குழந்தை அம்மா….

திசெம்பர் 17, 2009 at 8:55 முப 38 பின்னூட்டங்கள்

அம்மா… உலகத்திலே மிகவும் அற்புதமான வார்த்தை. தினம் தினம் அம்மாவின் நினைவு வந்து என்னை ஆக்கிரமித்தாலும்…. இன்று ஏனோ ரெம்பவே மனது அலைபாய்கிறது.

   “அம்மா உங்களுக்கு தான் சுகர் ஆச்சே, அதனால எங்களுக்கும் பலாப்பழம் வேண்டாம்.”

” எனக்காக எல்லாம் நீங்க விரதம் இருக்காண்டாம்”, அப்பாவை பார்த்து ,” நம்ம தோப்பில்லுள்ள பலா மரத்தில் ஒரு பலா நல்ல வெளஞ்சி இருக்காம். இந்த பிள்ளைங்க இப்படி தான் சொல்லுவாங்க, நீங்க பறிச்சிட்டு வாங்க”

என்று பலாப்பழத்தை வீட்டுக்கு வரவழைத்து, இரண்டு நாட்களில் பழுப்பதை, சமையம் கிடைக்கும் போதெல்லாம் அதை அமுக்கி… அமுக்கியே…. ஒரே நாளில் பழுக்க வைத்து, முதல் ஆளாக கையெல்லாம் தேங்காய் எண்ணை தடவி…. வெட்டி…., “நல்லாயிருக்கா” என்று ருசிபார்த்து….. ருசிபார்த்து….. பாதி பழத்தை குழந்தை போல் ஆசையாக அபேஸ்பண்ணும் அம்மா….

         வெயிற்காலங்களில், வயலில் உளுந்தும் ஊடு பயிறாக எள்ளும் போடுவார்கள். எள்ளு உடம்புக்கு ரெம்ப நல்லது என்று பாடம் நடத்தும் போதே எங்களுக்கு புரிந்து விடும். அதை இடித்து சாப்பிட்டால் தான் ருசி என்று ஆரம்பித்துவிடுவார்கள். முறைத்து கொண்டு இடிக்க ஆரம்பிப்பேன்.

        பக்கத்தில் ஒரு குட்டி பலகையை போட்டு அருகில் அடக்க ஒடுக்கமாக உட்காந்து கொள்வார்கள். அது இடிபட்டு எண்ணை வெளிவர ஆரம்பிக்கும் போது தேங்காய் சேர்த்து, சிறிது நேரம் களித்து கருப்பட்டி சேர்ப்பார்கள். அதுவரை பவ்வியமாக இருப்பவர்கள், அப்புறம்

 ” நிப்பாட்டு…. கருப்பட்டி சரியாண்ணு பாக்கிறேன்”,

 ” நல்ல இடிபட்டிருக்காண்ணு பாக்கிறேன்”

 என்று தொடர்ந்து ஏதாவது காரணத்தை சொல்லி டேஸ்ட் பண்ணி….. டேஸ்ட் பண்ணி…… ஒரு வழியா இடித்து முடிப்பதற்குள்…. பாதி எள்ளு காணாமல் போயிருக்கும். “அம்மா…..” என்று நாம் கோபப்படும் முன்னே குழந்தை போல் ஒரே சிரிப்பில் அதையும் காணடித்து விடுவார்கள்.

               மாம்பழ சீசனில் கேட்கவே வேண்டாம்…. பெரிய பையை தூக்கி கொண்டு சந்தைக்கு கிளம்பும் போதே,

 “அம்மா ரெம்ப வாங்க வேண்டாம்” என்போம்.

“நான் காய் தான் வாங்கப்போறேன். பழம் ரெம்ப நல்லாயிருந்துச்சுன்னா கொஞ்சூண்டு வாங்குவேன்…அதுவும் உங்களுக்குத்தான்” என்று பயங்கர பில்டப் கொடுப்பார்கள்.

                       வந்தப்பின் பையை பார்த்தால் மருந்துக்கு கூட காய் இருக்காது. சின்ன பாப்பா போல் முகத்தை வைத்து கொண்டு “பழம் ரெம்ப நல்லாயிருந்துச்சா…. இனிமேல் இப்படி கிடைக்குமோ என்னமோ என்று வாங்கிவிட்டேன்” என்று சொல்பவர்களிடம் எப்படி கோபப்படுவது.

 

                    பொதுவாக, எல்லாவற்றையும் பத்திரமாக வைப்பாங்க எங்கம்மா, ஆனா தினமும் பள்ளிக்கூடம் கிளம்பும் போது வைத்த இடத்தை தவறாமல் மறந்துவிடுவார்கள். அப்புறம் என்ன “அம்மா தினம் தினம் உங்க திங்ஸ தேடி தேடியே… எங்க பாதி வாழ் நாளும் வீணா போகுதம்மா” என்று அலுத்து கொண்டாலும்…. அவங்கள நேரத்துக்கு அனுப்பிவிடுறதுக்குள்ள…..

 அம்மா… எனக்கு உன்னை பார்க்கவேண்டும் போல் இருக்கிறதே….ப்ளீஸ் எனக்கு குழந்தையாக பிறந்து வாயேன்……

Advertisements

Entry filed under: ரசித்தவை.

பிறந்த நாள் – 4. கவித… கவிதன்னு… சொல்லமாட்டேன்.

38 பின்னூட்டங்கள் Add your own

 • 1. பிரியமுடன் பிரபு  |  10:43 முப இல் திசெம்பர் 17, 2009

  அம்மா… எனக்கு உன்னை பார்க்கவேண்டும் போல் இருக்கிறதே….ப்ளீஸ் எனக்கு குழந்தையாக பிறந்து வாயேன்……\/.///\\

  எலோருக்கும் உள்ள ஏக்கம்

 • 2. பிரியமுடன் பிரபு  |  10:45 முப இல் திசெம்பர் 17, 2009

  நான் தான் முதல் ஆள்\
  நான் தான் முதல் ஆள்
  நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்நான் தான் முதல் ஆள்

 • 3. குந்தவை  |  11:13 முப இல் திசெம்பர் 17, 2009

  //எலோருக்கும் உள்ள ஏக்கம்

  வாங்க தம்பி. ம்…..

 • 4. குந்தவை  |  11:14 முப இல் திசெம்பர் 17, 2009

  /நான் தான் முதல் ஆள்\
  🙂

  முடியல…..

 • 5. kanagu  |  4:39 பிப இல் திசெம்பர் 17, 2009

  romba nalla irunduthunga… 🙂 🙂

  /*அம்மா… எனக்கு உன்னை பார்க்கவேண்டும் போல் இருக்கிறதே….ப்ளீஸ் எனக்கு குழந்தையாக பிறந்து வாயேன்*/

  🙂 🙂

 • 6. uma  |  4:50 பிப இல் திசெம்பர் 17, 2009

  HI KUNTHAVAI,
  NICE UPDATE.

 • 7. குந்தவை  |  2:44 முப இல் திசெம்பர் 18, 2009

  //romba nalla irunduthunga… 🙂 🙂

  Thanks Kanagu.

 • 8. குந்தவை  |  2:44 முப இல் திசெம்பர் 18, 2009

  //HI KUNTHAVAI,
  NICE UPDATE.

  Thank U Uma.

 • 9. soundr  |  4:56 முப இல் திசெம்பர் 18, 2009

  சேட்டக்கார பொண்ணு…
  சேட்டகார அம்மா….
  உங்க அப்பாவ நினச்சாதான்
  ஒரே பீளிங்ஸா இருக்கு

 • 10. Merlin Ajith  |  7:56 முப இல் திசெம்பர் 18, 2009

  very nice…..reminds my mother…..

 • 11. குந்தவை  |  9:02 முப இல் திசெம்பர் 18, 2009

  இப்படி எல்லாம் தப்பா நினைச்சிடாதிங்க. ரெம்ப கண்டிப்பு எங்கம்மா.

 • 12. குந்தவை  |  9:03 முப இல் திசெம்பர் 18, 2009

  Thank U Merlin.

 • 13. divyahari  |  12:13 பிப இல் திசெம்பர் 18, 2009

  இதே போல்தான் நான், என் அப்பாக்காக வேண்டிகிட்டு இருக்கேன்.
  இருக்கும்போது அலட்சிய படுத்துறோம்..
  இல்லாதபோது தான் தெரிகிறது அவர்களின் அருமை..
  i love u appa..

 • 14. குந்தவை  |  6:12 பிப இல் திசெம்பர் 18, 2009

  //i love u appa..

  🙂

 • 15. karisalkaran  |  11:22 முப இல் திசெம்பர் 21, 2009

  அம்மாவின் குறும்புக‌ள் நல்லாருக்கு

  ஆனா குழ‌ந்தை அவ்ளோ ச‌ம‌ர்த்தா ? ந‌ம்ப‌ முடிய‌ல‌

 • 16. குந்தவை  |  11:56 முப இல் திசெம்பர் 21, 2009

  //அம்மாவின் குறும்புக‌ள் நல்லாருக்கு
  வாங்க . ரசித்தமைக்கு நன்றி.

  //ஆனா குழ‌ந்தை அவ்ளோ ச‌ம‌ர்த்தா ? ந‌ம்ப‌ முடிய‌ல‌
  என்னங்க சமர்த்தா பண்ணிடிச்சி நம்ப முடியாம இருப்பதற்கு?

 • 17. nanrasitha  |  9:28 முப இல் திசெம்பர் 22, 2009

  மொத்ததுல நல்ல அம்மா நல்ல பொண்ணு

 • 18. குந்தவை  |  11:48 முப இல் திசெம்பர் 22, 2009

  //மொத்ததுல நல்ல அம்மா நல்ல பொண்ணு

  வாங்க செந்தில் சார்.
  நல்ல அம்மா… ஆனா நான் நல்ல பொண்ணு கிடையாதுங்க.

 • 19. --புவனேஷ்--  |  8:35 முப இல் திசெம்பர் 23, 2009

  ரொம்ப டச்சிங் அக்கா..!!

 • 20. குந்தவை  |  9:42 முப இல் திசெம்பர் 23, 2009

  //ரொம்ப டச்சிங் அக்கா..!!

  Thank U Bhuvanesh.

 • 21. Jeno  |  12:07 பிப இல் திசெம்பர் 24, 2009

  romba pullarika vaichiteengalae,
  seekiram amma pirakattum.

 • 22. வித்யாசாகர்  |  12:43 பிப இல் திசெம்பர் 24, 2009

  அம்மா… உலகத்திலே மிகவும் அற்புதமான வார்த்தை.

  அருமையான வரி அமைத்துள்ளீர்கள்.

  ஒரு சின்ன வரியில் உலகமே சூழ்ந்துக் கொண்டதாய் காண்கிறேன்.

  ஒரு தாய்மை என் வலைக்கு வாசிக்க வந்ததில் பெருமை கொள்கிறேன்.

  மிக்க நன்றி!

 • 23. குந்தவை  |  4:52 முப இல் திசெம்பர் 25, 2009

  Thank u Jeno.

 • 24. குந்தவை  |  4:53 முப இல் திசெம்பர் 25, 2009

  Thank U Vidhyasaagar.

 • 25. manthiran  |  11:34 முப இல் திசெம்பர் 30, 2009

  உணர்வுகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பதில் நீங்கள் பெரிய ஆள் .
  ரசித்தேன்..
  தாய், எல்லாருக்கும் வாய்ப்பதில்லை ..
  தாய்மை , எல்லாருக்கும் புரிவதில்லை

 • 26. குந்தவை  |  6:38 பிப இல் திசெம்பர் 30, 2009

  //ரசித்தேன்..
  தாய், எல்லாருக்கும் வாய்ப்பதில்லை ..
  தாய்மை , எல்லாருக்கும் புரிவதில்லை//

  நன்றி.

 • 27. நிஜமா நல்லவன்  |  11:53 முப இல் ஜனவரி 2, 2010

  Nice post!

 • 28. குந்தவை  |  4:14 பிப இல் ஜனவரி 3, 2010

  //Nice post!

  Thank U

 • 29. selvi  |  7:52 பிப இல் மே 28, 2010

  அன்பான அம்மா எல்லோருக்கும் அமைவதில்லை!
  அதை அறிவதும் எல்லோராலும் முடிவதில்லை!

 • 30. குந்தவை  |  1:47 முப இல் மே 29, 2010

  பலர்… ரெம்ப லேட்டா தான் இதை உணர்கிறார்கள்.

 • 31. priya.r  |  6:42 பிப இல் ஜூன் 11, 2010

  இதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக அவர்களின் அம்மாவை பற்றி நினைவு வரும் .,

  படிக்கும் பொழுது மனதில் வருத்தம் ;கண்களில் கண்ணீர்

  எனக்கும் நான் அப்பா செல்லம் என்று அம்மாவை வைத்து கொண்டே சொன்ன தற்கு
  அம்மாவிடம் மன்னிப்பு கேட்க தோன்றுகிறது குந்தவை .

 • 32. குந்தவை  |  9:10 முப இல் ஜூன் 13, 2010

  //படிக்கும் பொழுது மனதில் வருத்தம் ;கண்களில் கண்ணீர்

  😦

 • 33. priya.r  |  5:55 முப இல் ஜூன் 14, 2010

  சாரி சாரி உங்களுக்கு ஆறுதல் சொல்லாமல் உங்களின் வருத்தத்தை அதிக படுத்தி விட்டேன் போல இருக்கிறது .

  உங்கள் கனவுகள் நனவாக எனது வாழ்த்துக்கள்.

  சரி குந்தவை ! எனக்கு ஒரு சின்ன சந்தேகம்!
  அடுத்து உங்களுக்கு அம்மா வேணுமா ! இல்லை அப்பா வேணுமா !!

 • 34. குந்தவை  |  6:29 முப இல் ஜூன் 14, 2010

  //உங்கள் கனவுகள் நனவாக எனது வாழ்த்துக்கள்.

  Thank You.

  //அடுத்து உங்களுக்கு அம்மா வேணுமா ! இல்லை அப்பா வேணுமா !!

  ha…ha…. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல?

 • 35. priya.r  |  8:44 முப இல் ஜூன் 14, 2010

  இல்லைப்பா! ஏற்கனவே ஆசைக்கு ஒண்ணு கண்மணி இருக்காங்க !
  அடுத்து ஆஸ்திக்கு ஒண்ணு வேண்டாமா!!

  பின் குறிப்பு : இதை சாக்கு வைத்தாவது குவைத் சுத்தி பார்கறதுக்கு permission கேட்டு பார்க்கலாம் யென்று தான் !
  வந்து செல்லும் செலவு ,தங்கும் செலவு மட்டும் நீங்க பார்த்துகுங்க !
  மத்த செலவு எல்லாத்தையும் நாங்களே பார்த்துக்குறோம் குந்தவை !

 • 36. குந்தவை  |  8:54 முப இல் ஜூன் 14, 2010

  //ஏற்கனவே ஆசைக்கு ஒண்ணு கண்மணி இருக்காங்க !
  அடுத்து ஆஸ்திக்கு ஒண்ணு வேண்டாமா!!

  இதெல்லாம் அந்த காலம். இப்ப யாராவது கிடைப்பதே பெரிய விஷயம்.

  //வந்து செல்லும் செலவு ,தங்கும் செலவு மட்டும் நீங்க பார்த்துகுங்க !
  மத்த செலவு எல்லாத்தையும் நாங்களே பார்த்துக்குறோம் குந்தவை !

  ஆகா… எம்மாம் பெரிய மனசுப்பா….

 • 37. priya.r  |  9:01 முப இல் ஜூன் 14, 2010

  //வெயிற்காலங்களில், வயலில் உளுந்தும் ஊடு பயிறாக எள்ளும் போடுவார்கள்//

  முதல்லையே கேட்கணும் யென்று நினைத்தேன் !!

  எப்படி தோட்ட வேலைகள் உங்களுக்கு இவ்வளோ அதிகமா தெரிந்து வைத்து இருக்கிங்க !
  ஒரு குந்தவைக்குள்ள எத்தனை திறமைகள் !! multiple personality ன்ன அர்த்தம்(மீனிங்) என்னங்க குந்தவை !!

  குவைத்ல தோட்டங்களும் இருக்குதாமே ! உணமையா குந்தவை !!

  தெரிந்து கொள்ளும் ஆவலில் பிரியா

 • 38. குந்தவை  |  9:22 முப இல் ஜூன் 14, 2010

  //எப்படி தோட்ட வேலைகள் உங்களுக்கு இவ்வளோ அதிகமா தெரிந்து வைத்து இருக்கிங்க !

  எங்க வயலில் நாங்க அப்படித்தான் போடுவோமுங்க.

  //ஒரு குந்தவைக்குள்ள எத்தனை திறமைகள் !! multiple personality ன்ன அர்த்தம்(மீனிங்) என்னங்க குந்தவை !!
  பெருசா சொல்லிக்கிற மாதிரி எனக்கு திறமை எதுவும் கிடையாது

  //குவைத்ல தோட்டங்களும் இருக்குதாமே ! உணமையா குந்தவை !!

  இங்கும் கொஞ்சம் தோட்டம் எல்லாம் உண்டு .. ஆனா நான் பார்த்தது கிடையாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
திசெம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
« நவ்   ஜன »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

%d bloggers like this: