அவங்களுக்கும் ஆயிரத்தெட்டு கிலி இருக்கு

ஜூன் 29, 2010 at 5:15 முப 28 பின்னூட்டங்கள்

                           கண்மணிக்கு லீவு விட்டாச்சு. குட்டி போட்ட பூனையாட்டம் அதையும் இதையும் குடைந்து கொண்டிருக்கிறாங்க. வெளியே போலாம் என்றால் … அடுப்பே வேண்டாம் அப்படியே ஆம்லெட் போடலாம் என்கிற அளவுக்கு வெயில்.

                  சின்ன வயதில் கரப்பான் பூச்சியை கண்டமேனிக்கு கண்டம் போடுபவர்கள்… வளர்ந்த பிறகு கரப்பானை கண்டவுடன் காததூரம் ஓடுவதைப்போல… இரண்டு வருடங்களுக்கு முன்னால், யார் வீட்டுக்கு போகவேண்டும் என்றாலும் அவங்க வீட்டு வாசல் கதவு திறந்திருந்தால் போதும் என்று ஒரு condition தான் இருந்தது. இப்போது அவங்க வளர்ந்து பெரியவீராங்கனை ஆகிவிட்டதால்… நாமளும் கூட போனால் தான் பக்கத்து வீட்டுக்கு கூட போவேன் என்று கூடுதலாக ஒரு condition.  

                    சரி என்று பக்கத்து வீட்டுக்கு அழைத்து சென்றேன்.   அங்கு வசிப்பவர் ஒரு Dental Collegeயில் Professorஆக இருந்தவர். அவருடைய அனுபவங்களை கூறிக்கொண்டிருந்தார்.

                      இப்பவெல்லாம் பிள்ளைங்க நல்லாபடிக்கிறாங்க… நிறைய விஷயம் தெரிஞ்சி வச்சிருக்காங்களேன்னு ரெம்ப ஆச்சிரியமா இருக்கு. அதுக்காக அவங்கள பெரிய மனுஷங்கன்னு நம்ம்ம்ம்பி…. இன்னும் கொஞ்சம் நல்லாயிருக்கட்டுமேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா போச்சி… எங்க போய்… எப்ப ஓடி…. எத்தினாவது மாடியிலிருந்து  குதிப்பாங்கன்னு தெரியாது. எதுனாலும் பயந்து பவ்வியமா தான் சொல்லணும்.

                           சரி அதை விடுங்க… நமக்கெல்லாம் பொறுப்புன்னு ஒரு விஷயம் ஏழு கழுதை வயசானப்புறம் தான் வந்தது. இப்போது உள்ள பிள்ளைங்க என்னா பொறுப்பா இருக்கிறாங்க. எல்லாவற்றிற்கும் அம்மா அப்பவை பற்றிக்கொண்டு அலையாமல்… அவங்களாகவே… எதை படித்தால் நல்லது என்று ஓடி ஆடி படிப்பதிலும் சரி… வேலைத் தேடுவதிலும் சரி பயங்கர முன்னேற்றம் தான்.

                           ஆனாலும் பாருங்க…  திடீரென்று, சின்ன சின்ன விஷயங்களுக்கும் நம்ம கிட்ட நேரடியாக பேசாமல் அம்மா அப்பாவை ஆஜராக்கி…  நம்மை பேஜார்  பண்ணிடுவாங்க. அவங்க பெற்றோர்களோ…  Hitlerஐ  பாக்கிற மாதிரி… நம்மை பாத்து ஒரு lookவிடுறதுல….  நமக்கே நம்ம மேல பயம் வந்திடும்.

                      பயங்கர கஷ்டம்… இப்போது உள்ள பிள்ளைங்களை நினைத்தால்  என்று பயந்து நொந்த கதைகளை சொல்லிக்கொண்டிருந்தார்.  மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பயந்ததெல்லாம் பழைய காலம் போல. மாணவர்களே கொஞ்சம் கருணை காட்டுங்கப்பா…

    இது எனது 100 வது பதிவு… என்னாலே நம்ப முடியல..  🙂

Advertisements

Entry filed under: ரசித்தவை.

பாயாசம். விட்டாச்சி லீவு….

28 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Karthik  |  5:20 முப இல் ஜூன் 29, 2010

  உண்மைதான். இப்ப இருக்கற குழந்தைகள் படு சுட்டி. ஆனால் கடைசியா சொன்ன விசயத்துக்கு காரணம் அவர்கள் அல்ல. பெற்றோர்களே. விரிவா ஒரு பதிவு போடறேன் அப்புறமா

 • 2. priya.r  |  5:26 முப இல் ஜூன் 29, 2010

  Great acheivement !
  Best wishes to you kunthavai!!

  I wish with my heart it will raise to 1000 asap!!!

 • 3. குந்தவை  |  5:35 முப இல் ஜூன் 29, 2010

  //ஆனால் கடைசியா சொன்ன விசயத்துக்கு காரணம் அவர்கள் அல்ல. பெற்றோர்களே.
  அடிப்படை காரணம் என்று பார்த்தால் பெரும் பழி அவங்க மேல் தான் விழும். ஆனாலும் நான் சொல்லவந்தது ஆசிரியர்களின் பயத்தை தான். 🙂

 • 4. saravanan kulandaiswamy  |  5:38 முப இல் ஜூன் 29, 2010

  Congratulations on your 100th blog post!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  We all ( readers & thambi’s) should celebrate this great achievement……………………….

  Let it grow further akka…………………….

 • 5. குந்தவை  |  5:42 முப இல் ஜூன் 29, 2010

  //Best wishes to you kunthavai!!

  Thank You Priya…

 • 6. குந்தவை  |  5:44 முப இல் ஜூன் 29, 2010

  //Congratulations on your 100th blog post
  Thank You thambi.

  //We all ( readers & thambi’s) should celebrate this great achievement……………………….
  இந்த கொடுமைய கொண்டாடக்கூடிய நல்ல மனசு உங்களுக்குத்தான் வரும் தம்பி.

 • 7. soundr  |  5:48 முப இல் ஜூன் 29, 2010

  வாழ்த்துக்கள், மேடம்.

 • 8. priya.r  |  5:50 முப இல் ஜூன் 29, 2010

  சமுக சிந்தனை உள் அடங்கிய நல்ல பதிவு ;
  ஆமாம் குந்தவை ,குழந்தைகளின் படிப்போடு கூடவே
  மனதை நல் வழி படுத்தி உறுதி படுத்த சிறு வயதில் இருந்தே
  பயிற்சிகளை வகுப்புகளில் சொல்லி கொடுக்க வேண்டும் என்பது
  தான் எங்களை போன்றோர்களின் விருப்பம் ;வேண்டுதலும் கூடதான் .

 • 9. Karthik  |  6:05 முப இல் ஜூன் 29, 2010

  sorry i did not see the thing. congrats for 100th post.. soon hit 500

 • 10. குந்தவை  |  6:48 முப இல் ஜூன் 29, 2010

  Thank You Soundr.

 • 11. குந்தவை  |  6:50 முப இல் ஜூன் 29, 2010

  //சமுக சிந்தனை உள் அடங்கிய நல்ல பதிவு ;
  அப்படியா?!!!!

  //குழந்தைகளின் படிப்போடு கூடவே
  மனதை நல் வழி படுத்தி உறுதி படுத்த சிறு வயதில் இருந்தே
  பயிற்சிகளை வகுப்புகளில் சொல்லி கொடுக்க வேண்டும் என்பது
  தான் எங்களை போன்றோர்களின் விருப்பம் ;

  நல்ல விருப்பம்.

 • 12. குந்தவை  |  6:59 முப இல் ஜூன் 29, 2010

  //congrats for 100th post.. soon hit 500
  ரெம்ப நன்றிங்கோ.

  //sorry i did not see the thing.
  ஆனா வருத்தப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை.
  நானே பதிவை post பண்ணுனபிறகு தான் கவனித்தேன். அப்புறம்… நம்ம வரலாறு உலக வழக்கபடி
  ரெம்ப முக்கியமாச்சேன்னு திரும்ப இதை சேர்த்துகொண்டேன்.

 • 13. சி.கருணாகரசு  |  12:22 பிப இல் ஜூன் 29, 2010

  நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள், நல்ல பதிவுங்க…
  பகிர்வுக்கு நன்றி

 • 14. Uma  |  2:28 பிப இல் ஜூன் 29, 2010

  Hi Kunthvai,
  congratulation for the 100th post .The professor is right.

 • 15. Karthik Narayan  |  3:42 பிப இல் ஜூன் 29, 2010

  100 க்கு வாழ்த்துக்கள். இப்போ இருக்கற குட்டிப்பசங்க கிட்ட பல்பு வாங்கின அனுபவம் எனக்கு நிறையவே இருக்கு. 😛

 • 16. குந்தவை  |  4:30 முப இல் ஜூன் 30, 2010

  Thank You Uma.

  //The professor is right. 🙂

 • 17. குந்தவை  |  4:35 முப இல் ஜூன் 30, 2010

  Thank You karthik.

  // இப்போ இருக்கற குட்டிப்பசங்க கிட்ட பல்பு வாங்கின அனுபவம் எனக்கு நிறையவே இருக்கு.
  ஆகா….. திருநெல்வேலிக்கே அல்வாவா? 🙂

 • 18. குந்தவை  |  4:42 முப இல் ஜூன் 30, 2010

  வாங்க கருணாகரசு.
  ரெம்ப நன்றிங்க… வருகைக்கும்… வாழ்த்துக்கும்.

 • 19. Vijay  |  6:51 முப இல் ஜூன் 30, 2010

  நூறு பதிவுகள் கண்ட குந்தவைக்கு ஒரு பெரிய ஓஓஓஓஓ!!!

 • 20. குந்தவை  |  6:57 முப இல் ஜூன் 30, 2010

  //நூறு பதிவுகள் கண்ட குந்தவைக்கு ஒரு பெரிய ஓஓஓஓஓ!!!

  Thank You Vijay

 • 21. JEYA  |  5:03 பிப இல் ஜூன் 30, 2010

  Congratulations on your 100th blog………Wish it continues for ever…….

  wishes
  akka

 • 22. kanagu  |  5:03 பிப இல் ஜூன் 30, 2010

  100-vathu pathivirku vazhthukkal akka 🙂 🙂

  iduku than naan indha kaalathu kozhanthaiga kitta irundhu oru distance maintain panren 😉

 • 23. குந்தவை  |  4:18 முப இல் ஜூலை 1, 2010

  // Congratulations on your 100th blog………Wish it continues for ever…….
  Thank You akkoov 🙂

 • 24. குந்தவை  |  4:23 முப இல் ஜூலை 1, 2010

  //100-vathu pathivirku vazhthukkal akka
  Thank You thambi.

  //iduku than naan indha kaalathu kozhanthaiga kitta irundhu oru distance maintain panren
  ரெம்ப நாள் தப்பிக்க முடியாது தம்பி. 🙂

  அப்புறம், இளமை என்றாலே Energy.. அதனால கண்டிப்பா வேணும்.

 • 25. சேவியர்  |  1:29 பிப இல் ஜூலை 5, 2010

  //இது எனது 100 வது பதிவு… என்னாலே நம்ப முடியல/

  செஞ்சுரி அடிச்சுட்டீங்க சகோதரி… 🙂 சூப்பர்

 • 26. priyamudan PRABU  |  1:48 முப இல் ஜூலை 6, 2010

  இது எனது 100 வது பதிவு… என்னாலே நம்ப முடியல..
  ///////

  wishes ( i read but forgot put comment)

 • 27. குந்தவை  |  4:25 முப இல் ஜூலை 6, 2010

  //செஞ்சுரி அடிச்சுட்டீங்க சகோதரி… சூப்பர்

  ரெம்ப நன்றி .

 • 28. குந்தவை  |  4:32 முப இல் ஜூலை 6, 2010

  //wishes

  Thank You Prabhu thambi.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஜூன் 2010
தி செ பு விய வெ ஞா
« மே   ஜூலை »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

%d bloggers like this: