யதார்த்தம்.

ஏப்ரல் 9, 2010 at 9:56 பிப 18 பின்னூட்டங்கள்

 
“சார் ஊருலயிருந்து எப்ப வந்தீங்க. எல்லாரும் நல்லாயிருக்காங்களா?

“ம்… அவங்களுக்கென்ன என்ன…. எல்லோரும் நல்லாயிருக்காங்க”

 “என்ன சார் அதை இப்படி சோகமா சொல்றீங்க…..”

பெரிய மூச்சு விட்டபடி… ” என் மகள் மீது எனக்கு கொள்ளை பிரியம் தம்பி. எனக்கு அவளுடைய திருமணத்தின் போது சந்தோஷமாக இருந்தாலும்… அவளை பிரியப்போகிறோமே என்று எனக்கு நெஞ்சுவலி கூட வந்துவிட்டது. ஆனா பாரு எனக்கு இப்போது பார்க்கவே இஷ்டமில்லை.”

நானும் அவருடைய சோகத்தில் ஒருமுறை மூழ்கி “என்னாச்சு சார்”

“நான் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவன். என் மகளை நல்லவிதமாகத்தான் வளர்த்தேன், அவளும் நல்ல பிள்ளையா வளர்ந்தாள், நன்றாகப் படித்தாள் இப்போது அவளும் நல்ல சம்பாதிக்கிறாள் , அவள் கணவரும் ரெம்பவே சம்பாதிக்கிறார் அதில் எந்த குறையும் இல்லை. ஆனாப் பாருங்க  ரெம்ப டாம்பீகமாக செலவு செய்கிறார்கள். எனக்கு இது பிடிக்கவேயில்லை”

“அவர்களுக்கு என்ன வயது?”

“என் மகளுக்கு இப்போது இருபத்தைந்து ஆகிறது”

“இருபத்தைந்தில் இவ்வளவு சம்பாதிப்பவர்கள் செலவு செய்வது ஒன்றும் பெரிய தப்பில்லை. இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். இதற்க்கெல்லாம் நீங்கள் இவ்வளவு சோகமாக வேண்டாம்”

அவர் திரும்பவும் “இருந்தாலும் எனக்கு இது பிடிக்கவேயில்லை”

சிறிது கண்டிப்புடன், “உங்களுக்கு பிடிப்பதும் பிடிக்காதிருப்பதையும் பற்றி யாருக்கு கவலை. அவர்களுக்கு பிடித்திருக்கிறது. அவர்கள் அதில் சந்தோஷமாகவும் இருக்கின்றார்கள்… விடுங்க சார்”

அவர் முகமோ …….

***********************

ஊரிலிருந்து என் கணவருக்கு ஒரு தொலைபெசி அழைப்பு வந்தது.

என் கணவருடன் வேலை பார்ப்பவர், விடுமுறைக்கு இந்தியா சென்றுவிட்டு அங்கிருந்து அழைத்திருந்தார்

” எப்படி இருக்கீங்க சுந்தர், விடுமுறை எல்லாம் எப்படி இருக்கின்றது”

“நல்லாயிருக்கு பாண்டியன். நான் இந்த வியாழக்கிழமை  அங்கு வரலாம் என்றிருக்கிறேன்”

என் கணவர் சிறு அதிர்ச்சியுடன், “என்ன சுந்தர், இப்போது தானே சென்றீர்கள்.. இன்னும் நாட்கள் இருக்கிறதே?”

“அது என் பையனுக்கு பரிட்ச்சை நடக்கிறது. அவன் பிசிக்ஸ் யில் கொஞ்சம் வீக் அதான் கொஞ்சம் சொல்லி கொடுங்களேன் என்று என் மனைவி கூறியிருந்ததால் வந்தேன். ஒரு வாரம் சொல்லி கொடுத்ததில் அவன் கொஞ்சம் தேறிவிட்டான். ஆனால் இப்போது……….. இனிமேல் இங்கிருந்தால் அவன் படிக்கமாட்டான்… அதனால் நீங்கள் கிளம்புங்கள் என்கிறாள் …. அதனால் சீக்கிரம் வரலாம் என்றிருக்கிறேன்”

என் கணவருக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை

” இது தான் வாழ்க்கை ” என்று முடித்துகொண்டார்.

Advertisements

Entry filed under: அனுபவம்.

குழந்தைகளை கம்பேர் பண்ணுறீங்களா… மழலை நண்பர்கள்.

18 பின்னூட்டங்கள் Add your own

 • 1. karthik  |  2:11 முப இல் ஏப்ரல் 10, 2010

  சம்பாதிப்போம் செலவு செய்வோம் என்ற மன நிலையே இன்று பலரிடம் உள்ளது. அது மாற வேண்டும். இரண்டாவது வெகு அழகாக உள்ளது

 • 2. priyamudan pirabu  |  4:00 முப இல் ஏப்ரல் 10, 2010

  இப்ப என்னதான் சொல்ல வாரிக??
  ?
  ?
  ?

 • 3. priyamudan pirabu  |  4:01 முப இல் ஏப்ரல் 10, 2010

  நாந்தான் பர்ஸ்டு

 • 4. priyamudan pirabu  |  4:09 முப இல் ஏப்ரல் 10, 2010

  Entry Filed under: அனுபவம். .
  /????

  yarukku?

 • 5. priyamudan pirabu  |  4:10 முப இல் ஏப்ரல் 10, 2010

  ஆமாம் என் பதில் உங்க கண்மனி வந்து கமெண்ட் போட்டிருக்கு???
  ?
  ?

 • 6. குந்தவை  |  6:32 முப இல் ஏப்ரல் 10, 2010

  //இப்ப என்னதான் சொல்ல வாரிக??
  என்னன்னு புரியாமல் இருந்தாலும் கமென்ட் எழுதியதற்கு நன்றி.

 • 7. குந்தவை  |  6:51 முப இல் ஏப்ரல் 10, 2010

  //சம்பாதிப்போம் செலவு செய்வோம் என்ற மன நிலையே இன்று பலரிடம் உள்ளது. அது மாற வேண்டும்.

  வாங்க கார்த்திக்…. இன்று நிறைய வீட்டில் இந்த பிரச்சனை உள்ளது. ஆனால் ஒரு காலத்தில் luxury என்று கருதப்பட்டது இப்போது அத்தியாவசியமாக ஆகிவிட்டது என்பதும் ஒரு காரணம்.

  //இரண்டாவது வெகு அழகாக உள்ளது
  ரசித்தமைக்கு நன்றி.

 • 8. குந்தவை  |  6:52 முப இல் ஏப்ரல் 10, 2010

  //நாந்தான் பர்ஸ்டு

  😦

 • 9. குந்தவை  |  7:02 முப இல் ஏப்ரல் 10, 2010

  //Entry Filed under: அனுபவம். .
  /????
  yarukku?

  என்னுடைய அனுபவம் இல்லை தான் . தெரிஞ்சி வச்சிக்கிறது நல்லது தானே.

 • 10. குந்தவை  |  7:03 முப இல் ஏப்ரல் 10, 2010

  //ஆமாம் என் பதில் உங்க கண்மனி வந்து கமெண்ட் போட்டிருக்கு???
  நல்லவங்களுக்கு தான் சோதனை எப்படியெல்லாம் வருது. உண்மையை சொன்னால் நம்பமாட்டார்கள்.

 • 11. kanagu  |  4:25 முப இல் ஏப்ரல் 12, 2010

  என்ன சொல்றதுனு தெரியல அக்கா… செலவு செய்வது பிடித்தமானவைக்காக என்றால் வருத்தபட ஏதும் இல்லை…

 • 12. குந்தவை  |  5:05 முப இல் ஏப்ரல் 12, 2010

  //என்ன சொல்றதுனு தெரியல அக்கா… செலவு செய்வது பிடித்தமானவைக்காக என்றால் வருத்தபட ஏதும் இல்லை…

  இந்த விஷயத்தில் பதில் சொல்வதற்கு கொஞ்சம் கஷ்டம் தான்.

  என்னை பொறுத்தவரையில் நான் ரெம்ப செலவழிப்பதில்லை, ஆனால் எங்கப்பா எப்பவும் அதை தான் எனக்கு advice பண்ணுவார்.

 • 13. uma  |  4:21 பிப இல் ஏப்ரல் 12, 2010

  Hi Kunthavai,
  you write both of your experience very nice way.I heard the first one from lots of parents.

 • 14. குந்தவை  |  6:46 பிப இல் ஏப்ரல் 12, 2010

  Welcome Umaji.
  Thank for your comment.
  //I heard the first one from lots of parents.
  May be we will tell the same to our kids.

 • 15. soundr  |  12:34 பிப இல் ஏப்ரல் 13, 2010

  comedy is tragedy portrayed in long shot.
  but it appeared much closer in the second case.

 • 16. குந்தவை  |  3:10 பிப இல் ஏப்ரல் 13, 2010

  வாங்க சௌந்தர் .
  ரெம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க. வீட்டில் ஜுனியர் நலமா?
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 • 17. Janu  |  12:33 முப இல் ஏப்ரல் 15, 2010

  Hi Kunthavai,

  How are you? How is kanmani?

  I wanted to visit your blog for long time ..but no time ..not sure when i will get the time again. so ippave periya comment pottudaren 🙂

  mm..where to start? eppadi comments podarathunnu kooda maranthuduchchu pa 🙂

  I am happy some couple are at least spending their money ..I know many who never spend a penny but keep working and working and live like machines .. and expect their kids to do the same 😦

  வாங்க கார்த்திக்…. இன்று நிறைய வீட்டில் இந்த பிரச்சனை உள்ளது. ஆனால் ஒரு காலத்தில் luxury என்று கருதப்பட்டது இப்போது அத்தியாவசியமாக ஆகிவிட்டது என்பதும் ஒரு காரணம்.

  Yes Kunthavai. I did feel the same. Also people from our generation and the next might not even know the difference between luxury and need.

  take care,
  cheers
  Janu

 • 18. குந்தவை  |  7:56 பிப இல் ஏப்ரல் 16, 2010

  வாங்க ஜானு.
  வீட்டில் அனைவரும் நலமா? நாங்கள் அனைவரும் இங்கு நலம்.
  //eppadi comments podarathunnu kooda maranthuduchchu pa
  🙂
  //I am happy some couple are at least spending their money ..I know many who never spend a penny but keep working and working and live like machines .. and expect their kids to do the same
  yes. Even I knew many such people.

  நிறைய பொருப்புகளிடையில் … நியாபகமாக வந்து கருத்தை பதித்தமைக்கு நன்றி.
  Take Care.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஏப்ரல் 2010
தி செ பு விய வெ ஞா
« மார்ச்   மே »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

%d bloggers like this: