சட்டி சுட்டதடா

ஜூலை 13, 2011 at 5:26 பிப 31 பின்னூட்டங்கள்

                         வீட்டில் சமைக்கிறேனோ இல்லையோ வாரத்திற்க்கு ஒரு தடவை எனக்கு எப்படியாவது ஒரு தீக்காயம் இருக்கும்.  அதனால அடுப்பு கிட்ட போறதுன்னா எனக்கு இன்னமும் சின்னதா ஒரு பயம் உண்டு.  அதற்க்காக இப்படி பயந்து…. இந்த பொண்ணு என்னத்த சமச்சி…. என்னத்த சாப்பிடுகிறாரோ அந்த பாவப்பட்ட மனுஷன் என்று ஏடாகூடமாக யோசிக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். ஏன்னா நீங்க எல்லாரும் ரெம்ப நல்லவைங்க. ( அதையும் மீறி கன்னா பின்னான்னு ஆராய்ச்சி செய்பவர்களுக்கு என் கையால் சமைத்த சாப்பாடு வீடு தேடி வரும் ).

     இப்படி ஒரு பயம் உள்ளே இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவர் மேலிருக்கும்  அளவு கடந்த பிரியத்தால்  அந்த பயத்தை துடப்பத்தை வைத்து துடைத்து எறிந்துவிட்டு  வெற்றிகரமா சமைத்து கொண்டிருக்கிரேன்னாக்கும்.  (இது மாதிரி சுய தம்பட்டம் எனக்கு பிடிக்காது என்றாலும் .. என்ன செய்ய சில நேரங்களில் இதை எல்லாம் எழுத வேண்டியது இருக்கிறது. ஏன்னா வரலாறு ரெம்ப முக்கியமாச்சே.)
 

                       சரி அதை விடுங்க விஷயத்துக்கு வருவோம். இப்படி தீக்காயம் பட்டுச்சுன்னா அவசரத்திற்க்கு ஒரு மருந்து வீட்டில் வைத்து கொள்வது மிகவும் அவசியம் தானே. என்னுடையா அக்கா ஒருத்தங்க சமீபத்தில் டூ வீலரில் இருந்து விழுந்து விட்டார்கள். காலில் சைலன்சர் சுட்டு காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்தார்கள். ஒரு வாரமாகியும் காயம் குறையவில்லை. நல்ல வீக்கமும் வலியும் இருந்ததால் பள்ளிக்கு செல்ல மிகவும் அவதிபட்டு கொண்டிருந்தார்கள்.

               அவங்க வேலை பார்க்கும் பள்ளி பக்கா கிராமம். அவங்ககிட்ட படிக்கும் ஒரு பெண்  ‘என்னா டீச்சர் இப்படி ஒரு சின்ன காயத்தை தூக்கிட்டு இத்தனை நாளா வர்ரீங்க நான் ஒரு மருந்தை கொண்டு வராட்டுமா? என்று கேட்டிருக்கிறாள். இவங்க முதலில் தயங்கினாலும் .. போட்டு தான் பார்ப்போமே என்று ஒரு சின்ன பாட்டிலில் வாங்கி போட்டால்……. ஒரே நாளில் வீக்கம் குறைந்து விட்டது.  அடுத்த நாள் புண் காய ஆரம்பித்துவிட்டது. நான்காவது நாள் புண் சுத்தமாக ஆறிவிட்டது. அவங்களுக்கு ஒரே ஆச்சரியம்.

                அடுத்த நாள், இது என்ன மருந்தும்மா என்று கேட்டால் அந்த பெண் சிரித்து விட்டு.. “டீச்சர் இது மருதாணி எண்ணை.  எங்கள் ஊரில் என்ன தீக்காயம் பட்டாலும் இதை தான் போடுவோம். உடனே ஆறிவிடும்” என்று கூறிவிட்டு அதன் செய்முறையும் விளக்கி இருக்கிறாள்.
 
              சரி அந்த மருதாணி எண்ணையை  எப்படி காய்ப்பார்கள் தெரியுமா? ரெம்ப ரெம்ப சுலபம் தானுங்கோ. தேவையான அளவு தேங்காய் எண்ணை ஒரு 100 மில்லி என்று வைத்து கொள்வோம், அதற்க்கு 1 கை அளவு மருதானி இலைகள் போதும். ( முடிந்தால் மருதாணியை கெட்டியாக அரைத்து கொள்ளலாம்).

                      அடுப்பில் சட்டியை காய வைத்து , அதில் எண்ணையை ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் மருதாணி இலைகளை (விழுதினை) போட்டு ,தீயை அணைத்து விடவும். அப்படியே இலைகளோடு ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி வைத்துவிட்டு தேவைப்படும் போது உபயோகபடுத்தலாம்.

                                 தீக்காயம் மட்டும் இல்லைங்க… வென்னீர் கொட்டிருச்சி.. ஆவி அடிச்சிருச்சின்னு என்ன காயம் பட்டாலும் இதை உபயோகப்படுத்தலாம். (இந்த பதிவை படிப்பதற்க்கு வென்னீரே தேவலைன்னு  சொல்லக்கூடாது).

Advertisements

Entry filed under: ஆரோக்கியம். Tags: .

இனி ஆரஞ்சு இல்ல… ஓரஞ்சாக்கும் கடவுள் தான் என்னை காப்பாத்தணும்.

31 பின்னூட்டங்கள் Add your own

 • 1. அப்பாவி தங்கமணி  |  5:44 பிப இல் ஜூலை 13, 2011

  I…me the first..:)

 • 2. அப்பாவி தங்கமணி  |  5:48 பிப இல் ஜூலை 13, 2011

  //அதையும் மீறி கன்னா பின்னான்னு ஆராய்ச்சி செய்பவர்களுக்கு என் கையால் சமைத்த சாப்பாடு வீடு தேடி வரும் //
  இதுக்கு மேல வாய தெறப்போம் நாங்க… ஹும்ஹும்… :))

  வாவ்…மருதாணி எண்ணெய்… கேள்விப்பட்டதே இல்லீங்க… நிஜமா நல்ல டிப்ஸ்… அதுக்காக நான் அடிக்கடி தீக்காயம் பட்டுக்கர கேஸ்னு நினைக்க வேண்டாம்… me the experienced cook you know…:)

 • 3. குந்தவை  |  6:19 பிப இல் ஜூலை 13, 2011

  //I…me the first..:)

  wow…. புவனா வாங்க. வடை உங்களுக்கே. 🙂

 • 4. குந்தவை  |  6:29 பிப இல் ஜூலை 13, 2011

  // நிஜமா நல்ல டிப்ஸ்
  Thanks

  /me the experienced cook you know…:)
  நிசமாலுமா ?

  //காயம் பட்டுக்கர கேஸ்னு நினைக்க வேண்டாம்
  நீங்க இப்படி சொல்றீங்க.. ஆனா உங்க mind voice ‘காயம் பட்டுகிற கேஸ் கிடையாது காயப்படுத்துகிற கேஸ்’ ந்னு பஞ்சு டயலாக் அடிக்குது. ஏனுங்க உங்க இட்லி சாப்பிட்டு யாருக்காவது பல்லு போயிடுச்சா என்ன?

 • 5. Priyamudan Prabu  |  12:38 முப இல் ஜூலை 14, 2011

  Welcome back……

  அதையும் மீறி கன்னா பின்னான்னு ஆராய்ச்சி செய்பவர்களுக்கு என் கையால் சமைத்த சாப்பாடு வீடு தேடி வரும் )
  //

  Ok send to me….

  :///:அவர் மேலிருக்கும்  அளவு கடந்த பிரியத்தால்//://
  Mmm sariiiiiii……

  Thank you dakudaaar….

 • 6. Karthik  |  12:55 முப இல் ஜூலை 14, 2011

  இப்பதான் கேள்விப் படறேன். நல்ல விஷயம்தான். ஆனால் பாருங்க, இந்த படிச்சா மருத்துவர்கள் (கொள்ளையர்கள்) இதை படிச்சா உங்களுக்கு திட்டு விழும். இதை எல்லாம் உபயோகிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க

 • 7. குந்தவை  |  5:23 முப இல் ஜூலை 14, 2011

  வாங்க தம்பி…
  என்னோட தம்பின்னு நிருபிச்சிட்டீங்க. அடுத்த தடவை ஊருக்கு வரும்போது வாங்க விருந்தே வைக்கிறேன்.

  //Mmm sariiiiiii……
  நல்லதா நாலு வார்த்தை பேசினால் பொறுக்காதே.

 • 8. குந்தவை  |  5:31 முப இல் ஜூலை 14, 2011

  //இதை எல்லாம் உபயோகிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க
  சில விஷயங்களில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது தான். இல்லாவிட்டால் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இந்த விஷயத்தில் நாம் இதை தாராளமாக உபயோகபடுத்தலாம்.

 • 9. priya.r  |  6:03 பிப இல் ஜூலை 14, 2011

  வீட்டில் சமைக்கிறேனோ இல்லையோ வாரத்திற்க்கு ஒரு தடவை எனக்கு எப்படியாவது ஒரு தீக்காயம் இருக்கும். //

  சந்தேகம் : சமைக்காம எப்படி பெட்ரி தீக்காயம் வரும் 🙂

 • 10. priya.r  |  6:03 பிப இல் ஜூலை 14, 2011

  அதனால அடுப்பு கிட்ட போறதுன்னா எனக்கு இன்னமும் சின்னதா ஒரு பயம் உண்டு. //

  எத்தனை காலம் தான் இதை சொல்லி உங்க ரங்கஸ் ஐ ஏமாத்திகிட்டு இருக்கீங்களோ :))))

 • 11. priya.r  |  6:09 பிப இல் ஜூலை 14, 2011

  அதற்க்காக இப்படி பயந்து…. இந்த பொண்ணு என்னத்த சமச்சி…. என்னத்த சாப்பிடுகிறாரோ அந்த பாவப்பட்ட மனுஷன் என்று ஏடாகூடமாக யோசிக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். //

  என்னவோ போங்க பெட்ரி .,இருந்தாலும் இது டூ மச் இல்லே த்ரீ மச் 🙂

 • 12. kanagu  |  8:04 பிப இல் ஜூலை 14, 2011

  நல்ல பகிர்வு அக்கா 🙂

  ஆனா சமச்சு வீட்டுகு பார்சல் அணுப்புறேன் -னு பயமுறுத்தாதீங்க 😉

 • 13. குந்தவை  |  3:24 முப இல் ஜூலை 17, 2011

  //சந்தேகம் : சமைக்காம எப்படி பெட்ரி தீக்காயம் வரும்

  அவ்வ்வ்வ்வ்….. எப்படி இப்படி கெட்டுபோயிட்டீங்க.

 • 14. graceravo  |  5:55 முப இல் ஜூலை 17, 2011

  எனக்கு நல்ல பிரயோசனமான தகவல். அடிக்கடி சுட்டுகொல்பவள் நான். ஆனா இதை படித்தவுடன் ஆஹா நான் இதை செய்யபோகிறேன் என்று சொன்னவுடன் என் கணவர் ” அம்மா தாயே எண்ணெய் காச்சுறேனு மேல போட்டுகாதம்மா கடைல எங்கையாவது கிடைச்சா நானே வாங்கி தருகிறேன்னு” சொல்லி விட்டார் என்றால் என்னுடைய தீக்காய அனுபவங்கள் எப்படி இருக்குமுன்னு பாருங்க

 • 15. குந்தவை  |  4:02 பிப இல் ஜூலை 17, 2011

  //எத்தனை காலம் தான் இதை சொல்லி உங்க ரங்கஸ் ஐ ஏமாத்திகிட்டு இருக்கீங்களோ )))
  அடடா எங்க ஏமாற்றினேன்… ரெம்ப விவகாரம் பிடிச்சவங்களே இருக்கீங்களே

 • 16. குந்தவை  |  4:18 பிப இல் ஜூலை 17, 2011

  //அம்மா தாயே எண்ணெய் காச்சுறேனு மேல போட்டுகாதம்மா கடைல எங்கையாவது கிடைச்சா நானே வாங்கி தருகிறேன்னு” சொல்லி விட்டார்

  ha..ha…

  இது கடையில் கிடைக்குமா என்று தெரியாது. சும்மா 100 மில்லி எண்ணையில் பண்ணுவதற்க்கு பயப்படத்தேவையில்லை.

 • 17. குந்தவை  |  4:32 பிப இல் ஜூலை 17, 2011

  //ஆனா சமச்சு வீட்டுகு பார்சல் அணுப்புறேன் -னு பயமுறுத்தாதீங்க

  வாங்க தம்பி. இதுக்கெல்லாமா பயப்படுவது.

 • 18. vaarththai  |  10:00 முப இல் ஜூலை 18, 2011

  இந்தியா வந்தாலே சோம்பேறி தனம் வந்துருமா…?
  இடுகை ரொம்ப கம்மியா இருக்கே…..
  ஊட்டுக்காரர கவனிக்கிறேன், கண்மணிய கவனிக்கிரனு
  கத விட வேணாம் ….

 • 19. குந்தவை  |  4:10 பிப இல் ஜூலை 18, 2011

  //இந்தியா வந்தாலே சோம்பேறி தனம் வந்துருமா…?
  அப்ப அங்க இருக்கும் போது நான் சுறுசுறுப்பான பொண்ணா இருந்திருக்கேன்ன்னு சொல்லுங்க. 🙂

  //ஊட்டுக்காரர கவனிக்கிறேன், கண்மணிய கவனிக்கிரனு
  கத விட வேணாம் ….

  புதுசா எல்லாம் அதை நான் சொல்லமாட்டேன் தம்பி. அந்த பொறுப்பெல்லாம் பெண்களுடன் ஒட்டி பிறந்தது. (இந்த பதிலை டைப் பண்ணும்போது பார்த்த என் கணவர் பேச்சே வராமல் படுத்துவிட்டார். போய் கவனிக்கணும் 😦 )

 • 20. ரெஜோலன் நெல்சன்  |  2:57 பிப இல் ஜூலை 21, 2011

  மருதாணி இயற்கையிலே குளுமையான ஒன்று , அதனால்தான் அதை விரல்களில் வைக்கும் போது உடல் குளுமை பெறுகிறது . . இதையே சூட்டிற்கு மருந்தாக பயன்படுத்திய மற்றும் பயன்படுத்த பதிவிட்ட உங்களை நிச்சயமாக பாராட்டியே தீர வேண்டும்

  எந்துண்டு விஷேசங்கள் , சுகமாணோ

 • 21. குந்தவை  |  1:08 பிப இல் ஜூலை 23, 2011

  //இதையே சூட்டிற்கு மருந்தாக பயன்படுத்திய மற்றும் பயன்படுத்த பதிவிட்ட உங்களை நிச்சயமாக பாராட்டியே தீர வேண்டும்

  வாங்க ரஜோலன். உங்கள் பாராட்டை அந்த ஆறாம் வகுப்பு மாணவியிடம் தெரிவிக்கிறேன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  we are fine. 🙂

 • 22. Anbu  |  5:56 முப இல் ஜூலை 29, 2011

  //அதையும் மீறி கன்னா பின்னான்னு ஆராய்ச்சி செய்பவர்களுக்கு என் கையால் சமைத்த சாப்பாடு வீடு தேடி வரும்//

  நாங்க இங்க சாப்பிடற ஹோட்டல் சாப்பாடை விடவா மோசமா பண்ணிட போறீங்க?

  //அவர் மேலிருக்கும் அளவு கடந்த பிரியத்தால் அந்த பயத்தை துடப்பத்தை வைத்து துடைத்து எறிந்துவிட்டு வெற்றிகரமா சமைத்து கொண்டிருக்கிரேன்னாக்கும்//

  இது அவருக்கு தெரியுமா? 😛

  //மருதாணி எண்ணை//

  நல்ல உபயோகமான மருந்துதான். ஆனால் இதுல நீங்க இல்லவே இல்லையே, அப்பறம் எதுக்கு ஆரம்பத்தில கொஞ்சம் சுய புராணம். 😛

 • 23. குந்தவை  |  6:03 பிப இல் ஓகஸ்ட் 1, 2011

  //நாங்க இங்க சாப்பிடற ஹோட்டல் சாப்பாடை விடவா மோசமா பண்ணிட போறீங்க?

  ரெம்ப கஷ்டம் தான். ம்…. சீக்கிரமா சமையலை கத்துக்கோங்க உங்களுக்கும் நல்லது.. வருங்காலத்தில் உங்க குடும்பத்துக்கும் நல்லது 🙂

  //இது அவருக்கு தெரியுமா?

  இது என்ன கேள்வி ? இந்த கதையை சொல்லி சொல்லிதானே அவரை சாப்பிடவைத்துகொண்டிருக்கிறேன்.

  //எதுக்கு ஆரம்பத்தில கொஞ்சம் சுய புராணம்.

  நம்மள பத்தி நல்லதா நாலு வார்த்தை நாமளே சொன்னாதான் உண்டுன்னு சொன்னா… நல்லதுக்கு காலம் இல்லன்னு சும்மாவா சொன்னாங்க.

 • 24. Princess  |  2:48 பிப இல் செப்ரெம்பர் 21, 2011

  nice remedy friend..
  naanum try seidhu parkiren

  nandri

 • 25. குந்தவை  |  4:10 பிப இல் செப்ரெம்பர் 23, 2011

  Thank You Princess for your comment.

 • 26. நெல்லி. மூர்த்தி  |  12:25 பிப இல் ஒக்ரோபர் 4, 2011

  கல்கண்டு, முத்தாரம் போன்ற தமிழ் இதழ்களில் 4, 5 வரிகளுக்குள் இதுபோன்ற தகவல்கள் வந்திருக்கலாம். ஆனால் படிக்கும் அனைவரின் மனதிலும் பதிய வைத்த விதம் அருமை! நகைச்சுவையுடன் நல்லதொரு செய்தியை பரிமாறியுள்ளீர்கள்! நிச்சயம் தாங்கள் சமையற்கலையில் கை தேர்ந்தவராகவே இருப்பீர்! பதிவினை எங்கள் நெஞ்சில் பதிய விடவோ அல்லது உங்களது இயல்பான நகைச்சுவையுணர்வோ இது போல எழுதத் தூண்டியிருக்கும்.

  தொடருட்டும் உங்கள் தகவல் சேவை!

 • 27. குந்தவை  |  5:36 பிப இல் ஒக்ரோபர் 11, 2011

  வாங்க மூர்த்தி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 • 28. Cheena ( சீனா )  |  6:58 பிப இல் ஒக்ரோபர் 12, 2012

  அன்பின் குந்தவை – கை வைத்தியம் பலே பலே – நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 • 29. குந்தவை  |  8:19 முப இல் ஒக்ரோபர் 14, 2012

  வாங்க சீனா சார்.
  வாழ்த்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி.

 • 30. அனாமதேய  |  7:16 பிப இல் நவம்பர் 16, 2012

  amma will make maruthani oil with other herbs, which is good for hair.

 • 31. குந்தவை  |  8:10 முப இல் நவம்பர் 27, 2012

  //amma will make maruthani oil with other herbs, which is good for hair.

  yes.

  Thanks for ur comment.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,778 hits
ஜூலை 2011
தி செ பு விய வெ ஞா
« மே   அக் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: