அழகிய ராட்சஸி……..

ஜூன் 14, 2010 at 5:02 முப 27 பின்னூட்டங்கள்

                     இரவு மணி பத்தடித்து ஓய்ந்ததும் கடையை இழுத்து மூடிவிட்டு, ரெம்ப நாள் இழுத்தடித்த குமாரசாமி செட்டில் பண்ணிய பணத்தை எடுத்து கொண்டு,வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினேன்.

              அது பெரிய ஆரவாரத்துடன் கிளம்பியது. இந்த மாதம் கண்டிப்பாக , வண்டியை மாற்றிவிட வேண்டும். அது போடுற சத்தம் எனக்கே சகிக்கவில்லை, மற்றவர்களுக்கு சொல்லவேண்டுமா, ஏதோ கேட்கக்கூடாததை கேட்டுவிட்டவர்கள் போல் முகத்தை சுளித்து கொள்வார்கள். ஆள் அரவமே இல்லாத ரோட்டில் யமதர்மனை போல் கர்ஜித்துக் கொண்டு சென்றதை பார்த்து, ‘உனக்கு பாசக் கயிறு ரெடி பண்ணிட்டேன்’ என்று மனதிற்க்குள் நினைத்துகொண்டேன்.

                வண்டி திடீரென்று நின்றதால் என்னுடய சிந்தனையும் பட்டென்று நின்றது. எனக்கு இது பழக்கமான விஷயமானதால் அலட்டிக்கொள்ளாமல், வண்டியுடன் காலாற நடக்க ஆரம்பித்தேன். குறுக்கு வழியாக நடந்தால் போலீஸ் ஸ்டேஷனுக்கு பத்து நிமிடத்தில் போய்விடலாம். அங்கிருந்து சேகருடன் வீட்டுக்கு போகலாம்.

             அப்போது தான் அங்கே விறுவிறுவென்று என்னை நோக்கி நடந்து வந்த பெண்ணை கவனித்தேன். நிற்கவா…. அல்லது நடக்கவா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு மெதுவாக ஊர்ந்து சென்ற என்னை சில நிமிடங்களில் நெருங்கி விட்டாள். தேவதை போல் இருந்ததால், ஒரு வேளை கதைகளில் வருவது போல் ஏதாவது முனிவரின் சாபத்தால் பூமிக்கு வந்த தேவதையாக இருக்குமோ என்று என் மனம் சம்பந்தமே இல்லாமல் கற்பனையில் கதை எழுதியது. இன்னும் நெருங்கி வந்த போது….. இந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறோமோ என்று தோன்றியது.

           “ Excuse me Sir. பழைய பஸ் ஸ்டாண்டுக்கு எப்படி போறதுன்னு சொல்ல முடியுமா? நான் ஊருக்கு புதுசு” என்றவளை நான் வியப்புடன் நோக்கினேன்.

        ஏதோ பக்கத்து தெருவுக்கு வழி கேட்பவளை போல் நின்றவளை பார்த்து பரிதாபமாக இருந்தது. நிஜமாகவே ஊருக்கு புதுசு தான் போல, “நடக்கிற தூரம் இல்லீங்க, ஆட்டோவில் தான் போகமுடியும், இந்த நேரத்தில் ரெம்ப அபூர்வமாகத்தான் இந்த ரோட்டில் பஸ் வரும்” என்றேன்.

          “ நான் வந்த பஸ், புது பஸ் ஸ்டாண்டுக்குத்தான் போகுமென்றும், பாலம் ஸ்டாப்பில் இறங்கினால் பழைய பஸ்டாண்டுக்கு போகலாம் என்று கண்டக்டர் சொன்னதால் இறங்கினேன். எனக்கு ஆட்டோவில் இராத்திரி வேளையில் தனியாக செல்ல பயம், கடைத்தெருதானே ஆள் அரவம் இருக்கும் நடக்கலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். ஆனால் நேரம் ஆக ஆக ஆள் அரவம் குறைந்து கொண்டேயிருப்பதால்…

              “பரவாயில்லை இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தால் ஒரு ஆட்டோ ஸ்டாண்டு வரும் ,எனக்கு தெரிந்தவர்கள் தான்.. பயப்படவேண்டாம்… நான் கூட வருகிறேன்… அங்கேயிருந்து ஆட்டோவில் செல்லலாம் ” என்று அவளுடன் நடக்க ஆரம்பித்தேன்.

         அவள் தூரத்தில் வரும் போது சண்டித்தனம் செய்த மனது, இப்போது ஏதோ கடமை கண்ணியம் என்று நல்ல பிள்ளையாக வாலை சுருட்டி கொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.இது ஒரு பக்கம் இருந்தாலும்…ஒரு ஓரமாக என் மனதிற்க்குள் இந்த பெண்ணை எங்கு பார்த்திருக்கலாம் என்ற ஆராய்ச்சியை நடத்தி கொண்டிருந்தது. ம்…. ஒருவேளை கல்யாணத்திற்க்கு பொண்ணு பார்க்கிறேன் என்று அம்மா கண்டபடி கடைவிரித்திருக்கும் புகைப்படத்தை பார்த்ததால் வந்த பிரம்மையோ.

 “சார், இன்னுமொரு உதவி செய்ய முடியுமா? எனக்கு நூறு ரூபாய்க்கு சில்லரை வாங்கி தரமுடியுமா ?”

             என்னிடம் சில்லரை இல்லை. ரோட்டுக்கு அந்தப் பக்கம் , ஒரு கடை உயிருடன் இருப்பது தெரிந்தது. “அந்த கடையில் சில்லரை கேட்டு பார்க்கிறேன், நீங்கள் இங்கு பயமில்லாமல் நிற்பீர்களா? “

 “ஒன்றும் பயமில்லை சார்….

                   கடையில் சென்று சில்லரை வாங்கிகொடுத்துவிட்டு, இருவரும் நடந்தோம். என்னவெல்லாமோ என் மனம் அவளிடம் பேச ஆசைப்பட்டது…. ஆனால் ஒன்றுமே வெளியே வரவில்லை..

                அப்பப்ப ஓரக்கண்ணால் அவளை அளவிட்டபடியே மிதந்தேன். கலந்த தலை முடி எனக்கு கவிதை மாதிரியும் , மடிப்பு விழுத்த சேலையோ மாட்ர்ன் ஆர்ட் போலவும்  என்னை சொக்கவைத்தது.

                  அவளிடம் இருந்து வந்த மெல்லிய மணமும், ஒயிலான நடையும், சிணுங்கி கொண்டு வந்த கொலுசு சப்தமும் என்னை அளவுக்கதிமாக மயக்கி ஒரு மோகன நிலைக்கு தள்ளியது. பார்த்தவுடனே இப்படி ஒரு பெண் தன்னை பாதிப்புக்கு உள்ளாக்கியது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தாலும் அதை ரசிக்கவே செய்தேன்.

                                       சட்டென்று வந்த ஆட்டோ standடினை சபித்த படி, அவளை ஏற்றிவிட்டு…. பெயரை கேட்க மறந்துவிட்டேனே.. என்று நொந்து கொண்டாலும்.. இனிமையான அவள் நினைவுடன்… சேகரை பார்க்க சென்றேன்.

                வண்டியை தள்ளி கொண்டு சென்ற என்னை பார்த்த ஏட்டு  ,  இன்ஸ்பெக்டர் சேகருடைய நண்பன் என்ற ஒரே காரணத்திற்க்காக சிரிப்பை அடக்கியது வெளிப்படையாக தெரிந்தாலும்..சட்டை பண்ணாமல், என்னுடைய பையை எடுத்துக்கொண்டு சேகரிடம் சென்றேன் .

என்னடா மாப்பிள காளை…. கவுத்திடுச்சா?” என்று வழக்கமான கிண்டலுடன் வரவேற்ற நன்பனை பார்த்து சிரித்து விட்டு,

கிளம்புறியா இல்ல இன்னும் வேலை இருக்கா?”

 “இல்லடா.. முடிஞ்சாச்சு .. கொஞ்சம் வெயிட் பண்ணு … நான் இதோ வந்து விடுகிறேன்” .

          அவன் இருக்கை அருகே இருந்த புகைப்படங்களை நோட்டம் விட்டபடியே உக்கார்ந்து இருந்த நான், ” தேடப்படும் முக்கிய குற்றவாளிகள்”   என்று  ஒட்டப்பட்டிருந்த அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து , “அடப்பாவி……. உன்னை இங்கேயா பார்த்திருக்கேன்” என்று என்னை அறியாமல் என் வாய் முணுமுணுத்ததும் அல்லாமல், அனிச்சையாக என் பையையை திறந்து பார்த்ததும் என் தலையும் அதிவேகமாக சுற்ற ஆரம்பித்து.

Advertisements

Entry filed under: கதை.

புத்திசாலித்தனமான கேள்வி(!). பாயாசம்.

27 பின்னூட்டங்கள் Add your own

 • 1. skulandaiswamy  |  5:05 முப இல் ஜூன் 14, 2010

  Super!

 • 2. skulandaiswamy  |  5:08 முப இல் ஜூன் 14, 2010

  Super

 • 3. priyamudan PRABU  |  5:21 முப இல் ஜூன் 14, 2010

  mmm

  me the first

  ( am in office so latter i will comment)

 • 4. priya.r  |  5:41 முப இல் ஜூன் 14, 2010

  ஆகா ! குந்தவை ரொம்ப நல்லாவே கதை எழுதறீங்க !!

  இன்று ஏமாறுதல் , ஏம்மாற்றுதல் இரண்டும் நடை முறை வாழ்க்கையில் இருப்பதை இலகுவாக சொல்லி எங்களது பாராட்டுகளையும் பெற்று இருக்கிறீர்கள்!

  தங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்!!

 • 5. குந்தவை  |  5:53 முப இல் ஜூன் 14, 2010

  // Super!
  // Super!

  வாங்க சரவணன். ரெம்ப நன்றி.

 • 6. குந்தவை  |  5:54 முப இல் ஜூன் 14, 2010

  //mmm me the first ( am in office so latter i will comment)

  வாங்க பிரபு தம்பி. ரெம்ப வேலையோ?
  அப்புறமா கண்டிப்பா எழுதுங்க. 🙂

 • 7. குந்தவை  |  5:56 முப இல் ஜூன் 14, 2010

  //ஆகா ! குந்தவை ரொம்ப நல்லாவே கதை எழுதறீங்க !!

  ரெம்ப நன்றிங்க…. உங்க பாராட்டுதலுக்கும்… வாழ்த்துக்களுக்கும்.

 • 8. soundr  |  6:21 முப இல் ஜூன் 14, 2010

  ஹி…ஹி….
  இதுக்குத்தான் நான் எந்த பொண்ணுக்கும்
  ஹெல்ப் பண்றதில்ல….

  ஆ…
  (Jhooth Bole Kauwa Kaate)

 • 9. குந்தவை  |  6:46 முப இல் ஜூன் 14, 2010

  //இதுக்குத்தான் நான் எந்த பொண்ணுக்கும்
  ஹெல்ப் பண்றதில்ல….

  வாங்க சொளந்தர்.. என்ன இப்படி சொல்லிடீங்க.

  //(Jhooth Bole Kauwa Kaate)
  தம்பி.. எது எழுதினாலும் தமிழ்ல எழுதுங்க(திட்டுங்க).

 • 10. Karthik  |  12:20 பிப இல் ஜூன் 14, 2010

  nalla irukku kundhavai

  //அனிச்சையாக என் பையையை திறந்து பார்த்ததும் என் தலையும் அதிவேகமாக சுற்ற ஆரம்பித்து.
  //
  but enaku ingathaan logic idikuthu,. palamurai padichum intha idam sariya varalaiye enn/???

 • 11. Uma  |  2:32 பிப இல் ஜூன் 14, 2010

  Hi kunthavai,
  nice short story.

 • 12. Karthik Narayan  |  4:27 பிப இல் ஜூன் 14, 2010

  ஊப்ஸ் பார்க்கிற பொண்ண எல்லாம் ரொமான்டிக்காவே டீல் பண்ணக் கூடாதுன்றீங்க? ஹ்ம்ம். நல்லா இருந்துச்சுங்க. தலைப்பும். 🙂

 • 13. kanagu  |  5:09 பிப இல் ஜூன் 14, 2010

  nalla kadhai ka… super ah ezhuthi irukeenga 🙂 🙂

  last la irundha twist super 🙂 Kalakkunga…

  naan inga Kanmani photo irukkum nu neachu vandhen… misleading title 🙂 🙂

 • 14. குந்தவை  |  4:12 முப இல் ஜூன் 15, 2010

  //but enaku ingathaan logic idikuthu,. palamurai padichum intha idam sariya varalaiye enn/???

  வாங்க கார்த்திக்.
  ம்… நான் கதையை புரியும்படியா எழுதலைன்னு நினைக்கிறேன்.
  1. police station யில் அந்த பெண்ணுடைய photo ஒட்டி வைத்திருப்பாங்க.
  2. பையில் உள்ள பணம் காணாம போயிருக்கும் .

 • 15. குந்தவை  |  4:13 முப இல் ஜூன் 15, 2010

  //nice short story.

  வாங்க உமா. ரசித்தமைக்கு நன்றி.

 • 16. குந்தவை  |  4:17 முப இல் ஜூன் 15, 2010

  //பார்க்கிற பொண்ண எல்லாம் ரொமான்டிக்காவே டீல் பண்ணக் கூடாதுன்றீங்க?

  நீங்க டீல் பண்ணுங்க… எப்பவாச்சும் முன்ன பின்ன ஆனா ‘இதெல்லாம் வாழ்க்கையில் சகஜப்பான்னு’ போயிட்டேயிருக்கணும் அவ்வளவு தான்.

 • 17. குந்தவை  |  4:19 முப இல் ஜூன் 15, 2010

  //nalla kadhai ka… super ah ezhuthi irukeenga

  Thank You thambi.

  //last la irundha twist super Kalakkunga…

  🙂

  //naan inga Kanmani photo irukkum nu neachu vandhen… misleading title
  🙂

 • 18. பிரியமுடன் பிரபு  |  2:17 பிப இல் ஜூன் 15, 2010

  ஒரு வேளை கதைகளில் வருவது போல் ஏதாவது முனிவரின் சாபத்தால் பூமிக்கு வந்த தேவதையாக இருக்குமோ என்று என் மனம் சம்பந்தமே இல்லாமல் கற்பனையில் கதை எழுதியது
  /////////////

  சேம் பிளட்

 • 19. பிரியமுடன் பிரபு  |  2:18 பிப இல் ஜூன் 15, 2010

  அவள் தூரத்தில் வரும் போது சண்டித்தனம் செய்த மனது, இப்போது ஏதோ கடமை கண்ணியம் என்று நல்ல பிள்ளையாக வாலை சுருட்டி கொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது
  /////////////

  சேம் பிளட்

 • 20. பிரியமுடன் பிரபு  |  2:19 பிப இல் ஜூன் 15, 2010

  அப்பப்ப ஓரக்கண்ணால் அவளை அளவிட்டபடியே மிதந்தேன். கலந்த தலை முடி எனக்கு கவிதை மாதிரியும் , மடிப்பு விழுத்த சேலையோ மாட்ர்ன் ஆர்ட் போலவும் என்னை சொக்கவைத்தது.
  ////////////

  ஹையோ ஹையோ
  சேம் பிளட்

 • 21. பிரியமுடன் பிரபு  |  2:21 பிப இல் ஜூன் 15, 2010

  “அடப்பாவி……. உன்னை இங்கேயா பார்த்திருக்கேன்” என்று என்னை அறியாமல் என் வாய் முணுமுணுத்ததும் அல்லாமல், அனிச்சையாக என் பையையை திறந்து பார்த்ததும் என் தலையும் அதிவேகமாக சுற்ற ஆரம்பித்து.

  ///

  நாட் எ சேம் பிளட்

 • 22. பிரியமுடன் பிரபு  |  2:21 பிப இல் ஜூன் 15, 2010

  ஹ ஹ நல்லயிருக்கு

 • 23. குந்தவை  |  4:31 முப இல் ஜூன் 16, 2010

  //சேம் பிளட்

  //ஹையோ ஹையோ
  சேம் பிளட்

  யாரது தம்பி ? இப்படி சஸ்பென்ஸ் எல்லாம் தரக்கூடாது.

 • 24. குந்தவை  |  4:33 முப இல் ஜூன் 16, 2010

  //நாட் எ சேம் பிளட்

  அப்புறம் என்ன நடந்திச்சின்னு சொல்லவும்.

 • 25. குந்தவை  |  4:34 முப இல் ஜூன் 16, 2010

  //ஹ ஹ நல்லயிருக்கு

  ரெம்ப நன்றி தம்பி.

 • 26. தெம்மாங்குப் பாட்டு  |  6:42 முப இல் ஜூன் 19, 2010

  ஆஹா .. அருமை… இது ஜொள்ளுபேட்டை- ல் வர வேண்டியக் கதை.. மிக நன்றாக எழுதுகிறீர்கள்….

 • 27. குந்தவை  |  12:07 பிப இல் ஜூன் 19, 2010

  //ஆஹா .. அருமை… இது ஜொள்ளுபேட்டை- ல் வர வேண்டியக் கதை.. மிக நன்றாக எழுதுகிறீர்கள்….

  ThanK You vaalu.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஜூன் 2010
தி செ பு விய வெ ஞா
« மே   ஜூலை »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

%d bloggers like this: