கண்மணியின் சந்தேகம்

மே 19, 2010 at 4:11 முப 23 பின்னூட்டங்கள்

ஒரு நாள் திடீரென்று கண்மணி என்னிடம்

அம்மா நீங்களும் அப்பாவும் ஒரே காலேஜ்லேயா படிச்சீங்க?” என்று கேட்டாள்.

இந்தம்மாவுக்கு பெரிய பெரிய டவுட் எல்லாம் இப்பவே வருதே என்று ஒரு நிமிஷம் முழித்தாலும்,

  “இல்லம்மா…. அப்பா கோவில்பட்டியில் படித்தார்… நான் நாகர்கோவிலிலும், திருச்சியிலும் படித்தேன்

“ம்….. ஏன் நீங்க ஒரே காலேஜில் படிக்கவில்லை?”

எனக்கு அப்பாவை அப்போது தெரியாதே.. தெரிஞ்சிருந்தா அப்பாகூட படிச்சிருப்பேன்”  (தெரிஞ்சிருந்தா அப்பவே அலர்ட்டாயிருப்பார்…. விதி வலியதுன்னு சும்மாவா சொன்னாங்க)

அய்ய…. காலேஜ் படிக்கும் போதெல்லாம் உனக்கு அப்பாவை தெரியாதா அம்மா?  நான் பேபியா இருக்கும் போதே எனக்கு அப்பாவை தெரியுமே?”

கண்மணீஈஈஈஈஈஈஈஈ….. முடியல.

***************************

“கண்மணி கொஞ்ச நேரம் படிக்கலாமா”

“எனக்கு பயங்கரமா வயிரு வலிக்குதம்மா…. நான் கொஞ்ச நேரம் போய் படுத்துவிட்டு வருகிறேன்

   காய்ச்சல் என்று சொன்னால் நெற்றியில் கை வைத்து கண்டுபிடித்துவிடுவார்கள் என்று யோசித்து நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது சொல்லும் சாக்குபோக்கை… சர்வ சாதாரணமாக சொல்லி escapeபாகும் கண்மணியை பார்த்தால்… வருங்காலத்தில் என்னை விட நல்லப்பிள்ளையாக வருவதற்க்கு அத்தனை குணாதிசயங்களும் இப்பவே தெரிகிறது.

 

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா.

தயிர் செய்த மாயம். குணியாரம்

23 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Karthik  |  4:13 முப இல் மே 19, 2010

  குழந்தைகள் உலகமே தனி .. என் பொண்ணு என்ன கேள்வி கேக்க போறான்னு இப்பவே பயமா இருக்கு

 • 2. குந்தவை  |  4:22 முப இல் மே 19, 2010

  வாங்க கார்த்திக்…

  //குழந்தைகள் உலகமே தனி
  கண்டிப்பா…

  //என் பொண்ணு என்ன கேள்வி கேக்க போறான்னு இப்பவே பயமா இருக்கு
  பயப்படாதீங்க…. ரசிக்கலாம்.

 • 3. priya  |  6:50 முப இல் மே 19, 2010

  4 -5 வயதில் கண்மணி கேட்கும் கேள்விகளை பார்க்கும் பொழுது இனி வரும் ஆண்டுகளில் உங்களை நினைக்கும் பொழுது கொஞ்சம் பாவமாக தான் இருக்கிறது அல்லது இப்படி கூட நடக்கலாம் பதில் சொல்லி சொல்லி நீங்க பெரிய மேதாவி ஆகிவிடுவீங்க!! பாருங்களேன் !!

  //“எனக்கு அப்பாவை அப்போது தெரியாதே.. தெரிஞ்சிருந்தா அப்பாகூட படிச்சிருப்பேன்“ (தெரிஞ்சிருந்தா அப்பவே அலர்ட்டாயிருப்பார்…. விதி வலியதுன்னு சும்மாவா சொன்னாங்க)

  ஆஹா!! உங்களுக்கு என்ன குறைச்சல் குந்தவை !!
  கோடி ரூபா கொடுத்தாலும் குந்தவை மாதிரி ஒருத்தர் கிடைக்க மாட்டாங்க என்பது எங்களது தாழ்மையான அபிப்ராயம்!!

  நட்புடன் பிரியா

 • 4. குந்தவை  |  7:54 முப இல் மே 19, 2010

  //இப்படி கூட நடக்கலாம் பதில் சொல்லி சொல்லி நீங்க பெரிய மேதாவி ஆகிவிடுவீங்க!! பாருங்களேன் !!
  அப்படீன்னா… இப்ப மக்குன்னு சொல்றீங்க…

  //ஆஹா!! உங்களுக்கு என்ன குறைச்சல் குந்தவை !!
  கோடி ரூபா கொடுத்தாலும் குந்தவை மாதிரி ஒருத்தர் கிடைக்க மாட்டாங்க என்பது எங்களது தாழ்மையான அபிப்ராயம்!!
  முடியெல்லாம் நட்டுக்கிட்டு நிக்குது… பிரியா

 • 5. Vijay  |  10:27 முப இல் மே 19, 2010

  \\நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது சொல்லும் சாக்குபோக்கை… சர்வ சாதாரணமாக சொல்லி escapeபாகும் கண்மணியை பார்த்தால்\\
  தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’னு சும்மாவா சொன்னாங்க 🙂

 • 6. kanagu  |  3:49 பிப இல் மே 19, 2010

  /*அய்ய…. காலேஜ் படிக்கும் போதெல்லாம் உனக்கு அப்பாவை தெரியாதா அம்மா? நான் பேபியா இருக்கும் போதே எனக்கு அப்பாவை தெரியுமே?”

  கண்மணீஈஈஈஈஈஈஈஈ….. முடியல.*/

  mudiyala 😆 😆 Kanmani unmaiyaliye sema cute 🙂 🙂

  /*காய்ச்சல் என்று சொன்னால் நெற்றியில் கை வைத்து கண்டுபிடித்துவிடுவார்கள் என்று யோசித்து நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது சொல்லும் சாக்குபோக்கை… சர்வ சாதாரணமாக சொல்லி escapeபாகும் கண்மணியை பார்த்தால்… */

  Naanum ipdi than 6th padikum podhellam pannuven… kanmani vayasila ellam perusa padhicha mathiri nyabagam illa… 😀 😀

 • 7. Uma  |  4:18 பிப இல் மே 19, 2010

  Hi kunthavai,
  Kanmani is so cute.Now a days kids are asking lots of question.
  Particularly about us.some time it’s really fun to explain,but sometime it’s hard to explain.(like my son asked me where did you meet dad,because you guys didn’t go to the same college.I explain about arranged marriage and our culture ..every thing.still lots of question comming)
  Thank you for share this with us.
  take care

 • 8. குந்தவை  |  4:19 முப இல் மே 20, 2010

  //தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’னு சும்மாவா சொன்னாங்க

  🙂

 • 9. குந்தவை  |  4:22 முப இல் மே 20, 2010

  //Naanum ipdi than 6th padikum podhellam pannuven…

  🙂

 • 10. குந்தவை  |  4:25 முப இல் மே 20, 2010

  // where did you meet dad,because you guys didn’t go to the same college
  ha…ha….

  //some time it’s really fun to explain,but sometime it’s hard to explain
  yes … its true.

 • 11. priya.r  |  6:54 முப இல் மே 20, 2010

  ஏன் இப்படி எடுத்து கொள்ளலாமே ! முதலில் இருந்தே நீங்க மேதாவி அப்புறம் படிபடியாக பெரிய (அதி) மேதாவி ஆகிட்டு வரிங்க என்று !!

  //முடியெல்லாம் நட்டுக்கிட்டு நிக்குது… பிரியா

  மெய் சிலிர்க்கிறது;மயிர் சூட்ச்செரிகிறது என்று தான் கேள்வி பட்டு இருக்கிறேன்.,
  இதென்ன பயங்கரமான புது கண்டுபிடுப்பு ! எதாவது திகில் கதை எழுத ஒத்திகையா! என்ன !!

  பயமறியா பிரியா!

 • 12. குந்தவை  |  7:56 முப இல் மே 20, 2010

  எடுத்துக்கலாம்… ஏதோ நீங்க சொல்றீங்க, அதனால அப்படியே எடுத்துக்கிறேன்.

  //இதென்ன பயங்கரமான புது கண்டுபிடுப்பு ! எதாவது திகில் கதை எழுத ஒத்திகையா! என்ன !!
  பயமறியா பிரியா!
  ஒத்திகை பார்த்து என்ன புண்ணியம்… அது தான் நீங்க பயப்பட மாட்டேன் என்று சொல்லிட்டீங்களே.

 • 13. goma  |  10:32 முப இல் மே 20, 2010

  கண்மணிகளுக்கெல்லாம் பதில் சொல்லி முடியாது.
  கண்ணில் விரலை விட்டு ஆட்டிடும்கள்

 • 14. குந்தவை  |  11:59 முப இல் மே 21, 2010

  வாங்க கோமதி… உங்களாலே முடியாதுன்னா… ரெம்ப கஷ்டந்தானுங்கோ..

 • 15. priya.r  |  1:36 பிப இல் மே 21, 2010

  நீங்க கண்மணிகிட்ட உரையாடி மகிழ்த்த(!) அனுபவங்களை எங்கள்ளுக்கு தெரிவிப்பது போல
  கண்மணி உங்களிடம் பேசி முடித்த பிறகு ,அம்மா ! முடியலம்மா மாஆஆஆஆ என்று ஏதாவது சொல்லியதையும்
  எங்களுக்கு தெரிவிப்பீர்களா !

 • 16. குந்தவை  |  4:22 முப இல் மே 23, 2010

  //கண்மணி உங்களிடம் பேசி முடித்த பிறகு ,அம்மா ! முடியலம்மா மாஆஆஆஆ என்று ஏதாவது சொல்லியதையும்
  எங்களுக்கு தெரிவிப்பீர்களா !

  ம்…. என் மானத்தை வாங்குறதுன்னு முடிவுபண்ணிட்டீங்க . நாங்க எல்லாம் ரெம்ப உஷார்பார்ட்டீங்க அதை எல்லாம் மூச்சு விடமாட்டோம்.

 • 17. priya.r  |  12:01 பிப இல் மே 24, 2010

  அப்போ எங்க சந்தேகம் நெஜம் தான்னு ஒப்புதல் கொடுக்குறீங்க இல்லையா !

 • 18. குந்தவை  |  4:22 முப இல் மே 25, 2010

  இதத்தான் உசுப்பேத்திரதுன்னு சொல்லுவாங்க…. பிரியா…

 • 19. priya.r  |  5:46 முப இல் மே 25, 2010

  சொல்லுங்க சொல்லுங்க காத்துகிட்டு இருக்கோம் !!

 • 20. ரெஜோலன்  |  3:05 பிப இல் மே 25, 2010

  கலக்கலான கேள்விகள் கண்மனி எப்பவுமே ஸ்மார்ட் . இப்பவே முடியலன்னா இன்னும் நாள் இருக்கே குந்தவை . . அதுனால உங்க ஸ்மார்ட் இன்னும் அதிகமாகணும் . . . .அதுக்கு என்னால முடிஞ்ச அறிவுரை . . . கண்மனியை இன்னும் உன்னிப்பா கவனிங்க (பாடம் படிக்க) ஹ ஹ ஹ

 • 21. குந்தவை  |  4:22 முப இல் மே 26, 2010

  //அதுனால உங்க ஸ்மார்ட் இன்னும் அதிகமாகணும் . . . .
  ம்… முயற்சி பண்ணுகிறேன் .

  //கண்மனியை இன்னும் உன்னிப்பா கவனிங்க (பாடம் படிக்க) ஹ ஹ ஹ
  என்ன ஒரு வில்லத்தனமா சிரிக்கிராங்கய்யா.

 • 22. அனாமதேய  |  12:15 பிப இல் ஜூன் 9, 2010

  nangu rachichu ruchichupaddiramathiri ullathu

 • 23. குந்தவை  |  9:41 முப இல் ஜூன் 10, 2010

  //nangu rachichu ruchichupaddiramathiri ullathu

  வாங்க பெயரில்லா பெருமானே … உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
மே 2010
தி செ பு விய வெ ஞா
« ஏப்   ஜூன் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

%d bloggers like this: