என்ன ஒரு மாற்றம்.

மே 3, 2010 at 7:10 முப 15 பின்னூட்டங்கள்

              நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது எங்க தலைமை ஆசிரியர் படுபயங்கர strictஆக  இருப்பாங்க. படிக்கிறோமோ இல்லையோ சரியான நேரத்திற்க்கு வரவேண்டும், சீருடைத் தவிர எதுவும் கூடுதலாக (நகை, தொங்கட்டான் போன்றவை) அணிந்து கொண்டுவரக்கூடாது. முக்கியமாக சடைபின்னி இறுக்கமாக ரிபன் வைத்து கட்டிகொண்டு வரவேண்டும்.

          எங்களுக்காவது பரவாயில்லை ஆசிரியர்கள் பாவம் வித விதமான நகைகள், கண்ணை கவரும் சேலை எல்லாம் கண்டிப்பாக உடுத்தகூடாது. குழந்தைகளை சீருடை அணியச்சொல்வதே அவர்கள் மத்தியில் ஏற்ற தாழ்வை உணரக்கூடாது என்பதற்க்காகத்தான்.  ஆசிரியகள் இப்படி பகட்டாக வந்தால் அது குழந்தைகளின் மனதில் ஏக்கத்தை உண்டாக்கிவிடும் என்பது அவருடைய எண்ணம்.

       சில வருடங்கள் களித்து நான் காலேஜ் படிக்கும் போது… எங்கம்மா படுசிரத்தையாக சேலை கட்ட ஆரம்பித்தார்கள். கட்டின சேலையை கட்டுவதற்க்கு குறைந்தது இரண்டு வாரமாவது இடைவெளிவிடுவார்கள். திடீரென்று ஏற்பட்ட மாற்றத்தை பற்றி நாங்கள் கேலி செய்ததால் நொந்து போய்,

        “என்ன பண்ணுறது.. என்னோட பிள்ளைங்க இருக்காங்களே… யாரையும் சமாளித்துவிடலாம் .. இந்த குட்டி குறுமானிகளை சமாளிப்பதுதான் பெரிய சவாலா இருக்கு.

         டீச்சர் இந்த சேலை நல்லாவே இல்லை இனிமேல் இதை கட்டக்கூடாது…

       டீச்சர் என்ன இது போன வாரம் தானே இந்த சேலையை கட்டுனீங்க….

            டீச்சர் இந்த செருப்பை மாத்துங்க.. பாருங்க பழசாயிடுச்சி… என்று தினமும் ஒரு கமெண்ட்”

         இப்போது…..

          எனக்கு தெரிந்த ஒருவர்  தனியார் பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கின்றார். அவங்க பள்ளிக்கூடத்தில் பெற்றோர்களை சந்திக்கும் தினத்தை ஒட்டி கலக்கலாக உடை அணிந்து கொண்டு கிளம்பினார். சிகை அலங்காரம், உதட்டு சாயம் என்று வித்தியாசமாக இருந்ததால், நான் முதலில் ஏதோ பார்ட்டிக்கு கிளம்புகிறார்களோ என்று நினைத்து கேட்டேன். அவங்க சொன்ன பதில் எனக்கு சிறிது அதிர்ச்சியைத் தான் கொடுத்தது.

         பள்ளிக்கூடத்தில் function இருந்தாலோ அல்லது இது மாதிரி meeting இருந்தாலோ ஆசிரியர்கள் கண்டிப்பாக சில dress கோடை பின்பற்ற வேண்டும் என்பது நிர்வாகத்தின் நிபந்தனை.

      ஒரு நாள் கண்மணி என்னிடம் வந்து,

 “அம்மா எங்க school functionக்கு வரும்போது, இப்படி சுடிதார் எல்லாம் போட்டு கொண்டு, முடியை இப்படி கட்டிக்கொண்டு வரக்கூடாது. ம்…. முடியை விரித்து போட்டு கொண்டு….. நல்ல பான்ட் ஷர்ட் போட்டுவிட்டு… அல்லது… ஜிகினே ஜிகினே சாரி கட்டிக்கொண்டு வாங்க… அப்பதான் அக்கா மாதிரி இருப்பீங்க”

 நான் பதில் ஒன்றும் கூறவில்லை சிரித்துக்கொண்டேன்.

Advertisements

Entry filed under: அனுபவம்.

மழலை நண்பர்கள். தயிர் செய்த மாயம்.

15 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Vijay  |  8:22 முப இல் மே 3, 2010

  கண்மணி படு விவரம் போலிருக்கே 🙂

 • 2. மஞ்சூர் ராசா  |  8:51 முப இல் மே 3, 2010

  இப்ப எல்லாம் டீச்சர்கள் பேஷன் ஷோவுக்கு போவது போல தானே போகிறார்கள்!

 • 3. குந்தவை  |  8:58 முப இல் மே 3, 2010

  //கண்மணி படு விவரம் போலிருக்கே
  வாங்க விஜய்.
  என்ன செய்ய கண்மணி கூட என்னை வைத்து காமெடி பண்ண ஆரம்பித்துவிட்டாள்.

 • 4. குந்தவை  |  9:05 முப இல் மே 3, 2010

  //இப்ப எல்லாம் டீச்சர்கள் பேஷன் ஷோவுக்கு போவது போல தானே போகிறார்கள்!

  யாரையும் புண்படுத்த சொல்லலைங்க. மாற்றத்தை சொன்னேன்.

 • 5. priya.  |  10:52 முப இல் மே 3, 2010

  ஹாய் குந்தவை
  டீச்சர் பாடு எப்போவும் கஷ்டம் தாங்க !நீங்க ஒரு கண்மனிய சமாளிக்க எவ்வளவு கஷ்ட படறீங்க !ஆனா
  அவங்க டீச்சர் 20 to 25 கண்மணிகளை வைத்து சொல்லி கொடுக்க எவவோளுவு சிரம படணும்!
  எனக்கு தெரிந்தவர் வீட்டு குழந்தைகள் பாருங்க ஆன்டி ! எங்கம்மா(டீச்சர்) எப்போ பார்த்தாலும் என் பசங்க
  என் புள்ளைங்க என்று வீட்டுக்கு வந்தாலும் ஸ்கூல் பத்தியே பேசிட்டு இருக்காங்க என்று குறை பட்டு கொண்டார்கள்!
  காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் டீச்சர் தொழில் உட்பட எல்லா தொழிலுக்கும் தேவை தான்.
  PS : கண்மணி சொன்னதாக சொன்ன பான்ட் ஷர்ட் மேட்டர் தான் ,கொஞ்சம் துப்பறிய வேண்டும்!!

  அன்புடன் பிரியா
  பின் குறிப்பு : ஏதோ சின்னதா prize கேட்டேன் என்று உங்க Myself ல நான் எழுதியதற்கு பதில் போடாமல் அடம் பிடித்தால்
  எப்படி குந்தவை !ஏதோ உங்களுக்கே நல்லா இருந்தால் சரிங்க !!

 • 6. kanagu  |  3:48 பிப இல் மே 3, 2010

  ha ha ha…. unmaiyileye periya matram than akka 🙂 🙂

  romba naala school pakkam pogathathu naala ipothaya updates theriyala… 🙂 neenga solliteenga…

  Kanmani-yoda request enachu???

 • 7. குந்தவை  |  7:01 முப இல் மே 4, 2010

  //ஹாய் குந்தவை டீச்சர் பாடு எப்போவும் கஷ்டம் தாங்க
  உண்மைதாங்க…

  //எங்கம்மா(டீச்சர்) எப்போ பார்த்தாலும் என் பசங்க
  என் புள்ளைங்க என்று வீட்டுக்கு வந்தாலும் ஸ்கூல் பத்தியே பேசிட்டு இருக்காங்க என்று குறை பட்டு கொண்டார்கள்!
  ஆகா … நாங்களும் எங்கம்மாவிடம் இப்படி சொல்வதுண்டு.

  //கண்மணி சொன்னதாக சொன்ன பான்ட் ஷர்ட் மேட்டர் தான் ,கொஞ்சம் துப்பறிய வேண்டும்!!
  ha…ha….

  //ஏதோ சின்னதா prize கேட்டேன் என்று உங்க Myself ல நான் எழுதியதற்கு பதில் போடாமல் அடம் பிடித்தால்
  எப்படி குந்தவை !ஏதோ உங்களுக்கே நல்லா இருந்தால் சரிங்க !!
  he…he…

 • 8. குந்தவை  |  7:09 முப இல் மே 4, 2010

  வாங்க கனகு.
  என்ன செய்ய பிள்ளைங்க school போக ஆரம்பிச்சாங்கன்னா அப்புறம் நீங்களும் படத்தை நிறுத்திவிட்டு பாடத்திற்கு விமர்சனம் எழுத ஆரம்பித்துவிடுவீர்கள்.

  // Kanmani-yoda request enachu???
  அளவுக்கு மீறி இருப்பதால் அளவுக்கு மீறி ஆசைபடுறதில்லைங்க தம்பி.

 • 9. அனாமதேய  |  8:17 பிப இல் மே 5, 2010

  //ஜிகினே ஜிகினே சாரி கட்டிக்கொண்டு வாங்க… அப்பதான் அக்கா மாதிரி இருப்பீங்க”

  ஜிகினே ஜிகினே சாரி vaangiyaacha?

 • 10. குந்தவை  |  4:15 முப இல் மே 6, 2010

  //ஜிகினே ஜிகினே சாரி vaangiyaacha?

  வாங்க பெயரில்லா நண்பரே…..
  அது மாதிரி ஐடியா இன்னும் வரல்ல…. ஒருவேளை இன்னும் சின்ன பிள்ளையான பிறகு அந்த ஆசை வரலாம்.

 • 11. Bhuvanesh  |  8:54 முப இல் மே 12, 2010

  டீச்சர் அழகா வரதுளையும் ஒரு நல்லது இருக்கு.. அப்பா தான் என்னை மாதிரி பசங்க எல்லாம் பாடத்துல ஒரு இன்ட்ரஸ்ட் வாரும்..

 • 12. குந்தவை  |  9:18 முப இல் மே 12, 2010

  வாங்க தம்பி புவனேஷு… ரெம்ப பேரு உங்களை தேடிட்டிருக்காங்கன்னு கேள்வி.

  //டீச்சர் அழகா வரதுளையும் ஒரு நல்லது இருக்கு.. அப்பா தான் என்னை மாதிரி பசங்க எல்லாம் பாடத்துல ஒரு இன்ட்ரஸ்ட் வாரும்..

  அது சரி… எப்படியாவது பாடத்தை படிச்சா சரிதான்.

  நீங்க school க்கு போகும்போது சொல்லுங்க .. நல்ல school ஆ பாத்து நான் சேர்த்துவிடுகிறேன்

 • 13. பிரியமுடன் பிரபு  |  10:07 முப இல் மே 15, 2010

  நல்ல பான்ட் ஷர்ட் போட்டுவிட்டு… அல்லது… ஜிகினே ஜிகினே சாரி கட்டிக்கொண்டு வாங்க… அப்பதான் அக்கா மாதிரி இருப்பீங்க”
  hh haa

 • 14. பிரியமுடன் பிரபு  |  10:07 முப இல் மே 15, 2010

  ஆள் பாதி ஆடை பாதி

 • 15. குந்தவை  |  4:18 முப இல் மே 16, 2010

  என்ன சிரிப்பு…. வில்லன் மாதிரி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
மே 2010
தி செ பு விய வெ ஞா
« ஏப்   ஜூன் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

%d bloggers like this: