குருவி

ஜனவரி 6, 2010 at 7:41 முப 16 பின்னூட்டங்கள்

                    இங்கு(குவைத்தில்) இப்போது குளிர் காலம். மத்தியானம் நல்ல வெயில் இருந்ததால் மெள்ள கண்மணியை அழைத்து கொண்டு சால்மியாவை(நாங்க இருக்கும் ஊர்) சுற்ற ஆரம்பித்தேன். கொஞ்சம் பயம் மனதில் இருந்தாலும், கூடவே ஒரு பெரிய மணுஷி வர்றாங்களேன்னு ஒரு தைரியத்தில் கிளம்பிட்டேன்.

                தெரு ரெம்பவே அமைதியா இருந்ததால் கண்மணியின் சத்தம் மாதிரம் high pitch யில் கேட்டது. கேள்வி பதில் என்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு பிறகு அமைதியாக வாய் பார்த்துகொண்டே வந்தாள்.

                 அந்த கேப்பில் அங்கு பறந்துகொண்டிருந்த சிட்டு குருவிகளையும், புறாக்களையும் பார்த்து திடீரென்று என் மனதிலும் பலவிதமான எண்ணங்கள். இந்த மனுசங்களுக்குத்தான் எத்தனை விதமான கட்டாயங்கள்.

               சின்ன பிள்ளைங்களை கேட்டா, “எப்ப பாரு அங்க போகாத இத செய்யாதன்னு ஒரே போர்” என்று புலம்புவார்கள்.

                   கொஞ்சம் பெரியவங்களானா நிறைய படிக்கணும் , கோச்சிங் கிளாஸ் போகணும், முதல்லா வரணும் என்று ஒரு போராட்டம்.

                  படிச்சி முடிச்சபிறகு, அவன் இவ்வளவு சம்பளம் வாங்குறான், இவன் காம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆயிட்டானாம் என்று துரத்துவதில், நாமளும் மூணு நாலு கம்பெனி தாவி ஒரு வழியா ஒரு வழியா நல்ல வேலையில் உக்காந்தா விடணுமே. அதான் நடக்காது, ம்… எப்ப கல்யாணம் பண்ணுகிற மாதிரி ஐடியா? என்று அடுத்த ஆயுதத்தை பிடித்திருப்பார்கள்.

                      அப்புறம் என்ன குடும்பம், குணம், படிப்பு, வேலை எல்லாத்தையும் அலசி ஆராஞ்சி கல்யாணம் முடிஞ்சி அப்படான்னு உக்காந்தா அப்புறம் தான் நமக்கே பெரிய பிரச்சனைக்கு நாம அடிக்கல் நாட்டியிருப்பது தெரியும்.

               கல்யாணம் முடிஞ்சா அடுத்த பத்தாவது மாசத்தில் பிள்ளை இருக்கணும் இல்லைன்னா  “என்ன ஆச்சு? “அங்க போய் பாருங்க” “இங்க போய் பாருங்க” அப்படீன்னு குடம் குடமா எண்ணை ஊத்தி நம்ம வேதனையை வளப்பாங்க ….. ஓ மை காட்…. 

               “கெக்கே பிக்கேன்னு..” கண்மணியின் சிரிப்பு என்னை நிகழ்காலத்திற்க்கு கொண்டு வந்தது.

  ” கண்மணி இந்த சிட்டு குருவி மாதிரி ஜாலியா பறந்துகிட்டு இருந்தா எவ்வளவு ஜாலியா இருக்கும்?”

 “ஐயே… அப்புறம் யாராச்சும் நம்மள ஸூட் பண்ணிடுவாங்க. உங்களுக்கு தெரியாதா?  பாருங்க, இந்த குருவியெல்லாம் நம்மள பாத்து எப்படி பயப்படுதுன்னு”

தலைப்ப பாத்து ஏதோ குருவி படத்தை எல்லாம் எதிப்பாத்து வந்திருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

கவித… கவிதன்னு… சொல்லமாட்டேன். ஒரு நிமிட கதை.

16 பின்னூட்டங்கள் Add your own

 • 1. --புவனேஷ்--  |  8:49 முப இல் ஜனவரி 6, 2010

  //“ஐயே… அப்புறம் யாராச்சும் நம்மள ஸூட் பண்ணிடுவாங்க. உங்களுக்கு தெரியாதா? பாருங்க, இந்த குருவியெல்லாம் நம்மள பாத்து எப்படி பயப்படுதுன்னு”//
  கரெக்ட் தான்!!

  //” கண்மணி இந்த சிட்டு குருவி மாதிரி ஜாலியா பறந்துகிட்டு இருந்தா எவ்வளவு ஜாலியா இருக்கும்?”//
  அதுமாதிரி சுதந்திரம் இருந்தா நல்லா தான் இருக்கும்!!! ஆனா இப்ப மாதிரி ப்ளாக் எழுத முடியாதே??

 • 2. குந்தவை  |  8:55 முப இல் ஜனவரி 6, 2010

  கரெக்ட் தான் இருந்தாலும் நான் ” நல்லாயிருக்கும்.. இங்க போகலாம்… இங்க போகலாம் ” என்று ஏதாவது சொல்லுவாள் என்று எதிர்பாத்தேன்.

  //அதுமாதிரி சுதந்திரம் இருந்தா நல்லா தான் இருக்கும்!!! ஆனா இப்ப மாதிரி ப்ளாக் எழுத முடியாதே??

  இது சரி தான் அப்புறம் இந்த மாதிரி யாரையும் கொடுமைபடுத்த முடியாது

 • 3. uma  |  5:47 பிப இல் ஜனவரி 6, 2010

  HI kunthavai,
  It’s true.i feel atleast we had lots of fun than these kids now a days.when ever i asked(push) my son to do his work i feel guilty inside,but still doing that.it’s really nice if we are free like birds.

 • 4. மோகன்  |  4:29 முப இல் ஜனவரி 7, 2010

  அக்கா நான் குருவி படத்தை எதிர்பார்த்து வரலை. மலேசியா குருவி மாதிரி குவைத் குருவி பத்தி சொல்லி இருப்பீங்கன்னு வந்தேன். வாழ்க்கையப் பத்தி சொல்லி இருக்கீங்க. சில சமயம் அதுங்களை மாதிரி எந்த கவலையும் இல்லாம இருக்கணும்னு தோணுது. ஆனா அதுங்களுக்கும் பிரச்சினைகள் இருக்கே என்ன பண்ணுறது.

 • 5. nanrasitha  |  6:39 முப இல் ஜனவரி 7, 2010

  அந்த குருவிக்கு என்ன என்ன பிரச்சனைகள் இருக்குமோ யாருக்கு தெரியும்?
  அதுங்க உங்களை பார்த்து “அங்கே பாருங்க அம்மாவும் பொண்ணும் எவ்வாலு ஜாலியா வரங்கானு பொறாமைப்படும்”

 • 6. குந்தவை  |  7:50 முப இல் ஜனவரி 7, 2010

  //when ever i asked(push) my son to do his work i feel guilty inside,but still doing that

  எனக்கும் தான். ஆனால் நான் ரெம்ப கட்டாயப்படுத்துவது கிடையாது. இருந்தாலும் என்னுடைய குழந்தை பருவத்தை compare பண்ணி பார்க்கும் போது, I feel very pity.

 • 7. குந்தவை  |  7:52 முப இல் ஜனவரி 7, 2010

  //ஆனா அதுங்களுக்கும் பிரச்சினைகள் இருக்கே என்ன பண்ணுறது.

  கண்டிப்பா. அதான் கண்மணி என்னிடம் சொன்னதும்.

 • 8. குந்தவை  |  7:53 முப இல் ஜனவரி 7, 2010

  //“அங்கே பாருங்க அம்மாவும் பொண்ணும் எவ்வாலு ஜாலியா வரங்கானு பொறாமைப்படும்”

  :))))

 • 9. graceravi  |  8:32 முப இல் ஜனவரி 9, 2010

  சின்ன சிட்டு குருவியே பாட்டு தெரியுமா? கண்மணிக்கு அக்கரைக்கு இக்கரை பச்சைன்னு தெரிஞ்சிருக்கு!

 • 10. குந்தவை  |  10:33 முப இல் ஜனவரி 10, 2010

  //கண்மணிக்கு அக்கரைக்கு இக்கரை பச்சைன்னு தெரிஞ்சிருக்கு!

  🙂

 • 11. Merlin  |  5:55 முப இல் ஜனவரி 11, 2010

  “அந்த குருவிக்கு என்ன என்ன பிரச்சனைகள் இருக்குமோ யாருக்கு தெரியும்?
  அதுங்க உங்களை பார்த்து “அங்கே பாருங்க அம்மாவும் பொண்ணும் எவ்வாலு ஜாலியா வரங்கானு பொறாமைப்படும்”

  “உண்மைதான். பிரச்சனை இல்லாத ஜீவன் உலகத்தில் எதுவுமே இல்லை”.

 • 12. குந்தவை  |  11:52 முப இல் ஜனவரி 11, 2010

  //“உண்மைதான். பிரச்சனை இல்லாத ஜீவன் உலகத்தில் எதுவுமே இல்லை”.

  😦

 • 13. பிரியமுடன் பிரபு  |  1:02 பிப இல் ஜனவரி 16, 2010

  படிச்சி முடிச்சபிறகு, அவன் இவ்வளவு சம்பளம் வாங்குறான், இவன் காம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆயிட்டானாம் என்று துரத்துவதில், நாமளும் மூணு நாலு கம்பெனி தாவி ஒரு வழியா ஒரு வழியா நல்ல வேலையில் உக்காந்தா விடணுமே. அதான் நடக்காது, ம்… எப்ப கல்யாணம் பண்ணுகிற மாதிரி ஐடியா? என்று அடுத்த ஆயுதத்தை பிடித்திருப்பார்கள்.

  அப்புறம் என்ன குடும்பம், குணம், படிப்பு, வேலை எல்லாத்தையும் அலசி ஆராஞ்சி கல்யாணம் முடிஞ்சி அப்படான்னு உக்காந்தா அப்புறம் தான் நமக்கே பெரிய பிரச்சனைக்கு நாம அடிக்கல் நாட்டியிருப்பது தெரியும்.
  ////////////////

  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எங்க சோகத்த கிழப்புறீங்க

 • 14. குந்தவை  |  12:37 பிப இல் ஜனவரி 17, 2010

  சோகம் இல்லத் தம்பி. எல்லாவிஷயமும் நல்லா நல்லது தான்.
  ஆனா நடக்கும் போது நடக்கும் என்றில்லாமல், எதையாவது பேசி நம்மையும் குறிப்பாக பெற்றோர்களையும் டென்ஷனாக்கி விடுவார்கள்.

 • 15. divyahari  |  2:59 முப இல் ஜனவரி 18, 2010

  “ஐயே… அப்புறம் யாராச்சும் நம்மள ஸூட் பண்ணிடுவாங்க. உங்களுக்கு தெரியாதா? பாருங்க, இந்த குருவியெல்லாம் நம்மள பாத்து எப்படி பயப்படுதுன்னு”

  nalla sollirukkinga.. kanmani theliva iruku..

  அதுங்க உங்களை பார்த்து “அங்கே பாருங்க அம்மாவும் பொண்ணும் எவ்வாலு ஜாலியா வரங்கானு பொறாமைப்படும்”

  sogaththa kuda sugama aakkitanga intha thozhi.. vazhththukkal..

 • 16. குந்தவை  |  12:30 பிப இல் ஜனவரி 18, 2010

  //nalla sollirukkinga.. kanmani theliva iruku..

  namalloda rempa theliva irukkaanga.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஜனவரி 2010
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்   பிப் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: