யாருகிட்ட?

நவம்பர் 22, 2010 at 6:55 முப 42 பின்னூட்டங்கள்

                            கண்மணி கொஞ்ச நாளாவே கொஞ்சம் ஓவரா சேட்டை பண்ணிட்டிருக்கா. அன்றும் அப்படித்தான் சாயங்காலமே பால் குடிப்பதிலிருந்து ஆரம்பித்து எதற்கெடுத்தாலும் ஒரே  அட்டகாசம்…. அப்புறமென்ன, இப்படி ரெண்டுபேரும் மல்லுக்கட்டிய சப்தத்தில் கடுப்பாகி …  கண்மணி அப்பா ரெண்டு அரட்டு போட்டபிறகு தான் அம்மையார் கொஞ்சம் நார்மலுக்கு வந்தாங்க..

                           திட்டிவிட்டோமேன்னு அவங்க அப்பாவுக்கு வருத்தம்,  திட்டிட்டாங்களேன்னு கண்மணிக்கு வருத்தம்,  வீடே திடீர்ன்னு அமைதியாயிடிச்சேன்னு எனக்கு வருத்தம். இப்படி ஆளுக்கொரு வருத்தத்தையும் தூக்க முடியாம தூக்கிட்டு தூங்க போனோம்.

                தூங்குவதற்க்கு முன்னால் கண்மணி ஒரு சின்ன செபத்தை பாவம் போல் சொல்லிமுடித்தவுடன், அவங்கப்பா,

 “கண்மணி… அம்மா அப்பா சொல் பேச்சையும்  கேட்கணும்ன்னு கொஞ்சம்  prayer பண்ணு ” என்று சொல்ல..

                         கண்மணியும் இன்னும் கொஞ்சம் பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு அதையும் கூறிவிட்டு படுத்து கொண்டாள்.

                       எனக்கே ரெம்ப பரிதாபமாக இருந்தது. அப்புறம் நாங்களும் சிறிது prayer பண்ணி முடித்தவுடன்,

                      என்னிடமும் “நீயும் ஒரு சொல் பேச்சையும் கேட்கிறது கிடையாது, அதனால நீயும் கண்மணி மாதிரி prayer பண்ணு. ” (கண்மணியை அரட்டுற மாதிரி)

                          நானும் ரெம்ப பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு , “கடவுளே நானும் எங்கம்மா, அப்பா பேச்சை கேட்டு ஒழுங்கா இருக்கணும்”  என்றேன் மகா சீரியஸாக .

                        தங்கபாண்டியர் (he…he… எல்லாம் ஒரு மரியாதை தான்) என்னை சிங்க பாண்டியர் மாதிரி ஒரு பார்வை பார்த்து முறைத்ததை பார்த்துவிட்டு,

                        “He..he… இப்ப எனக்கு நீங்க தானே அம்மாவும் அப்பாவும்.. அதான் அப்படி சொன்னேன்” ( paint அடிக்கிறதில நாங்க தான் பயங்கர expert  ஆச்சே)

                       “இந்த ஜால்ஜாப்பு எல்லாம் வேண்டாம் ஒழுங்கா நான் சொல்லறதை எல்லாம்  கேட்கணும்ன்னு prayer பண்ணு

                        நான் சிரிப்பை அடக்கிவிட்டு, மறுபடியும் முகத்தை அப்பாவியா வைத்துவிட்டு,

                  “கடவுளே  என் வீட்டுகாரர் நான் சொல்லறதை எல்லாம்  கேட்கணும்”  மகா சின்சியராக வேண்டிகொண்டேன்.

                      அவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.. ஆனாலும் சிரிக்ககூடாது என்று சீரியஸாக ஏதோ பேச வாயெடுக்கும் போது, கண்மணி விசுக்கென்று படுக்கையில் இருந்து எழுந்தாள்.

                                        நான்…. என்னாச்சி தூங்கிட்டு தானே இருந்தாள் என்று யோசித்துகொண்டிருக்கும் போதே … கைகளை கூப்பி , கண்ணை மூடி “யேசப்பா நான் சொல்றபடியும் அப்பா கேட்கணும்” என்று சொல்ல…. வழக்கம் போல கலகலப்பாகி விட்டது வீடு.

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா.

Teen…Teen… Teenage. பாயாசம் 13/12/10

42 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Karthik  |  6:57 முப இல் நவம்பர் 22, 2010

  ஹஹஅஹா . இந்த காலத்து குழந்தைகள் படு சுட்டி…

 • 2. priyamudan PRABU  |  7:10 முப இல் நவம்பர் 22, 2010

  VANTHUDINGALA???

 • 3. Joe  |  7:10 முப இல் நவம்பர் 22, 2010

  Cute! 🙂

 • 4. priyamudan PRABU  |  7:15 முப இல் நவம்பர் 22, 2010

  ME FIRST?

 • 5. குந்தவை  |  7:59 முப இல் நவம்பர் 22, 2010

  //இந்த காலத்து குழந்தைகள் படு சுட்டி..

  அதானே… பாத்து பேசணும்.

 • 6. குந்தவை  |  8:00 முப இல் நவம்பர் 22, 2010

  //VANTHUDINGALA???

  vanthutteen thambi.

 • 7. குந்தவை  |  8:01 முப இல் நவம்பர் 22, 2010

  //ME FIRST?
  வடை போச்சே…

 • 8. குந்தவை  |  8:02 முப இல் நவம்பர் 22, 2010

  //Cute!

  Thank U Joe.

 • 9. அன்பு  |  8:57 முப இல் நவம்பர் 22, 2010

  // யேசப்பா நான் சொல்றபடியும் அப்பா கேட்கணும் //

  haha.. கடைசியில அவருதான் அவுட்டா? 🙂 ..

 • 10. அன்பு  |  8:59 முப இல் நவம்பர் 22, 2010

  // “”இந்த ஜால்ஜாப்பு எல்லாம் வேண்டாம் ஒழுங்கா நான் சொல்லறதை எல்லாம் கேட்கணும்ன்னு prayer பண்ணு“ //

  கொஞ்சம் உஷாராத்தான் இருக்காரு..

 • 11. vaarththai  |  9:03 முப இல் நவம்பர் 22, 2010

  // கண்மணி கொஞ்ச நாளாவே கொஞ்சம் ஓவரா சேட்டை பண்ணிட்டிருக்கா. //

  எல்லாம் உங்கள விட கம்மி தான்.

 • 12. vaarththai  |  9:03 முப இல் நவம்பர் 22, 2010

  //…வீடே திடீர்ன்னு அமைதியாயிடிச்சேன்னு எனக்கு வருத்தம்…..//

  இந்த கொடுமய எங்க போய் சொல்ல. பிள்ளையையும் கிள்ளிவிட்டு…..இப்ப டயலாக்

 • 13. vaarththai  |  9:04 முப இல் நவம்பர் 22, 2010

  // (கண்மணியை அரட்டுற மாதிரி)//

  அந்தளவுக்கா அவருக்கு நீங்க சுதந்திரம் கொடுத்து வச்சிருக்கீங்க….? நம்பமுடியலயே

 • 14. vaarththai  |  9:04 முப இல் நவம்பர் 22, 2010

  // தங்கபாண்டியர் (he…he… எல்லாம் ஒரு மரியாதை தான்) //

  என்ன திடீருன்னு இவ்வளவு மரியாத….அலெர்ட்டு….ஏதோ அல்வா இருக்கு

 • 15. vaarththai  |  9:06 முப இல் நவம்பர் 22, 2010

  //( paint அடிக்கிறதில நாங்க தான் பயங்கர expert ஆச்சே)//

  இந்தா வந்திச்சில்ல அல்வா நெம்பர் 1

 • 16. vaarththai  |  9:07 முப இல் நவம்பர் 22, 2010

  //“கடவுளே என் வீட்டுகாரர் நான் சொல்லறதை எல்லாம் கேட்கணும்“ //

  அடக்கடவுளே இது அல்வா கூட இல்ல ஆப்பாச்சே…….
  ச‌ந்தடிகாக்குல என்னா கிரிமினல் தனம்.

  இயேசப்பா நீ எங்கனா லீவ்ல போய்டு……

 • 17. ஸ்வர்ணரைக்கா  |  9:18 முப இல் நவம்பர் 22, 2010

  கண்மணியவிட நீங்க தான் சுட்டி போல இருக்கே…

 • 18. குந்தவை  |  9:59 முப இல் நவம்பர் 22, 2010

  //haha.. கடைசியில அவருதான் அவுட்டா? ..

  பின்ன நாங்கயெல்லாம் யாரு? 🙂

 • 19. குந்தவை  |  10:03 முப இல் நவம்பர் 22, 2010

  //கொஞ்சம் உஷாராத்தான் இருக்காரு..

  ha..ha.. வேற வழி?

 • 20. குந்தவை  |  10:34 முப இல் நவம்பர் 22, 2010

  //எல்லாம் உங்கள விட கம்மி தான்.

  😦

 • 21. குந்தவை  |  10:36 முப இல் நவம்பர் 22, 2010

  //இந்த கொடுமய எங்க போய் சொல்ல. பிள்ளையையும் கிள்ளிவிட்டு…..இப்ப டயலாக்

  இந்த சீன்ல தான் டயலாக் விடமுடியும் தம்பி.

 • 22. குந்தவை  |  10:39 முப இல் நவம்பர் 22, 2010

  //அந்தளவுக்கா அவருக்கு நீங்க சுதந்திரம் கொடுத்து வச்சிருக்கீங்க….? நம்பமுடியலயே

  என்ன இப்படி சொல்லிட்டீங்க தம்பி. அதெல்லாம் ஒரு வருஷத்துக்கு ஒன்பது தடவை அரட்டலாம் என்று தாரளமாக சுதந்திரம் கொடுத்திருக்கேன்.

 • 23. குந்தவை  |  10:42 முப இல் நவம்பர் 22, 2010

  //என்ன திடீருன்னு இவ்வளவு மரியாத….அலெர்ட்டு….ஏதோ அல்வா இருக்கு

  ha..ha… மனசெல்லாம் மரியதை வச்சிட்டிருக்கிற பிள்ளைய பாத்து கேட்கிற கேள்வியா இது?

 • 24. குந்தவை  |  10:44 முப இல் நவம்பர் 22, 2010

  //இந்தா வந்திச்சில்ல அல்வா நெம்பர் 1

  இதெல்லாம் அப்பப்ப… நான் அல்வா கொடுக்காம யார் கொடுகிறது?.

 • 25. குந்தவை  |  10:47 முப இல் நவம்பர் 22, 2010

  //அடக்கடவுளே இது அல்வா கூட இல்ல ஆப்பாச்சே…….
  ச‌ந்தடிகாக்குல என்னா கிரிமினல் தனம்.

  இயேசப்பா நீ எங்கனா லீவ்ல போய்டு……
  //

  ha..ha… முடியல தம்பி.
  (officila லூசு மாதிரி சிரிச்சிட்டேன்)

 • 26. குந்தவை  |  10:51 முப இல் நவம்பர் 22, 2010

  //கண்மணியவிட நீங்க தான் சுட்டி போல இருக்கே…

  ஆகா… இப்படி ஒரே போடா போட்டுடீங்களே. 🙂

 • 27. அன்பு  |  1:55 பிப இல் நவம்பர் 22, 2010

  // கண்மணியவிட நீங்க தான் சுட்டி போல இருக்கே…

  ஆகா… இப்படி ஒரே போடா போட்டுடீங்களே
  //

  அது ஒண்ணுமில்ல.. உங்களை புத்திசாலியா காமிச்சுக்கறதுக்காக நீங்க பண்ணின எடிட்டிங் வேலையெல்லாம் அவங்களுக்கு தெரிஞ்சிருக்காது.. 😛

 • 28. Uma  |  3:11 பிப இல் நவம்பர் 22, 2010

  Kanmani is so cute.

 • 29. அனாமதேய  |  7:15 பிப இல் நவம்பர் 22, 2010

  Very Nice. Take care.

 • 30. kanagu  |  10:53 பிப இல் நவம்பர் 22, 2010

  ஹா ஹா ஹா… கடைசியில இப்படி ஒரு குண்ட அம்மாவும் பொண்ணும் சேர்ந்து போட போறீங்க-னு தெரிஞ்சிருந்தா அவர் மட்டும் யேசப்பா-வ கும்பிட்டு தூங்கி இருப்பார்… ஆனால் விதி வலியதே!!!! 😀 😀

 • 31. குந்தவை  |  4:42 முப இல் நவம்பர் 23, 2010

  //அது ஒண்ணுமில்ல.. உங்களை புத்திசாலியா காமிச்சுக்கறதுக்காக நீங்க பண்ணின எடிட்டிங் வேலையெல்லாம் அவங்களுக்கு தெரிஞ்சிருக்காது..

  நீங்க கண்டுபிடிச்சிட்டீங்களே தம்பி. 😦

 • 32. குந்தவை  |  4:42 முப இல் நவம்பர் 23, 2010

  //Kanmani is so cute.

  Thank you Umaji.

 • 33. குந்தவை  |  4:49 முப இல் நவம்பர் 23, 2010

  // ஆனால் விதி வலியதே!!!!

  🙂

 • 34. saravanan kulandaiswamy  |  11:38 முப இல் நவம்பர் 23, 2010

  akka.. seriously telling idha apdiye oru filmla setha it will be a excellent scene… very lively… paavam pandian…

 • 35. குந்தவை  |  6:01 முப இல் நவம்பர் 24, 2010

  //akka.. seriously telling idha apdiye oru filmla setha it will be a excellent scene… very lively… paavam pandian…

  🙂

 • 36. kunthavai  |  9:25 முப இல் நவம்பர் 24, 2010

  //Very Nice. Take care.

  Thank You Sir.

 • 37. priya.r  |  4:28 பிப இல் நவம்பர் 28, 2010

  //நான்…. என்னாச்சி தூங்கிட்டு தானே இருந்தாள் என்று யோசித்துகொண்டிருக்கும் போதே … கைகளை கூப்பி , கண்ணை மூடி “யேசப்பா நான் சொல்றபடியும் அப்பா கேட்கணும்” என்று சொல்ல…. வழக்கம் போல கலகலப்பாகி விட்டது வீடு//

  ஹ ஹா!இதைத்தான் தாயை போல பிள்ளை என்பதோ !!

 • 38. குந்தவை  |  4:45 முப இல் நவம்பர் 30, 2010

  //ஹ ஹா!இதைத்தான் தாயை போல பிள்ளை என்பதோ !!

  ஒரு வழியா சிரிச்சிட்டீங்க. இத்தனை நாள்…ஏன் இந்த மொளனம்?

 • 39. vaarththai  |  9:53 முப இல் திசெம்பர் 9, 2010

  நானும் புதுசா ஒரு கடைய ஆரம்பிச்சி அஞ்சாறு பதிவ போட்டு ஆத்திக்கிட்டுருக்கேன், என் கட பக்கம் வராம என்ன பண்ணிகிட்டிருக்கீங்க. அரபு தேசத்துக்கு ஒட்டகத்த அனுப்பனுமா ?????

  எக்கா, நல்ல புள்ளையா நம்ம புது கடைக்கு வரணும் இல்ல ……
  (ஒன் நிமிட் , தங்கமணிய கேட்டு அப்புறம் சொல்றேன்)

  ezuththukkal.blogspot.com

 • 40. குந்தவை  |  1:50 பிப இல் திசெம்பர் 10, 2010

  //நானும் புதுசா ஒரு கடைய ஆரம்பிச்சி அஞ்சாறு பதிவ போட்டு ஆத்திக்கிட்டுருக்கேன், என் கட பக்கம் வராம என்ன பண்ணிகிட்டிருக்கீங்க.

  இது எப்ப ஆரம்பிச்சீங்க? எனக்கு தெரியாதே…

  //எக்கா, நல்ல புள்ளையா நம்ம புது கடைக்கு வரணும் இல்ல ……
  (ஒன் நிமிட் , தங்கமணிய கேட்டு அப்புறம் சொல்றேன்)

  கண்டிப்பா வர்ரேன்.

 • 41. அப்பாவி தங்கமணி  |  8:00 பிப இல் திசெம்பர் 17, 2010

  // paint அடிக்கிறதில நாங்க தான் பயங்கர expert ஆச்சே//
  yeah yeah..implied it is…ha ha

  //யேசப்பா நான் சொல்றபடியும் அப்பா கேட்கணும்” என்று சொல்ல…. வழக்கம் போல கலகலப்பாகி விட்டது வீடு.//
  ha ha ha… kids make the world around us as heaven

 • 42. குந்தவை  |  4:50 முப இல் திசெம்பர் 19, 2010

  //yeah yeah..implied it is…ha ha
  correctaa சொன்னீங்க. ஒரு அப்பாவியோட மனச ஒரு அப்பாவி தான் புரிஞ்சிக்க முடியும். 🙂

  //kids make the world around us as heaven
  true. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,778 hits
நவம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
« அக்   டிசம்பர் »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: