புத்திசாலித்தனமான கேள்வி(!).

ஜூன் 6, 2010 at 6:53 முப 28 பின்னூட்டங்கள்

                   ஒரு குட்டி பையன் அவனுடைய அம்மாவிடம்

                 “அம்மா.. பாப்பா எப்படி வருது” என்று கேட்பான்.

அம்மா சற்று திகைப்புடன், “நீ இப்ப ரெம்ப சின்ன பையன்… கொஞ்சம் வளர்ந்த பிறகு சொல்கிறேன்” என்று பதில் தருவாங்க.

உடனே அந்த சிறுவன், பாலை எடுத்து மடமடவென்று குடிப்பதாக அந்த விளம்பரம் முடியும்.

அனேகமாக நிறைய பேர் இந்த விளம்பரத்தை பார்த்திருக்கலாம். என்னடா விளம்பரத்தை விளம்பரம் பண்ணுரா.. என்று கோச்சுக்காதீங்க. நான் சொல்ல வந்த விஷயமே வேற.

சமீபத்தில் ஒரு வார இதழில் இந்த விளம்பரத்தை விமர்சித்து ஒருத்தங்க எழுதியிருந்தாங்க. நான் அவங்கள குறை சொல்லவில்லை… ஆனால் அவங்க கேள்வி எனக்கு உடன்பாடில்லை அதனால உங்களிடம் கேட்கிறேன்.

என்னன்னா…

“நான் எப்போது எஞ்சினியர் ஆவேன் என்றோ அல்லது டாக்டர் ஆவேன் என்று கேள்வியை புத்திசாலித்தனமா கேட்கவைத்திருக்கலாமே” என்று ஆற்றாமையோடு கேள்வி கேட்டிருந்தார்.

புத்திசாலிப்பிள்ளைங்க இப்படித்தான் கேள்விகேட்கணுமா?

பிள்ளைங்களை.. இது தான் படிக்கணும் என்று ஏற்கனவே படுத்துகிற கொடுமைப் போதாதென்று இப்படித்தான் சிந்திக்க வேண்டும்… இப்படித்தான் சந்தேகம் வரவேண்டும்… என்று அவர்களுக்காக நாம் வரைமுறை வகுப்பது சரியா?

Advertisements

Entry filed under: மனதில் தோன்றியவை.

குணியாரம் அழகிய ராட்சஸி……..

28 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Karthik  |  6:56 முப இல் ஜூன் 6, 2010

  ஹ்ம்ம் / இப்ப விளம்பரம்லாம் வேண்டாம். தானவே கேட்க்கும். என் சொந்தகார பொண்ணு அவ அம்மாகிட்ட உன் கல்யாணதப்ப நான் எங்க இருந்தேன்னு கேட்டு படுத்துவா

 • 2. குந்தவை  |  7:55 முப இல் ஜூன் 6, 2010

  //அவ அம்மாகிட்ட உன் கல்யாணதப்ப நான் எங்க இருந்தேன்னு கேட்டு படுத்துவா

  வாங்க கார்த்திக். அட… நல்ல கேள்விதான். அவங்களுக்கு தோணுகிறதை நம்மிடம் தானே கேட்பார்கள்.

 • 3. kanagu  |  8:05 முப இல் ஜூன் 6, 2010

  நம்ம ஊர்ல தான் எஞ்சினியர், டாக்டர் தவிர வேற எத படிச்சாலும் மதிக்க மாட்டாய்ங்களே… 😦

 • 4. குந்தவை  |  8:24 முப இல் ஜூன் 6, 2010

  தம்பி அதுசரிதான்… இருந்தாலும் சந்தேகம் கூட இப்படி கேட்டால் தான் நல்லது என்று நினைப்பது அராஜகம்

 • 5. ஜி.ஜி  |  8:34 முப இல் ஜூன் 6, 2010

  //பிள்ளைங்களை.. இது தான் படிக்கணும் என்று ஏற்கனவே படுத்துகிற கொடுமைப் போதாதென்று இப்படித்தான் சிந்திக்க வேண்டும்… இப்படித்தான் சந்தேகம் வரவேண்டும்… என்று அவர்களுக்காக நாம் வரைமுறை வகுப்பது சரியா?//

  குந்தவை…வயதுக்கேற்றதா? என்பதை பெற்றோர் தீர்மானிக்க கடமைபட்டிருக்கிறார்கள். பெற்றோருக்கு அந்த பொறுப்பு இருக்கு. நாசூக்காக குழந்தைகளுக்கு பதில் தந்து, அவர்களுடையை களங்கமற்ற இயல்பை ரசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டிய தன்மை பெற்றோருக்கு இருத்தல் அவசியம்.

 • 6. குந்தவை  |  9:07 முப இல் ஜூன் 6, 2010

  //குந்தவை…வயதுக்கேற்றதா? என்பதை பெற்றோர் தீர்மானிக்க கடமைபட்டிருக்கிறார்கள். பெற்றோருக்கு அந்த பொறுப்பு இருக்கு. நாசூக்காக குழந்தைகளுக்கு பதில் தந்து, அவர்களுடையை களங்கமற்ற இயல்பை ரசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டிய தன்மை பெற்றோருக்கு இருத்தல் அவசியம்.

  உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் ஜி.ஜி.
  சில விஷயங்களை நாசூக்காக அவர்களிடம் சமாளிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை.

 • 7. Karthik Narayan  |  10:02 முப இல் ஜூன் 6, 2010

  //இருந்தாலும் சந்தேகம் கூட இப்படி கேட்டால் தான் நல்லது என்று நினைப்பது அராஜகம்

  +1. குழந்தைங்க மட்டும் தான் இன்னும் ஸ்பான்டேனியஸா இருக்காங்க இந்த உலகத்துல. அப்படியே இருக்கட்டுமே. 🙂

 • 8. பிரியமுடன் பிரபு  |  2:56 பிப இல் ஜூன் 6, 2010

  பிள்ளைங்களை.. இது தான் படிக்கணும் என்று ஏற்கனவே படுத்துகிற கொடுமைப் போதாதென்று இப்படித்தான் சிந்திக்க வேண்டும்… இப்படித்தான் சந்தேகம் வரவேண்டும்… என்று அவர்களுக்காக நாம் வரைமுறை வகுப்பது சரியா?
  //////////////

  புத்திசாலித்தனமான கேள்வி…………

  .
  (புத்திசாலித்தனமான பதில் ஹி ஹி!).

 • 9. Bhooma  |  4:22 முப இல் ஜூன் 7, 2010

  ஆறாங்கிளாசில் இருந்து குழந்தைக்கு ஐ.ஐ.டி கோச்சிங் , மெடிக்கல் கோச்சிங் என்று ஆரம்பிகிறார்கள். எப்பொழுது தான் குழந்தைகளை அவர்கள் விருப்பப்படி இருக்க விடுவார்களோ?

 • 10. குந்தவை  |  4:23 முப இல் ஜூன் 7, 2010

  வாங்க கார்த்திக் தம்பி. ரெம்ப சரியா சொன்னீங்க. 🙂
  வளர்ந்த பிறகு எங்க இயல்பா பேசமுடியும்? ஆயிரத்தெட்டு விஷயங்களை அலசி ஆராய்ந்து தான் வாயே திறக்க முடியும். 🙂

 • 11. குந்தவை  |  4:25 முப இல் ஜூன் 7, 2010

  //(புத்திசாலித்தனமான பதில் ஹி ஹி!).

  வாங்க பிரபு தம்பி. புத்திசாலித்தனமான comment 🙂

 • 12. குந்தவை  |  4:28 முப இல் ஜூன் 7, 2010

  வாங்க பூமா.

  //ஆறாங்கிளாசில் இருந்து குழந்தைக்கு ஐ.ஐ.டி கோச்சிங் , மெடிக்கல் கோச்சிங் என்று ஆரம்பிகிறார்கள். எப்பொழுது தான் குழந்தைகளை அவர்கள் விருப்பப்படி இருக்க விடுவார்களோ?

  😦

 • 13. skulandaiswamy  |  6:42 முப இல் ஜூன் 7, 2010

  While supresing a thinking process the kids originality became dampened… I standby your argument. It will take few decades to shred off this attitude. what i request the youth community is atleast change our attitude and let wisdom grow form the upcoming generation…

  Ironically what we are doing is just pasing the torch from our dad to our kid…

  Dnt know what to say…its all inherited in genes!

 • 14. குந்தவை  |  7:55 முப இல் ஜூன் 7, 2010

  வாங்க சரவணன்.

  //the youth community is atleast change our attitude and let wisdom grow form the upcoming generation…

  கண்டிப்பா…

 • 15. Karthik  |  12:18 பிப இல் ஜூன் 7, 2010

  //எப்பொழுது தான் குழந்தைகளை அவர்கள் விருப்பப்படி இருக்க விடுவார்களோ//

  only when our education and evaluation system changes. a person cannot be a intelligent if he scores 1150/1200. it just shows he has more memory power and he can reproduce what he learnt

 • 16. Uma  |  2:19 பிப இல் ஜூன் 7, 2010

  Hi kunthavai,
  I read that too.I think sme like you.
  kids are so smart ,so we should learn how to answer their question.Atleast they ask the question to the parents.
  thank you for share with us.

 • 17. குந்தவை  |  4:09 முப இல் ஜூன் 8, 2010

  Karthik, thank you for sharing your view.

 • 18. குந்தவை  |  4:10 முப இல் ஜூன் 8, 2010

  //kids are so smart ,so we should learn how to answer their question

  வாங்க உமா. ரெம்ப சரியாச் சொன்னீங்க.

 • 19. priya.r  |  3:56 பிப இல் ஜூன் 8, 2010

  Hai kunthavai

  My son kartik ( studing 3 std )also asking the same type of question that How God creates boys and girls?!
  I surprised his question .i dont know how to answer him.,
  It would be nice if u had any story to publish for helping us!

 • 20. சுரேஷ்  |  6:58 முப இல் ஜூன் 9, 2010

  இந்த மாதிரிதாங்க நானும் எங்க வீட்ல அடிக்கடி என்னோட சந்தேகம் எல்லாம் கேட்பேன்………….

  அதுக்கு அவங்க இப்படிதான்…சற்று திகைப்புடன், “நீ இப்ப ரெம்ப சின்ன பையன்… கொஞ்சம் வளர்ந்த பிறகு சொல்கிறேன்” என்று பதில் தருவாங்க.

  குந்தவை ஆண்ட்டி நீங்களே சொல்லுங்க இதெல்லாம் நியாயமா……….

 • 21. jeno  |  10:09 முப இல் ஜூன் 9, 2010

  எது எப்படியோ என் பையன அந்த advertisementa வைச்சுதான் தினமும் பால் குடிக்க வைக்கிறேன். பாரு, அவன் எவ்வளவு speeda குடிக்கிறான், அப்பதான் சீக்கிரம் வளர முடியும்னு. ஏன்னா அவன் பால் குடிக்க ஒரு மணி நேரம் ஆகுது. so i like that advertisement

 • 22. priya.r  |  2:17 பிப இல் ஜூன் 9, 2010

  Nice article kunthavai.,Now a days kids are thinking more.Whether it is silly question we have to answer sensible answer.Thank u for share with us
  I am the 19 th person to put comments 😦

 • 23. குந்தவை  |  9:30 முப இல் ஜூன் 10, 2010

  வாங்க பிரியா.

  //I surprised his question .i dont know how to answer him.,

  🙂

  //It would be nice if u had any story to publish for helping us!
  aahaa…. I’ll try 🙂

 • 24. குந்தவை  |  9:35 முப இல் ஜூன் 10, 2010

  அதுக்கு அவங்க இப்படிதான்…சற்று திகைப்புடன், “நீ இப்ப ரெம்ப சின்ன பையன்… கொஞ்சம் வளர்ந்த பிறகு சொல்கிறேன்” என்று பதில் தருவாங்க.

  ம் … அப்ப முதல்ல கொஞ்சம் வளருங்க தம்பி. 🙂

  //குந்தவை ஆண்ட்டி நீங்களே சொல்லுங்க இதெல்லாம் நியாயமா……….

  அடப்பாவி இப்பவே ஆன்டி ஆக்கிட்டீங்களா. சரி போகட்டும்.

 • 25. குந்தவை  |  9:39 முப இல் ஜூன் 10, 2010

  வாங்க ஜெனோ .

  //அவன் எவ்வளவு speeda குடிக்கிறான், அப்பதான் சீக்கிரம் வளர முடியும்னு. ஏன்னா அவன் பால் குடிக்க ஒரு மணி நேரம் ஆகுது. so i like that advertisement

  நான் advertisement ஐ குறை சொல்லவில்லை. நம்ம மாதிரி நிறைய அம்மாவின் வயற்றில் பாலை வார்க்குது. 🙂

 • 26. குந்தவை  |  9:47 முப இல் ஜூன் 10, 2010

  //.,Now a days kids are thinking more.Whether it is silly question we have to answer sensible answer.

  Yes Priya.

  //I am the 19 th person to put comments
  No Problem. 🙂

 • 27. prabhuram100  |  6:01 பிப இல் ஜூன் 22, 2010

  அக்காக்கு என ஒரு பொது அக்கறை…. பசங்க யோசிக்கறத பத்திலாம் யோசிக்கிராங்கு …..

 • 28. குந்தவை  |  4:30 முப இல் ஜூன் 23, 2010

  //அக்காக்கு என ஒரு பொது அக்கறை…. பசங்க யோசிக்கறத பத்திலாம் யோசிக்கிராங்கு …..

  என்னா தம்பி நீங்க….
  இதுக்கே இப்படி பாராட்டுரீங்க…
  நாங்க அவங்களுக்காக படிக்கிறோம்… விளையாடுகிறோம்… கனவுகாணுகிறோம்… விட்டா அவங்க வாழ்க்கையையே வாழ்ந்துவிடுகிறோம்… இதுக்கெல்லாம் என்ன செய்யப்போறீங்க?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஜூன் 2010
தி செ பு விய வெ ஞா
« மே   ஜூலை »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

%d bloggers like this: