வேலைக்கு போறீங்களா… கொஞ்சம் வந்திட்டு போங்க.

மார்ச் 3, 2010 at 4:44 முப 18 பின்னூட்டங்கள்

                         எத்தனை தடவை அலசி ஆராய்ந்தாலும் ஒரு முடிவுக்கு வரமுடியாத விஷயம் என்னவென்றால்… பெண்கள் வேலைக்கு போறது நல்லதா? என்ற கேள்வி தான். நானே நிறைய புத்தகங்களில் இந்த விவாதங்களை படித்திருக்கிறேன்.

                ஒரு சிலர் இவ்வளவு படிச்சிட்டு சும்மா இருந்தால் எப்படி… நம் குடும்பத்திர்க்கு உறுதுணையாக இருக்கலாமே என்று வேலைக்கு செல்கிறார்கள். ஒரு சிலருக்கு பொருளாதாரம் ஒரு முக்கிய பிரச்சைனையாக இருக்கலாம். இப்படி நிறைய காரணங்களால் வேலைக்கு சென்றாலும், நமக்கு உறுதுணையாக நம் மாமா, அத்தை, அம்மா, அப்பா என்று சொந்தபந்தங்கள் இருக்கும் வரை பிரச்சனை கிடையாது.

                  அப்படி இல்லாத பட்சத்தில் , வேலைக்கும் சென்று , நம் குழந்தையின் மனதில் ஏக்கம் வராமல்…. சந்தோஷமாக வைத்து கொள்ள எனக்கு தெரிந்த வழிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுடைய கருத்தையும் கண்டிப்பாக சொல்லுங்கள்.

* குழந்தையை பார்க்க வேலைக்கு ஆள் வைத்துகொண்டாலும் சரி, காப்பகத்தை தேர்ந்தெடுத்தாலும் நன்றாக ஆராய்ந்து முடிவெடுங்கள்.

          வேலைக்கு ஆள்வைத்திருந்தால் அப்பப்ப தொலைபேசியில் பேசுங்க. கைகுழந்தையாக இருந்தால்… அவர்களிடம் வீட்டு வேலையை ஒப்படைக்காதீர்கள்.

           குழந்தையின் மருந்துக்கு எல்லாம் பெரிய லேபல் ஒட்டி அவர்களுக்கு புரியும்படியாக சொல்லிவைப்பது பாதுகாப்பானது.

* வேலை முடிந்து வந்தவுடன் வீட்டு வேலையை பார்க்க பறக்காமல் குழந்தையுடன் சிறிது நேரம் கொஞ்சி விளையாடுங்கள். உங்களுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும், குழந்தையும் சந்தோஷமாக இருக்கும்.

* வீட்டு வேலை செய்யும் போது… அவங்களுக்கும் சின்ன சின்ன பொறுப்புகளை கொடுத்தால் அவங்களும் ரெம்ப சந்தோஷமா செய்வாங்க.

* நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தையுடன் ஆனந்தமாக செலவிடுங்கள். முக்கியமா அலைபேசி, தொலை பேசி, தொலைக்காட்சி எல்லாத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு அவங்கிட்ட மனசுவிட்டு பேசுங்க.ரெம்ப பில்டப்பு கொடுப்பாய்ங்க அதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணிட்டிருக்காமல்… சும்மா ரசிச்சிக்கோங்க.

 * அதுபோல ஆபீஸ விட்டு வெளியே வரும் போதே அங்குள்ள பிரச்சனைகளையும் உதறி தள்ளி விட்டு வெளியே வந்திடுங்க.

 * லீவு கிடைக்கும் போதெல்லாம் மிதமான வெயிலிலும், நல்ல சுகாதாரமான காற்றுள்ள இடத்திற்க்கும் சென்று டென்ஷன் இல்லாமல் நேரத்தை செலவிடுங்கள். நமக்கும் , நம் குழந்தையின் ஆரோக்கியத்திற்க்கும் அது நல்லது.

* மாதத்திற்க்கு ஒருமுறையாவது உறவினர்கள் வீட்டிற்க்கு அழைத்துசெல்லலாம்.

* சும்மா ஷாப்பிங் மாலுக்கு சுற்றி பார்க்க செல்லாமல், நமக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்றால் மட்டும் கடைக்கு அழைத்து செல்லுங்கள். ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தால் தான் சந்தோஷம் என்று ஒரு மாயையை நீங்களே அவர்களிடம் விதைத்துவிடாதீங்க.

 * படிக்க வைக்கும் போது ரெம்ப பொறுமையா சொல்லிகொடுங்க (எனக்கும் இது கஷ்டமான விஷயம் தான்).

         இதை எல்லாம் நானும் செய்து கண்மணியை முடிந்த அளவு spoil பண்ண முயற்சி பண்ணிட்டிருக்கேன்… ஆனாலும் திடீரென்று சின்ன விஷயத்துக்கும், நமக்கு அப்பப்ப கோபம், எரிச்சல் வரும் தான், ஆனா உடனே

“என்ன கண்மணி அம்மா கொஞ்சம் கோபப்பட்டால் இப்படியா முகத்தை வைத்துகொள்வது…. போகட்டும் விடு” என்று நானும்,

கண்மணி ஏதாவது தப்பு செய்து.. நான் கோபப்பட்டால்…. உடனே, “அம்மா சின்ன பிள்ளைங்கன்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க.. இதுக்கெல்லாம் கோச்சுக்க கூடாது” என்று கண்மணியும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திக்கொள்வோம்.

நண்பர்களே உங்களுடைய எண்ணத்தையும் கண்டிப்பாக எழுதுங்கள்.

Advertisements

Entry filed under: அனுபவம்.

எப்படியெல்லாம் வந்து பயங்காட்டுறாங்க. இலவசமா ஒரு கண்காட்சி.

18 பின்னூட்டங்கள் Add your own

 • 1. nanrasitha  |  9:47 முப இல் மார்ச் 3, 2010

  ம்ம் அருமையான யோசனைகள்.
  பிறகு வேளை முடிந்து வீடு திரும்பும் போது பிள்ளைகளுக்கு சாப்பிட ஏதாவது கண்டிப்பா வங்கி வரும் வேண்டும். மாசம் ஒரு சினிமா (அ) பிக்னிக். sundaysல பசங்க கூட விளையாட வேண்டும்………

 • 2. குந்தவை  |  11:44 முப இல் மார்ச் 3, 2010

  // வீடு திரும்பும் போது பிள்ளைகளுக்கு சாப்பிட ஏதாவது கண்டிப்பா வங்கி வரும் வேண்டும்.

  ரெம்ப நன்றி உங்க கருத்துக்கு.

 • 3. mazhalaimozhi  |  7:14 முப இல் மார்ச் 4, 2010

  //“என்ன கண்மணி அம்மா கொஞ்சம் கோபப்பட்டால் இப்படியா முகத்தை வைத்துகொள்வது…. போகட்டும் விடு” என்று நானும்,

  கண்மணி ஏதாவது தப்பு செய்து.. நான் கோபப்பட்டால்…. உடனே, “அம்மா சின்ன பிள்ளைங்கன்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க.. இதுக்கெல்லாம் கோச்சுக்க கூடாது” என்று கண்மணியும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திக்கொள்வோம்.

  I loved the attitude u and ur kid share.Actually,this is the point where the kid will understand the elders and vice-versa
  good job…….

 • 4. குந்தவை  |  7:29 முப இல் மார்ச் 4, 2010

  I loved the attitude u and ur kid share.Actually,this is the point where the kid will understand the elders and vice-versa
  good job…….

  ரெம்ப நன்றிங்க.

 • 5. manthiran  |  11:02 முப இல் மார்ச் 4, 2010

  பெண்கள் வேலைக்கு போகலாம் ஆனால் போக கூடாது ..
  ஆண்கள் வேலைக்கு போகலாமா, கூடாதா ? இப்படி யாரும் பேச மாட்டேன்குறாங்க. ஏன் ?
  எப்புடி கேட்டோம் பார்த்தீங்களா .

  பெண்கள் வேலைக்கு போனால் , குழந்தையை எப்புடி பார்த்துகொள்வது என்று சொன்ன மாதிரி கணவரை எப்படி பார்த்துகொள்வது என்றும் சொல்லி கொடுத்து விடுங்கள் .
  கணவர்கள் மட்டும் பாவம் இல்லையா ?

 • 6. குந்தவை  |  11:12 முப இல் மார்ச் 4, 2010

  //பெண்கள் வேலைக்கு போகலாம் ஆனால் போக கூடாது ..

  இந்தாப்பா….. இந்த மாதிரி கெடுபிடி எல்லாம் போட்டீங்கன்னா.. ரெம்ப கஷ்டம்.

  //ஆண்கள் வேலைக்கு போகலாமா, கூடாதா ? இப்படி யாரும் பேச மாட்டேன்குறாங்க. ஏன் ?
  ஐயா ஒரு நாள்…. ஒரே ஒரு நாள் அவங்கள சும்மா வீட்டுல தனியா இருக்க சொல்லிபாருங்க முதல்ல…
  அப்புறமா இந்த கேள்விய கேளுங்க.

  //கணவரை எப்படி பார்த்துகொள்வது என்றும் சொல்லி கொடுத்து விடுங்கள் .
  ஆகா…..

 • 7. uma  |  5:10 பிப இல் மார்ச் 5, 2010

  Hi Kunthavai,
  very useful update.I told my son the same way like you after i upset with him. Usually he says “you have to explain to me mom not yell on me”.Thankyou for share with us .
  Uma..R

 • 8. குந்தவை  |  7:47 பிப இல் மார்ச் 5, 2010

  வாங்க உமா.
  //Usually he says “you have to explain to me mom not yell on me”.
  Very Smart.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோ.

 • 9. vinothgowtham  |  6:46 முப இல் மார்ச் 13, 2010

  நல்லதொரு பகிர்வு..

 • 10. Kunthavai  |  4:10 பிப இல் மார்ச் 13, 2010

  //நல்லதொரு பகிர்வு..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 • 11. பிரியமுடன் பிரபு  |  6:36 பிப இல் மார்ச் 13, 2010

  ம்ம் அருமையான யோசனைகள்.

 • 12. குந்தவை  |  10:39 முப இல் மார்ச் 14, 2010

  //ம்ம் அருமையான யோசனைகள்.

  ரெம்ப நன்றி பிரபு.
  உங்க ஐடியாவையும் எழுதியிருக்கலாம்.

 • 13. mazhalaimozhi  |  7:18 முப இல் மார்ச் 16, 2010

  hi, i was so impressed by this post that im giving my view once again.
  I guess we must also then and there scold (chellama) the young ones and make them understand their mistakes(though minor).too much of chellam(especially from thatha paatis) will make them stuborn and they will face much difficulty wen they have to adjust in schools where they will not even take it easy when even

 • 14. குந்தவை  |  7:26 முப இல் மார்ச் 16, 2010

  //I guess we must also then and there scold (chellama) the young ones and make them understand their mistakes(though minor)

  Yes, you are right.

 • 15. mazhalaimozhi  |  8:55 முப இல் மார்ச் 16, 2010

  hi .I also feel its better to appoint some care taker only after a thorough background verification.u may also ask a couple of their photographs on appointing (since u r gonna hand over ur precious kid to them) or better go for some day care.

 • 16. குந்தவை  |  9:43 முப இல் மார்ச் 16, 2010

  //hi .I also feel its better to appoint some care taker only after a thorough background verification.u may also ask a couple of their photographs on appointing (since u r gonna hand over ur precious kid to them) or better go for some day care.

  கண்டிப்பாங்க. ரெம்ப நன்றி உங்க கருத்துக்கு.

 • 17. priya  |  8:58 முப இல் மார்ச் 29, 2010

  Hi Kunthavai

  Thanks for yr valuable points.

  Teaching to children always give depression.My opinion is It would be nice yearly once will go family tour to hill station or stay nearby seashore .See upto age of 12 only children are with us.After that their have lot of friends and involving sports etc.I am telling about my boys .
  See you then
  Thanks and regards
  priya

 • 18. குந்தவை  |  9:24 முப இல் மார்ச் 29, 2010

  // It would be nice yearly once will go family tour to hill station or stay nearby seashore .
  கண்டிப்பா சிறு வயதில் தான் நாம் அவர்களுடன் இருக்கமுடியும். அவர்களுடன் சந்தோஷமாக இருப்பதற்கு நேரமும் கிடைக்கும் அப்புறம் அவங்க ரெம்ப பிசியாகி விடுவார்கள். இது தானே இயற்கையின் நியதி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
மார்ச் 2010
தி செ பு விய வெ ஞா
« பிப்   ஏப் »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: