கொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் கோபம்….

செப்ரெம்பர் 28, 2010 at 7:33 முப 32 பின்னூட்டங்கள்

                        என்னுடைய நீண்ட நாள் (நான்காம் வகுப்பிலிருந்தே) 
  தோழி என்னை பார்க்க வந்திருந்தாங்க. எப்போதும் போல் உற்சாகமாக எல்லா விஷயங்களையும் பற்றி மனசுவிட்டு பேசி மகிழ்ந்தாலும், வாழ்க்கையில் சில சமயங்களில் சில வருத்தமான சம்பவங்களும் கடந்துபோகத்தானே நேரிடும். அப்படி சில நிகழ்ச்சிகளையும் மிகவும் வருத்தப்பட்டு கூறிவிட்டு, ‘ஒரு சிலர் தான் சின்ன வயதில் எப்படி இருந்தார்களோ அதே குணனலன்களுடன் இருக்கிறார்கள். பலர் வளர்ந்த பிறகு முற்றிலுமாக மாறிவிடுகிறார்கள்’ என்று கூறினார்.

                       இதை என்னுடன் கேட்டு கொண்டிருந்த கண்மணி, ‘ Aunty…  சின்ன பிள்ளையா இருக்கும் போது  ரெம்ப fatஆ இருந்தேன். இப்ப பாருங்க நானு ஒல்லியாயிட்டேன்… நானும் மாறிவிட்டேன்’ என்று மகாகவலையுடன்  சொல்ல… கவலை எல்லாம் மறந்து கலகலவென்று சிரித்து விட்டாள் என் தோழி.  

****************************************************************
                ரெம்ப நாளா என் மனதில் இருந்த விஷயம் என்றாலும்…  முதன் முதலில் இதை வெறுக்க ஆரம்பித்தது ஈராக் போரின் போது தான். அதிலும் பிபிசி இருக்கின்றதே.. அப்பப்பா முழுநேரமும் அங்கு டென்ட் போட்டு உக்கார்ந்து கொண்டு … உலக வரலாற்றிலே முதன் முறையாக இவ்வளவு சக்தி வாய்ந்த… என்று ஏவுகணையை பற்றி ஒரு பெரிய புறாணத்தையே பாடுவதும்… அதன் பிறகு எங்கு… எப்படி… விழுந்தது என்றும், அதன் பாதிப்புகளை அக்கு வேறு ஆணி வேறாக ஆய்ந்து  வழங்குவதுமாக ஆரம்பித்தது.

              அங்கு நடக்கும் அவலங்களையும் கொடுமைகளையும் ஒரு உணர்ச்சியுமேயில்லாமல் ஒரு பரபரப்பை மக்களுக்கு அளிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக விறுவிறுப்பாக   செய்திகளை  வழங்குவது ஒரு நோயாக மாறிவிட்டது. அந்த நோய் நம் நாட்டினர்க்கும் அதி வேகமாக பரவிவிட்டது அருவருப்பாக இருக்கிறது.

                 சும்மா பிரபலங்கள் பின்னாடி போய் அவர்களை துரத்தி துரத்தி புகைப்படம் எடுப்பதும், அவர்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு கதை அளப்பதும்…மீடியாக்கள்  கோள் மூட்டி கொடுக்கும் குண்டணிகளின் வேலையைத்தான் செய்கிறது. அடுத்த வீட்டில் நடக்கு விஷயங்களை அரை குறையாக கேட்டு கதை  பரப்பும் வம்பர்களே இதற்க்கு பரவாயில்லை.

Advertisements

Entry filed under: மனதில் தோன்றியவை.

வந்திட்டோம்ல…. எந்திரனும் நானும்.

32 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Karthik  |  7:37 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  குழந்தைகள் இருந்தால், நம் கவலைகள் அனைத்தும் பறந்து விடும். இரண்டாவது விஷயம், எல்லா சேனலும் இப்படிதான்

 • 2. குந்தவை  |  7:45 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  வாங்க கார்த்திக்…
  உங்கள் கருத்துக்கு நன்றி.

 • 3. saravanan kulandaiswamy  |  7:56 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  akka, epdi akka? post pota next second comments…… very very very popular and often visited blog…

 • 4. priyamudan PRABU  |  7:58 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  சொன்னவுடனே பதிவா?
  அடடே

 • 5. priyamudan PRABU  |  7:59 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  அடுத்த வீட்டில் நடக்கு விஷயங்களை அரை குறையாக கேட்டு கதை பரப்பும் வம்பர்களே இதற்க்கு பரவாயில்லை.
  ////

  அதுக்குத்தான் நான் அதெல்லாம் பார்ப்பதே இல்ல

 • 6. priyamudan PRABU  |  8:00 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  Aunty… சின்ன பிள்ளையா இருக்கும் போது ரெம்ப fatஆ இருந்தேன். இப்ப பாருங்க நானு ஒல்லியாயிட்டேன்… நானும் மாறிவிட்டேன்’
  ///

  ம்ம்கும் நான் குட அப்பா குண்டாத்தான் இருந்தேன் இப்ப ஒல்லியா இல்ல இல்ல ஸ்லிம்ம ஆகிட்டேன்

 • 7. priyamudan PRABU  |  8:00 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  ஒரு சிலர் தான் சின்ன வயதில் எப்படி இருந்தார்களோ அதே குணனலன்களுடன் இருக்கிறார்கள். பலர் வளர்ந்த பிறகு முற்றிலுமாக மாறிவிடுகிறார்கள்’
  ////

  ஆமாம்

 • 8. குந்தவை  |  8:55 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  //akka, epdi akka? post pota next second comments…… very very very popular and often visited blog…

  அக்கான்னு அழகா கூப்பிட்டு இப்படி என்னை வைத்து காமெடி பண்ணுறீங்களே தம்பி… இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.

 • 9. குந்தவை  |  8:57 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  //சொன்னவுடனே பதிவா? அடடே

  எம்புட்டு நல்ல பிள்ளை பாத்தீங்களா?

 • 10. குந்தவை  |  8:58 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  //அதுக்குத்தான் நான் அதெல்லாம் பார்ப்பதே இல்ல

  வாங்க பிரபு… அது தான் நல்லது.

 • 11. குந்தவை  |  9:00 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  //இப்ப ஒல்லியா இல்ல இல்ல ஸ்லிம்ம ஆகிட்டேன்

  he…he… நீங்க குச்சியா மாறினதுக்கு வேறு ஒரு நோய் தான் காரணம் என்று நினைக்கிறேன்.

 • 12. குந்தவை  |  9:01 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  // ஆமாம்
  😦

 • 13. priyamudan PRABU  |  9:19 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  //இப்ப ஒல்லியா இல்ல இல்ல ஸ்லிம்ம ஆகிட்டேன்

  he…he… நீங்க குச்சியா மாறினதுக்கு வேறு ஒரு நோய் தான் காரணம் என்று நினைக்கிறேன்.

  ///

  எப்ப சாமிகள இவங்க காதல் நோயை சொல்லுறாங்க..(KONJAM THELIVA SOLLUKA)

 • 14. குந்தவை  |  9:31 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  //எப்ப சாமிகள இவங்க காதல் நோயை சொல்லுறாங்க..(KONJAM THELIVA SOLLUKA)

  ஆகா இவ்வளவு விஷயம் இருக்கா இதுல…

 • 15. priya.r  |  11:07 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  // என்னுடைய நீண்ட நாள் (நான்காம் வகுப்பிலிருந்தே)
  தோழி என்னை பார்க்க வந்திருந்தாங்க.//
  பார்த்த உடனே அந்த நாள் நியாபகம் வந்து இருக்குமே ! சரி சரி !!

  //எப்போதும் போல் உற்சாகமாக எல்லா விஷயங்களையும் பற்றி மனசுவிட்டு பேசி மகிழ்ந்தாலும், வாழ்க்கையில் சில சமயங்களில் சில வருத்தமான சம்பவங்களும் கடந்துபோகத்தானே நேரிடும். அப்படி சில நிகழ்ச்சிகளையும் மிகவும் வருத்தப்பட்டு கூறிவிட்டு, ‘ஒரு சிலர் தான் சின்ன வயதில் எப்படி இருந்தார்களோ அதே குணனலன்களுடன் இருக்கிறார்கள். பலர் வளர்ந்த பிறகு முற்றிலுமாக மாறிவிடுகிறார்கள்’ என்று கூறினார்.//

  அதுகென்ன செய்வது குந்தவை ! சமய சந்தர்ப்ப சூழ்நிலை என்று எவ்வளவோ இருக்கே !
  நீங்க கூட இந்தியா வந்த போது தினமும் போன் செய்தீங்க ! இப்போ பேச மாட்டுக்குறீங்க என்று உங்க மேல கோவிககவா முடியும்! ஹ ஹா

  // இதை என்னுடன் கேட்டு கொண்டிருந்த கண்மணி, ‘ Aunty… சின்ன பிள்ளையா இருக்கும் போது ரெம்ப fatஆ இருந்தேன். இப்ப பாருங்க நானு ஒல்லியாயிட்டேன்… நானும் மாறிவிட்டேன்’ என்று மகாகவலையுடன் சொல்ல… கவலை எல்லாம் மறந்து கலகலவென்று சிரித்து விட்டாள் என் தோழி//

  அம்மா ஒல்லியாக முடியலையே அப்படின்னு கவலை படுகிறார்
  கண்மணி குண்டாக முடியலையே ன்னு கவலை படுகிறா ஹ ஹா
  சரி நீங்க குழந்தை யாக இருந்த போது எப்படி இருந்தீங்க குந்தவை !!

 • 16. priya.r  |  11:16 முப இல் செப்ரெம்பர் 28, 2010

  ரேடிங் ற்காக மீடியாக்கள் செய்யும் அதிக பிரசிங்கிதனங்களை
  கண்டிக்க தான் வேண்டும் குந்தவை

  அதிலும் ஒரே காட்சிகளை மறு ஒளி பரப்பு செய்யும் ஊடகங்களின் தொல்லை
  சில சமயம் தாங்க முடிவதில்லை;
  நல்ல பகிர்வுக்கு நன்றி குந்தவை

 • 17. Uma  |  6:03 பிப இல் செப்ரெம்பர் 28, 2010

  Hi kunthavai,
  kanmani answer is so cute.you are right about the media.

 • 18. குந்தவை  |  4:53 முப இல் செப்ரெம்பர் 29, 2010

  //பார்த்த உடனே அந்த நாள் நியாபகம் வந்து இருக்குமே !

  🙂

  //நீங்க கூட இந்தியா வந்த போது தினமும் போன் செய்தீங்க ! இப்போ பேச மாட்டுக்குறீங்க என்று உங்க மேல கோவிககவா முடியும்! ஹ ஹா

  அடப்பாவி….

  // நீங்க குழந்தை யாக இருந்த போது எப்படி இருந்தீங்க குந்தவை

  எப்போதும் பூசனிக்காய் தான். (என் மானத்தை வாங்கணுன்னு எவ்வளவு நாளா காத்திட்டிருக்கீங்க)

 • 19. குந்தவை  |  4:55 முப இல் செப்ரெம்பர் 29, 2010

  //அதிலும் ஒரே காட்சிகளை மறு ஒளி பரப்பு செய்யும் ஊடகங்களின் தொல்லை
  சில சமயம் தாங்க முடிவதில்லை;

  பிரியா உங்க கருத்துக்கு நன்றி.

 • 20. குந்தவை  |  4:55 முப இல் செப்ரெம்பர் 29, 2010

  //kanmani answer is so cute.you are right about the media.

  Thank You Uma.

 • 21. BALAJI  |  6:33 முப இல் செப்ரெம்பர் 29, 2010

  கடைசியாக சொன்னதே தேவலாம் போல இருக்கு
  வாழ்த்துக்கள்

 • 22. குந்தவை  |  8:51 முப இல் செப்ரெம்பர் 29, 2010

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலாஜி.

 • 23. ரெஜோலன் நெல்சன்  |  2:33 பிப இல் ஒக்ரோபர் 5, 2010

  உண்மைதான் குந்தவை. . . சின்ன பிள்ளைகளாக இருந்த போது இருக்கும் மனநிலையில் ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றம் வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் ஆளே மாறி விடுகிறோம் . . . காரணாமாக நாம் சொல்லிக்கொள்வது மெச்சூர்டு ஆகிட்டோம் என்று.. உண்மையில் இதற்கு பெயர் அதில்லை. . . சுயநலம் . . குழந்தைகளாக மாணவர்களாக இருந்தபோது ஒரு மிட்டாயை அப்படியே கடித்து பகிர்ந்து கொண்ட நமக்கு இன்று அப்படி செய்ய முடியுமா கேட்டுப்பாருங்கள்

 • 24. குந்தவை  |  8:29 முப இல் ஒக்ரோபர் 6, 2010

  வாங்க ரஜோலன். மாற்றம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அடுத்தவர்களையும் பழகியவர்களையும் புண்படுத்தும் விதமாக இருக்ககூடாது .

 • 25. kanagu  |  4:30 பிப இல் ஒக்ரோபர் 7, 2010

  /*Aunty… சின்ன பிள்ளையா இருக்கும் போது ரெம்ப fatஆ இருந்தேன். இப்ப பாருங்க நானு ஒல்லியாயிட்டேன்… நானும் மாறிவிட்டேன்’ என்று மகாகவலையுடன் சொல்ல… கவலை எல்லாம் மறந்து கலகலவென்று சிரித்து விட்டாள் என் தோழி. */

  romba nalla irundhudu 🙂 🙂

  Apram BBC-ya pathi enaku theriyathu… naan andha channel-eh paathathe illa.. namma English channels la paathuruken ka.. padu mosama irukkum.. Amitabh family koviluku pona kooda falsh news than.. enna koduma ithu.. 🙂

  ipa ellam news paakurathaye vittuten.. padikrathoda seri ka 🙂

 • 26. குந்தவை  |  7:52 பிப இல் ஒக்ரோபர் 7, 2010

  Thanks for the comment Kanagu.

  //namma English channels la paathuruken ka.. padu mosama irukkum.. Amitabh family koviluku pona kooda falsh news than.. enna koduma ithu..
  🙂 🙂

 • 27. அப்பாவி தங்கமணி  |  4:41 பிப இல் ஒக்ரோபர் 8, 2010

  //Aunty… சின்ன பிள்ளையா இருக்கும் போது ரெம்ப fatஆ இருந்தேன். இப்ப பாருங்க நானு ஒல்லியாயிட்டேன்… நானும் மாறிவிட்டேன்//

  cute கண்மணி தான்…

  //அடுத்த வீட்டில் நடக்கு விஷயங்களை அரை குறையாக கேட்டு கதை பரப்பும் வம்பர்களே இதற்க்கு பரவாயில்லை//

  வாஸ்துவம்தாங்க குந்தவை… கோபம் தான் வருது

 • 28. Bhuvanesh  |  5:12 பிப இல் ஒக்ரோபர் 8, 2010

  அக்கா நீங்க BBC எல்லாம் பாக்கறீங்களா ?? சொல்லவே இல்ல ?

 • 29. குந்தவை  |  4:34 முப இல் ஒக்ரோபர் 10, 2010

  வாங்க புவனா. ரசித்தமைக்கும் கருத்துக்கும் நன்றி.

 • 30. குந்தவை  |  4:37 முப இல் ஒக்ரோபர் 10, 2010

  //அக்கா நீங்க BBC எல்லாம் பாக்கறீங்களா ?? சொல்லவே இல்ல ?

  என்ன செய்ய தம்பி சில உண்மைகளை சொல்லவேண்டாம் தானாவே வெளிவந்திரும்.(உங்ககிட்டேயிருந்து வெளிவந்தது போல) 🙂

 • 31. அன்பு  |  2:03 பிப இல் ஒக்ரோபர் 12, 2010

  //மீடியாக்கள் கோள் மூட்டி கொடுக்கும் குண்டணிகளின் வேலையைத்தான் செய்கிறது. //

  மிகச்சரி.
  ஆனாலும் நம்ம ஆளுங்க அதைத்தானப் பாக்கறாங்க. ஒரு TV-ல ஒரு பிரபலத்தைப் பத்தி கிசு கிசு போய்க்கிட்டு இருக்கு, இன்னொரு TV-ல நாடு எதிர்நோக்கிட்டு இருக்கிற பிரச்சினையைப் பத்தி அலசுறாங்க. நம்ம ஆளுங்க எதைப் பார்ப்பாங்க? கிசுகிசு போடற TV-யோட TRP அதிகமாச்சுன்னா இந்த TV-யும் அதையே பண்ண ஆரம்பிச்சிடுறாங்க. தப்பு நம்ம மேலயும் இருக்கில்ல?

 • 32. குந்தவை  |  8:32 முப இல் ஒக்ரோபர் 13, 2010

  வாங்க அன்பு. முதல்தடவையா வந்திருக்கீங்க. கருதுக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,778 hits
செப்ரெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
« ஜூலை   அக் »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

%d bloggers like this: