எப்படியெல்லாம் வந்து பயங்காட்டுறாங்க.

பிப்ரவரி 24, 2010 at 4:03 முப 23 பின்னூட்டங்கள்

                  லேசான மழைத்தூரலில் ஆரம்பித்த இரவில், எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் ஒருமுறைக்கு இரண்டு முறை இழுத்து பார்த்துக்கொண்டேன். நீண்ட நாட்களாக பூட்டிக்கிடந்த என் அம்மா வீட்டில் நானும் கண்மணியும் தனியாக தங்கவேண்டிய துர்பாக்கியத்தை நினைத்து கண்ணீர் துருத்தியது.வழக்கம் போல் தனியாக ஊருக்கு அனுப்பிவைத்த என் கணவரையும் மறக்காமல் அர்ச்சனை(?) பண்ணியதும் கண்ணீர் மறைந்து    விட்டது. பிறந்து வளர்ந்த வீடு என்ன பயம் என்று சமாதானம் செய்துகொண்டு , நானும் கண்மணியும் படுக்கையை ஆக்கிரமித்தோம்.

  “அம்மா…. அம்மா…..” கண்மணி என்னை பிராண்டினாள். சதாரண நாட்களில் இந்த பிராண்டலுக்கெல்லாம் ஒரு ரீயாக்ஷனும் என்னிடமிருந்து வந்தது கிடையாது. ஆனால் இன்று படக்கென்று விழித்தேன்.
  “என்னம்மா…” என்றேன் கணைதிறக்காமல்.
  “உச்சா போகணும்”
   “ம்…” என்றபடி கண்ணை திறந்து பார்த்தால் பயங்கரமான இருட்டு. காற்றாடியும் வேலைசெய்யவில்லை என்று அதன் பிறகுதான் பார்த்தேன். இந்த கரண்ட் வேற… என்று முனங்கியபடியே கையை அங்கும்மிங்கும் அலையவிட்டேன்.

              வீட்டை சுற்றிலும் அடர்ந்த காடுபோல் மரங்கள் இருப்பதால், மொட்டை வெயிலிலும் எங்களை சூரியன் வந்து எட்டிப்பார்க்காது. இந்த அம்மாவாசை இருட்டுக்கு, ஏதோ கருப்பு கலருக்கு கருப்பு பெயிண்ட் அடித்தமாதிரி இருந்தது. கையில் டார்ச் லைட்டு ஒருவழியாக அகப்பட்டது. டார்ச்சின் புண்ணியத்தால் எமர்ஜென்சி லைட்டை கையிலெடுத்து கண்மணியையும் கூட்டிகொண்டு வீட்டின் கடைசியில் இருந்த பாத்ரூமுக்கு சென்றேன்.

         கண்மணியின் காலை அலம்பிவிட்டு, “கண்மணி இங்கேயே நின்னுக்கோ, அம்மா இதோ வந்துவிடுகிறேன்” என்று நானும் உள்ளேபோய்விட்டு வெளியே வந்தால், எமர்ஜென்சி லைட்டு மாத்திரம் தனியே உக்கார்ந்து கொண்டிருந்தது.
    “கண்மணி…”
    ஒரு பதிலும் வரவில்லை. பயம் கவ்விக்கொள்ள அங்கிமிங்கும் கண்களை அலையவிட்டு கடைசியாக வெளிவாசல் பேயென்று திறந்து கிடந்ததை பார்த்து… அதிர்ந்து போனேன்.
    பின்கதவுவழியாக எட்டிபார்த்தேன்…பின்னாடி கொஞ்சம் சிமெண்ட் தரை, அதன் பிறகு நாலைந்து தென்னம் மரங்களும், சப்போட்டா, கொய்யா, முருங்கக்காய், கறிவேப்பிலை போன்ற மரங்களும் இருட்டுக்கு இருட்டு சேர்த்தபடி நின்றிருந்து. அதற்க்கு அப்பால் தன் சின்ன உருவத்தை உல்லாசமாக உலாவவிட்டிருந்தாள் கண்மணி.
     
             எனக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே ஓடவில்லை. இந்த பிள்ளைக்கு என்ன தைரியம்… அதிலும் இந்தியா வந்தவுடன் ரெம்பவே கூடிவிடும். ஏமர்ஜென்சி லைட்டையும் தூக்கிகொண்டு குடு குடுவென்று ஓடினேன். கெக்கே பிக்கே என்று என்னை பார்த்து சிரித்தவளை ஒரு கையால் பிடித்து இழுத்து வரும்போது தான் கவனித்தேன். வீட்டின் பக்கவாட்டிலிருந்து யாரோ இருப்பது போல் ஒரு அசைவு தெரிந்தது. தட தடக்கும் இதயத்தோடு பயங்கர பில்டப் கொடுத்துவிட்டு கண்மணியை இழுத்துகொண்டு வீட்டுக்குள் நுளைந்து கதவை தாளிட்டேன்.

           லேசானக் குளிரிலும் பொலபொலவென்று வியர்த்தது. ஊடால் இருந்த கதவுகளையெல்லாம் தாளிட்டு, படுக்கை அறையில் போய் மொபைலில் பக்கத்து வீட்டு அண்ணாச்சியை அழைத்தால் ரிங் போகிறது ஆனால் யாரும் எடுக்கவில்லை. பயத்தில் உளறாமல் இருக்க மறுபடியும் மனதிற்க்குள் என்ன சொல்லவேண்டும் என்பதை சொல்லிப்பார்த்து கொண்டிருக்கும் போது
கண்மணி, “அம்மா அவங்க எல்லாம் உள்ளார வற்ராங்கம்மா”

“யாரு” என்று எட்டி பார்த்தால்… நாலைந்து பேர் என்னமோ அழைப்புவிடுத்த மாதிரி வந்து கொண்டிருந்தார்கள்.

“கதவு எப்படி திறந்தது” என்று முனங்கினேன் பயத்தில்.

“அங்க ஏதோ சத்தம் கேட்டதா அதான் நான் போய் திறந்தேன்மா” என்றவளை கோபத்துடன் பார்த்து விழித்துவிட்டு, சரி என்னவோ நடக்கட்டும் என்று நின்றுகொண்டிருந்தேன்.
 
   அவங்க எல்லோரும் ஏதோ கீ கொடுத்த பொம்மையாட்டம் எல்லா பொருட்களையும் எடுத்து கொண்டு போக… நான் சிறிது நேரம் திரு திருன்னு முழித்துவிட்டு … என்ன ஆனாலும் சரி சத்தம் போடுவது தான் நல்லது என்று தீர்மானித்து விட்டு “திருடன்… திருடன்” என்று சத்தம் போட ஆரம்பித்தேன்.
 ஆனா வெளியே வந்ததோ “கக்….கக்…” தான்.

      என்னுடைய சத்தத்தில் ஒரு ஆள் என்னருகில் வந்து கண்களை உருட்டி என்னை பிடித்து பிலு பிலுவென்று உலுப்ப… பயத்தில் உறைந்து போய்…. கண்களில் கண்ணீருமாக திரும்பவும் ” கக்… கக்கென்று என்னிடமிருந்து சத்தம் வந்தது.

அந்த முரட்டு மனிதனோ “ணங்….” கென்று கொட்டு வைக்க…. நான் வலியிலும், கோபத்திலும் முறைத்து பார்த்தால் , என் கணவரின் முகம் ஏகப்பட்ட எரிச்சலில் என்னை பார்த்து முறைத்துகொண்டிருந்தது. 
 ” ஏண்டி நடுராத்திரியில் கக் ..ககென்று சத்தம் போட்டு மனுசஷனை பயங்காட்டி கொண்டிருக்கிறாய்…”

         நான் திரு திருவென்று முழித்துவிட்டு… ஆகா நாம இப்ப இருப்பது குவைத் என்று ஓரளவுக்கு தெளிவந்தவுடன்  “அதுக்காக இப்படியா தலையில் குட்டுறது” என்றேன்.

  “ம்…..முதல்ல உலுப்பத்தான் செய்தேன்… திரும்பவும் கத்தினதாலத்தான் குட்டு வச்சென்… “.

பின்குறிப்பு: ஊருக்கு போனது… தனியாக தங்க பயந்தது  நிஜம்.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

மீன்…மீன்… வேலைக்கு போறீங்களா… கொஞ்சம் வந்திட்டு போங்க.

23 பின்னூட்டங்கள் Add your own

 • 1. பிரியமுடன் பிரபு  |  10:09 முப இல் பிப்ரவரி 24, 2010

  ஏதோ கருப்பு கலருக்கு கருப்பு பெயிண்ட் அடித்தமாதிரி இருந்தது
  ///

  mmm நல்ல வர்ணனை

 • 2. பிரியமுடன் பிரபு  |  10:14 முப இல் பிப்ரவரி 24, 2010

  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  கனவுன்னு முன்பே தெரிஞ்சு போச்சு

  4 பேர் வந்தாங்கன்னு சொன்னப்பவே

 • 3. Sathya  |  4:26 பிப இல் பிப்ரவரி 24, 2010

  //அந்த முரட்டு மனிதனோ “ணங்….” கென்று கொட்டு வைக்க…. நான் வலியிலும், கோபத்திலும் முறைத்து பார்த்தால் , என் கணவரின் முகம் ஏகப்பட்ட எரிச்சலில் என்னை பார்த்து முறைத்துகொண்டிருந்தது.//

  ஹி.. ஹி..

  நல்ல விறுவிறுப்பான நடை..

 • 4. குந்தவை  |  6:31 பிப இல் பிப்ரவரி 24, 2010

  //கனவுன்னு முன்பே தெரிஞ்சு போச்சு

  4 பேர் வந்தாங்கன்னு சொன்னப்பவே

  too late

 • 5. குந்தவை  |  6:42 பிப இல் பிப்ரவரி 24, 2010

  வாங்க சத்யா.
  நன்றி.

 • 6. nanrasitha  |  7:24 முப இல் பிப்ரவரி 25, 2010

  கதையுல ஏகப்பட்ட ட்விஸ்ட்

 • 7. manthiran  |  9:07 முப இல் பிப்ரவரி 25, 2010

  எல்லாரும் இப்படி சுவாரசியமாக எழுதி , கடைசியில் கனவு என்று சொல்லி விடுகிறீர்கள் . நாங்கள் என்ன பாவம் செய்தோம் ..

 • 8. manthiran  |  9:11 முப இல் பிப்ரவரி 25, 2010

  அப்புறம் , உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்து உள்ளேன் .

  http://manthiran.blogspot.com/2010/02/blog-post_25.html

  ஐயோ , எனக்கு நேரம் இல்லை ,
  முடியாது ,
  தெரியாது ..
  எப்படி எந்த சாக்கு, போக்கு சொல்லக் கூடாது . இல்லையென்றால் தமிழ் கூறும் இந்த பதிவுலகம் உங்களை மன்னிக்காது .
  வேற என்ன சொன்னால் , எழுதுவீங்க ? கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் ..

 • 9. அண்ணாமலையான்  |  3:44 பிப இல் பிப்ரவரி 25, 2010

  நல்லா சுவையா எழுதறீங்க…

 • 10. kanagu  |  9:33 பிப இல் பிப்ரவரி 26, 2010

  ஏங்க இப்படி எல்லாரையும் பயம்முறுத்திட்டு இருக்கீங்க???

  பேசாம தூங்குங்க.. 🙂 🙂

 • 11. குந்தவை  |  5:43 முப இல் பிப்ரவரி 27, 2010

  வாங்க செந்தில்….. கதையில்ல கனவு..

 • 12. குந்தவை  |  5:47 முப இல் பிப்ரவரி 27, 2010

  //நல்லா சுவையா எழுதறீங்க…

  வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி.

 • 13. குந்தவை  |  5:52 முப இல் பிப்ரவரி 27, 2010

  //ஏங்க இப்படி எல்லாரையும் பயம்முறுத்திட்டு இருக்கீங்க???

  நான் மாத்திரம் பயந்தா எப்படி? அப்புறம் என்னிய எல்லாரும் மறந்துருவீங்களே .

 • 14. குந்தவை  |  11:08 பிப இல் பிப்ரவரி 27, 2010

  //நாங்கள் என்ன பாவம் செய்தோம்

  அவ்வளவு கொடுமைபடுத்திட்டேனா?. விடுங்க தம்பி…. எல்லாம் பழக்கதோஷம் .

 • 15. குந்தவை  |  11:10 பிப இல் பிப்ரவரி 27, 2010

  //எப்படி எந்த சாக்கு, போக்கு சொல்லக் கூடாது . இல்லையென்றால் தமிழ் கூறும் இந்த பதிவுலகம் உங்களை மன்னிக்காது .

  தம்பி சொல்ல தட்டமுடியுமா….

 • 16. மோகன்  |  8:18 முப இல் மார்ச் 2, 2010

  அக்கா, உண்மையிலேயே நல்லா இருந்திச்சி. ஆனா வழக்கம் போல கனவு அப்படின்னு முடிக்கிறவங்களை பாத்தா (படிச்சா) நறநற

 • 17. குந்தவை  |  8:59 முப இல் மார்ச் 2, 2010

  //அக்கா, உண்மையிலேயே நல்லா இருந்திச்சி.
  நன்றி.

  //ஆனா வழக்கம் போல கனவு அப்படின்னு முடிக்கிறவங்களை பாத்தா (படிச்சா) நறநற
  திருமணம் ஆனப்பிறகு உங்களுக்கு கோபம் வருகிறதா?… உங்க வீட்டம்மா நம்பரை குடுங்க…

 • 18. vinothgowtham  |  6:44 முப இல் மார்ச் 13, 2010

  திக்..திக்ன்னு படிச்சிட்டு வந்தா கடைசில கனவா இது..!!

 • 19. Kunthavai  |  4:14 பிப இல் மார்ச் 13, 2010

  //திக்..திக்ன்னு படிச்சிட்டு வந்தா கடைசில கனவா இது..!!

  ஆகா…. என்னிய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.

 • 20. karthik  |  4:04 முப இல் மார்ச் 26, 2010

  //ந்த முரட்டு மனிதனோ “ணங்….” கென்று கொட்டு வைக்க…. நான் வலியிலும், கோபத்திலும் முறைத்து பார்த்தால் , என் கணவரின் //

  intha vaipula avara murattu manithan solliachu 😀

 • 21. குந்தவை  |  9:52 பிப இல் மார்ச் 26, 2010

  //intha vaipula avara murattu manithan solliachu

  சைக்கிள் கேப்புல கப்பல் விடாட்டியும் படகாவது விட்டுக்கலாமேன்னு தான். …

 • 22. Janice Inman  |  5:28 பிப இல் மே 28, 2010

  Super great article! Honest..

 • 23. குந்தவை  |  9:43 முப இல் மே 29, 2010

  Thank You Janice

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
பிப்ரவரி 2010
தி செ பு விய வெ ஞா
« ஜன   மார்ச் »
1234567
891011121314
15161718192021
22232425262728

%d bloggers like this: