயே , அம்மாவுக்கு சிறு சிறு வேலைகள் செய்துகொடுப்பேன். அப்புறம்… எட்டாம் வகுப்பு படிக்கும் போதே, பொரியல், அவியல் என்று சின்ன சின்ன சமையலையும் செய்வேன். அப்புறம் அடையாறில் வேலை பார்க்கும் போது ஓரளவுக்கு சமையலையும் செய்திருக்கிறேன். இவ்வளவு முன் அனுபவம் இருக்கும் போது திருமணம் ஆன பிறகு எவ்வளவு முன்னேறியிருக்கவேண்டும்.

                       ஆனா பாருங்க ஒரு முன்னேற்றமும் கிடையாது. என்னுடைய தோழிகள் எல்லாருமே வாயில் நுழைவதற்க்கே கஷ்டப்படும் (பதார்த்தங்களை அல்ல)பெயருடைய அறுசுவை பதார்த்தங்களை எல்லாம் அசால்ட்டா செய்து அசத்தும் போது … நான் மாத்திரம் அதே சாம்பார், பருப்பு, பொரியல் என்று அல்லாடும்போது ரெம்பவே அவஸ்த்தையாக இருக்கும்(அது கூட அப்பப்ப காலைவாரிவிடும்).

                     முயற்ச்சி பண்ணுவது தானே என்று நீங்கள் எண்ணலாம். முயற்ச்சிபண்ணினேனே. நான் முதலில் ஒரு ஜவ்வரிசி வடை செய்து , அந்த அனுபவத்தை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதுபோல் சுசியம் செய்ய ஆரம்பித்து பொங்கலாகி… பின் பாயாசம் ஆனாது,   கேக் செய்ய ஆரம்பித்து பிஸ்கட் செய்தது, பிரியாணி செய்ய ஆரம்பித்து வெஜிட்டபிள் பொங்கலாய் முடித்தது என்று … ஏகப்பட்ட அழிச்சாட்டியம் பண்ணி என் வீட்டுக்காரரை எலியாக்கி கிலியை அதிகப்படுத்தியதுதான் மிச்சம்.

              அதை விட கொடுமை என்னவென்றால் என் தோழி(?) என் புலம்பலை கேட்டு விட்டு “எதுக்கு இப்படி கவலைபடுறீங்க… எவ்வளவு நல்லா சாம்பார் வைக்கிறீங்க… ஆம்லெட் போடுறீங்க… கடலை வறுக்குறீங்க…  சுடு தண்ணி வைக்கிறீங்க….” என்று ஆறுதல் சொல்லுறாங்க. என்னுடைய reaction னை பார்த்துவிட்டு “he .. he… நல்லப் பண்ணுறதை தானே சொல்லமுடியும்” என்று சிரிப்பு வேற.

              எனக்கு மாத்திரம் ஏன் இப்படி நடக்குது(அதுவும் திருமணமான பிறகு) என்று நிறைய நாள் , கிச்சன் எல்லைக்கே சென்று யோசித்துபார்த்தும்…. பதில் இல்லை. இப்படியே விட்டால் என்னாகிறது என்று கொஞ்சம் தீவிரமாக விசாரித்ததில் , அவங்க வீட்டில் கிடைத்த தகவல் இது.

சிறிய கொசுவர்த்தி.

******************

“அம்மா இதென்ன புதுசா செய்திருக்கீங்க”

“ஆமாப்பா உனக்கு பிடிக்குமேன்னு காலிப்ளவர் பஜ்ஜி செய்தேன் பிடிச்சிருக்கா”

“ம்…. ஆனா கொஞ்சம் காராம் அதிகமோன்னு தோணுது”

” உனக்கு காரமே பிடிக்காது என்று நான் காரமே போடல. அப்புறம் எப்படிடா காரம் வரும்” அம்மா காரமாக கேட்க ….

அதற்கு பதிலே இல்லை .

 —–

 “உனக்கு பிடிக்குமேன்னு நார்த்தைங்கா ஊருகாய் பண்ணினேன், சாப்பிட்டு பாரேன்”

 சாப்பிட்டு பார்த்துவிட்டு, “ம்… கொஞ்சம் சீரகம் அதிகமாயிருக்குமோ”

 “சீரகம் எப்படி இருக்கும் என்றாவது உனக்கு தெரியுமாப்பா” என்று நொந்து போய் கேட்க

 , “he….he….” என்ற சிரிப்பு தான் பதில்

. —–

           இப்படி ஏதாவது ஒரு குறையை கண்டிப்பாக சொல்லவேண்டும் என்ற தீவிரமான கொள்கையால் , ரெம்பவே டென்ஷனான அம்மா ஒரு நாள்,

       “டேய் (அம்மா கூப்பிட்டாங்க, நான் கூப்பிடுவேனா?) உனக்கு சமையலே வராத பொண்ணு தான் வந்து வாய்க்கபோறா பாரு” என்று சாபம் கொடுத்துவிட்டார்.

 ****************************

              அந்த வரத்தை வாங்கியவர் வேறு யாருமில்லை என் வீட்டுக்காரர் தான் என்று நீங்கள் சரியாக கணித்திருப்பீர்கள். இப்படியெல்லாம் வரம் வாங்கி… எனக்கு தெரிந்த சமையலைகூட என்னிடமிருந்து விரட்டிய புண்ணியம் பண்ணிவிட்டு , என்னிடம் அறுசுவை சமையலை எப்படி எதிர்பார்க்கலாம் ? நீங்களே சொல்லுங்க.

                  அதனால அம்மா சமையலை சும்மா சும்மா கேலி பண்ணாம ஒழுங்கா சாப்பிடீங்கன்னா, நளபாகம் செய்கிற நல்ல மனைவி கிடைப்பாங்க இல்லாட்டி…. என்னை மாதிரி அப்பாவி பொண்ணுங்களை இம்சை பண்ணுகிற பழி பாவம் தான் கிடைக்கும். உஷாரா இருந்துக்கோங்க..

Advertisements

Entry filed under: அனுபவம்.

ஒருவழியா திறந்துட்டாங்க…. பிறந்த நாள் – 4.

19 பின்னூட்டங்கள் Add your own

 • 1. uma  |  3:56 பிப இல் நவம்பர் 13, 2009

  Hi Kunthavai,
  very nice.

 • 2. குந்தவை  |  7:35 பிப இல் நவம்பர் 13, 2009

  Thanku Uma

 • 3. soundr  |  7:45 பிப இல் நவம்பர் 13, 2009

  “நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க. ஆனா,
  என்னைய மட்டும் எப்படியாச்சும் காப்பாத்துங்க”ன்னு
  கதறுரது Aathavan Banerjee மட்டும் கிடையாதுன்னு
  நல்லா புரியுது.

  //…அம்மா சமையலை சும்மா சும்மா கேலி பண்ணாம ஒழுங்கா சாப்பிடீங்கன்னா, நளபாகம் செய்கிற நல்ல மனைவி கிடைப்பாங்க….//
  அப்ப கண்மணி கேலி பண்ணலாம், இல்ல ??????

  //சிறிய கொசுவர்த்தி.//
  அட!

 • 4. குந்தவை  |  4:57 முப இல் நவம்பர் 14, 2009

  //அப்ப கண்மணி கேலி பண்ணலாம், இல்ல ??????

  நான் கேலி பண்ணியதே கிடையாது. இப்ப பாருங்க நான் சமைக்கிறதை அப்படியே சாப்பிடுகிற ஆள் வந்து மாட்டல. கேலிபண்ணாமல் இருந்தால் அப்படி ஏதாவது advantage இருக்கலாம்.

 • 5. Bhuvanesh  |  9:10 முப இல் நவம்பர் 14, 2009

  உங்க மேல கோவப்பட முடியுமா? என்ன இருந்தாலும் மாமியாரகிட்டீங்க!! ( ஆமா நான் எதுக்கு கோவப்படனும்? அது தான் புரியல.. கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்ணுங்களேன்!)

 • 6. குந்தவை  |  10:21 முப இல் நவம்பர் 14, 2009

  //ஆமா நான் எதுக்கு கோவப்படனும்? அது தான் புரியல..

  சும்மா லோட லொடன்னு பேசுகிற தம்பி, அமைதியா உக்கார்ந்து இருக்கிறத பாத்து எனக்கா ஒரு சந்தேகம். அம்புட்டு தான்.

  //உங்க மேல கோவப்பட முடியுமா? என்ன இருந்தாலும் மாமியாரகிட்டீங்க!!
  அடப்பாவி.

 • 7. soundr  |  8:52 முப இல் நவம்பர் 16, 2009

  இந்த
  mega mall மாதிரி
  இல்லன்னாலும் ஒரு
  பங்க் கட rangeக்காவது வரணும்ன்னு
  நான்,
  ஒரு முட்டு சந்து ஓரமா
  புதுசா கட விரிச்சிருக்கேன்.

  http://vaarththai.wordpress.com/

  அப்டியே
  அந்தான்ட…இந்தான்ட‌
  போறசொல‌
  நம்ம கடையான்ட வந்து
  எட்டி பாருங்கோ… Senior

 • 8. குந்தவை  |  11:22 முப இல் நவம்பர் 16, 2009

  கண்டிப்பா .. ரெம்ப சந்தோஷம்.

  //இந்த
  mega mall மாதிரி
  இல்லன்னாலும்

  என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.

 • 9. soundr  |  7:50 முப இல் நவம்பர் 18, 2009

  //என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே//
  என்ன senior,
  இந்த பச்ச மண்ணப்பாத்து என்ன வார்த்த சொல்லிட்டீங்க..
  http://vaarththai.wordpress.com

 • 10. உதய தாரகை  |  11:21 முப இல் நவம்பர் 20, 2009

  அட சமையலுக்கு கமண்ட் அடிக்கிறத்திலேயேயும் இப்படியொரு பிலாஸபி இருக்குதுங்களா?? சபா.. ரெம்பவே அலர்டாதான் இருக்கனும் போல..

  // “he .. he… நல்லப் பண்ணுறதை தானே சொல்லமுடியும்” என்று சிரிப்பு வேற.//

  ரிப்பீட்டு… 😀

  சமையல் பற்றிய வாழ்க்கைப் பாடம் அழகு. தொடர்ந்தும் அசத்துங்க..

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 • 11. குந்தவை  |  11:51 முப இல் நவம்பர் 22, 2009

  //ரெம்பவே அலர்டாதான் இருக்கனும் போல..
  கண்டிப்பா…

  //ரிப்பீட்டு…
  ஆங்…. இதெல்லாம் ரெம்ப அநியாயம். 😦

  //சமையல் பற்றிய வாழ்க்கைப் பாடம் அழகு.
  Thanks. 🙂

 • 12. பிரியமுடன் பிரபு  |  2:34 பிப இல் திசெம்பர் 3, 2009

  ///
  ஏதோ அனக்கோண்டாவுடன் விருந்திர்க்கு அழைப்புவிடுக்கிற மாதிரி என் வீட்டுக்காரர் ரெம்பவே பயப்படுவார்////

  எல்லா,ம் அனுபவ பாடம்

 • 13. பிரியமுடன் பிரபு  |  2:35 பிப இல் திசெம்பர் 3, 2009

  ///
  அது கூட அப்பப்ப காலைவாரிவிடும்).
  ///
  ஹ ஹா

 • 14. பிரியமுடன் பிரபு  |  2:38 பிப இல் திசெம்பர் 3, 2009

  ///
  அந்த வரத்தை வாங்கியவர் வேறு யாருமில்லை என் வீட்டுக்காரர் தான் என்று நீங்கள் சரியாக கணித்திருப்பீர்கள். இப்படியெல்லாம் வரம் வாங்கி… எனக்கு தெரிந்த சமையலைகூட என்னிடமிருந்து விரட்டிய புண்ணியம் பண்ணிவிட்டு , என்னிடம் அறுசுவை சமையலை எப்படி எதிர்பார்க்கலாம் ? நீங்களே சொல்லுங்க.
  ///

  எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு

 • 15. குந்தவை  |  8:54 முப இல் திசெம்பர் 4, 2009

  //எல்லா,ம் அனுபவ பாடம்

  thampi……………. you are not supposed to tease me.

 • 16. குந்தவை  |  8:55 முப இல் திசெம்பர் 4, 2009

  //ஹ ஹா

  என்ன சிரிப்பு இங்க……

 • 17. குந்தவை  |  8:56 முப இல் திசெம்பர் 4, 2009

  //எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு
  😦

 • 18. selvi  |  7:57 பிப இல் மே 28, 2010

  அடையாரில் உன் சமையலை மிஸ் பண்ணிவிட்டேன். :௦ 🙂

 • 19. குந்தவை  |  1:49 முப இல் மே 29, 2010

  ஏதோ…. உன்னுடைய நல்ல காலம்….
  திடீரென்று உன்னுடைய கமென்ட்டை பார்த்ததும் ரெம்ப சந்தோஷமாக இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
நவம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
« அக்   டிசம்பர் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: