சந்தேகமும்.. டரீயலும்…

ஒக்ரோபர் 17, 2012 at 2:03 பிப 28 பின்னூட்டங்கள்

 சந்தேகம் …

முன்பு என்னுடன் வேலை பார்த்த ஒரு Egyptian lady ஒரு நாள் என்னிடம் வந்து “நான் இன்று டால் சூப் செய்து கொண்டுவந்திருக்கிறேன். நீ கண்டிப்பாக அதை வந்து சாப்பிட்டு பார்க்கவேண்டும் ” என்று பாசமுடன் அழைத்தார். இதென்ன பிசாத்து வேலை என்று நானும் கிளம்பிவிட்டேன். எல்லாரும் சாப்பிட்டு விட்டு ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளி விட்டார்கள். நிஜமாகவே சூப் ரெம்ப நன்றாகத்தான் இருந்தது. அதனால் நானும் ரெம்ப நன்றாக இருக்கின்றது என்று சொல்லிவிட்டு வந்தேன்.

இருந்தாலும் எனக்கு வந்த சந்தேகம் என்னன்னா நம்ம ஊர் சாம்பாரை டால் சூப் என்று அவங்க குடிக்கிறார்களா அல்லது அவங்க டால் சூப்பை நாம் சாம்பார் என்று சாப்பிடுகிறோமா ?

டரீயல் ….

Long long before நான் வாங்கி வைத்திருந்த car lisence ஐ தூசி தட்டி எடுத்து என் வீட்டுகாரரிடம் “அத்தான் எனக்கு கொஞ்சம் training  கொடுங்க நானும் கார் ஓட்டுகிறேன்” என்றேன்.

அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு “தாயே.. ஆ.. ஊன்னா கொடிபிடிச்சிருவாங்கன்னு பயந்தோ என்னமோ பாதி கம்பெனியையும் ஒழிச்சி கொண்டு வச்சிருக்காங்க.. ஆட்டோவும் போகாது பஸ்ஸும் போகாது. காரை ஒடச்சி எனக்கு ஆப்பு வைக்காம… ஒரு பத்து நாள் driving school க்கு போய் படிச்சிட்டு வா … அப்புறம் உனக்கு நான் training கொடுக்கிறேன்” என்றார்.

சரி தான் என்று போனால். அப்பப்பா அந்த வாத்தியார் பண்ணுன அளும்பு இருக்கே.. சின்ன சின்ன விஷயத்துக்கும் என்னை கடுகடுன்னு போட்டு கடிக்க.. நான் என் பல்லை நற நறன்னு கடிக்க என்று   எப்படியோ பத்து நாள் கழித்துவிட்டேன்.

சொன்ன படியே என்னை நேரு  ஸ்டேடியத்துக்கு கூட்டிகொண்டுபோய் ஒரு அரை மணி நேரம் கார் ஓட்டுவதற்க்கு என்னை அன்ன்ன்பாக 😦  guide பண்ணினார்.
அப்புறம் வீட்டிற்க்கு வரும்போது என் மனதில் தோன்றியது “ம்… பேசாமல் driving school லில்  வந்தனத்துக்குரிய வாத்தியாரிடமே இன்னும் ஒரு பத்து நாள் பொறுமையாக படித்திருக்கலாம்”.

Entry filed under: அனுபவம், ரசித்தவை.

கடவுள் தான் என்னை காப்பாத்தணும்.

28 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Carter  |  4:29 முப இல் ஒக்ரோபர் 18, 2012

    Nanum annan eppadi solli koduthu iruparkal entru ninaithean. atharku driving school la 30 days class mudithu irukkalam.

  • 2. குந்தவை  |  5:04 முப இல் ஒக்ரோபர் 18, 2012

    //Nanum annan eppadi solli koduthu iruparkal entru ninaithean.

    ha..ha.. 🙂

  • 3. அனாமதேய  |  7:49 முப இல் ஒக்ரோபர் 18, 2012

    Dubukku blogla irunthu unga blog link padichen .regular attendance podanum naan .nalla irukku

  • 4. திண்டுக்கல் தனபாலன்  |  8:15 முப இல் ஒக்ரோபர் 18, 2012

    ஹா… ஹா… ரசித்தேன்…

  • 5. Tharique Azeez | உதய தாரகை  |  9:36 முப இல் ஒக்ரோபர் 18, 2012

    சந்தேகம் என்று தலைப்பிட்டு, அந்த ‘டால் சூப்’ கொண்ட ருசியை அற்புதமாகத் தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். வாகனம் ஓட்டும் பயிற்சியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • 6. குந்தவை  |  10:42 முப இல் ஒக்ரோபர் 18, 2012

    //Dubukku blogla irunthu unga blog link padichen .regular attendance podanum naan .nalla irukku

    வருகைக்கும் கமென்டுக்கும் ரெம்ப நன்றிங்கோ.

  • 7. குந்தவை  |  10:43 முப இல் ஒக்ரோபர் 18, 2012

    வருகைக்கும் ரசித்தமைக்கும் ரெம்ப நன்றி தனபாலன்.

  • 8. குந்தவை  |  10:51 முப இல் ஒக்ரோபர் 18, 2012

    வாழ்த்துக்கும் ரசித்தமைக்கும் ரெம்ப நன்றி உதய தாரகை.

  • 9. ranjani135  |  1:31 பிப இல் ஒக்ரோபர் 18, 2012

    வாருங்கள் குந்தவை! மறுபடி எழுத ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள்.

    எல்லாக் கணவன்மார்களும் பெண்டாட்டிக்கு அன்ன்ன்பாகத்தான் சொல்லித் தருவார்கள் போல!

    டால் சூப் அனுபவம் அருமை!

  • 10. குந்தவை  |  4:59 பிப இல் ஒக்ரோபர் 18, 2012

    வாங்க ரஞ்சனி அம்மா.

    வாழ்த்துக்கு நன்றி.

    // எல்லாக் கணவன்மார்களும் பெண்டாட்டிக்கு அன்ன்ன்பாகத்தான் சொல்லித் தருவார்கள் போல!
    ஆகா….

    //டால் சூப் அனுபவம் அருமை!
    நன்றி.

  • 11. kanagu  |  7:13 பிப இல் ஒக்ரோபர் 18, 2012

    /*“ம்… பேசாமல் driving school லில் வந்தனத்துக்குரிய வாத்தியாரிடமே இன்னும் ஒரு பத்து நாள் பொறுமையாக படித்திருக்கலாம்”.*/
    ஹா ஹா ஹா.. 🙂 🙂 கத்துக்கிட்டீங்களா அக்கா??

    சென்னைக்கு வந்துட்டீங்களா இப்போ??

  • 12. குந்தவை  |  4:23 முப இல் ஒக்ரோபர் 19, 2012

    வாங்க கனகு.

    // கத்துக்கிட்டீங்களா அக்கா??
    ஓட்டதெரிந்தாலும் பயம் மாத்திரம் போகமாட்டேங்குது.

    நாங்க இப்போது கொச்சினில் இருக்கிறோம்.

  • 13. அனாமதேய  |  12:59 பிப இல் ஒக்ரோபர் 19, 2012

    Nice to read your writing….Write a lot and often….

  • 14. குந்தவை  |  11:27 பிப இல் ஒக்ரோபர் 19, 2012

    //Nice to read your writing…

    Thanks a lot 🙂

    //.Write a lot and often…
    🙂

  • 15. அப்பாவி தங்கமணி  |  3:54 முப இல் ஒக்ரோபர் 27, 2012

    ha ha ha… looks like everyone has such “happy” driving lesson experience…;)))

  • 16. அப்பாவி தங்கமணி  |  3:55 முப இல் ஒக்ரோபர் 27, 2012

    அதுசரி , நீங்க என்ன வருசத்துக்கு ஒரு போஸ்ட் தான் போடுவீஙகளா …:))

  • 17. குந்தவை  |  5:18 பிப இல் ஒக்ரோபர் 29, 2012

    //everyone has such “happy” driving lesson experience…;)))

    அது சரி 🙂

  • 18. குந்தவை  |  5:42 பிப இல் ஒக்ரோபர் 29, 2012

    வாங்க புவனா .. தமிழ்நாட்டில் ஏற்கவே கரண்ட் பஞ்சத்தில் இருக்கிறாங்க. நாம அடிக்கடி எழுதி மேலும் கஷ்டத்த கொடுக்கக்கூடாதுன்னு ஒரு நல்லெண்ணம்தான் .

  • 19. vaarththai  |  4:18 முப இல் நவம்பர் 2, 2012

    //வாங்க புவனா .. தமிழ்நாட்டில் ஏற்கவே கரண்ட் பஞ்சத்தில் இருக்கிறாங்க. நாம அடிக்கடி எழுதி மேலும் கஷ்டத்த கொடுக்கக்கூடாதுன்னு ஒரு நல்லெண்ணம்தான் .//

    ஆஹா என்ன ஒரு நல் எண்ணம்.

  • 20. vaarththai  |  4:26 முப இல் நவம்பர் 2, 2012

    //என் வீட்டுகாரரிடம் “அத்தான் எனக்கு கொஞ்சம் training கொடுங்க நானும் கார் ஓட்டுகிறேன்” என்றேன்.//

    அத்தான் ….அத்தான் …. அத்தான்… அடடடடா …என்ன ஒரு பாசம் ….

  • 21. குந்தவை  |  4:29 முப இல் நவம்பர் 2, 2012

    //அத்தான் ….அத்தான் …. அத்தான்… அடடடடா …என்ன ஒரு பாசம் ….

    ஏம்பா உங்களுக்கு இந்த பொறாமை

  • 22. vaarththai  |  4:29 முப இல் நவம்பர் 2, 2012

    //வாங்க கனகு.
    // கத்துக்கிட்டீங்களா அக்கா??
    ஓட்டதெரிந்தாலும் பயம் மாத்திரம் போகமாட்டேங்குது.
    நாங்க இப்போது கொச்சினில் இருக்கிறோம்.//

    ஓட்டதெரிந்தாலும் பயம் மாத்திரம் போகமாட்டேங்குது…..

    அத ரோட்ல போற நாங்க சொல்லணும் …. ஏன்னா நீங்க ஒட்டுரப்ப போகபோறது எங்க உசுரு…

  • 23. குந்தவை  |  4:30 முப இல் நவம்பர் 2, 2012

    //ஆஹா என்ன ஒரு நல் எண்ணம்.

    நல்ல பிள்ளைக்கு நல்ல எண்ணம் தானே வரும் தம்பி.

  • 24. குந்தவை  |  4:39 முப இல் நவம்பர் 2, 2012

    //அத ரோட்ல போற நாங்க சொல்லணும் …. ஏன்னா நீங்க ஒட்டுரப்ப போகபோறது எங்க உசுரு…

    பழி பாவத்துக்கு பயப்படுகிற பிள்ளைய இப்படி பயங்காட்டலாமா?

  • 25. வித்யாசாகர்  |  3:20 முப இல் நவம்பர் 26, 2012

    ஓட்ட ஓட்ட அந்த பயம் போய்விடும் சகோதரி. எனக்குக் கூட முதல் முதலில் பயம் இருந்தது, ஆனால் வாகுவாக கைதிரும்பி கண் பார்த்து கால்கள் அசைந்துக் கொண்ட துணிவில் மெல்ல மெல்ல நம்பிக்கை பிறந்துவிட்டது.

    ஆரம்பத்தில் பழக்கப் பட்டோரை உடன் வைத்துக் கொண்டு ஓரிரு நாட்களுக்கு ஒட்டுங்கள். பிறகு நன்கு வழி தெரிந்த அருகாமை இடத்திற்கு தனியேச் சென்று பழகுங்கள். பிறகு சற்று தூரம் பிறகு நெரிசலிடமென ஒவ்வொன்றாய் கால் மிதிக்க மிதிக்க மனசும் நகர்ந்துக் கொள்ளும். என்றாலும்,

    அதை உணர்வுத் ததும்பலோடு வாழ்வின் மீதான ரசனை குறையாமல் எழுதியுள்ள டால் ஃபிரையும் அத்தான் புகழாரங்களும் படிக்க இனிமையாகவும் மனது சிரித்துக் கொண்ட ரசனையோடும் இருந்தது. நேரம் அமைகையில் இப்படி நிறைய எழுதுங்கள் சகோதரி..

    நிக அன்பும்.. வாழ்த்தும்..

    வித்யாசாகர்

  • 26. குந்தவை  |  8:07 முப இல் நவம்பர் 27, 2012

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி வித்தியாசகர்.

    //அத்தான் புகழாரங்களும் படிக்க இனிமையாகவும் மனது சிரித்துக் கொண்ட ரசனையோடும் இருந்தது.//
    ரசித்தமைக்கு மிகவும் நன்றி.

  • 27. Heidi Callahan  |  2:08 முப இல் ஜூன் 28, 2013

    சொன்ன படியே என்னை நேரு ஸ்டேடியத்துக்கு கூட்டிகொண்டுபோய் ஒரு அரை மணி நேரம் கார் ஓட்டுவதற்க்கு என்னை அன்ன்ன்பாக guide பண்ணினார். அப்புறம் வீட்டிற்க்கு வரும்போது என் மனதில் தோன்றியது “ம்… பேசாமல் driving school லில் வந்தனத்துக்குரிய வாத்தியாரிடமே இன்னும் ஒரு பத்து நாள் பொறுமையாக படித்திருக்கலாம்”.

  • 28. Blanche Nixon  |  5:07 முப இல் ஜூலை 7, 2013

    வீட்டில் செய்யப்படும் உப்புமா, அடை, வெண்பொங்கல் போன்ற பண்டங்கள் என்றுமே எனக்கு பிடித்ததில்லை. நெய்யும் முந்திரிபருப்பும் கொண்டு செய்யப்பட்ட அதை என்றுமே உண்ணாமல், எனக்கு என்று சிறிது இட்லி அல்லது தோசை அல்லது கடையில் இருந்து உண்ண ரெடியாக இருக்கும். முதன் முதலாக NCC கேம்ப் என்று ஸ்ரீரங்கத்தில் பத்து நாள் இருந்தேன். முதல் நாள் காலை முழுவதும் வெயிலில் நன்கு மார்ச் செய்து செய்து வயிறு பசிதிருந்தபோது எனது தட்டில் விழுந்தது கோதுமை உப்புமாவும், ரசம் என்ற பெயரில் ஒரு சாம்பாரும்!! உப்புமாவா என்று முகம் சுளித்தாலும், ஒரு வாய் எடுத்து வைத்தபோது தேவாமிர்தம் போல இருந்தது. அன்றிலிருந்து தினமும் அந்த கேம்பில் எனது தட்டில் விழுந்த உணவுகள் எல்லாம் ருசியாகத்தான் இருந்தன, நண்பர்களுடன் கதை அடித்துக்கொண்டே சாப்பிட்ட அந்த ஒவ்வொரு கைப்பிடி உணவும் அதன் சுவையும் இன்றும் யாபகம் இருக்கிறது !

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்

Blog Stats

  • 40,090 hits
ஒக்ரோபர் 2012
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031