எப்படியெல்லாம் ஐடியா கொடுக்கிறாங்கய்யா…..

பிப்ரவரி 7, 2010 at 8:11 முப 16 பின்னூட்டங்கள்

                                               கண்மணியும், கண்மணி அப்பாவும் விளையாடி கொண்டிருந்தார்கள். கண்மணி திடீரென்று மூச்சு வாங்க என்னிடம் வந்தாள்.

 “அம்மா…. அப்பா என்னுடைய முட்டை ஒடச்சிட்டாரு…. போச்சு… என் காலு போச்சு…. பாரு இன்னும் five  டேஸ்ல இன்னொரு காலையும் ஒடைக்க போறாரு… ஆமா … அதனால சீக்கிரமா ஒண்ணு பண்ணு”

“என்ன பண்ணனும்”

“இன்னும் five  டேஸ்ல அப்பாவை மாத்திடு”

*******************************************

        காலையில் இருந்தே கண்மணி எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடித்து கொண்டிருந்தாள். சாப்பிடுவதற்கு ஒரு அடம், குளிப்பதற்க்கு ஒரு அழுகை என்று ஒரே அமர்களம். அது போதாதென்று டிஷ்யூ பேப்பரை எடுத்து வேண்டுமென்று வாயில் வைத்து கொண்டு மகா ஆனந்தத்தோடு அவங்க அப்பாவை கடுப்பேற்றி கொண்டிருந்தாள்.

                    சாப்பிட வயிற்றில் இடமே இல்லை என்று சாதித்து விட்டு, வீட்டில் இருந்த இனிப்பு பலகாரங்களை எல்லாம் காலி செய்து கொண்டிருந்ததால், மூட்டை கட்டி வைத்திருந்த கோபத்தை எல்லாம் கொட்ட ஆரம்பித்துவிட்டார் கண்மணி அப்பா. “!@$# !#@$%# %$^*& %^&*^&” என்று ஒரு பத்து நிமிஷம் சத்தம் போட்டதை எல்லாம் பேசாமல் அம்மையார் கேட்டுகொண்டிருந்தார்கள்.

                     மண்டகப்படி எல்லாம் குறையில்லாமல் வாங்கியபிறகு, என்னிடம் திரும்பி, “அம்மா, இந்த அப்பா சின்ன பிள்ளையா இருக்கும் போது நான் தான் அவருக்கு அம்மாவா இருந்தேன். என்னமா… சேட்டை பண்ணுவாரு தெரியுமா? டிஸ்யு எடுத்து சாப்பிடுவாரு….. பால் குடிக்க மாட்டாரு……. சொல்பேச்சு ஒண்ணும் கேட்க மாட்டாரு. ஒரே இனிப்பா சாப்பிடுவாரு…..இப்ப என்னிய சொல்றாரு…ஹா….ஹா….ஹா…… ” (எப்பூடி….)

**************************************************

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா.

ஒரு நிமிட கதை. மீன்…மீன்…

16 பின்னூட்டங்கள் Add your own

  • 1. nanrasitha  |  1:29 பிப இல் பிப்ரவரி 7, 2010

    பசங்க எப்படி எல்லாம் யோசிக்கிறங்க……ஸ்பெஷல் ட்ரைனிங் ஏதாவது போறாங்க?

  • 2. பிரியமுடன் பிரபு  |  2:36 பிப இல் பிப்ரவரி 7, 2010

    “இன்னும் five டேஸ்ல அப்பாவை மாத்திடு”
    /////

    நெசமாலுமே பாப்பாத்தான் சொல்லுச்சா???????
    ?
    ?
    ??
    சும்மாதான் கேட்டேன்…….

  • 3. பிரியமுடன் பிரபு  |  2:37 பிப இல் பிப்ரவரி 7, 2010

    !@$# !#@$%# %$^*& %^&*^&”
    //////

    என்னாதிது

    சரி விடுங்க குடும்ப ரகசியம்

  • 4. குந்தவை  |  3:53 பிப இல் பிப்ரவரி 7, 2010

    //ஸ்பெஷல் ட்ரைனிங் ஏதாவது போறாங்க?

    🙂

  • 5. குந்தவை  |  3:57 பிப இல் பிப்ரவரி 7, 2010

    //நெசமாலுமே பாப்பாத்தான் சொல்லுச்சா???????

    நான் சொல்லுவேனா தம்பி. அவரை தவிர என்னை யாரும் சகிச்சிக்கிட்டு இருக்கமுடியாது.

  • 6. குந்தவை  |  4:00 பிப இல் பிப்ரவரி 7, 2010

    //என்னாதிது சரி விடுங்க குடும்ப ரகசியம்

    என்ன பெரிய ரகசியம்…. எல்லா வீட்டுலேயும் நடப்பது தான்.

  • 7. பிரியமுடன் பிரபு  |  4:12 பிப இல் பிப்ரவரி 7, 2010

    /.//////
    நான் சொல்லுவேனா தம்பி. அவரை தவிர என்னை யாரும் சகிச்சிக்கிட்டு இருக்கமுடியாது.
    //////////

    நோட் தெட் பாயிண்ட் உவர் ஹானர்

    வெரி வெல்யூட் பாயிண்ட்

  • 8. குந்தவை  |  10:26 முப இல் பிப்ரவரி 8, 2010

    //வெரி வெல்யூட் பாயிண்ட்

    அடடா சந்தோஷத்த பாருங்கய்யா….

  • 9. kanagu  |  2:42 பிப இல் பிப்ரவரி 8, 2010

    /*“இன்னும் five டேஸ்ல அப்பாவை மாத்திடு”*/

    கண்மணி உண்மையிலேயே செம க்யூட் 🙂 🙂

  • 10. பிரியமுடன் பிரபு  |  2:49 பிப இல் பிப்ரவரி 8, 2010

    ///////////
    //நெசமாலுமே பாப்பாத்தான் சொல்லுச்சா???????

    நான் சொல்லுவேனா தம்பி. அவரை தவிர என்னை யாரும் சகிச்சிக்கிட்டு இருக்கமுடியாது.
    ///////

    பாப்பாவுக்கு விபரம் பத்தல

    அம்மாவ மாத்த சொல்லியிருக்கனும்

  • 11. குந்தவை  |  4:18 முப இல் பிப்ரவரி 9, 2010

    //அம்மாவ மாத்த சொல்லியிருக்கனும்

    தம்பின்னா இப்படித்தான் போட்டு கொடுக்கணும்.

  • 12. குந்தவை  |  4:23 முப இல் பிப்ரவரி 9, 2010

    //கண்மணி உண்மையிலேயே செம க்யூட்

    🙂

  • 13. மோகன்  |  4:56 முப இல் பிப்ரவரி 15, 2010

    அக்கா, உண்மையை சொல்லுங்க, கண்மனிக்கு இப்படி பேச நீங்கதானே சொல்லி கொடுத்தீங்க(இப்பவும் சொல்லி கொடுத்துக்கிட்டு இருக்கீங்க?)

  • 14. manthiran  |  10:31 முப இல் பிப்ரவரி 15, 2010

    //“இன்னும் five டேஸ்ல அப்பாவை மாத்திடு”//
    பாருங்களேன் , அந்த சின்ன மனசுக்குள்ளே எதோ இருந்திருக்கு ..
    🙂
    ஆண்கள் எப்பவும் பாவம் தான் .

    //“அம்மா, இந்த அப்பா சின்ன பிள்ளையா இருக்கும் போது ….///
    இதற்க்கு கண்மணி அப்பாவின் reaction
    “இப்பவே கண்ணை கட்டுதே “.

    (ஒரு ஆணின் மனசு இன்னொரு ஆணுக்கு தான் தெரியும் )

  • 15. குந்தவை  |  1:46 பிப இல் பிப்ரவரி 18, 2010

    //அக்கா, உண்மையை சொல்லுங்க, கண்மனிக்கு இப்படி பேச நீங்கதானே சொல்லி கொடுத்தீங்க(இப்பவும் சொல்லி கொடுத்துக்கிட்டு இருக்கீங்க?)

    நானா?… நான் எவ்வளவு நல்ல பொண்ணுன்னு தெரிஞ்சபிறகும் இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா தம்பி?

  • 16. குந்தவை  |  1:58 பிப இல் பிப்ரவரி 18, 2010

    //ஆண்கள் எப்பவும் பாவம் தான் .
    சைக்கிள் கேப்பில கப்பல் ஒட்டிருவீங்களே .

    //“இப்பவே கண்ணை கட்டுதே “.
    🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 37,085 hits
பிப்ரவரி 2010
தி செ பு விய வெ ஞா
« ஜன   மார்ச் »
1234567
891011121314
15161718192021
22232425262728

%d bloggers like this: