Teen…Teen… Teenage.

ஒக்ரோபர் 28, 2010 at 7:23 முப 27 பின்னூட்டங்கள்

                                         என்னை ஒரு தொடர் பதிவுக்கு மந்திரன் தம்பி அழைப்புவிடுத்திருந்தார். டீன் ஏஜ் என்றால் எழுதுவதற்க்கு நிறைய உண்டு என்றாலும்… இரண்டு விஷயங்கள் மறக்கமுடியதவை. அதை எழுதலாம் என்று பார்த்தால் …கொஞ்சம் சோம்பேறித்தனம் ஒரு காரணம் என்றாலும் அதையும் தாண்டியும் காரணம் இருக்குது. அதத்தான் சொல்லப்போறேன். ….

                                       எப்பவும் ஏதாவது ஒரு பாட்டை பாடி கொண்டே அலைவது என்னுடைய பழக்கம்.  என்னுடைய பாசமலர்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள் இந்த பழக்கத்தை ஒழிக்க. ம்…. ஒன்றுமே பலிக்கவில்லை. படிக்ககிற நேரத்தில் பாட்டு படிக்க முடியாதே என்று எப்பவும் என்னை படிக்க சொல்ல ஆரம்பித்தார்கள்.  படிக்கிறது எனக்கு பிடிக்காத விஷயமென்றாலும்,Maths எனக்கு ரெம்ப பிடிக்கும்.  அதனால எப்ப படிக்க சொன்னாலும், ஜாலியா பாட்டுபாடிக் கொண்டே maths போட ஆரம்பித்துவிடுவேன்.

                         கடைசியில் தீவிரமாக சதி ஆலோசனை நடத்தி வீட்டில் ஒரு எழுதப்படாத சட்டமே வந்திருச்சி.. என்னன்னா யாராவது வீட்டுல படிச்சிட்டு இருந்தாங்கன்னா.. மற்றயாரும் அவங்க disturb பண்ணுற மாதிரி சத்தம் போடக்கூடாது.  அப்படி மீறி சப்தம் போட்டா அவங்க தலையில ஒரு கொட்டு வைக்கலாம்.  ஏற்கனவே எல்லாரும் என் மேல கொலவெறியில இருக்கும் போது…. என் தலை கொடுத்தால் என்னவாகும் என்று உங்களுக்கே புரிந்திருக்கும் . Risk எடுக்க எனக்கு ரெம்பவே பயம் வந்துவிட்டது . அப்புறம் என்னாச்சி… நான் எப்ப பாட்டு பாட வாயை திறந்தாலும்… என்னக்கு ரெண்டு கொட்டு கொடுக்கவாது எங்கண்ணன் படிக்க ஆரம்பிச்சிடுவான்.

                               இப்படி ஒரு பாடகியை அநியாயமாக படாதபாடு படுத்தியதால்.. இவ்வையகம் ஒரு பொல்லாத பாடகியை இழந்துவிட்டது என்று இனிமேல் கவலைப்பட்டு என்ன புண்ணியம்?.

                              எனக்கு நினைவு தெரிந்து ஒரு பாட்டியும் தாத்தாவும் எனக்கு இல்லை.  அதனாலோ என்னவோ எனக்கு பாட்டி தாத்தா என்றால் ரெம்ப பிடிக்கும். எங்க தாத்தா வீட்டில் நாங்க இருந்தப்ப , பக்கத்து வீட்டில் எங்க சித்தி பாட்டி இருந்தாங்க.  எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்க போய் பாட்டி கூட பல்லாங்குழி, தாயம் எல்லாம் விளையாடுவேன்.  அது போக வீடு கூட்டி குடுக்கிறது, அம்மியில் அரைத்து கொடுப்பது என்று சில பல எடுபிடி வேலைகளையும் செய்து கொடுப்பேன்.

                               அவங்களுக்கு நிறை பிள்ளைங்க உண்டு என்றாலும் அவங்க எப்பாவது தான் வந்து போவார்கள்.  ஆனால் பாட்டி ஒருத்தருக்க வீட்டிர்க்கும் போகமாட்டார்கள்.  கேட்டால், கடைசி வரைக்கும் யார் வீட்டிற்க்கும் போய் நிற்கும்படி கடவுள் என்னை விடமாட்டார், அதற்க்குள் என்னை யாருக்கும் எந்த கஷ்டமும் தராமல் எடுத்திருவாரு என்று ஒரு பதில் தருவாங்க.

                               சரி.. சரி அதனால என்னை பற்றி நல்ல கற்பனை எல்லாம் வளத்துக்காதீங்க ஏன்னா.. ஒரு பக்கம் இப்படி இருந்தாலும் இன்னொரு பக்கம் எலியும் பூனையுமா இரண்டு பேரும் எதுக்குத்தான் சண்டை போடவேண்டும் என்றில்லாமல் பொழுதன்னைக்கும் சண்டை போட்டுகொள்வோம்.

                            ஒரு நாள் இப்படி தான் என்னை கர்ணகொடூரமாக திட்டியதோடு நிற்காமல் கொஞ்சம் காப்பி கொண்டு வா என்று ஏவல் வேறு.  முனங்கி கொண்டே போய் காப்பி வைத்திருந்த பாத்திரத்தை பார்த்தால்…மே மாதவெயிலுக்கு சுகமாக ஜில்லென்று இருந்த கருப்பட்டி காப்பியில் ஜாலியா பிக்னிக் வந்த மாதிரி அவ்ளோ கடிஎறும்பும் மிதந்தும் நீச்சலடித்தும் விளையாடி கொண்டிருந்தது.

                              இருந்த கடுப்பில் அதை அப்படியே கப்பில் ஊற்றி பாட்டியிடம் கொடுத்துவிட்டேன்.  ஒரு வாய் வைத்தது தான் …..திடீரென்ற இடமாற்றத்தால் அந்த எறும்புகள் எல்லாம் பாட்டியின் நாவை பதம் பார்க்க..ஆ….. அம்புட்டுதான்… பாட்டியின் முகம் அஷ்டகோணலாக மாறி.. த்தூ…த்து.. என்று துப்பி என்னை பார்வையாலே எரித்துவிட்டார்கள்.  நான் ஒரு வேகத்தில் கொடுத்துவிட்டாலும்.. அவங்க முகத்தில் வேதனையை பார்த்தவுடன் ரெம்ப கஷ்டமா போச்சி.. அதையும் இதையும் கொடுத்து… கவனிக்கவேயில்லை என்று புழுகி… அப்பப்பா.

                               நிறைய நாள் நினைப்பேன் அவங்ககிட்ட உண்மையை சொல்லணும் என்று.. ஆனா கொஞ்சம் பயம் சொன்னால் குதறிவிவாங்க என்று.  இப்படி நான் நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் அவங்க சொன்ன மாதிரியே தூங்கபோனவங்க நிரந்தரமா தூங்கிட்டாங்க.  இப்ப கூட அந்த பாட்டி நியாபகம் வந்தால் எனக்கு வருத்தமாக இருக்கும்… இப்ப வருத்தப்பட்டு என்ன புண்ணியம் நீங்களே சொல்லுங்க.

                          அதான் நான் இதை பற்றி எழுதவில்லை.

 சரி இதில் யாரையாவது கோத்து விடவேண்டுமாமே,

                அன்பழகன், பர்வதபிரியா, கனகு…. மூன்று பேரையும் கோத்துவிடுகிறேன். என்னை மாதிரி ஏதாவது காரணம் சொல்லாம நீங்களாவது ஒழுங்கா எழுதுங்க. 🙂

Advertisements

Entry filed under: அனுபவம்.

எந்திரனும் நானும். யாருகிட்ட?

27 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Karthik  |  7:26 முப இல் ஒக்ரோபர் 28, 2010

  ஹ்ம்ம் நல்லாதான் இருக்கு உங்க கொசுவத்தி

 • 2. priyamudan PRABU  |  7:31 முப இல் ஒக்ரோபர் 28, 2010

  இப்படி ஒரு பாடகியை அநியாயமாக படாதபாடு படுத்தியதால்.. இவ்வையகம் ஒரு பொல்லாத பாடகியை இழந்துவிட்டது என்று இனிமேல் கவலைப்பட்டு என்ன புண்ணியம்?.

  /////
  எல்லாம் அண்ணன்கள் ஆதிக்கம் அக்கா, சும்மா விடதிக..

 • 3. priyamudan PRABU  |  7:33 முப இல் ஒக்ரோபர் 28, 2010

  சில பல எடுபிடி வேலைகளையும் செய்து கொடுப்பேன்.

  ////////

  இப்பவும் அவர் சமைக்க , நீங்க எடுபுடி வேல மட்டும்தான் பார்ப்பதாக உளவுத்துறை சொல்லுதே … அப்படியா ?

 • 4. priyamudan PRABU  |  7:34 முப இல் ஒக்ரோபர் 28, 2010

  கர்ணகொடூரமாக??

  appadinaa??

 • 5. குந்தவை  |  8:33 முப இல் ஒக்ரோபர் 28, 2010

  வாங்க கார்த்திக்.
  //ஹ்ம்ம் நல்லாதான் இருக்கு உங்க கொசுவத்தி
  🙂

 • 6. குந்தவை  |  8:36 முப இல் ஒக்ரோபர் 28, 2010

  //எல்லாம் அண்ணன்கள் ஆதிக்கம் அக்கா, சும்மா விடதிக..

  ha…ha…

 • 7. குந்தவை  |  8:39 முப இல் ஒக்ரோபர் 28, 2010

  //இப்பவும் அவர் சமைக்க , நீங்க எடுபுடி வேல மட்டும்தான் பார்ப்பதாக உளவுத்துறை சொல்லுதே … அப்படியா ?

  hm…. இருந்தாலும் எடுபிடி வேலையாவது செய்வேன் என்று ஒத்து கொண்டவரை சந்தோஷம் தான்.

 • 8. குந்தவை  |  8:40 முப இல் ஒக்ரோபர் 28, 2010

  //கர்ணகொடூரமாக??

  appadinaa??
  //

  என்ன தம்பி இப்படி கேட்கிறீங்க.. அப்ப இப்படி ஒரு வார்த்தை கிடையாதா?

 • 9. priyamudan PRABU  |  9:12 முப இல் ஒக்ரோபர் 28, 2010

  என்ன தம்பி இப்படி கேட்கிறீங்க.. அப்ப இப்படி ஒரு வார்த்தை கிடையாதா?

  //

  irukku
  athuthan enna varthai solli thiddunanganu kedden
  ha ha

 • 10. குந்தவை  |  9:32 முப இல் ஒக்ரோபர் 28, 2010

  // enna varthai solli thiddunanganu kedden

  எப்படி திட்டுனாங்கன்னு எல்லாம் கொட்டடிக்க வேண்டுமா? இதெல்லாம் ரெம்ப அநியாயம். இருந்தாலும் அந்த நேரத்தில் கோபம் வருமே தவிர … அப்புறம் நினைத்தால் சிரிப்பாகத்தான் வரும் எனக்கு.

 • 11. priya.r  |  9:53 முப இல் ஒக்ரோபர் 28, 2010

  ஹலோ குந்தவை ! உங்களை அப்பாவி ன்னு நினைத்தா இப்படி அடப்பாவின்னு சொல்ல வைத்துடீங்களே!
  அதென்ன// ஒழுங்க எழுதுங்க. //
  ஒழுங்கா எழுதுங்க அப்படின்னு சொன்னா தான் எழுதுவோம் ஹ ஹா

 • 12. குந்தவை  |  10:00 முப இல் ஒக்ரோபர் 28, 2010

  he…he.. சரி பண்ணிட்டேன் தாயே. rempa thanks.

 • 13. Uma  |  4:48 பிப இல் ஒக்ரோபர் 28, 2010

  Ki kunthavai,
  nice.

 • 14. அன்பு  |  4:11 முப இல் ஒக்ரோபர் 29, 2010

  // நான் எப்ப பாட்டு பாட வாயை திறந்தாலும்… என்னக்கு ரெண்டு கொட்டு கொடுக்கவாது எங்கண்ணன் படிக்க ஆரம்பிச்சிடுவான். //

  உங்க அண்ணனுக்கு எங்க சார்பில நன்றி சொல்லிடுங்க.. இல்லைன்னா நீங்க பாடறதயெல்லாம் கேட்க வேண்டியிருக்கும்.

 • 15. ஜெகதீஸ்வரன்  |  4:42 முப இல் ஒக்ரோபர் 29, 2010

  ஒரு பிரம்மாண்ட பாடகியை இந்த உலகம் தவறவிட்டுச்சு. இதைப் பற்றி இப்போவாவது வருத்தப் படுகின்றார்கள் உடன்பிறப்புகள்.

 • 16. அன்பு  |  6:39 முப இல் ஒக்ரோபர் 29, 2010

  //அவ்ளோ கடிஎறும்பும் மிதந்தும் நீச்சலடித்தும் விளையாடி கொண்டிருந்தது. இருந்த கடுப்பில் அதை அப்படியே கப்பில் ஊற்றி பாட்டியிடம் கொடுத்துவிட்டே //
  பாவம் அந்தப் பாட்டி..

  //எனக்கு பாட்டி தாத்தா என்றால் ரெம்ப பிடிக்கும்.//
  மேல இருக்கிறதப் படிச்சா அப்ப்டித் தெரியலயே.. 🙂

 • 17. அன்பு  |  7:00 முப இல் ஒக்ரோபர் 29, 2010

  //அன்பழகன், பர்வதபிரியா, கனகு…. மூன்று பேரையும் கோத்துவிடுகிறேன்//

  என்னது நானா? அவ்வ்வ்வ்வ்..

  என்னையும் மதிச்சு அழைச்சிருகீங்க.. முயற்சி பண்ணறேன்.. 🙂 (ஒரு நிமிஷம், அது நெஜமாவே நாந்தானா? இல்லை வேற யாராவது அன்பழகன்னு இருக்காங்களா?)

 • 18. குந்தவை  |  5:58 முப இல் ஒக்ரோபர் 30, 2010

  Thank You Umaji

 • 19. குந்தவை  |  5:59 முப இல் ஒக்ரோபர் 30, 2010

  //உங்க அண்ணனுக்கு எங்க சார்பில நன்றி சொல்லிடுங்க.. இல்லைன்னா நீங்க பாடறதயெல்லாம் கேட்க வேண்டியிருக்கும்.

  ha…ha.. sure.

 • 20. குந்தவை  |  6:01 முப இல் ஒக்ரோபர் 30, 2010

  //ஒரு பிரம்மாண்ட பாடகியை இந்த உலகம் தவறவிட்டுச்சு. இதைப் பற்றி இப்போவாவது வருத்தப் படுகின்றார்கள் உடன்பிறப்புகள்.

  உங்களை எல்லாம் காப்பாத்தின திருப்தியோடு இருக்கிறாங்க. கஷ்டத்தை விலை கொடுத்து வாங்குவீங்களா?

 • 21. குந்தவை  |  6:10 முப இல் ஒக்ரோபர் 30, 2010

  //ஒரு நிமிஷம், அது நெஜமாவே நாந்தானா? இல்லை வேற யாராவது அன்பழகன்னு இருக்காங்களா?)

  நீங்களே தான் தம்பி. எனக்கு வேறு எந்த அன்பாஸ்கானையும் தெரியாது.

 • 22. kanagu  |  3:16 பிப இல் நவம்பர் 5, 2010

  /*மற்றயாரும் அவங்க disturb பண்ணுற மாதிரி சத்தம் போடக்கூடாது.*/

  ஹா ஹா ஹா 😀 😀

  எனக்கும் தாத்தா, பாட்டி கிட்டயெல்லாம் நெருங்கி பழகுற வாய்ப்பு கிடைக்கல.. 😦

  உங்க கிட்ட காபி வாங்கி சாப்பிட்டா கவனமா இருக்கணும் போல இருக்கே.. 😉

  என்னை கோர்த்துவிட்டதுக்கு நன்றி அக்கா.. ரொம்ப நாளா எழுதவே இல்ல.. ஆரம்பிக்கிறேன் 🙂 🙂

 • 23. vaarththai  |  7:13 முப இல் நவம்பர் 6, 2010

  என்னா வில்லத்தனம்…..

  (இப்ப கண்மணி அப்பாவோட நிலமைய நெனச்சாதான் கதிகலங்குது. god save)

 • 24. குந்தவை  |  4:53 முப இல் நவம்பர் 7, 2010

  //உங்க கிட்ட காபி வாங்கி சாப்பிட்டா கவனமா இருக்கணும் போல இருக்கே..
  he..he…

  //என்னை கோர்த்துவிட்டதுக்கு நன்றி அக்கா.. ரொம்ப நாளா எழுதவே இல்ல.. ஆரம்பிக்கிறேன்
  எழுதுங்க… எழுதுங்க…

 • 25. குந்தவை  |  4:54 முப இல் நவம்பர் 7, 2010

  //என்னா வில்லத்தனம்…..

  (இப்ப கண்மணி அப்பாவோட நிலமைய நெனச்சாதான் கதிகலங்குது. god save) //

  ha…ha…ha….

 • 26. saravanan kulandaiswamy  |  2:06 பிப இல் நவம்பர் 21, 2010

  Akka..where is the new post ? post it soooooooooooooooooooon

 • 27. பதின்ம வயது | கனகுவின் பதிவுகள்  |  10:44 பிப இல் நவம்பர் 22, 2010

  […] காரணம் குந்தவை அக்கா. அவங்க தான் இந்த தொடர்பதிவு-ல என்னை கோர்த்துவிட்டு இருக்காங்க. […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,647 hits
ஒக்ரோபர் 2010
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: