அம்மா வீட்டுக்கு போறேன்……

மே 24, 2009 at 4:54 முப 27 பின்னூட்டங்கள்

                வெளியூர் அல்லது அம்மா வீட்டிற்கு செல்லும் போது பெண்களுக்கு இருக்கும் சந்தோஷத்தை வார்த்தைகளால் வடிப்பது ரெம்ப கஷ்டமுங்கோ. அவ்வளவு ஏன் சும்மா ஒரு வீட்டிற்கோ அல்லது பூங்காவிற்க்கோ ஒரு இரண்டு மணி நேரம் சென்றாலே புத்தம் புது மலர்களாக மலர்ந்து விடுவார்கள். ஏன்னா….ம்…நிறைய காரணம் உள்ளுக்குள்ள வந்து கும்மியடித்தாலும் ஒரு சிலதை மாத்திரம் சொல்லுகிறேன்.

        தங்கமணி ஊருக்கு போயிட்டா எப்படி எல்லாம் சந்தோஷத்தை அனுபவிக்கலாம் என்று  Sriram அவர்கள் எழுதியதால், நானும் நம்ம தாய்குலங்கள் சார்பா எனக்கு தோன்றியதை எழுதுகிறேன். பெண்களுக்கே உரிய தன்னடக்கத்துடன் கொஞ்சமா  எழுதியிருக்கேன். தப்புகணக்கு போட்டுராதீங்க.

1. காப்பி போடு , டி போடு, அதை எடுத்திட்டு வாயேன்….. இதை எடுத்த தந்து விடுன்னு….. ஓயாமல் ஏவல் வாக்கியத்தையே கேட்டு இத்து போயிருக்கும் காதுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். கூடவே நமக்கும்.

2. அமிர்தமாக சமைத்தாலும்…. என்ன காரம், உப்பு எல்லாத்தையும் அள்ளி போட்டு இதென்னா சாப்பாடு என்ற கூப்பாடு எல்லாம் கேட்டு நாம் பாடுபடாமல் பட்டாம் பூச்சிபோல் இருக்கலாம்.

3. நாம் இல்லாவிட்டால் லாண்டிரியிலும், நாம் இருந்தால் ” சட்டையை washing machineல் போட்டால் பாலிஷ் போய்விடும்மா அதனால கொஞ்சம் கையால் துவைத்து விடேன்” என்று மிளகாய் அரைக்கும் அம்மிகல்லாய் மாறாமல் நம் தலை தப்பும்.

 4. சும்மா டி.வி. ரிமோட்டை வைத்துகொண்டு, சானல் ௦ஒன்றிலிருந்து……. ஐம்பது வரைக்கும் ,,,,, அப்புறம் ஐம்பதிலிருந்து …. ஒன்றிர்க்குமாக வலம் வந்து அவரும் பார்க்காமல்… நம்மையும் பார்க்கவிடாமல் கடுப்படிக்கும் கடியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

5. எப்பாவது கொஞ்சம் தோழியுடன் பேசலாம் என்று தொலைபேசியை எடுத்தவுடனே எப்படித்தான் மூக்கில் வியர்த்து மூளை அதிவேகமாக வேலை செய்து சடுதியில் நியாபகசக்தி பெருகுமோ தெரியாது…”யம்மா… கொஞ்சம் எனக்கு அவசரமா பேசணும்” என்று தொலைபேசியை நம்மிடம் இருந்து பிடுங்கும் அநியாயம் நடக்காது

6. அவங்க வீட்டிலிருந்து யாராவது வந்தால் ஆளுக்கு தகுந்தாற் போல் வளைந்து நெளிந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லாமல் கொஞ்சம் நம் இஷ்டம் போல் இருக்கலாம்.

             இப்படி இன்னும் நிறைய அடுக்கி கொண்டே போகலாம்.

            இப்படி எல்லாம் எனக்கு உண்மையை சொல்ல வாய் வந்தாலும், எனக்கு அப்படி எல்லாம் பேசி மற்றவர்களின் மனதை புண்படுத்துவது பிடிக்காது. ஏன்னா நான் ரெம்ப நல்ல பொண்ணுங்க. அதிலும் பெற்றோர்கள் பரலோக பிரஜைகளாகி விட்டதால் நமக்கு அந்த அனுபவமும் கிடையாது.

                சரி, உனக்கு என்ன கஷ்டம்? எதுக்கு இந்த பதிவுன்னு கேள்வி வருதில்ல… அடிப்பதற்க்கும், பிடிப்பதற்கும் எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஜீவன் என் வீட்டுக்காரர் தான் , அவரை விட்டு பிரிஞ்சா எனக்கு அப்புறம் எப்படி பொழுது போகும்.

Entry filed under: ரசித்தவை.

கடலை…கடலை…. டைரி குறிப்பு – 3

27 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Vijay  |  4:39 பிப இல் மே 24, 2009

    அம்மா வீட்டுக்குப் போறீங்களா இல்லையா?

    \\அடிப்பதற்க்கும், பிடிப்பதற்கும் எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஜீவன் என் வீட்டுக்காரர் தான் , அவரை விட்டு பிரிஞ்சா எனக்கு அப்புறம் எப்படி பொழுது போகும்.\\

    பதிவிரதைன்னு காட்டிட்டீங்க 😉

  • 2. குந்தவை  |  4:47 முப இல் மே 25, 2009

    //பதிவிரதைன்னு காட்டிட்டீங்க

    அதை எல்லாம் அப்பப்ப செய்துடணும் ஏன்னா வரலாறு ரெம்ப முக்கியம்.

  • 3. Sriram  |  8:20 முப இல் மே 25, 2009

    அக்கா..உங்க வீட்டுல நடக்கறத அப்படியே ரிவேர்ஸ்ல எழுதி இருக்கீங்க போல…பாவம் அண்ணன்…இந்த இடுகையை அவரு படிச்சிட்டாரா? படிச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது…

  • 4. குந்தவை  |  11:32 முப இல் மே 25, 2009

    //உங்க வீட்டுல நடக்கறத அப்படியே ரிவேர்ஸ்ல எழுதி இருக்கீங்க போல…
    இப்படி எல்லாம் ஒரு நல்ல பொண்ணுகிட்ட கேள்வி கேட்கலாமா தம்பி.

    //பாவம் அண்ணன்…இந்த இடுகையை அவரு படிச்சிட்டாரா?
    இனிமே தான் அவரை தொல்லைபண்ணி படிக்கவைக்கணும்.

    //படிச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது…
    அது தெரியும். படிச்சாலும் ஒண்ணும் மாற மாட்டார்.

  • 5. Bhuvanesh  |  12:19 பிப இல் மே 25, 2009

    // இப்படி இன்னும் நிறைய அடுக்கி கொண்டே போகலாம்.//

    நீங்க சொல்லறது ரொம்ப சரி அக்கா 🙂

  • 6. Anand  |  9:02 பிப இல் மே 25, 2009

    ///” சட்டையை washing machineல் போட்டால் பாலிஷ் போய்விடும்மா அதனால கொஞ்சம் கையால் துவைத்து விடேன்” ///

    அநியாயமுங்கோ… நிஜமா இது ஆண்கள் சொல்வதா…? எனக்கு தெரிந்து, எங்க வீட்ல வாஷிங் மிஷன் ல போடுங்க போடுங்க ன்னு எவ்ளோ தடவை சொன்னாலும், அம்மாவுக்கு கையில் துவைத்தால்தான் திருப்தி…

  • 7. Anand  |  9:05 பிப இல் மே 25, 2009

    குறைகள் ஒன்றிலிருந்து ஆறுவரைக்கும் எங்களக்கு… கடைசியில் சிகப்பிலும், நீளத்திலும் உள்ளது மச்சானுக்கு… அப்படித்தானே அக்கா…?

  • 8. Anand  |  9:12 பிப இல் மே 25, 2009

    //அவங்க வீட்டிலிருந்து யாராவது வந்தால் ஆளுக்கு தகுந்தாற் போல் வளைந்து நெளிந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லாமல்//

    இந்த காலத்து பெண்கள் எல்லாம் அப்படி இல்லைன்னு நினைக்கிறன்… கல்யாணத்துக்கு முன்னாடியே, கணவரின் வீட்டுக்கரங்களுடன் நன்றாக பேசி உறவை வளர்த்துகொள்வதாக கேள்விபட்டேன் [so that, வீட்டுக்கு வந்தால் எந்த ஒரு hard feellings உம் இல்லாமல் இருக்க, வளைந்து நெளிந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல், normal ஆக இருக்க]…

  • 9. Anand  |  9:14 பிப இல் மே 25, 2009

    ///அடிப்பதற்க்கும், பிடிப்பதற்கும் எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஜீவன் என் வீட்டுக்காரர் தான் , அவரை விட்டு பிரிஞ்சா எனக்கு அப்புறம் எப்படி பொழுது போகும்.///

    உருகிட்டீங்க போங்க… 🙂 …
    எல்லோரும் இப்படி இருந்தால் மக்களுக்கு சந்தோசம் தான்…

  • 10. குந்தவை  |  11:53 முப இல் மே 26, 2009

    // இப்படி இன்னும் நிறைய அடுக்கி கொண்டே போகலாம்.//

    நீங்க சொல்லறது ரொம்ப சரி அக்கா

    இதுக்கு என்ன அர்த்தம் தம்பி ?

  • 11. குந்தவை  |  11:57 முப இல் மே 26, 2009

    //எனக்கு தெரிந்து, எங்க வீட்ல வாஷிங் மிஷன் ல போடுங்க போடுங்க ன்னு எவ்ளோ தடவை சொன்னாலும், அம்மாவுக்கு கையில் துவைத்தால்தான் திருப்தி…

    அதெல்லாம் அம்மாகிட்ட ஆனந்த். கல்யாணத்திற்கு பிறகு நீங்க கூட மாறிடுவீங்க. இப்படி நான் நிறைய பேரை பாத்திருக்கேன் தம்பி.

  • 12. குந்தவை  |  12:03 பிப இல் மே 26, 2009

    // கடைசியில் சிகப்பிலும், நீளத்திலும் உள்ளது மச்சானுக்கு… அப்படித்தானே அக்கா…?

    ஆகா என்ன ஒரு கற்பூர புத்தி உங்களுக்கு தம்பி. முதல்ல போய் சுத்திபோடுங்க. எங்க ஊட்டுகாரருக்கு இதை எத்தனை தடவை சொல்லியிருக்கேன் தெரியுமா. காதுல வாங்கமாட்டேங்கிராறு.

  • 13. குந்தவை  |  12:14 பிப இல் மே 26, 2009

    //கல்யாணத்துக்கு முன்னாடியே, கணவரின் வீட்டுக்கரங்களுடன் நன்றாக பேசி உறவை வளர்த்துகொள்வதாக கேள்விபட்டேன்

    நாங்களும் அந்த வேலையெல்லாம் கரெக்டா பண்ணிட்டோமில்ல..
    ஆனா பிரச்சனை அவங்க இல்லதம்பி. உறவுக்கு உறவு என்று நீண்ட தொலைவிலிருந்து இதுக்காகவே வருவாங்க பாருங்க. போரபோக்கில் எதையாவது பத்தவச்சிடக்கூடாது இல்ல அந்த பயம் தான்.

  • 14. குந்தவை  |  12:16 பிப இல் மே 26, 2009

    //உருகிட்டீங்க போங்க… 🙂 …
    எல்லோரும் இப்படி இருந்தால் மக்களுக்கு சந்தோசம் தான்…

    உங்களுக்கு ரெம்ப நல்ல மனசு தம்பி. ஆனா எங்க வீட்டுக்காரரை அடித்தால் ரெம்ப கோபப்படுகிறாரே.

  • 15. Bhuvanesh  |  12:24 பிப இல் மே 26, 2009

    //இதுக்கு என்ன அர்த்தம் தம்பி ?
    இப்படி நிறைய அடுக்கலாம்னு அர்த்தம் அக்கா !!

  • 16. Bhuvanesh  |  12:29 பிப இல் மே 26, 2009

    //உறவுக்கு உறவு என்று நீண்ட தொலைவிலிருந்து இதுக்காகவே வருவாங்க பாருங்க. போரபோக்கில் எதையாவது பத்தவச்சிடக்கூடாது இல்ல அந்த பயம் தான்.//

    ஹி ஹி .. தூரத்து சொந்தம் வந்து பத்த வெச்சா எல்லாம் ஒன்னும் ஆகாது அக்கா..
    பசங்களுக்கு எப்பவுமே நெருங்கின சொந்தம் தான் முக்கியம்.. அம்மா/ மனைவி சண்டை போடும் போது ரெண்டு பக்கமும் சாயாமல் இருபது தான் பிரச்சனை..
    Friend of all is Friend of None னு சொல்லுவாங்க இல்ல!! மனைவிக்கு அம்மா சைடு ஆளா தெரிவான் !! அம்மாக்கு பொண்டாட்டி தாசனா தெரிவான் !!

  • 17. Anand  |  3:06 முப இல் மே 30, 2009

    //அதெல்லாம் அம்மாகிட்ட ஆனந்த். கல்யாணத்திற்கு பிறகு நீங்க கூட மாறிடுவீங்க. இப்படி நான் நிறைய பேரை பாத்திருக்கேன் தம்பி.//

    சான்ஸ் எ இல்லீங்க்கா… இங்க கைல எல்லாம் தொவைக்க முடியாது.. ஹி ஹி…

  • 18. Anand  |  3:09 முப இல் மே 30, 2009

    //எங்க ஊட்டுகாரருக்கு இதை எத்தனை தடவை சொல்லியிருக்கேன் தெரியுமா. காதுல வாங்கமாட்டேங்கிராறு.//
    வாங்காத மாதிரி காட்டிப்பாரா இருக்கும்… நீங்க அடுத்து என்ன செய்யறீங்கன்னு ரசிக்க வேண்டாமா…

  • 19. Anand  |  3:10 முப இல் மே 30, 2009

    ///அம்மா/ மனைவி சண்டை போடும் போது ரெண்டு பக்கமும் சாயாமல் இருபது தான் பிரச்சனை.. ///

    ரொம்ப சரி மச்சி…

  • 20. Anand  |  3:14 முப இல் மே 30, 2009

    ///Friend of all is Friend of None னு சொல்லுவாங்க இல்ல!! மனைவிக்கு அம்மா சைடு ஆளா தெரிவான் !! அம்மாக்கு பொண்டாட்டி தாசனா தெரிவான் ! ///

    எம்மாடி….!!!!!!!! இங்க பாருங்க நம்ம பயலோட ஞானத்த…. சீக்கிரம் ஒரு கல்யாணத்த பண்ணி வைக்கணும் உனக்கு [already நடத்திட்டு கீது இருக்கியாப்பா?]…

  • 21. Mukundan  |  11:25 முப இல் மே 30, 2009

    ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.உங்களுக்கு ஒரு வேலை.அங்கே வந்து பார்க்கவும்.

  • 22. பிரியமுடன் பிரபு  |  1:08 முப இல் ஜூன் 10, 2009

    ////
    ///அடிப்பதற்க்கும், பிடிப்பதற்கும் எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஜீவன் என் வீட்டுக்காரர் தான் , அவரை விட்டு பிரிஞ்சா எனக்கு அப்புறம் எப்படி பொழுது போகும்.///

    என்னா அடி ?!?!?!?!?
    கடைசியா என்ன நல்லவன்னு சொல்லிட்டாண்டா ………………….

  • 23. JS  |  6:34 பிப இல் ஜூன் 13, 2009

    yakka soluradhu ellam sollitu kandaisiyaa oru punch vecheenga paarunga adhaan highlight
    //அவரை விட்டு பிரிஞ்சா எனக்கு அப்புறம் எப்படி பொழுது போகும்.//

    Gud one

  • 24. குந்தவை  |  4:40 முப இல் ஜூன் 14, 2009

    //yakka soluradhu ellam sollitu kandaisiyaa oru punch vecheenga paarunga adhaan highlight

    வெறும் பஞ்ச் டயலாக் இல்ல தம்பி…. திருமண வாழ்க்கைக்கு ரெம்ப முக்கியமான விட்டமின் மாத்திரை.

  • 25. Krishna  |  12:54 பிப இல் ஜூன் 21, 2009

    Nice post to read….

    //அடிப்பதற்க்கும், பிடிப்பதற்கும் எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஜீவன் என் வீட்டுக்காரர் தான் , அவரை விட்டு பிரிஞ்சா எனக்கு அப்புறம் எப்படி பொழுது போகும்.//

    This is ultimate………. 🙂

  • 26. kunthavai  |  4:22 முப இல் ஜூன் 22, 2009

    //This is ultimate……….

    வாங்க கிருஷ்ணா, நன்றி.
    ரெம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க. எப்படி இருக்கீங்க?

  • 27. Krishna  |  2:37 பிப இல் ஜூன் 22, 2009

    நல்லா இருக்கேன் குந்தவை. நீங்க எப்படி இருக்கீங்க ?

    நான் ரெண்டு மூணு தடவை வந்து பார்த்தப்போ புதுசா எதுவும் பதிவு இல்ல அதனால நீங்க எப்போவாவது தான் பதிவு போடுவீங்க ன்னு நினைச்சு விட்டுட்டேன் …. சாரி .. நேத்து வந்து பார்த்தா இவ்வளவு நிறைய பதிவுகள் … சந்தோஷமா படிச்சேன் … நன்றி…. 😀

    அடுத்த பதிவ எப்போ எதிர்பார்க்கலாம் ❓

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்

Blog Stats

  • 40,090 hits
மே 2009
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031