பாயாசம் 13/12/10

திசெம்பர் 13, 2010 at 10:51 முப 44 பின்னூட்டங்கள்

                                குளிர் காலம் ஆரம்பித்துவிட்டது இங்கு. எப்போதுமே climate change ஆகும்போது அழையா விருந்தாளியா சளி காய்ச்சல் எல்லாம் கூடவே வருவது வாடிக்கை. ஆனா அடிக்கடி antibiotic எடுத்து கொள்வதும் உடம்புக்கு நல்லதல்ல என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அதனால் கொஞ்சம் precaution எடுத்து கொண்டால் சளி காய்ச்சல் வருவதை நாம் ஓரளவுக்கு தடுக்கலாம்.

   புதினா , மல்லி இலை, சிறிது இஞ்சி (குழந்தைக்களுக்கு ரெம்ப காரம் வேண்டாம்)  மூன்றையும் மிக்ஸியில் போட்டு அடித்து juice எடுத்து, தேவைக்கு சிறிது தேனும் கலந்து கொடுத்தால் , சளி காய்ச்சல் எல்லாம் கொஞ்சம் தூரமாக நிற்கும். சாதாரணமாக வாரத்தில் மூன்று நாட்கள் இந்த மாதிரி சீசனில் கொடுப்பது நலம்.

   தேன் என்று சொல்லும் போது ஒரு விஷயம் நியாபகத்திற்க்கு வருகிறது. விளம்பரம் எல்லாம் தேனாக தான் கொடுக்கிறார்கள். ஆனால் சில விஷயங்களை செய்தி தாள்களில் படிக்கும் போது பயமாக இருக்கிறது.
 
    நிறைய நல்ல பிராண்டு தேன்களில் அளவுக்கதிகமாக harmfull antibiotic கலந்திருக்கிறதாம். தேனீக்களின் வளர்ச்சிக்காகவும், தேன் உற்பத்தியை பெருக்குவதற்காகவும் இதை தேனீக்களுக்கு கொடுக்கபடுகிறது. இதை தொடர்ந்து அருந்தினால் லிவர் கிட்ணி எல்லம் பாதிக்கப்படும் என்று நிருபித்திருக்கிறார்கள்.  சுத்தமானதை தேர்வு செய்வதோடு அளவாகவும் உபயோகிப்பது நமக்கு நலம்.

************************

  அடிக்கடி சுற்றுலா செல்லும் மாணவர்கள் ஏரியிலோ, கடலிலோ அல்லது ஆற்றிலோ விழுந்துவிட்டார்கள் என்ற செய்தி வரும் போது மனதிற்க்கு ரெம்ப கஷ்டமாக இருக்கும். நல்லா நீச்சல் தெரிந்திருந்தாலும் பழக்கமில்லாத ஆற்றிலோ குளத்திலோ  குளிக்க நேர்ந்தால் , முதலில் அங்குள்ளவர்களிடம் அதை விசாரிப்பது நல்லது. டைவ் அடிகும் போது, அதன் ஆளத்தோடு அங்கு  பாறை, கல் அல்லது கான்கிரீட் ப்ளாக் என்று ஏதாவது இருக்கின்றதா என்று ஒரு தடவை உறுதி படுத்திகொள்வதும் நல்லது.

*****************************

எங்களுக்கு வருஷத்தில் நான்கு நாள் அவசர விடுப்பு எடுத்து கொள்ளலாம்.ஏற்கனவே மூன்று நாட்கள் எடுத்து விட்டதால் , ஒரு நாளை பத்திரமாக மூன்று மாதங்களாக பூதம் காப்பது போல் காத்து வைத்திருந்தேன். சரி இந்த வருஷம் தான் முடிய போகுதே.. அதை எடுக்கலாம் என்று போய் கேட்டால்.. என்னுடைய papersஐ பார்த்துவிட்டு ” உங்களுக்கு நான்கு நாட்கள் இருக்கிறதே… ஏன் ஒரு நாளும் எடுக்கவில்லையா? ” என்று கேள்வி பதிலாக வந்தது. ( இப்படி தான் வேலை பார்க்க வேண்டும் என்று மனதிற்க்குள் பாராட்டி கொண்டேன்) நோ பொறாமை please 🙂

Advertisements

Entry filed under: ரசித்தவை.

யாருகிட்ட? இனி ஆரஞ்சு இல்ல… ஓரஞ்சாக்கும்

44 பின்னூட்டங்கள் Add your own

 • 1. அன்பு - Anbu  |  2:02 பிப இல் திசெம்பர் 13, 2010

  // புதினா , மல்லி இலை, சிறிது இஞ்சி (குழந்தைக்களுக்கு ரெம்ப காரம் வேண்டாம்) மூன்றையும் மிக்ஸியில் போட்டு அடித்து //

  அக்கா.. எப்போதிருந்து நாட்டு மருத்துவமெல்லாம் பார்க்க ஆரம்பிச்சீங்க.. 🙂

 • 2. அன்பு - Anbu  |  2:04 பிப இல் திசெம்பர் 13, 2010

  // மாணவர்கள் ஏரியிலோ, கடலிலோ அல்லது ஆற்றிலோ விழுந்துவிட்டார்கள் என்ற செய்தி வரும் போது மனதிற்க்கு ரெம்ப கஷ்டமாக இருக்கும்//

  ரொம்ப கஷ்டமான விஷயம்தான். 😦
  நீங்க சொல்லற முன்னெச்சரிக்கையெல்லாம் தெரிந்திருந்தாலும், இது மாதிரி இடங்களுக்கு போன பிறகு வர்ற ஆர்வத்தில் மற்ற எச்சரிக்கையெல்லாம் மறந்திடுது.. 😐

 • 3. அன்பு - Anbu  |  2:05 பிப இல் திசெம்பர் 13, 2010

  // உங்களுக்கு நான்கு நாட்கள் இருக்கிறதே… ஏன் ஒரு நாளும் எடுக்கவில்லையா //

  hehe.. இதுக்குத்தான் ஓவரா வேலை பார்க்கக்கூடாது.. 🙂

 • 4. Uma  |  3:04 பிப இல் திசெம்பர் 13, 2010

  Hi kunthavai,
  Useful tips.You are right about the student,when ever i read about that i feel very sad .About honey i never heard about that.i shoud think about the amount i give it to Karthi.
  ENJOY THE EXTRA 3 DAYS.

 • 5. priya.r  |  5:58 பிப இல் திசெம்பர் 13, 2010

  நல்ல பதிவு ! குழந்தைங்க குடிச்சா சந்தோஷம் தான் !

 • 6. priyamudan PRABU  |  2:43 முப இல் திசெம்பர் 14, 2010

  உங்களுக்கு நான்கு நாட்கள் இருக்கிறதே… ஏன் ஒரு நாளும் எடுக்கவில்லையா? ” என்று கேள்வி பதிலாக வந்தது. ( இப்படி தான் வேலை பார்க்க வேண்டும் என்று மனதிற்க்குள் பாராட்டி கொண்டேன்) நோ பொறாமை please

  //////

  இதுகுஉட தெரியாம என்ன வேலை செய்யுறிங்க??

 • 7. priyamudan PRABU  |  2:43 முப இல் திசெம்பர் 14, 2010

  புதினா , மல்லி இலை, சிறிது இஞ்சி (குழந்தைக்களுக்கு ரெம்ப காரம் வேண்டாம்) மூன்றையும் மிக்ஸியில் போட்டு அடித்து juice எடுத்து, தேவைக்கு சிறிது தேனும் கலந்து கொடுத்தால் , சளி காய்ச்சல் எல்லாம் கொஞ்சம் தூரமாக நிற்கும். சாதாரணமாக வாரத்தில் மூன்று நாட்கள் இந்த மாதிரி சீசனில் கொடுப்பது நலம்.

  //////

  NAAN INCHI TEA KUDIKKIREN DAILY

 • 8. priyamudan PRABU  |  2:44 முப இல் திசெம்பர் 14, 2010

  ENNA ACHU ROMPA NAALA ALAIYE KAANOM ??

  (NEE MADDUM VARATHTHUKKU 4 PATHIVA PODURA? – APPADINU KEDKA KUDAATHU….)

 • 9. குந்தவை  |  6:52 முப இல் திசெம்பர் 14, 2010

  //அக்கா.. எப்போதிருந்து நாட்டு மருத்துவமெல்லாம் பார்க்க ஆரம்பிச்சீங்க..

  அப்படி எல்லாம் இல்லை தம்பி. மருத்துவமனைக்கு போய் பாருங்கள் .. அப்புறம் தெரியும் கஷ்டம். கூடுமானவரைக்கும் சாதாரண உணவையே மருந்தாக உபயோகிக்கும் அறிவு தானாக வந்துவிடும்.

 • 10. குந்தவை  |  6:55 முப இல் திசெம்பர் 14, 2010

  //இது மாதிரி இடங்களுக்கு போன பிறகு வர்ற ஆர்வத்தில் மற்ற எச்சரிக்கையெல்லாம் மறந்திடுது..

  இது நிதர்சனம் என்றாலும்.. கஷ்டமான விஷயம் கிடையாது. மேலும் எச்சரிக்கை செய்வது நம்முடைய கடமை.

 • 11. குந்தவை  |  6:56 முப இல் திசெம்பர் 14, 2010

  //hehe.. இதுக்குத்தான் ஓவரா வேலை பார்க்கக்கூடாது..

  அவசரப்பட்டு முடிவுக்கு வந்துடாதீங்க தம்பி. 🙂
  நான் சரியாத்தான் கணக்கு வச்சிருக்கேன், அவங்க தான் அதை பதிவு பண்ணாம விட்டிருக்காங்க. 🙂

 • 12. குந்தவை  |  6:57 முப இல் திசெம்பர் 14, 2010

  //Useful tips.You are right about the student,when ever i read about that i feel very sad .About honey i never heard about that.i shoud think about the amount i give it to Karthi.

  நன்றி உமா.

  //ENJOY THE EXTRA 3 DAYS.

  கண்டிப்பா… கண்டிப்பா… 🙂

 • 13. குந்தவை  |  6:58 முப இல் திசெம்பர் 14, 2010

  // குழந்தைங்க குடிச்சா சந்தோஷம் தான் !

  வாங்க பிரியா. உங்க திறமைய இதுல நிருபியுங்க. 🙂

 • 14. குந்தவை  |  6:59 முப இல் திசெம்பர் 14, 2010

  //இதுகுஉட தெரியாம என்ன வேலை செய்யுறிங்க??

  ஏன் .. ஏன் தம்பி எல்லாரும் என்னை பற்றி இப்படி தப்பு தப்பா சொல்றீங்க.

 • 15. குந்தவை  |  6:59 முப இல் திசெம்பர் 14, 2010

  //NAAN INCHI TEA KUDIKKIREN DAILY

  நீங்க வர வர நல்ல பையனாயிட்டுருக்கீங்கன்னு எங்களுக்கு தெரியும். வேறு வழி?

 • 16. குந்தவை  |  7:01 முப இல் திசெம்பர் 14, 2010

  //(NEE MADDUM VARATHTHUKKU 4 PATHIVA PODURA? – APPADINU KEDKA KUDAATHU….)

  கண்டிப்பா கேட்கமாட்டோம். உங்களுக்கு இருக்கிற Electronics and communication வேலையில் இவ்வளவு எழுதுரதே பெரிய விஷயம். இன்னும் சில மாதங்களுக்கு பிறகு வலையாவது மலையாவது என்று சொன்னாலும் சொல்லுவீர்கள். 🙂

 • 17. அன்பு - Anbu  |  7:17 முப இல் திசெம்பர் 14, 2010

  // அவசரப்பட்டு முடிவுக்கு வந்துடாதீங்க தம்பி.
  நான் சரியாத்தான் கணக்கு வச்சிருக்கேன், அவங்க தான் அதை பதிவு பண்ணாம விட்டிருக்காங்க //

  எங்க ஆஃபீஸ்லயெல்லாம் எடுக்காத லீவையும் சேர்த்து குறைச்சிடுவாங்க,,:(
  எடுத்த லீவ கணக்கு வைக்காம விடற ஆஃபீஸா.. :O நீங்க லக்கிதான்.. 🙂

 • 18. karthik  |  4:33 முப இல் திசெம்பர் 15, 2010

  ஆரோக்யமான பதிவு. ஆமா , அதெப்படி மூணு நாலு எடுத்தப் பின்னும் அப்படியே இருக்கு ?? எங்கயோ கோட்டை விட்ருக்காங்க.. விளங்கிடும் இப்படி இருந்தா

 • 19. குந்தவை  |  4:43 முப இல் திசெம்பர் 15, 2010

  //எடுத்த லீவ கணக்கு வைக்காம விடற ஆஃபீஸா.. :O நீங்க லக்கிதான்

  🙂

 • 20. குந்தவை  |  4:45 முப இல் திசெம்பர் 15, 2010

  //எங்கயோ கோட்டை விட்ருக்காங்க.. விளங்கிடும் இப்படி இருந்தா

  ha…ha…. நான் எங்க வேலை பார்க்கிறேன்ன்னு உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். பாத்து பேசுங்க பாஸ்.

 • 21. priya.r  |  5:19 முப இல் திசெம்பர் 15, 2010

  // குழந்தைங்க குடிச்சா சந்தோஷம் தான் !

  //வாங்க பிரியா. உங்க திறமைய இதுல நிருபியுங்க.//
  எனக்கு திறமையா!
  திறமை பொறுமை எளிமை அதன் பெயர் குந்தவை
  சும்மா ரைமிங்கா வந்தது சீரியஸா எடுத்துக்க கூடாது ஓகே வா

 • 22. குந்தவை  |  5:33 முப இல் திசெம்பர் 15, 2010

  //திறமை பொறுமை எளிமை அதன் பெயர் குந்தவை
  சும்மா ரைமிங்கா வந்தது சீரியஸா எடுத்துக்க கூடாது ஓகே வா

  ஒரு நிமிஷம் உண்மையாத்தான் சொல்றீங்களோன்னு சந்தோஷபட்டுவிட்டேன்.

 • 23. vaarththai  |  7:26 முப இல் திசெம்பர் 15, 2010

  என்ன வெளயாட்டு…என்ன வெளயாட்டு…இது…
  ஏதோ கட பக்கம் கூப்பிடாங்களே, நல்ல புள்ளயாட்டம் வந்தமா ஆஹா…ஒஹோ….னு பின்னூட்டம் போட்டமா, அத பத்தி பாயாசத்துல “சூப்பரப்புபுபு……னு”எழுதனமானு இல்லாமா என்ன பின்னூட்டம் இது…..

  //உங்கள் குழந்தையின் பெயரை வைத்துவிட்டு…. உங்கள் புகைப்படத்தை போடுவது நல்லாயில்லைங்கோ.//

  டோட்டல்….டாமேஜ்…

 • 24. குந்தவை  |  4:55 முப இல் திசெம்பர் 16, 2010

  //என்ன வெளயாட்டு…என்ன வெளயாட்டு…இது…
  ஏதோ கட பக்கம் கூப்பிடாங்களே, நல்ல புள்ளயாட்டம் வந்தமா ஆஹா…ஒஹோ….னு பின்னூட்டம் போட்டமா, அத பத்தி பாயாசத்துல “சூப்பரப்புபுபு……னு”எழுதனமானு இல்லாமா என்ன பின்னூட்டம் இது…..

  ஆங்….

  //டோட்டல்….டாமேஜ்…
  ஐயய்யோ… இப்பவே டாமேஜ் மேல பாண்டேஜ் போடுகிறேன்.

 • 25. அப்பாவி தங்கமணி  |  7:56 பிப இல் திசெம்பர் 17, 2010

  // உங்களுக்கு நான்கு நாட்கள் இருக்கிறதே… ஏன் ஒரு நாளும் எடுக்கவில்லையா? ” என்று கேள்வி பதிலாக வந்தது. //

  che che che..super… see if you can find a job for me in your company…(ha ha ha)

 • 26. kanagu  |  6:00 பிப இல் திசெம்பர் 18, 2010

  நல்ல பகிர்வுகள் அக்கா 🙂 அதுவும் முதல் விஷயம் ரொம்ப நல்லா இருந்துது 🙂

  ஆனா உங்க கம்பெனி இப்படி லீவ மெயிண்டேன் பண்ணா விளங்கிடும் 🙂

 • 27. kanagu  |  6:01 பிப இல் திசெம்பர் 18, 2010

  பாயாசம் அப்டிங்கிறதுல இது தான் முதல் பதிவா அக்கா???

 • 28. குந்தவை  |  4:49 முப இல் திசெம்பர் 19, 2010

  // if you can find a job for me in your company…(ha ha ha)

  வாங்க புவனா…
  வருகைக்கு நன்றி. உங்களை மாதிரி ஒருத்தர் என் கூட வேலை பாத்தா நல்லாதானிருக்கும்.
  🙂

 • 29. குந்தவை  |  4:56 முப இல் திசெம்பர் 19, 2010

  //நல்ல பகிர்வுகள் அக்கா அதுவும் முதல் விஷயம் ரொம்ப நல்லா இருந்துது

  வாங்க தம்பி. நன்றி.

  //ஆனா உங்க கம்பெனி இப்படி லீவ மெயிண்டேன் பண்ணா விளங்கிடும்
  ஒரு சொட்டு தப்புக்கு இப்படியெல்லாம் பேசக்கூடாது. 🙂

 • 30. குந்தவை  |  4:56 முப இல் திசெம்பர் 19, 2010

  //பாயாசம் அப்டிங்கிறதுல இது தான் முதல் பதிவா அக்கா???

  இல்லையே.

 • 31. ?  |  9:29 முப இல் திசெம்பர் 22, 2010

  http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

  கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

  நூல் வெளியிடுவோர்:
  ஓவியர் மருது
  மருத்துவர் ருத்ரன்

  சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
  தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

  நாள்: 26.12.2010

  நேரம்: மாலை 5 மணி

  இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை

  அனைவரும் வருக !

 • 32. priyamudan PRABU  |  2:37 முப இல் திசெம்பர் 24, 2010

  whr r u ?

 • 33. Surendran  |  10:28 முப இல் ஜனவரி 13, 2011

  //நல்லா நீச்சல் தெரிந்திருந்தாலும் பழக்கமில்லாத ஆற்றிலோ குளத்திலோ குளிக்க நேர்ந்தால் , முதலில் அங்குள்ளவர்களிடம் அதை விசாரிப்பது நல்லது.//

  நல்ல அறிவுரை. நல்ல பதிவு.

  க. சுரேந்திரன்.
  அகம் புறம்.

 • 34. குந்தவை  |  4:55 முப இல் ஜனவரி 16, 2011

  வாங்க சுரேந்திரன்.
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 • 35. Anbu  |  12:30 பிப இல் ஜனவரி 27, 2011

  ரொம்ப நாளா ஆளைக்காணோம்.. என்ன ஆச்சு?

  ‘நான் ரொம்ப பிஸி’ அப்படின்னு கவுண்டமணி கணக்கா பொய்யெல்லாம் சொல்லக்கூடாது. 😛

 • 36. Sriram  |  11:49 பிப இல் மார்ச் 5, 2011

  எனக்கு தெரிஞ்ச வைத்தியம் எல்லாம் ஓல்ட் மான்க்-பெப்பர் மிக்ஸ் தானுங்க அக்கா..

 • 37. குந்தவை  |  6:08 முப இல் மார்ச் 6, 2011

  //பெப்பர் மிக்ஸ் தானுங்க அக்கா..

  அதுவும் நல்ல மருந்து தான்.

 • 38. Rajarajeswari  |  1:52 பிப இல் ஏப்ரல் 29, 2011

  பகிர்வுகள் அனைத்தும் அருமை பாராட்டுக்கள்.

 • 39. priya.r  |  1:48 பிப இல் மே 11, 2011

  வணக்கம் மேடம் !.
  சௌக்கியமா
  அடுத்த பதிவு எப்போ மேடம்
  .
  .
  .
  .
  .
  சும்மா ஜாலியா பதிவே போடாம காலம் தள்ளலாம்னு நினைப்போ 🙂

 • 40. குந்தவை  |  6:27 பிப இல் மே 27, 2011

  //பகிர்வுகள் அனைத்தும் அருமை பாராட்டுக்கள்.

  நன்றிங்கோ

 • 41. குந்தவை  |  6:31 பிப இல் மே 27, 2011

  //வணக்கம் மேடம் !.

  வணக்கம்

  //சௌக்கியமா
  சௌக்கியமே

  //அடுத்த பதிவு எப்போ மேடம்
  இந்தா போட்டுவிடுகிறேன்

  //சும்மா ஜாலியா பதிவே போடாம காலம் தள்ளலாம்னு நினைப்போ
  ச்ச ச்ச அந்த மாதிரி நல்ல எண்ணம் எல்லாம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது

 • 42. mercadeo en linea  |  5:32 பிப இல் ஒக்ரோபர் 13, 2012

  நமக்கு அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே. அதனால தான் இது ஒரு சிலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது.

 • 43. குந்தவை  |  11:00 முப இல் ஒக்ரோபர் 17, 2012

  //நமக்கு அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே. அதனால தான் இது ஒரு சிலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது.//

  வாங்க சார். நீங்க சொல்வது உண்மை தான்.உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

 • 44. Jessie R. Cruz  |  3:12 பிப இல் ஜூன் 26, 2013

  பன்றிக்காய்ச்சல் ஒரு வகை ‘இன்புளுவென்சா’ (INFLUENZA) நோய் ஆகும். முலையூட்டிகளிலும், பறவைகளிலும் அவற்றின் சுவாசக் குழாய்களில் தொற்றுகின்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சளிக்காய்சலையே மருத்துவ மொழியில் இன்புளுவென்சா அல்லது ஃப்ளு என்கிறார்கள். ஃப்ளு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரசுகளில் A,B,C என்று மூன்று வகை உண்டு. இவை மூன்றும் மனிதனில் ஃப்ளு காய்ச்சலை விதைக்க கூடியவை. இவற்றில் A,C வகை வைரஸ்கள் பன்றிகளிலும், A வகை வைரஸ்கள் பறவைகளிலும் கைவரிசை காட்டக் கூடியவை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,778 hits
திசெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
« நவ்   மே »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: