பாயாசம்.

ஜூன் 20, 2010 at 5:34 முப 57 பின்னூட்டங்கள்

   வில்லதனமான கேள்வி:

          நான் ஓரளவுக்கு தினமும் exercise பண்ண தான் செய்வேன், ஆனாலும் குறைவேனான்னு மல்லுகட்டி கொண்டு திரிகிற இந்த வெயிட் பிரச்சனையை என்ன தான் செய்ய? மெயிலை delete  பண்ணுகிற மாதிரி..  weightயும் delete பண்ணமுடிஞ்சா எவ்வளவு நல்லாயிருக்கும்.

                 இப்படி என் புலம்பல்ஸ்ஸை கேட்டு கேட்டு   , என் மேல் இரக்கப்பட்டு(கடுப்பாகி )  “நான் உனக்கு எப்படி exercise பண்ணுவதென்று சொல்லித் தருகிறேன்னு”, என்னிய நாலு மணிக்கே எந்திரிக்க வச்சி , அப்படி செய்…. இப்படி செய்ன்னு….. பயங்கரமா ட்ரில் எடுத்தாரு. இப்படி மூன்று நாள் செய்தபிறகு… எனக்கே நம்ப முடியவில்லைங்க… ஒரு சுற்று குறைந்துவிட்டது….   அவருக்கு.

            அதனால,  எப்ப பார்ட்டிக்கு போனாலும்.. வயிற்றை ஜொள்ளுவிட வைக்கும் ஐட்டங்களை பார்த்தால் போதும் உடனே எல்லாரும் அலர்ட்டா இருக்கிற சமையம் பாத்து,

                 என் வீட்டம்மா தீவிரமான டயட்டில் இருக்கிறாப்புல… (என்னை பாத்து) இதுல பாத்தா…. சாலட் ஒன்று தான் நீ சாப்பிடக்கூடிய ஐட்டமா தெரியுது இல்லம்மா?”

   ஒரு டெய்லர் கடையில் நடந்தது:

டெய்லர் ஒரு சிறு பென்ணுக்கு அளவு எடுக்கிறார். அந்த பென்ணுடைய அம்மா,

    “என்ன  கழுத்து வச்சிருக்கீங்க…   இன்னும் கொஞ்சம் இறக்கம் வச்சி தைங்க..”

 அந்த பெண், “அம்மா… வேண்டாம்… எனக்கு பிடிக்கல… இறக்கம் இவ்வளவு வேண்டாம்..”

அம்மா, “சும்ம இருடி.. உனக்கு ஒண்ணும் தெரியாது. இப்படி தைத்தால் தான் அழகாக இருக்கும்”

   சிறு வயதில் சிக்கனத்தின் அருமை பெருமை எல்லம் நமக்கு புரிவதில்லை. வளர வளர அதன் அருமை பெருமை எல்லாம் உனர்ந்து எப்படி சிக்கன பேர்வழிகளாக மாறி விடுகிறோம் பாருங்கள்.

சமையல் குறிப்பு : 
 

                     தினமும் சமையல் செய்யும் போது , காயின் நிறத்தையும் கவனத்தில் கொள்ளவும். நல்ல அடர் நிறத்தில் உள்ள காய் சேர்ப்பது நல்லது. உதாரணமாக பீட்ரூட், காரட், மஞ்ச்ள் பூசனிக்காய்.

       கலர் கலரா பார்ப்பது உடம்புக்கு சில நேரம் வகை தொகையில்லாமல் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆனா  கலர் கலரா சாப்பிட்டா எப்பவுமே உடம்புக்கு ரெம்ப நல்லது.

தலைப்புக்கும்.. பதிவிற்க்கும் என்ன சம்பந்தம் என்று குழப்பி கொள்பவர்களுக்கு:

  அவியல், குவியல்ன்னு எல்லாம் பெயர் வச்சிட்டாங்க அதனால பாயாசம்ன்னு வச்சிகிட்டேன்.

Advertisements

Entry filed under: அனுபவம், ரசித்தவை.

அழகிய ராட்சஸி…….. அவங்களுக்கும் ஆயிரத்தெட்டு கிலி இருக்கு

57 பின்னூட்டங்கள் Add your own

 • 1. karthik  |  6:23 முப இல் ஜூன் 20, 2010

  அப்புறம் வரேன்

 • 2. karthik  |  6:27 முப இல் ஜூன் 20, 2010

  //… எனக்கே நம்ப முடியவில்லைங்க… ஒரு சுற்று குறைந்துவிட்டது…. அவருக்கு.//

  அருமை..
  // கலர் கலரா பார்ப்பது உடம்புக்கு சில நேரம் வகை தொகையில்லாமல் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆனா கலர் கலரா சாப்பிட்டா எப்பவுமே உடம்புக்கு ரெம்ப நல்லது.//

  அவ்வவ்

  // அவியல், குவியல்ன்னு எல்லாம் பெயர் வச்சிட்டாங்க அதனால பாயாசம்ன்னு வச்சிகிட்டேன்.//

  கூட்டு இருக்கு அதை எப்படி நீங்க தவற விடலாம்

 • 3. குந்தவை  |  6:41 முப இல் ஜூன் 20, 2010

  வாங்க கார்த்திக்.

  //அருமை..
  அருமையா?… நானே ஏற்கனவே யானையும், பாகனும் போல இருக்கேன்னு சோகத்துல இருக்கேன். 😦

  //அவ்வவ்
  🙂

  //கூட்டு இருக்கு அதை எப்படி நீங்க தவற விடலாம்
  அப்படியா….. அடுத்ததடவை கூட்டு வச்சிருவோம்.

 • 4. graceravi  |  8:31 முப இல் ஜூன் 20, 2010

  எனக்கே நம்ப முடியவில்லைங்க… ஒரு சுற்று குறைந்துவிட்டது…. அவருக்கு.
  ஐயோ!!!!!!!!!!! பாவம்………………………….

 • 5. graceravi  |  8:34 முப இல் ஜூன் 20, 2010

  நான் வரும்போதெல்லாம் நிறையவே சாப்பிட்டுஇருகேன்………………… உங்க வீட்டுல…………………..!

 • 6. குந்தவை  |  8:52 முப இல் ஜூன் 20, 2010

  //ஐயோ!!!!!!!!!!! பாவம்………………………….

  நான் தான் ரெம்ப பாவம். 😦

 • 7. குந்தவை  |  8:58 முப இல் ஜூன் 20, 2010

  //நான் வரும்போதெல்லாம் நிறையவே சாப்பிட்டுஇருகேன்………………… உங்க வீட்டுல…………………..!
  he…he….
  அதனாலத்தான் வீட்டுக்கு ரெம்ப வர்றதில்லேங்கிற உண்மைய சொல்லாம என்னை காப்பாத்தியதுக்கு நன்றி.

 • 8. graceravi  |  9:03 முப இல் ஜூன் 20, 2010

  நான் தான் ரெம்ப பாவம்.

  யார் சொன்னது? நான் எங்க அண்ணனைத்தான் சொன்னேன்…………..

 • 9. graceravi  |  9:06 முப இல் ஜூன் 20, 2010

  அதனாலத்தான் வீட்டுக்கு ரெம்ப வர்றதில்லேங்கிற உண்மைய சொல்லாம என்னை காப்பாத்தியதுக்கு நன்றி.

  இப்படி ஏன்…….. உண்மைய போட்டு உடைகிறீங்க……….!!!!!!!!

 • 10. குந்தவை  |  9:07 முப இல் ஜூன் 20, 2010

  //யார் சொன்னது? நான் எங்க அண்ணனைத்தான் சொன்னேன்…………..

  😦
  இது நல்லாயில்ல…. இந்த பாவம் உங்களை சும்மா விடாது.

 • 11. குந்தவை  |  9:10 முப இல் ஜூன் 20, 2010

  //ஏன்…….. உண்மைய போட்டு உடைகிறீங்க……….!!!!!!!!

  he…he… பழக்கதோஷம்.

 • 12. பிரியமுடன் பிரபு  |  11:59 முப இல் ஜூன் 20, 2010

  நான் ஓரளவுக்கு தினமும் exercise பண்ண தான் செய்வேன், ஆனாலும் குறைவேனான்னு மல்லுகட்டி கொண்டு திரிகிற இந்த வெயிட் பிரச்சனையை என்ன தான் செய்ய? மெயிலை delete பண்ணுகிற மாதிரி.. weightயும் delete பண்ணமுடிஞ்சா எவ்வளவு நல்லாயிருக்கும்.
  //////////

  அதுக்குதான் என்னை போல சிலிம்மா இருக்கனும்ம்கிறது

 • 13. பிரியமுடன் பிரபு  |  12:00 பிப இல் ஜூன் 20, 2010

  நான் ஓரளவுக்கு தினமும் exercise பண்ண தான் செய்வேன், ஆனாலும் குறைவேனான்னு மல்லுகட்டி கொண்டு திரிகிற இந்த வெயிட் பிரச்சனையை என்ன தான் செய்ய? மெயிலை delete பண்ணுகிற மாதிரி.. weightயும் delete பண்ணமுடிஞ்சா எவ்வளவு நல்லாயிருக்கும்.
  //

  பசியோடு உட்கார் படிடோடு எழு (சாப்பிட) என்பது பெரியவங்க வாக்கு
  அதை சரியா கடைபிடிக்கனும் ஆரம்பம் முதலே

 • 14. பிரியமுடன் பிரபு  |  12:01 பிப இல் ஜூன் 20, 2010

  எனக்கே நம்ப முடியவில்லைங்க… ஒரு சுற்று குறைந்துவிட்டது…. அவருக்கு
  ///////

  விளங்கீடும்

 • 15. soundr  |  3:07 பிப இல் ஜூன் 20, 2010

  //ஆனா கலர் கலரா சாப்பிட்டா எப்பவுமே உடம்புக்கு ரெம்ப நல்லது.//

  ஆஹா, ஆஹா…
  மகா தத்துவம் சொன்ன குந்தவை பிராட்டியார் வாழ்க.
  யாரங்கே, வண்ண வண்ணமாக சோமபானமும், சுறாபானமும் கொண்டு வா.

 • 16. prabhuram100  |  4:12 பிப இல் ஜூன் 20, 2010

  கடைசியா தலைப்புக்கு காரணத்தை சொனீங்க பாருங்க அப்படியே ஷாக் ஆயிட்டேன்…. எப்படி தான் உங்களுக்கு மட்டும் இப்படிலாம் தோணுதோ!!!!!!!!

 • 17. skulandaiswamy  |  4:53 பிப இல் ஜூன் 20, 2010

  suoer akka……………..

 • 18. குந்தவை  |  4:15 முப இல் ஜூன் 21, 2010

  //suoer akka……………..
  நன்றி தம்பி.

 • 19. குந்தவை  |  4:23 முப இல் ஜூன் 21, 2010

  //கடைசியா தலைப்புக்கு காரணத்தை சொனீங்க பாருங்க அப்படியே ஷாக் ஆயிட்டேன்…. எப்படி தான் உங்களுக்கு மட்டும் இப்படிலாம் தோணுதோ!!!!!!!!

  வாங்க ராம். வருகைக்கு நன்றி. இதெல்லாம் ஒரு பதிவுன்னு ஷாக்கானாலும்… தலைப்ப பாத்து மாத்திரம் ஷாக்காயிட்டேன் என்று சொல்லி சமாளித்ததற்க்கு ஒரு பெரிய நன்றி.

 • 20. குந்தவை  |  4:26 முப இல் ஜூன் 21, 2010

  //மகா தத்துவம் சொன்ன குந்தவை பிராட்டியார் வாழ்க.

  தத்துவத்தை தேடி கண்டுபிடித்த சொளந்தருக்கு அந்த சோமபானத்தையும்.. சுறாபானத்தையும் கொடுங்கப்பா.

  இந்த சோமபானத்தை எங்கோ கேள்விபட்டமாதிரி இருக்கு… ஆனா அது என்ன சுறாபானம்?

 • 21. குந்தவை  |  4:27 முப இல் ஜூன் 21, 2010

  //விளங்கீடும்
  😦

 • 22. குந்தவை  |  4:30 முப இல் ஜூன் 21, 2010

  //பசியோடு உட்கார் படிடோடு எழு (சாப்பிட) என்பது பெரியவங்க வாக்கு
  அதை சரியா கடைபிடிக்கனும் ஆரம்பம் முதலே

  தம்பி ஏதோ சொல்லவர்றீங்கன்னு புரியுது ஆனா என்ன சொல்ல வர்றீங்கன்னு தான் தெரியல.’பெரியவங்க வாக்கை’ கொஞ்சம் விளக்கி சொன்னா நல்லாயிருக்கும்.

 • 23. குந்தவை  |  4:34 முப இல் ஜூன் 21, 2010

  //அதுக்குதான் என்னை போல சிலிம்மா இருக்கனும்ம்கிறது

  எனக்கும் ஆசை தான் என்ன செய்ய…. அப்புறம் என் வீட்டுக்காரருக்கு கிண்டல் பண்ண ஒன்றுமே இருக்காதே என்கிற கவலையில் தான் இதை maintain பண்ணவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். பாருங்க எவ்வளவு நல்ல பிள்ளை நானு.

 • 24. priya.r  |  4:55 முப இல் ஜூன் 21, 2010

  ஒல்லியாக டிப்ஸ்

  1.தினமும் காலையில் சூடாக இரண்டு டம்ளர் வெது வெதுப்பான வெண்ணீர் அருந்த வேண்டும்.

  2.காலையில் டீ, காஃபியில் சர்க்கரை போடாமல் குடிக்க வேண்டும்.

  3.இரவு லோபேட் பாலில் அல்லது தண்ணீயாக காய்ச்சிய பாலில் குடிக்க தகுந்த கரத்திற்கு மிளகு,ஒரு துளி மஞ்சள் பொடி, சிறிது சர்க்கரை சேர்த்து காய்ச்சி சூடாக குடிக்கவும்.

  4.ஓட்ஸில் மோர் கலந்து உப்பு போட்டு கய்ச்சி குடித்தாலும் நாளடைவில் சதை குறையும்.

  5.இதற்கும் மேல் காலை ஒரு மணி நேரம் லெஃட் ரைட் போட்டு நடந்தாலே போதும்.

  6.இல்லையா தோப்பு கரணம் போடுங்கள் முடிந்த வரை.

  7.இல்லை மாடி படி ஏறி இறங்குங்கள்.

  இப்படி செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைக்க படுகிறது. ஒரு வாரம் செய்து விட்டு ஒல்லியாக வில்லையே என்று சொல்லவேண்டாம் ஒரு ஆறு மதமாவது தொடர்ந்து குடிக்க வேண்டும். பிறகு கண்டிப்பாக எடை குறையும்
  நன்றி : பெண்கள் ஸ்பெஷல்

  ஆமாம் : இந்த தடவை பாயாசத்தில் சற்று சர்க்கரை குறைவோ !!

  ஒரு வேளை இது டயட் பாயசமோ !!

  நன்றாகவே இருக்கிறது .,வாழ்த்துக்கள் குந்தவை

 • 25. Karthik  |  5:12 முப இல் ஜூன் 21, 2010

  is ur real name or because of Ponniyin selvan influnces

 • 26. குந்தவை  |  5:17 முப இல் ஜூன் 21, 2010

  வாஆஆங்க பிரியா. அப்பாடி … இதுக்கு ஒரு பதிவே போட்டிருக்கலாம் நீங்க. உங்கள் பாசத்துக்கும், அக்கரைக்கும்… நன்றி. கண்டிப்பா முயற்சி பண்ணுகிறேன்.

 • 27. குந்தவை  |  5:20 முப இல் ஜூன் 21, 2010

  //is ur real name or because of Ponniyin selvan influnces

  என்னுடைய உண்மையான பெயர் குந்தவை கிடையாதுங்க. Influence தான் காரணம்.

 • 28. karthik  |  2:00 பிப இல் ஜூன் 21, 2010

  நினைத்தேன்

 • 29. kanagu  |  3:34 பிப இல் ஜூன் 21, 2010

  /*எனக்கே நம்ப முடியவில்லைங்க… ஒரு சுற்று குறைந்துவிட்டது…. அவருக்கு.*/

  ha ha ha.. yaarukkavathu nallathu nadantha sari than 🙂

 • 30. Uma  |  3:40 பிப இல் ஜூன் 21, 2010

  Hi Kunthavai,
  payasam super!

 • 31. குந்தவை  |  4:30 முப இல் ஜூன் 22, 2010

  //நினைத்தேன்

  🙂 கார்த்திக் ஏற்கனவே ஒரு பதிவிலும் எழுதியிருக்கேன்.

 • 32. குந்தவை  |  4:37 முப இல் ஜூன் 22, 2010

  // yaarukkavathu nallathu nadantha sari than

  😦 அவரு ஏற்கனவே ஒல்லி தம்பி. நானும் எவ்வளவோ (சதி) பண்ணுரேன்… மனுஷன் அதே வெயிட்டை அப்படியே maintain பண்ணுறாரு.

 • 33. குந்தவை  |  4:38 முப இல் ஜூன் 22, 2010

  //payasam super!

  Thank You Umaji.

 • 34. ஜெகதீஸ்வரன்  |  3:35 முப இல் ஜூன் 23, 2010

  பெண்களின் உடையின் ரகசியம் சிக்கனம் தானோ!…

  இப்போது தான் தெரிந்தது!..

  – ஜெகதீஸ்வரன்
  http://sagotharan.wordpress.com

 • 35. குந்தவை  |  4:35 முப இல் ஜூன் 23, 2010

  //பெண்களின் உடையின் ரகசியம் சிக்கனம் தானோ!…
  இப்போது தான் தெரிந்தது!..

  இந்த உண்மையை மக்கள் மத்தியில் எடுத்து சொல்லுவதற்க்கு தான் இந்த பதிவு.
  ஏதோ நீங்க ஒருத்தராவது புரிஞ்சிக்கிட்டீங்களே.

 • 36. Vijay  |  4:58 முப இல் ஜூன் 23, 2010

  உடம்பு இளைப்பதற்கு ஒண்ணும் பெரிதாகப் பண்ண வேண்டாம். ஜன்க் சாப்பாடு சாப்பிடாமல் இருந்தாலே போதும். நம்ம அம்மா அப்பா’க்கள் எல்லாரும் நல்லாத்தான் சாப்பிட்டிருக்காங்க. ஆனால் அவங்கள்’லாம் உடம்பை இளக்கறதுக்கு பெரிசா ஒண்ணும் செய்தது கிடையாது. ஆனால் நாம் ஜன்க் ஃபுட் நிறைய சாப்பிட்டு உடம்பை பெறுக்க விட்டுவிடுகிறோம். இப்போது புலம்புகிறோம் 🙂

 • 37. குந்தவை  |  5:14 முப இல் ஜூன் 23, 2010

  //ஜன்க் சாப்பாடு சாப்பிடாமல் இருந்தாலே போதும்.
  😦

  //ஆனால் நாம் ஜன்க் ஃபுட் நிறைய சாப்பிட்டு உடம்பை பெறுக்க விட்டுவிடுகிறோம். இப்போது புலம்புகிறோம்
  வாங்க விஜய்… அக்கரையா சொல்லியிருக்கீங்க… முயற்சிபண்ணுகிறேன்.

 • 38. Mukundan  |  11:43 முப இல் ஜூன் 23, 2010

  சான்சே இல்லை பெயர் காரணம் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சேன் (நல்ல வேளை அடி படவில்லை )

 • 39. priya.r  |  11:47 முப இல் ஜூன் 23, 2010

  Kunthavai

  Unga Photova!,illai kalki novelil erunthu edutha photova!

 • 40. குந்தவை  |  4:35 முப இல் ஜூன் 24, 2010

  //சான்சே இல்லை பெயர் காரணம் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சேன் (நல்ல வேளை அடி படவில்லை )

  வாங்க முகுந்தன். 🙂
  வருகைக்கும்…. ரசித்தமைக்கும் நன்றி. ரெம்ப பிஸியோ?

 • 41. குந்தவை  |  4:36 முப இல் ஜூன் 24, 2010

  //kalki novelil erunthu edutha photova!

  Kunthavaiyin photo 🙂 priya.

 • 42. priya.r  |  6:09 முப இல் ஜூன் 24, 2010

  Chola naddu Kunthavaiya!
  illai
  Kuwait naddu Kunthavaiya!!

 • 43. குந்தவை  |  9:55 முப இல் ஜூன் 24, 2010

  //Chola naddu Kunthavaiya!
  illai
  Kuwait naddu Kunthavaiya!!

  😦 இப்படி எல்லம் கேட்ககூடாது.

 • 44. priya.r  |  1:23 பிப இல் ஜூன் 28, 2010

  சரிங்க ! சரிங்க!
  எங்க இருந்தாலும் குந்தவை குந்தவை தான் என்று பதிலை நானே சொல்லி கொள்கிறேன் !!

 • 45. குந்தவை  |  4:04 முப இல் ஜூன் 29, 2010

  //எங்க இருந்தாலும் குந்தவை குந்தவை தான் என்று பதிலை நானே சொல்லி கொள்கிறேன் !!
  🙂 No other way Priyaji.

 • 46. Karthik  |  9:27 முப இல் ஜூன் 29, 2010

  //மனுஷன் அதே வெயிட்டை அப்படியே maintain //
  athukellam nalla manasu venum enna maathiri 🙂

 • 47. குந்தவை  |  9:42 முப இல் ஜூன் 29, 2010

  //athukellam nalla manasu venum enna maathiri

  எல்லாரும் இதே டயலாக்கை தான் விடுறீங்க…
  சரி..சரி… பூனைக்கு ஒரு காலம் வந்தா, யானைக்கு ஒரு காலம் வராமலா போகும். 🙂

 • 48. kanagu  |  5:06 பிப இல் ஜூன் 30, 2010

  /*அவரு ஏற்கனவே ஒல்லி தம்பி. நானும் எவ்வளவோ (சதி) பண்ணுரேன்… மனுஷன் அதே வெயிட்டை அப்படியே maintain பண்ணுறாரு.*/

  aiyayo… muyarchila irundhu pinvaangidatheenga ka… ennaikkavathu vetri perum 😆 😆

 • 49. குந்தவை  |  4:25 முப இல் ஜூலை 1, 2010

  //aiyayo… muyarchila irundhu pinvaangidatheenga ka… ennaikkavathu vetri perum

  🙂 சொல்லிட்டீங்க இல்ல… ஒரு வழி பண்ணிவிடுகிறேன்.

 • 50. சேவியர்  |  1:38 பிப இல் ஜூலை 5, 2010

  //அவியல், குவியல்ன்னு எல்லாம் பெயர் வச்சிட்டாங்க அதனால பாயாசம்ன்னு வச்சிகிட்டேன்./

  சூப்பர் பஞ்ச் !

 • 51. குந்தவை  |  4:26 முப இல் ஜூலை 6, 2010

  //சூப்பர் பஞ்ச் !

  🙂

 • 52. JS  |  10:24 பிப இல் ஜூலை 19, 2010

  Title sooper adhoda content um sooper nadathunga

 • 53. குந்தவை  |  6:34 முப இல் ஓகஸ்ட் 22, 2010

  //Title sooper adhoda content um sooper nadathunga

  வருகைக்கும்… ரசித்தமைக்கும் நன்றிங்கோ…

 • 54. uma  |  4:20 பிப இல் ஓகஸ்ட் 29, 2010

  payasam seyya theda poi, amma enakku thevaithan
  rasanaiyai irrukku

 • 55. குந்தவை  |  6:41 முப இல் ஓகஸ்ட் 30, 2010

  //payasam seyya theda poi, amma enakku thevaithan
  he..he….

  Vangka Uma.

 • 56. raja natarajan  |  8:29 முப இல் ஓகஸ்ட் 30, 2010

  //நல்ல அடர் நிறத்தில் உள்ள காய் சேர்ப்பது நல்லது//

  காய்கறிகளே கலர்புல்லானவைதான்.அடர் நிறமில்லாத காய் ஒன்று சொல்லுங்க பார்ப்போம்.

 • 57. குந்தவை  |  9:21 முப இல் ஓகஸ்ட் 30, 2010

  வாங்க நடராஜன்.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ம்…. காய்கறிகள் எல்லாம் கலர் கலரா இருந்தாலும், நாம கலர் கலரான காய்கறிகளை தேர்ந்தெடுத்து சமைக்கிறோமா என்பது கேள்விக்குறி தான். ஒரு நாள் பச்சை கலர் பீன்ஸ் சமைத்தால் அடுத்த நாள் பீட்ரூட், அப்புறம் காரட் அப்படி வேறு வேறு நிறமுள்ள காய்களை சமைக்க வேண்டும்.

  ஏதோ என்னால் முடிந்த வரையில் விளக்கி இருக்கிறேன். 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஜூன் 2010
தி செ பு விய வெ ஞா
« மே   ஜூலை »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

%d bloggers like this: