மீன்…மீன்…

பிப்ரவரி 11, 2010 at 8:47 முப 12 பின்னூட்டங்கள்

               எனக்கு ரெம்ப பிடித்தமான உணவு மீன். என் வீட்டுக்காரர் மீன் சாப்பிடுகிற (கொரிக்கிற) அழகை பார்த்து எனக்கு மீன் மேல் கொஞ்சம் ஆசை குறைந்து விட்டது. ஆனால் நான் மீன் சாப்பிடுகிற அழகை பார்த்து அவருக்கு கொஞ்சம் ஆசை வந்துவிட்டது.  🙂

                  கண்மணி ‘நான் அப்பாக் கூடத்தான் சாப்பிடுவேன்’ என்று சொன்னதால் அன்று மீனை ரசித்து சாப்பிட ஆரம்பித்தேன். கண்மணி வழக்கம் போல் விளையாடி…. அப்புறம் ஒரு வாய் வாங்கினால் ஒரு மணி நேரம் அதை மென்று…..பராக்கு பார்த்து…… அப்பாவின் பொறுமையை பொறுமையாக சோதனை பண்ணி சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

               நான் ரெம்ப ஜாலியாக சாப்பிடுவதை பார்த்து கடுப்பாகி…. காதில் புகையோடு ” கண்மணி இப்படி சாப்பிடும் பொது விளையாடக்கூடாது…… அம்மாவை பார்……லாடம் கட்டிய குதிரையாட்டம் அக்கம் பக்கம் பார்க்காமல்…. மீனோடு முங்கி நீச்சல் அடிக்கிறத….. அப்பிடித்தான் சாப்பிடனும்”

            ஹி….ஹி…..இதெல்லாம் கண்டுக்கக் கூடாது. சரி விஷயத்துக்கு வருவோம். மீன் உடம்புக்கு ரெம்ப நல்லது என்று நான் சொல்லாமலே தெரியும். கலப்பட பயமெல்லாம் இல்லாமல் தைரியமாக சாப்பிடலாம். ஒவ்வொரு மீனுக்கும் சத்துக்கள் வேறுபடுவதால், பொதுவான நன்மைகளை பார்க்கலாம்.

        * நல்ல புரதச்சத்து மிகுந்தது.

         * ஆஸ்த்துமா, இதய நோய்கள், Blood Pressure ,  டிப்ரெஷன், சர்கரை நோய்   போன்றவைகளை கட்டுபடுத்தும்.

        * சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்கும், கண் பார்வைக்கும் ரெம்ப நல்லது.

      இதில் உள்ள எல்லாச் சத்துகளும் கிடைப்பதற்கு

          * குழம்பு வைக்கும் பொது புளியை கடைசியில் சேர்ப்பது நல்லது. (குழம்பை இறக்குவதற்கு முன்னால் புளி சேர்த்து…. பின் ஒரு தடவை கொதிக்க விட வேண்டும்)

          * மீன் பொரிக்கும் பொது, மீன் நீந்துகிற அளவு எண்ணை விடாமல், சிறிது எண்ணையில் பொரிக்க வேண்டும்.

           அப்பாடி….. எனக்கு சமைக்க தெரியும் என்று எனக்கு தெரிந்த ஒரே…. சமையலை பற்றி ஒரு டிப்சை கொடுத்து நிலைநாட்டிவிட்டேன்.

Advertisements

Entry filed under: ஆரோக்கியம்.

எப்படியெல்லாம் ஐடியா கொடுக்கிறாங்கய்யா….. எப்படியெல்லாம் வந்து பயங்காட்டுறாங்க.

12 பின்னூட்டங்கள் Add your own

 • 1. nanrasitha  |  8:54 முப இல் பிப்ரவரி 11, 2010

  மீன் சாப்பிட்ட உடம்பிற்க்கு நல்லது சாப்டட்ட மீனுக்கு நல்லது.

 • 2. குந்தவை  |  9:55 முப இல் பிப்ரவரி 11, 2010

  மீன் சாப்பிட்டாலும் மீனுக்கு நல்லது தானுங்க. இல்லாட்டி அப்புறம் population கூடி பயங்கர பிரச்சனை வரலாம். நம்மள மாதிரி அவங்களும் கஷ்டப்படக்கூடாதில்ல…

 • 3. kanagu  |  12:23 பிப இல் பிப்ரவரி 11, 2010

  /*அம்மாவை பார்……லாடம் கட்டிய குதிரையாட்டம் அக்கம் பக்கம் பார்க்காமல்…. மீனோடு முங்கி நீச்சல் அடிக்கிறத….. அப்பிடித்தான் சாப்பிடனும்*/

  he he he 🙂 🙂

  tips ellam koduthu kalakureenga 🙂 🙂

 • 4. குந்தவை  |  4:37 முப இல் பிப்ரவரி 12, 2010

  வாங்க கனகு…. சமைக்க தெரியாதவங்க எல்லாம் சமையல் டிப்ஸ் தருவதோடு நிறுத்துவதுதான் உங்க உடம்புக்கு நல்லது.

 • 5. மோகன்  |  4:58 முப இல் பிப்ரவரி 15, 2010

  // அப்பாடி….. ” கண்மணி இப்படி சாப்பிடும் பொது விளையாடக்கூடாது…… அம்மாவை பார்……லாடம் கட்டிய குதிரையாட்டம் அக்கம் பக்கம் பார்க்காமல்…. மீனோடு முங்கி நீச்சல் அடிக்கிறத….. அப்பிடித்தான் சாப்பிடனும்”//
  இப்படித்தான் காரியத்தில வாயும் கருத்துமா இருக்கணும் 🙂 .

  //எனக்கு சமைக்க தெரியும் என்று எனக்கு தெரிந்த ஒரே…. சமையலை பற்றி ஒரு டிப்சை கொடுத்து நிலைநாட்டிவிட்டேன்.//

  ஏய் ஏய் இங்க பாரு, எங்க அக்காவுக்கும் சமைக்கத்தெரியும் சமைக்கத்தெரியும்.

 • 6. manthiran  |  10:23 முப இல் பிப்ரவரி 15, 2010

  மீன் சாப்பிட்டால் நமக்கு நல்லது .
  சாப்பிட வில்லையென்றால்
  மீனுக்கு நல்லது

 • 7. Elango Gopal  |  5:57 பிப இல் பிப்ரவரி 15, 2010

  ^ குழம்பு வைக்கும் பொது புளியை கடைசியில் சேர்ப்பது நல்லது. (குழம்பை இறக்குவதற்கு முன்னால் புளி சேர்த்து…. பின் ஒரு தடவை கொதிக்க விட வேண்டும்^

  ரொம்ப உபயோகமா இருந்தது,நன்றிங்க

 • 8. குந்தவை  |  1:48 பிப இல் பிப்ரவரி 18, 2010

  //இப்படித்தான் காரியத்தில வாயும் கருத்துமா இருக்கணும்

  தம்பி advice பண்ணுனா தட்டவா முடியும்?

 • 9. குந்தவை  |  1:51 பிப இல் பிப்ரவரி 18, 2010

  //மீன் சாப்பிட்டால் நமக்கு நல்லது .
  சாப்பிட வில்லையென்றால்
  மீனுக்கு நல்லது

  ஏகப்பட்ட மீன் அனுதாபிகள் இருக்கீங்க போல. இருந்தாலும் …..

 • 10. குந்தவை  |  2:03 பிப இல் பிப்ரவரி 18, 2010

  //ரொம்ப உபயோகமா இருந்தது,நன்றிங்க
  ரெம்ப சின்சியரா இருக்கீங்களே. வருகைக்கு நன்றி.

 • 11. jeno  |  8:56 முப இல் பிப்ரவரி 26, 2010

  thanks Dr.kunthavai.

 • 12. குந்தவை  |  5:49 முப இல் பிப்ரவரி 27, 2010

  //thanks Dr.kunthavai.

  நிஜமான Dr எல்லாம் ஆட்டோ அனுப்பபோறாங்க

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
பிப்ரவரி 2010
தி செ பு விய வெ ஞா
« ஜன   மார்ச் »
1234567
891011121314
15161718192021
22232425262728

%d bloggers like this: