தயிர் செய்த மாயம்.

மே 12, 2010 at 4:39 முப 26 பின்னூட்டங்கள்

                    (அம்மாக்களின் வலைப்பூவிற்காக  எழுதியது)               

           கண்மணி ஒரே குஷியாக இருந்தாள். இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து யாராவது வந்து இஷ்டம்போல் சாக்லேட் கொடுத்தது தான் சமாச்சாரம். அவர்கள் முன்னால் “நான் junk food எல்லாம் சாப்பிட மாட்டேன்” என்று அலம்பல் பண்ணி விட்டு… அவர்கள் சென்ற பின்னால் “எனக்குத்தான் தந்தார்கள் ” என்று சட்டம் பேசி அபேஸ் பண்ணும் வேலை நடந்தது.

                எத்தனை தடவை சொன்னாலும்….  நல்லதல்ல என்று தெரிந்தும் செய்பவளை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துகொண்டிருந்தேன். தினமும் சாப்பிடுகிற சாப்பாடு எல்லாம் ஒதுக்கிவைத்தாள்.

               அடுத்த நாள் , ஒரு பிறந்த நாள் விழாவுக்கு ரெம்ப சந்தோஷமாக கிளம்பிக்கொண்டிருக்கும் போது தான்… வயற்றிலிருந்து விபரீதம் ஆரம்பித்தது.சாக்லேட்டின் சாகசமா அல்லது வேறு ஏதாவது காரணமோ தெரியவில்லை … வயிற்றிலிருந்து வந்த சுனாமி wash Basinனில்  சங்கமிக்க … சோர்வாக அமர்ந்தாள். தொடர்ந்து மூன்று தடவை வாந்தி வந்ததால் எங்கும் போகமுடியாமல் படு சோகமாகவும், சோர்வாகவும் இருந்தவளை பார்க்க பாவாமாயிருந்தது.

              “இனிமேல் அங்கிள் கிட்ட சாக்லேட் வாங்கி தரக்கூடாது என்று சொல்லும்மா” என்று பரிதாபமாக சொன்னவளை.. அணைத்துகொண்டேன்.

              “சரியாய் போய்விடும்மா” என்று சமாதானப்படுத்திவிட்டு.. என்ன செய்யலாம் என்று யோசித்தோம். மருத்துவமனைக்கு செல்லவும் பயமாக இருந்தது. ஒரு நாள் கைவைத்தியத்தில் சரியாக வில்லை என்றால் மருத்துவரை அணுகலாம் என்று முடிவெடுத்தேன்.

           இருக்கவே இருக்கிறது தயிர்.

 1. பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா,  குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

2. ஜீரண சக்தியை அதிகரிக்கும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

3. வாயுத் தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.

4. தயிரில் உள்ள புரதச்சத்து சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும் தன்மையுடையது.

          இவ்வளவு மருத்துவ குணமுடைய தயிரை கையில் வைத்துவிட்டு …சும்மா இருந்தால் எப்படி முயற்ச்சி செய்வோமே என்று…

 காலையில்… தயிர் இட்லி…

மதியம் தயிர் சாதம்….

மாலை தயிர்…

இரவும் தயிர் இட்லி

        என்று ஒரு நாள் முழுவதும் தயிர் விரதம் இருக்க… வயிறு சுத்தமானது…

 முக்கியமான குறிப்பு : தயிருடன்  சிறிது உப்பு சேர்க்கலாம், அனால் சீனியை  சேர்த்துவிடாதிர்கள்   .. அதனுடைய முக்கிய பலனே கிடைக்காமல் போய்விடும் .

        இப்போதெல்லாம் நிஜமாகவே அவளாக சாக்லேட், junk food எல்லாம் அளவோடு நிறுத்தி கொள்வாள்.(எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை).

Advertisements

Entry filed under: ஆரோக்கியம். Tags: , .

என்ன ஒரு மாற்றம். கண்மணியின் சந்தேகம்

26 பின்னூட்டங்கள் Add your own

 • 1. priya.r  |  6:14 முப இல் மே 12, 2010

  ஹாய் குந்தவை!
  நான் தயிர் பத்தி படித்ததை இங்கு சொல்லுட்டுமா

  பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் எளி தாக செரிக்கக் கூடிய உணவாகும். தையாமின் உயிர்ச்சத்து தயிரில் அதிகமாக உள்ளது. கல்சியம் மற்றும் பொஸ்பரஸ் தாதுக்களை தயிர் அதிகமாக வழங்குவது மட்டுமின்றி, குடல்களிலிருந்து இரத்தத்தில் உணவை கிரகிக்கவும் உதவுகிறது. மேலும் வயிற்றுப் போக்கு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய் களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

  இனிப்புத் தயிரிலுள்ள நுண்ணுயிர்கள் அபாயகரமான நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வாய்ந் தவை. இதனால் வயிற்றுப் போக்கு மலச்சிக்கல் போன்றவைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். இரத்தத்தில் கொழுப்பு உயர்வதையும், அதனால் ஏற்படும் மாரடைப் பையும் தடுக்கின்றது. பாலில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீமில் கொழுப்புச்சத்து, புரோட்டீன், கார்போஹை தரேட், கல்சியம், மங்கனீசியம், பொஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், சல்பர், சிட்ரிக் அமிலம் ஆகியவை உள்ளன.
  இப்படிக்கு
  பாசமுடன் பிரியா

 • 2. குந்தவை  |  6:30 முப இல் மே 12, 2010

  வருகைக்கும் , உபயோகமான கருத்துக்கும் ரெம்ப நன்றி பிரியா.

 • 3. priya.r  |  11:45 முப இல் மே 12, 2010

  ஹலோ குந்தவை!
  நீங்க ரெம்ப ன்னு எழுதி எங்களை ரொம்ப இம்ப்ரெஸ் செய்யறிங்க !!
  அப்புறம் வரும் வாரங்களில் ஏதோ புது முயற்சிகள் உங்கள் ப்ளோக்ல
  செய்வதாக கேள்வி !
  எதிர் பார்ப்புடன் பிரியா

 • 4. kanagu  |  1:58 பிப இல் மே 12, 2010

  Epdiyo Kanmaikku Chocolate correct ah sapdura alavu therinjiduchu 🙂 🙂

 • 5. Uma  |  6:09 பிப இல் மே 12, 2010

  Hi Kunthavai,
  Very useful tips.Hope Kanmani is feeling better right now.
  take care

 • 6. குந்தவை  |  4:16 முப இல் மே 13, 2010

  //நீங்க ரெம்ப ன்னு எழுதி எங்களை ரொம்ப இம்ப்ரெஸ் செய்யறிங்க !!
  அடப்பாவமே….

  //அப்புறம் வரும் வாரங்களில் ஏதோ புது முயற்சிகள் உங்கள் ப்ளோக்ல
  செய்வதாக கேள்வி !
  ஆகா… இது தான் போட்டு எடுக்கிறதா..

 • 7. குந்தவை  |  4:21 முப இல் மே 13, 2010

  //Epdiyo Kanmaikku Chocolate correct ah sapdura alavu therinjiduchu

  வாங்கய்யா… எத்தனை நாளைகு அது நடைமுறையில் இருக்கும் என்பது தெரியவில்லை.

  நம்மளமாதிரி தானே அவங்களும் இருப்பாய்ங்க… எத்தனை விஜய் படம் பாத்திருக்கோம் இருந்தாலும் திரும்ப திரும்ப போய் அடி வாங்கோம்மில்ல…. அத மாதிரி தான்…

 • 8. குந்தவை  |  4:23 முப இல் மே 13, 2010

  வாங்க உமா. கண்மணி நன்றாக இருக்கிறாள். அன்புக்கு நன்றி.

 • 9. உதய தாரகை  |  11:09 முப இல் மே 13, 2010

  தயிர் வைத்தியம் சமயோசிதமானது. பொதுவாகவே, கஷ்டங்களை அனுபவிப்பதன் பலனில் தான், அடுத்த கட்டத்திற்கான ஆர்வத்தின் தயாரிப்பு துளிர்த்து விடுகிறது. இது சிறு குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் எல்லோருக்குமே பொருந்தும் இயல்பான விடயந்தான். இந்த ஆழமான கருத்தை ஒரு சம்பவத்தினூடு அழகியலாகச் சொன்ன விதம் கவிதை.

  மறுமொழிக்குள் மறைந்திருந்த நகைச்சுவை கண்டு சிரிப்பை அடக்க முடியாமல் போய்விட்டது. போங்கள்.. Metaphor நிலைக்கு வந்துள்ள விடயம் காலத்திற்கேற்ற சுவை. எல்லாருமே இப்படித்தான் யோசிக்கிறார்களா?

  //நம்மளமாதிரி தானே அவங்களும் இருப்பாய்ங்க… எத்தனை விஜய் படம் பாத்திருக்கோம் இருந்தாலும் திரும்ப திரும்ப போய் அடி வாங்கோம்மில்ல…. அத மாதிரி தான்…//

  தொடர்ந்தும் கலக்குங்க.. ஆமா.. அதென்ன புது விடயங்கள் அவையில் அரங்கேறுகிறதாமே! அவை அறிய ஆவலாய் இருக்கிறது. மாற்றங்களை மட்டுந்தான் இப்போதெல்லாம் எங்கும் ரசிக்க முடிகிறது. ஏனெனில் அது மட்டுந்தான் மாறாமல் இருக்கிறது.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 • 10. குந்தவை  |  12:00 பிப இல் மே 13, 2010

  //இந்த ஆழமான கருத்தை ஒரு சம்பவத்தினூடு அழகியலாகச் சொன்ன விதம் கவிதை.

  Thank You.

  //தொடர்ந்தும் கலக்குங்க.. ஆமா.. அதென்ன புது விடயங்கள் அவையில் அரங்கேறுகிறதாமே! அவை அறிய ஆவலாய் இருக்கிறது. மாற்றங்களை மட்டுந்தான் இப்போதெல்லாம் எங்கும் ரசிக்க முடிகிறது. ஏனெனில் அது மட்டுந்தான் மாறாமல் இருக்கிறது.

  மாற்றம் ஒன்றும் பெரிதாகயில்லை, என்னுடன் ஒரு தோழியும் இணைந்து கூதுதலாக எழுத சம்மதித்திருக்கிறார்.

 • 11. உதய தாரகை  |  12:06 பிப இல் மே 13, 2010

  அப்படியா சங்கதி.. அவையில் பல புலவிகளின் சொல்லாடல் தொடரப்போகிறது என்கிறீர்கள் அப்படித்தானே? வாழ்த்துக்கள்.

  அப்படியாயின், ஒவ்வொரு நாளும் புதிய பதிவுகளை எதிர்பார்க்கலாம் போலும்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 • 12. குந்தவை  |  6:18 பிப இல் மே 13, 2010

  //அப்படியா சங்கதி.. அவையில் பல புலவிகளின் சொல்லாடல் தொடரப்போகிறது என்கிறீர்கள் அப்படித்தானே? வாழ்த்துக்கள்.

  ஆரம்பிக்கவேயில்லை இன்னும்…. அதற்குள் வாழ்த்து சொல்லிவிட்டீர்கள் இனிமேல் கண்டிப்பாக ஆரம்பிக்க வேண்டியது தான்.

  //அப்படியாயின், ஒவ்வொரு நாளும் புதிய பதிவுகளை எதிர்பார்க்கலாம் போலும்.

  ஆகா…

 • 13. பிரியமுடன் பிரபு  |  11:56 பிப இல் மே 13, 2010

  நான் junk food எல்லாம் சாப்பிட மாட்டேன்” என்று அலம்பல் பண்ணி விட்டு… அவர்கள் சென்ற பின்னால் “எனக்குத்தான் தந்தார்கள் ” என்று சட்டம் பேசி அபேஸ் பண்ணும் வேலை நடந்தது.
  ///////////////

  நியாயம் நியாயம்தன் முக்கியம்

 • 14. பிரியமுடன் பிரபு  |  11:57 பிப இல் மே 13, 2010

  இவ்வளவு மருத்துவ குணமுடைய தயிரை கையில் வைத்துவிட்டு …சும்மா இருந்தால் எப்படி முயற்ச்சி செய்வோமே என்று…
  ////////

  நன்றி

 • 15. குந்தவை  |  4:54 முப இல் மே 14, 2010

  //நியாயம் நியாயம்தன் முக்கியம்

  ha… ha……

 • 16. celia  |  10:31 முப இல் மே 15, 2010

  hi, neengal tamil-il padhiya enna software use panreenga?

 • 17. குந்தவை  |  4:30 முப இல் மே 16, 2010

  நான் Google தான் பயன்படுத்துவேன்.

 • 18. goma  |  5:42 முப இல் மே 17, 2010

  கையிலே வெண்ணையை வச்சுகிட்டு நெய்க்கு அலையற மாதிரி,
  வயிற்று உபாதைக்கு,
  கைலே தயிரை வச்சுகிட்டு,டாக்டர் டாக்டரா அலையிறோம்

 • 19. குந்தவை  |  5:47 முப இல் மே 17, 2010

  வாங்க கோமதி. நல்லாச் சொன்னீங்க. என்ன செய்ய பயம் தான் காரணம்.

 • 20. priya.r  |  6:40 முப இல் மே 23, 2010

  இனிமேல் அங்கிள் கிட்ட சாக்லேட் வாங்கி தரக்கூடாது என்று சொல்லும்மா” என்று பரிதாபமாக சொன்னவளை.. அணைத்துகொண்டேன்

  குந்தவைக்கு ! இந்த வரிகள் .,அதில் நீங்க தகுந்த சொற்களை தேர்ந்து எடுத்து கையாண்ட நேர்த்தி
  ரமணி சந்திரன் கதைகளை படிக்கும் பொழுது உருவாகும் நிறைவை தருகிறது .
  All the best! Keep it up !!
  pasamudan priya

 • 21. குந்தவை  |  7:32 முப இல் மே 23, 2010

  //குந்தவைக்கு ! இந்த வரிகள் .,அதில் நீங்க தகுந்த சொற்களை தேர்ந்து எடுத்து கையாண்ட நேர்த்தி

  ரெம்ப நன்றிங்கோ.

  //ரமணி சந்திரன் கதைகளை படிக்கும் பொழுது உருவாகும் நிறைவை தருகிறது .
  மக்களே… இதற்க்கு நான் பொறுப்பல்ல. ( பிரியா.. இப்படியெல்லாம் காமெடி பண்ணாதீங்க…)

 • 22. priya.r  |  12:18 பிப இல் மே 24, 2010

  நீங்க தான் இப்போ காமெடி பண்ணறீங்க !!
  கண்மணி சொல்ற மாதிரி நீங்க சமத்து அம்மாவாம் !!
  பொறுப்பா கதை ஒன்னு எழுதுவீர்களாம்!! நாங்க எல்லாம் ரசித்து படிப்போமாம் !!

 • 23. குந்தவை  |  4:49 முப இல் மே 25, 2010

  //பொறுப்பா கதை ஒன்னு எழுதுவீர்களாம்!! நாங்க எல்லாம் ரசித்து படிப்போமாம் !!

  இப்பவே நிறைய பேரு பயந்து என்னுடைய ப்ளாகுக்கு வர்றதில்ல ….. அப்புறம் கதை எழுதினா வருகிற நீங்களும் காணாம போயிடுவீங்க.

 • 24. priya.r  |  6:07 முப இல் மே 25, 2010

  அப்ப கதை எழுதற எண்ணம் இருக்கு ! எழுதனா நாங்க குறை சொல்லுவோம் இல்லன்னா காணாம போய் விடுவோமா !
  இந்த கதையெல்லாம் எங்ககிட்ட வேண்டாம் !!

 • 25. குந்தவை  |  4:23 முப இல் மே 26, 2010

  குறை சொல்லுவீங்கன்னு எல்லாம் நான் கவலை பட்டது கிடையாது பிரியா. கற்பனை வரணுமே கதை எழுத.

 • 26. priya.r  |  6:11 முப இல் மே 29, 2010

  உங்களுக்கு கற்பனைக்கு பஞ்சம் ! இதை நாங்க நம்புனுமாக்கும் ! போங்க ! உங்க கூட டூ !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
மே 2010
தி செ பு விய வெ ஞா
« ஏப்   ஜூன் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

%d bloggers like this: