குழந்தைகளை கம்பேர் பண்ணுறீங்களா…

மார்ச் 28, 2010 at 7:46 பிப 17 பின்னூட்டங்கள்

                      காலையிலே கடைக்கு சென்று அம்மையாருக்கு கொஞ்சம் துணி எடுத்துவிட்டால், அடுத்த நாள் காலையில் கோவில்பட்டிக்கு சென்றுவிடலாம் என்று முடிவு செய்து விட்டு கண்மணியை கிளப்பினால்…. ம்… கிளம்பவேண்டுமே…. ஒரு வழியாக பத்தரைக்கு அவளை அள்ளி எடுத்துகொண்டு வெளியே வந்தேன்.

           அப்புறம் மனதிற்க்கு கஷ்டமாக இருந்தது.  ச்ச…. சின்ன பிள்ளை பாவம்…     கண்மணியை காலையில் இருந்தே விரட்டி கொண்டிருந்ததால்   குறுகுறுவென்று மனசு என்னை கடித்தது. இனிமேல் இப்படி கோபப்படக்கூடாது ,  என்று முடிவுசெய்தேன்(எத்தனை நாளைக்கு?).

                        நம்ம  அவசரத்தை அவங்க மேல திணிப்பது மகாபாவம் என்று என் கோபத்தை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு அவளுடன் மெதுவாக , கதை கேட்டு கொண்டு பஸ் ஸ்டாப்பிற்க்கு நடந்தேன்.

            ஒரு அம்மா தன்னுடைய குழந்தையை பயங்கரமாக அர்ச்சனை பண்ணியபடி என் பக்கத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். ” அவ என்னமா படிக்கிறா… இவ என்னமா படிக்கிறா… நீயும் இருக்கியே….” என்று பயங்கர பாராட்டுவிழா நடந்து கொண்டிருந்தது.

 
                   படிக்கும் போது அடுத்த பிள்ளைகளை கம்பேர் பண்ணுவது ஒரு வியாதியாகவே நிறைபேரிடம் இருக்கிறது. இந்த விஷயத்தை நினைத்தவுடன் எனக்கு நினைவில் வருவது என்னுடன் படித்த தோழி வித்யா தான். வித்யா சுமாராக படிக்கும் பெண்.  ஆனால் மார்க் அதிமாக எடுக்கவேண்டும்   என்று தினமும் இம்சிக்கபடுபவள். எல்லாம் அவங்க அம்மாவுடன் வேலைபார்க்கும் மிஸஸ் காந்திமதி அம்மையாரின் தவப்புதல்வன், திரு. கு.ரங்கசாமி (அதிபயங்கர மரியாதையால் இனிஷியலுடன் தான் அவன் பெயரை கூப்பிடுவாள்) என்பவனால் வந்த வினை தான்.

                 அவன் பாட்டுக்கு நன்றாக படிக்க… வித்யாவின் அம்மா இவளை போட்டு காய்க்க.. இவள் பள்ளிக்கு வந்தவுடன் ‘கு.ரங்கு’ விற்க்கு பயங்கர மண்டகபடிதான். எங்களுக்கு ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும், சிரித்துக்கொள்வொம். கம்பேர் பண்ணுவது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பது அப்போது தான் புரிந்தது.
 
                ஒரு வழியாக ஆமை நடை நடந்து பஸ்லேயும் ஏறிவிட்டோம். கண்மணிக்கு ஒரே சந்தோஷம் ஆய் ஊய் என்று கத்தி குஷியாக இருந்தாள். எல்லாம் ஒரு இரண்டு ஸ்டாப் தான் கழிந்திருக்கும், ‘அம்மா பசிக்குது’ என்று விடாமல் அனத்த ஆரம்பித்தாள். எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கேட்கிறமாதிரியில்லை.

                   சுற்றி உள்ளவர்கள் எல்லாரும் என்னிய வில்லியாக பார்க்க ஆரம்பிக்கவும் வேறு வழியில்லாமல் பஸ்ஸிலிருந்து இறங்கி பக்கத்திலிருந்த கடைக்கு சென்று ஒரு வாழைபழத்தை வாங்கிகொடுத்து விட்டு திரும்பினால்…..  வித்யா……..எப்பூடி?… கையில் ஒரு குழந்தையுடனும்.. பக்கத்தில் அந்த குழந்தையின் மெகா சீனியருடனும் வந்து கொண்டிருந்தாள். எனக்கு ஒரு நிமிடம் கையும் ஓடவில்லை… காலும் ஓடவில்லை.

                      பத்து வருஷம் கழித்து பார்த்த தோழியை நான் பார்க்க.. அவளும் பார்க்க…. இன்ப அதிர்ச்சியிலிருந்து மீண்டு ..குசலம் விசாரித்து… பக்கத்தில் இருந்த அவள் வீட்டிற்க்கு அழைத்து சென்றாள். வீட்டுக்காரர் குடும்பம் குழந்தை என்று பேச்சு   எல்லோரையும் சுற்றி விட்டு… கடைசியில் திருமணத்தில் வந்து நின்றது.

” என்னுடைய திருமணம் கொஞ்சம் அவசரமாக நடந்ததால்  நண்பர்களை கூப்பிட முடியவில்லை’ என்றாள் வருத்தத்தோடு.

“ம்.. என்னவாச்சு”

“அது … லவ் மேரேஜ்ப்பா… அப்புறம் பிரச்சனை இல்லாமல் எப்படி இருக்கும்”

“ஆகா.. அது எப்ப ஆரம்பிச்சே”

கொஞ்சம் சிரிப்புடனும் நிறைய வழிசலுடனும் ,” இவர் தாண்டி ரங்கு… நான் படிக்கும் போது சொல்லுவேனில்ல?….”

 அப்புறம் நான் என்னத்த சொல்ல….

Advertisements

Entry filed under: அனுபவம்.

இலவசமா ஒரு கண்காட்சி. யதார்த்தம்.

17 பின்னூட்டங்கள் Add your own

 • 1. karthik  |  1:13 முப இல் மார்ச் 29, 2010

  //

  குழந்தைகளை கம்பேர் பண்ணுறீங்களா…//

  @குந்தவை
  இப்ப என்ன சொல்ல வரீங்க? ஒரு குழந்தைய இன்னொரு குழந்தை கூட ஒப்பிட கூடாது.ஒவ்வொருத்தருக்கும் தனி தனி திறமைகள் உண்டு

  ஆமா, பதிவு எங்கயோ ஆரமிச்சு எங்கயோ போய்டுச்சு?

 • 2. குந்தவை  |  9:13 முப இல் மார்ச் 29, 2010

  //ஆமா, பதிவு எங்கயோ ஆரமிச்சு எங்கயோ போய்டுச்சு?

  அன்றைய தினத்தில் நான் நினைத்ததையும், நடந்ததையும் எழுதினேன் கார்த்திக்.
  படிக்கிற உங்களுக்கு இப்படி என்றால் எனக்கு??

  ஒருவேளை தலைப்ப பார்த்து சீரியஸா எதிர்பார்த்தீங்களோ. ஹீ…ஹி…
  அப்படியெல்லாம் உருப்படியா எழுதுறதுக்கு நான் நல்ல பொண்ணு கிடையாது.

 • 3. nanrasitha  |  10:04 முப இல் மார்ச் 29, 2010

  //‘கு.ரங்கு’ விற்க்கு பயங்கர மண்டகபடிதான்.

  //இவர் தாண்டி ரங்கு… நான் படிக்கும் போது சொல்லுவேனில்ல?….”

  periyavanga correct ha than sonnanga kadhal modhala arabikkum nu…

 • 4. குந்தவை  |  10:14 முப இல் மார்ச் 29, 2010

  //periyavanga correct ha than sonnanga kadhal modhala arabikkum nu…

  ஆமா…. அதனால முதல்ல சண்டை போட நல்ல ஆளப்பாருங்க

 • 5. --புவனேஷ்--  |  5:00 பிப இல் மார்ச் 30, 2010

  ச்சே.. எங்க வீட்லயும் நல்ல பொண்ணா பாத்து கம்பர் பண்ண சொல்லணும் !

 • 6. kanagu  |  8:06 பிப இல் மார்ச் 30, 2010

  ஆஹா இதுல இவ்ளோ விஷயம் இருக்கா… முதல்ல எங்க வீட்ல எந்த பொண்ணு கூட என்ன கம்பேர் பண்ணாங்க-னு லிஸ்ட் எடுக்கணும்… ::D 😀

 • 7. குந்தவை  |  7:29 முப இல் மார்ச் 31, 2010

  //ச்சே.. எங்க வீட்லயும் நல்ல பொண்ணா பாத்து கம்பர் பண்ண சொல்லணும் !

  m….. 🙂

 • 8. குந்தவை  |  7:30 முப இல் மார்ச் 31, 2010

  //முதல்ல எங்க வீட்ல எந்த பொண்ணு கூட என்ன கம்பேர் பண்ணாங்க-னு லிஸ்ட் எடுக்கணும்..

  ha…ha…..

 • 9. சுரேஷ்  |  11:58 முப இல் மார்ச் 31, 2010

  “இந்த சுரேஷ பாரு எவ்ளோ நல்லா படிக்கிறான்”
  “அவன பாரு எவ்ளோ ஸ்மார்ட் ஆ இருக்கான்”

  “அவர பாரு எவ்ளோ அழகா மான்லியா இருக்காரு”
  “எவ்ளோ சின்சியரா வேலை பாக்குறாரு, நீனும் தான் இருக்கியே”

  — இப்படி எல்லாம் என்னை காமிச்சு மத்தவங்கள கம்பேர் பண்ணும போது எனக்கும் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்.

  இனிமே அப்படி பன்னதீங்கப்பா……..

  குந்தவை அக்கா…சொல்லிட்டேன்.

 • 10. சுரேஷ்  |  12:00 பிப இல் மார்ச் 31, 2010

  ரியல் லைப் ட்விஸ்ட் கதைய விட சில நேரங்கள்ல அருமையா இருக்கும்.

  படிக்க இண்டரஸ்ட் ஆ இருந்துச்சுங்கோ……

 • 11. சுரேஷ்  |  1:04 பிப இல் மார்ச் 31, 2010

  “இந்த சுரேஷ பாரு என்னமா படிக்கிறான்….”
  “இவன பாரு என்ன ஸ்மார்ட் ஆ இருக்கான்….”

  “இந்த சுரேஷ பாருடீ எவ்ளோ அழகா மான்லி ஆ இருக்கான்னு…”
  “சார பாருங்க எவ்ளோ சின்சியர் ஆ வொர்க் பன்றார்னு…….நீங்களும் தான் இருக்கீங்களே…?”

  —- இப்படியெல்லாம் என்ன பார்த்து மத்தவங்கள கம்பேர் பண்ணும போது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்குது…..என்ன செய்ய?

  இனிமே யாரும் அப்படி பன்னதீன்கப்பா.

  குந்தவையக்கா….சொல்லிட்டேன்.

 • 12. சுரேஷ்  |  1:07 பிப இல் மார்ச் 31, 2010

  ரியல் லைப் ட்விஸ்ட் கதைய விட சில சமயம் சுவாரஸ்யமா தான் இருக்குது.

  படிக்க ரொம்ப இண்டரஸ்ட் ஆ இருந்துதுங்கோ…..

 • 13. சுரேஷ்  |  1:12 பிப இல் மார்ச் 31, 2010

  பதிவு சோக்காகீதா….. அதாங்கோ….மிஸ்டேக் ஆ ரண்டு தபா கமெண்ட் போட்டுட்டேன்.

  கோவிச்சுகினிங்கன்னா….. அத்த அழிசிடுங்க……

 • 14. குந்தவை  |  7:17 முப இல் ஏப்ரல் 1, 2010

  //“இந்த சுரேஷ பாரு எவ்ளோ நல்லா படிக்கிறான்”
  “அவன பாரு எவ்ளோ ஸ்மார்ட் ஆ இருக்கான்”
  “அவர பாரு எவ்ளோ அழகா மான்லியா இருக்காரு”
  “எவ்ளோ சின்சியரா வேலை பாக்குறாரு, நீனும் தான் இருக்கியே”

  — இப்படி எல்லாம் என்னை காமிச்சு மத்தவங்கள கம்பேர் பண்ணும போது எனக்கும் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்.//

  கண்டிப்பா… கண்டிப்பா… உங்களுக்கோ இருக்குமோ இல்லியோ எங்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்…. அந்த பெண்ணை நினைத்து.

 • 15. குந்தவை  |  7:31 முப இல் ஏப்ரல் 1, 2010

  //பதிவு சோக்காகீதா….. அதாங்கோ….மிஸ்டேக் ஆ ரண்டு தபா கமெண்ட் போட்டுட்டேன்.

  கோவிச்சுகினிங்கன்னா….. அத்த அழிசிடுங்க……//

  ரெம்ப நன்றி தம்பி. இப்படி நிறைய மிஸ்டேக்கை நாங்கள் சந்தோஷமாக அனுமதிப்போம்.

  ஆனா வேற வேற கமென்ட் போடனும் அவ்வளவுதான்.

 • 16. குந்தவை  |  8:49 முப இல் ஏப்ரல் 1, 2010

  //ரியல் லைப் ட்விஸ்ட் கதைய விட சில சமயம் சுவாரஸ்யமா தான் இருக்குது.

  படிக்க ரொம்ப இண்டரஸ்ட் ஆ இருந்துதுங்கோ… //

  ரசித்தமைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி தம்பி. வாழ்க்கை எப்போதும் சுவராஸ்யமானது தான்.

 • 17. குந்தவை  |  9:32 முப இல் ஏப்ரல் 1, 2010

  “இந்த சுரேஷ பாரு எவ்ளோ நல்லா படிக்கிறான்”
  “அவன பாரு எவ்ளோ ஸ்மார்ட் ஆ இருக்கான்”
  “அவர பாரு எவ்ளோ அழகா மான்லியா இருக்காரு”
  “எவ்ளோ சின்சியரா வேலை பாக்குறாரு, நீனும் தான் இருக்கியே”

  இப்படி எல்லாம் எழுதாமலே எங்களுக்கு தெரியும் சுரேஷ் தம்பி ரெம்ம்மம்ப நல்லவர், வல்லவர் என்று. ரெம்ம்ம்ப தன்னடக்கம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
மார்ச் 2010
தி செ பு விய வெ ஞா
« பிப்   ஏப் »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: