இனி ஆரஞ்சு இல்ல… ஓரஞ்சாக்கும்

மே 27, 2011 at 6:26 பிப 25 பின்னூட்டங்கள்

                                ஒருவழியா நாங்களும் குவைத்துக்கு குட்பை சொல்லிவிட்டு  இந்தியா வந்தாச்சி. நானும் செட்டில் ஆனப்பிறகு எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்தால்… அது ஆகிற கதையா தெரியவில்லை.. அதனால் நீங்க என்னை மறக்கிறதுக்கு (ஆமா நீங்க யாரு?) முன்னால ஒரு ஆஜர் போட்டுவிட்டு போகலாம்ன்னு வந்தேன்.
   

     அங்கு இருக்கும் போது எதற்கெடுத்தாலும் அவர் வாலை பிடித்து கொண்டு பின்னாடி திரிந்தே காலத்தை கடத்திவிட்டேன்,  இங்கோ… எல்லாம் தலை கீழ் வீடு பார்க்கணுமா .. பாப்பாவுக்கு அட்மிஷனா… எல்லாவற்றிர்க்கும் நான் தான் அலைய வேண்டியதாக இருக்கிறது :(.  இருந்தாலும்   இந்தியா இந்தியா தான் .

      இப்போது மலையாள நாட்டில் இருப்பதால் இனிமேல் ஆரஞ்சு இல்ல… ஓரஞ்சாக்கும்  . கண்மணி தான் பாவம் இங்கு மலையாளம் கட்டாயம் படிக்கவேண்டும் என்பதால்…மலையாள எழுதுக்களை(எழுத்தா அது? ஏதோ  படம் மாதிரி இருக்கு)  வரைந்து தள்ளிகொண்டிருக்கிறாள் அழுதபடி.

      குவைத்தை நான் மிஸ் பண்ணாவிட்டாலும் …  என்னை இத்தனை வருடங்களாக சகித்து கொண்டிருந்த நண்பர்களை  கண்டிப்பாக மிஸ் பண்ணுகிறேன்.  எனக்கு அங்கு ஒரு ராசி இருந்தது ..ஒருத்தருடன் நன்றாக பழகிவிட்டால் போதும் உடனே அவங்க ஊரை காலிபண்ணிவிடுவார்கள். அதையும் மீறி இரண்டு தெய்வபிறவிகள்   எனக்கு நல்ல தோழிகளாக இருந்து காப்பாத்தினாங்கண்ணா அவங்கள எப்படி மறக்க முடியும்.

கிரேஸ்  : குவைத்தில் காலடி வைத்த தினத்தில் இருந்து எனக்கு இவங்க பழக்கம். ரெம்பவும் கடவுள் பக்தி உள்ளவங்க. ரெம்ப நல்ல குணமும் , பாசமும் உள்ளவங்க .. இப்படி எனக்கு இல்லாத அத்தனை குணத்துடன் எப்படி எனக்கு தோழியா இருந்தாங்கன்னு எனக்கு இப்பவும் ஒரு சந்தேகம் தான். சந்தோஷாமோ துக்கமோ எதுனடந்தாலும் எனக்கு நல்ல moral supportஆ இருந்தவங்க.I miss you Akka.

Jeno : எனக்கு கால் வலி வந்து கஷ்டப்பட்ட காலத்தில் தான் இந்த அம்மா கூட பழக்கம் ஏற்ப்பட்டது. வலியாவது புலியாவது என்று என்னை மிரட்டி சிரி சிரி என்று சிரிக்க வைத்து என்னை பாடாய் படுத்தியவர்கள். முக்கியமாக எனக்கு ஒரு பதிவையும்   ( தியேட்டர் கலாட்டா  ) எழுதி தந்தவங்க  . சும்மாவே கெக்கே பிக்கேன்னு சிரித்து கொண்டிருக்கும் எனக்கு .. இப்படி ஒரு ஆள் கிடைத்தால் சொல்லவா வேண்டும். I miss your happy face Jeno.

Advertisements

Entry filed under: அனுபவம், ரசித்தவை.

பாயாசம் 13/12/10 சட்டி சுட்டதடா

25 பின்னூட்டங்கள் Add your own

 • 1. அப்பாவி தங்கமணி  |  9:58 பிப இல் மே 27, 2011

  Ha ha ha…super “orange” joke… we missed your posts… Glad to know you settled in India… Engalukku eppo’nu perumoochu vidaren… take care…:)

 • 2. Karthik  |  12:54 முப இல் மே 28, 2011

  வாங்க வாங்க. போலீஸ்ல புகார் தரலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே நீங்களே வந்தாச்சு. அழகாக கேரள நாட்டினில் இருக்கீங்க.

  இனி என்சாய் தான்

 • 3. குந்தவை  |  9:17 முப இல் மே 28, 2011

  வாங்க தங்கமணி.

  //Glad to know you settled in India
  🙂

  //Engalukku eppo’nu perumoochu vidaren…
  நீங்களுமா? கொஞ்சநாள் enjoy பண்ணுங்க.

 • 4. குந்தவை  |  9:20 முப இல் மே 28, 2011

  // போலீஸ்ல புகார் தரலாம்னு இருந்தேன்
  🙂
  //அழகாக கேரள நாட்டினில் இருக்கீங்க. இனி என்சாய் தான்
  போக போகத்தான் தெரியும் கார்த்திக்

 • 5. kanagu  |  1:32 பிப இல் மே 29, 2011

  5 மாதம் கழித்து அட்டன்டன்ஸ்(‘ட’ வோட எண்ணிக்கை‍ல கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம் 🙂 🙂 போட்டுள்ள அக்காவுக்கு வாழ்த்துக்கள்… 🙂 🙂

  மே மாசத்துல படிப்பா??? 😯 கண்மணி பாவம்… 😦 😦

  க‌ட‌வுளின் தேச‌த்தில் சிற‌க்க‌ வாழ்த்துக்க‌ள்…

 • 6. குந்தவை  |  6:09 பிப இல் மே 29, 2011

  வாங்க தம்பி.
  //(‘ட’ வோட எண்ணிக்கை‍ல கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம்
  உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு

  //மே மாசத்துல படிப்பா??? கண்மணி பாவம்…
  நான் ரெம்ப பாவம்ப்பா. 😦

  //க‌ட‌வுளின் தேச‌த்தில் சிற‌க்க‌ வாழ்த்துக்க‌ள்
  Thanks thambi.

 • 7. priya.r  |  1:50 பிப இல் மே 30, 2011

  வாங்க வாங்க 🙂 🙂
  உங்கள் வரவு நல் வரவாகுக
  திரும்பவும் பதிவுலகத்துக்கு வந்ததற்கு
  எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் பெட்ரி 🙂 🙂
  மீண்டும் உங்களிடம் இருந்து( வழக்கம் போல )
  மொக்கை பதிவுகளை எதிர்பார்க்கிறோம் 🙂

 • 8. graceravo  |  6:41 முப இல் மே 31, 2011

  இரண்டு மூன்று முறை படித்து பார்த்தேன் அடடா….! என்னை பற்றி இப்படி கூட எழுதுறதுக்கு ஆள் இருக்காங்கனு இப்பதான் தெரியுது..! எங்களுக்கும் உங்கள மறக்க முடியல லீவ் நாட்கள் வார இறுதி நாட்கள் வந்தால் உங்களை பற்றித்தான் பேசுகிறோம். கர்த்தரின் கிருபை இருந்தால் இந்தியாவில் குளுகுளு கேரளாவில் சந்திப்போம்..!

 • 9. graceravo  |  6:55 முப இல் மே 31, 2011

  “இப்படி எனக்கு இல்லாத அத்தனை குணத்துடன் எப்படி எனக்கு தோழியா இருந்தாங்கன்னு எனக்கு இப்பவும் ஒரு சந்தேகம் தான். ”

  இதில் என்ன சந்தேகம்..? எனக்கு இல்லாத நல்ல குணங்கள் உங்களிடம் இருந்ததே..! எதிர் எதிர் துருவங்கள் இணைவதில் சந்தேகம் இல்லையே..?

 • 10. Anbu  |  9:32 முப இல் மே 31, 2011

  நான்கூட குவைத்தில இன்டெர்நெட்டை தடை பண்ணிட்டாங்களோன்னு நெனச்சேன். இப்பத்தான் தெரியுது நீங்க குவைத்திலயே இல்லைன்னு. 🙂

  மலையாளம் பேசறதுக்கே கஷ்டம் இதுல எழுதப் படிக்க வேற வேணுமா? பாவம் கண்மணி.. 😦

  இந்தியாவுக்கு திரும்பியதற்கு வாழ்த்துக்கள். மலையாளக் கரையோரம் தமிழ் பாடுங்கள். 🙂

 • 11. குந்தவை  |  4:40 பிப இல் ஜூன் 3, 2011

  //நான்கூட குவைத்தில இன்டெர்நெட்டை தடை பண்ணிட்டாங்களோன்னு நெனச்சேன்.
  🙂

  //இந்தியாவுக்கு திரும்பியதற்கு வாழ்த்துக்கள்.

  வாங்க தம்பி . வாழ்த்துக்கு ரெம்ப நன்றி.

 • 12. kanagu  |  7:40 முப இல் ஜூன் 5, 2011

  /*நான் ரெம்ப பாவம்ப்பா. */

  நோ நோ… கண்மணி படிக்கிறாங்க… சோ கண்மணி தான் பாவம் 🙂

 • 13. குந்தவை  |  4:19 பிப இல் ஜூன் 6, 2011

  //நோ நோ… கண்மணி படிக்கிறாங்க… சோ கண்மணி தான் பாவம் 🙂

  😦

 • 14. குந்தவை  |  4:20 பிப இல் ஜூன் 6, 2011

  // என்னை பற்றி இப்படி கூட எழுதுறதுக்கு ஆள் இருக்காங்கனு இப்பதான் தெரியுது..!

  இதெல்லாம் ஓவெர் தன்னடக்கம்

 • 15. குந்தவை  |  4:23 பிப இல் ஜூன் 6, 2011

  // எனக்கு இல்லாத நல்ல குணங்கள் உங்களிடம் இருந்ததே..!

  அப்படியா?..

 • 16. graceravo  |  6:52 முப இல் ஜூன் 8, 2011

  தன்னடக்கமா….!!!! அப்படின்னா என்ன….???????

 • 17. Uma  |  3:18 பிப இல் ஜூன் 15, 2011

  Hi Kunthavai,
  welcome back.Today only i check your blog.You can learn malayalam from Kanmani
  take care

 • 18. amaithicchaaralamai  |  5:35 பிப இல் ஜூன் 23, 2011

  // இந்தியா இந்தியா தான் //

  மேரா பாரத் மஹான் :-))

  கடவுளின் தேசத்தில் நல்லா எஞ்சாய் பண்ணுங்க 🙂

 • 19. --புவனேஷ்--  |  1:44 முப இல் ஜூலை 1, 2011

  Vaanga akka… settle aagiyaacha ?? Hope India will keep you free so that you can write more blogs 🙂

 • 20. priya.r  |  5:53 பிப இல் ஜூலை 14, 2011

  என்ன கமெண்ட்ஸ்கு எல்லாம் பதில் போடற பழக்கம் மறந்து போச்சா 😦
  grrrrrrrrrrr

 • 21. குந்தவை  |  3:00 முப இல் ஜூலை 17, 2011

  //கடவுளின் தேசத்தில் நல்லா எஞ்சாய் பண்ணுங்க

  Thanks 🙂

 • 22. குந்தவை  |  3:03 முப இல் ஜூலை 17, 2011

  என்ன புவனேஷ் .. ரெம்ப நாள் ஆச்சி பாத்து. எப்படி இருக்கீங்க?

  செட்டில் ஆயிட்டே இருக்கோம். நேரம் இருக்கு ஆனா எழுத நேரம் இல்ல :).

 • 23. குந்தவை  |  3:06 முப இல் ஜூலை 17, 2011

  //என்ன கமெண்ட்ஸ்கு எல்லாம் பதில் போடற பழக்கம் மறந்து போச்சா
  grrrrrrrrrrr

  ahaa…. soooooooooo sorry. Replied madam.

 • 24. ரெஜோலன் நெல்சன்  |  2:52 பிப இல் ஜூலை 21, 2011

  வாழ்த்துக்கள், இந்தியாவுக்கு வருவதே சந்தோசம் அதிலும் கடவுளின் சொந்த தேசம் . . கலக்குங்க

 • 25. குந்தவை  |  1:11 பிப இல் ஜூலை 23, 2011

  வாழ்த்துக்கு நன்றி.

  எல்லாரும் கேரளாவை கடவுளின் தேசம் என்கிறீர்கள். என்னை பொருத்தவரை நம்ம தமிழ்நாடு தான் கடவுள் வாழும் தேசம் என்று தோன்றுகிறது. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,778 hits
மே 2011
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்   ஜூலை »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: